தாஜ், ஒபராய்க்கு ரூ.167 கோடி இழப்பீடு
மும்பை: கடந்த ஆண்டு தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளான தாஜ் மற்றும் ஓபராய் ஓட்டல்களுக்கு தலா ரூ.167 கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
லிபரான் கமிஷன் அறிக்கை கசிந்தது : பார்லி.,யில் அமளி – ஒத்திவைப்பு
புதுடில்லி : அயோத்தியில் உள்ள பாபர்மசூதி இடிப்பு தொடர்பான லிபரான் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்படும் முன்பு கசிந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. மத்திய அரசுக்கு புது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று பார்லிமென்டில் கூச்சல் குழப்பம் நிலவியது. தொடர்ந்து சபையை நடத்த முடியாமல போனதால் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆதிக்கத்தை இழக்கிறது அமெரிக்க டாலர், இனி அடுத்தது என்ன…
அமெரிக்க டாலருக்கு வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. உலகிலேயே முன்னணி கரன்சி என்ற அதீத கவுரவம் இனி தொடருமா என்று அலசப்படும் அளவிற்கு, நிலைமை கீழிறங்கி வருகிறது.
சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
கோல்கட்டா : வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த பத்து வயது சிறுமியை, நீதிபதியே, கடைக்கு அழைத்துச் சென்று சாக்லேட் வாங்கி கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் கோல்கட்டா கோர்ட்டில் நடந்தது. தனது தந்தையுடன் வசிக்க வேண்டும் என்ற, அந்த சிறுமியின் நீண்ட நாள் ஆசையையும் நீதிபதி நிறைவேற்றி வைத்தார்.
வெளிநாட்டினர் தத்தெடுக்கும் குழந்தைகள்: கோர்ட் உத்தரவு
மும்பை : “சர்வதேச தத்தெடுத்தல், அதாவது வெளிநாட்டிற்கு தத்தெடுத்து செல்லும் குழந்தைகள், பின்னர் கைவிடப்பட்டு இந்தியாவிற்கு திரும்பும் சூழ்நிலையில், அவர்களை பராமரிக்க தேசிய குழந்தைகள் நலநிதி ஒன்றை அமைக்க வேண்டும்’, என மும்பை ஐகோர்ட் பரிந்துரைத்துள்ளது.
ஐ.ஐ.எம்.,மில் ஆள் எடுக்கிறது வால்ட் டிஸ்னி
ஆமதாபாத்: அமெரிக்காவின் பிரபல பொழுதுபோக்கு நிறுவனம், வால்ட் டிஸ்னி முதன் முறையாக ஐ.ஐ.எம்.,மில் ஆட்களை தேர்வு செய்கிறது.
சொந்த வேலை இருக்கு; சஸ்பெண்ட் செய்யுங்க ‘உ.பி., ஆசிரியர்கள் இப்படியும் வினோதம்
லக்னோ: சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து தப்பத்தான் லஞ்சம் தருவதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், சஸ்பெண்ட் செய்யச் சொல்லி, லஞ்சம் தருகின்றனர் தெரியுமா?ஆம், உத்தரபிரதேசத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் பலர் சொந்த வேலைகளை கவனிப்பதற்காக தங்களை “சஸ்பெண்ட்’ செய்ய சொல்லி, மேலதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கின்றனர்.
இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல்
திருநெல்வேலி : “”தமிழக வக்பு வாரியம் நெல்லையில் இன்ஜினியரிங் கல்லூரியும், திருச்சியில் மருத்துவக்கல்லூரியும் துவங்க திட்டமிடப் பட்டுள்ளதாக” அதன் தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.
30 காசு செலவில் முகம் பார்த்து பேசலாம்
சென்னை: தென்னிந்தியாவில் முதல்முறையாக 30 காசு கட்டணத்தில் எதிர்முனையில் பேசுபவரின் முகம் பார்த்து பேசும் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்ப(3ஜி) செல்போன் சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகின் பலம் வாய்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை வெற்றிகொள்ள இராணுவத்தினரால் மட்டும் ஒரு போதும் முடியாது: ஊடகத்துறை அமைச்சர்
உலகில் மிகவும் சக்திபடைத்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை வெற்றி கொள்ள இராணுவத்தினரால் மட்டும் முடியாது. அதற்குச் சிறந்த அரசியல் தலைமைத்துவமே தேவை. அந்தத்தேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.