எண்ணெய் சேமிப்பு கிடங்கில் தீ ரூ.191 கோடி சேதம் என்று மதிப்பீடு
புதுடில்லி:”ஜெய்ப்பூர் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், 191 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள் ளது’ என, லோக்சபாவில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
இந்திய அரசு கவலைப்பட வேண்டாம் சமாதானப்படுத்த முயல்கிறது அமெரிக்கா
வாஷிங்டன்:அதிபர் ஒபாமா மற்றும் சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ கூட்டறிக்கைக்கு இந்திய தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்திய அரசை சமாதானப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.சமீபத்தில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, அந்நாட்டின் அதிபர் ஹூ ஜிண்டாவோவை சந்தித்துப் பேசினார்.
அன்னிய நேரடி முதலீடு அவசியம் ஜவுளி, ஆடை மார்க்கெட் 14 சதவீதம் வளர்கிறது தயாநிதி மாறன் தகவல
புதுடெல்ல: இந்திய ஜவுளி மற்றும் ஆடை மார்க்கெட், 14 சதவீத வளர்ச்சி கண்டு வருவதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! – வைகோ கண்டனம்!
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை.
முதலீட்டாளர்களுக்காக பங்குச்சந்தையில் சீர்திருத்தம்: செபி
மும்பை: முதலீட்டாளர்களை கருத்தில் கொண்டு பங்குச்சந்தையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வருவதாக செபி(இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம்) தலைவர் சி.பி.பாவே கூறியுள்ளார்.
அடையாள எண் இல்லாத மொபைல் இணைப்புகள் துண்டிப்பு : டிச.1ல் கோடிக்கணக்கில் செயலிழக்கும் அபாயம்
ஐ.எம்.இ.ஐ., என்றழைக்கப்படும் அடையாள எண் இல்லாத மொபைல் போன்களுக்கான சேவை, டிசம்பர் 1ம் தேதி நிறுத்தப்படும் என்று தொலைத் தொடர்புத் துறை அறிவித்து உள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் கோடிக்கணக்கில் மொபைல் போன்கள் செயலிழக்கும்.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் * தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அதிரடி
கோவை : பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற காரணமாக இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் இனி லேசில் தப்பிக்க முடியாது. கடந்த ஆண்டு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் 60 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி பெற காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை விளக்கம் கேட்டு … Continued
ரயில் விபத்து பற்றி முன்னெச்சரிக்கை கொடுப்போருக்கு வேலை: மம்தா
புதுடில்லி:ரயில் விபத்து நடக்கும் என்று தெரிந்து அதுபற்றி முன்கூட்டியே ரயில்வே நிர்வாகத்துக்குத் தெரிவிப்பவர்களுக்கு ரயில்வேயில் வேலை தரப்படும்,” என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தில் தாரகேஸ்வர்-நரிக்குல் இரட்டைவழி ரயில் பாதை திறப்பு விழாவில் கலந்து கொண்ட மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது:
புலிகளின் சர்வதேச வலை : இலங்கை செயலர் கவலை
இலங்கையில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாகக் கருதும் அந்நாட்டு அரசு, அவர்களது சர்வதேசத் தொடர்புகளால் கவலை அடைந்துள்ளது. புலித் தலைவர் பிரபாகரனின் மரணத்துக்குப் பிறகு, இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக, அந்நாட்டு அரசு கருதுகிறது.
20 வருடங்களுக்குப் பின் அரிசியை இறக்குமதி செய்யும் இந்தியா!
டெல்லி: வழக்கமாக அரிசியை ஏற்றுமதி செய்தே பழக்கப்பட்ட இந்தியா கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு, முதல் முறையாக அரிசியை இறக்குமதி செய்யவுள்ளது.