விதிமீறல்-5 பொறியியல் கல்லூரிகள் மீது சிபிஐ வழக்கு
சென்னை: அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் 5 பொறியியல் கல்லூரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
லைப்ரரிக்கு 51 ஆண்டுக்கு பின் திரும்பி வந்த 2 புத்தகங்கள்
நியூயார்க் : அமெரிக்காவில் 51 ஆண்டுகளுக்கு முன் லைப்ரரியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட 2 புத்தகங்கள், ரூ.47,000 அபராத தொகையுடன் இப்போது பத்திரமாக தபாலில் திரும்பி வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரியில் நிலச்சரிவால் வீடு இழந்தவர்களுக்க புதிய வீடுகள் வழங்கப்படும்
சென்னை : நீலகிரியில் நிலச்சரிவால் வீடு இழந்தவர்களுக்கு 15 நாளில் தற்காலிக வீடுகள் கட்டித் தரப்படும். 6 மாதத்திற்கு பிறகு புதிய வீடுகள் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
தங்கம் போலவே, மளிகையும் தாறுமாறாக விலை உயர்வு தவிக்கும் மக்களுக்கு தீர்வு?
தங்கம் போல, மளிகைப் பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகிறது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடும் பாதிப் புக்கு உள்ளாகி, அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சுய உதவி குழுக்களுக்கு கழிவுகற்களை வழங்கும் தொழில் துறை செயலாளர் உத்தரவு : ஐகோர்ட் கிளை இடைக்கால தடை
மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிரானைட் கழிவு கற்களை பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு வழங்கும் தொழில் துறை செயலாளர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.
மதிப்பெண் சான்றிதழில் இனி போட்டோ : போலிகளை ஒழிக்க கல்வித்துறை அதிரடி
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அவர்களின் புகைப்படங்களுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க, தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. போலிச் சான்றிதழ்களை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு, இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது. இத்திட்டம், வரும் கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கல்பாக்கம் உட்பட அணுமின் நிலையங்களுக்கு பயங்கரவாத தாக்குதல் அபாயம் : கடும் பாதுகாப்பு
புதுடில்லி : அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, இந்தியாவில் அணுமின் நிலையங்கள் உள்ள சில மாநிலங்களுக்கு விஜயம் செய்ததாக வெளியான தகவல்களை அடுத்து, நாடு முழுவதும் உள்ள அணுமின் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இடம் பெயர்ந்த தமிழர்கள் நலனுக்காக ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் பிரசாரம்
கொழும்பு: இடம் பெயர்ந்தோர் முகாம்கள் என்ற பெயரில் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பக் கோரி ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பினரும், அதன் ஆதரவாளர்களும் உலகம் தழுவிய பிரசார இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.
பெயர் மாறி மீண்டும் உதயமான புதினம் இணையத்தளம்!
வன்னி: ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்ற புதினம் இணையத்தளம் தற்போது புதிய பெயரில் மீண்டும் உதயமாகியுள்ளது.
லஞ்ச ஒழிப்பு துறையில் இருந்து ராமானுஜம் மாற்றப்பட்டது ஏன்?
லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பாக செயல்பட்ட கூடுதல் டி.ஜி.பி., ராமானுஜம் முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு மாற்றப்பட்டதற்கு, அவரது செயலை ஏற்காதவர்கள் மேற்கொண்ட மறைமுக எதிர்ப்பே காரணம் என, பரபரப்பாக பேசப்படுகிறது.