ரூ.2.2 லட்சம் கோடி மருத்துவ மோசடி்
வாஷிங்டன் : போலி ஆவணங்களின் அடிப்படையில், மருத்துவ செலவுக்காக அமெரிக்கா ரூ.2.2 லட்சம் கோடி செலவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அசோசியேட்டடு பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு வழங்கியுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஆப்கானிய அதிபர் முழுமையாக நிர்வாகத்தைப் பொறுப்பேற்காத வரை அமெ. உதவி கிட்டாது : ஹிலாரி
ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாயும் அவருடைய அமைச்சர்களும் தமது நிர்வாகத்தை முழுமையாகப் பொறுப்பேற்காத வரையில், அமெரிக்கா கூடுதலான சிவிலியன் உதவிகளை வழங்காது”. இவ்வாறு அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் எச்சரித்துள்ளார்.
வெளிநாடுகளில் வேலைக்காக பார்மசி பாடத்திட்டம் மாற்றம்
ஸ்ரீவில்லிபுத்தூர்:”வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெறும் வகையில், பார்மசி பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்படும்’ என, தமிழ்நாடு பார்மசி கவுன்சில் தலைவர் சின்னசாமி தெரிவித்தார்.
தட்டுப்பாடின்றி நிலக்கரி தேவை : ஆற்காடு வீராசாமி வேண்டுகோள்
சென்னை : “”தமிழகத்தில் அமையவுள்ள மூன்று அனல் மின் நிலையங்களுக்கு தேவைப்படும் நிலக்கரி தட்டுப்பாடின்றி கிடைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என டில்லியில் நடந்த மாநாட்டில், ஆற்காடு வீராசாமி வேண்டுகோள் விடுத்தார். டில்லியில் நேற்று நடந்த மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில், தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியதாவது: மத்திய அரசு பொறுப்பேற்ற … Continued
சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் ஜனாதிபதி பிரதிபா நம்பிக்கை
புதுடில்லி:சந்திரனுக்கு ஆளில்லாத விண்கலமான சந்திரயான்1 அனுப்பி வைக்கப்பட்டது. விரைவில், சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்,” என, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நம்பிக்கை தெரிவித்தார்.டில்லியில், இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச வர்த்தக கண்காட்சியை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் துவக்கி வைத்தார்.
ரூ.1 கோடியில் பறக்கும் கார் அமெரிக்காவில் 2011ல் அறிமுகம்
வாஷிங்டன் : சாலையில் ஓடுவதுடன், வானில் பறக்கும் வசதி கொண்ட பறக்கும் கார், அமெரிக்காவில் 2011ம் ஆண்டில் அறிமுகமாகிறது. அதன் விலை ரூ.1 கோடி. சாலையில் ஓடக்கூடிய, அதேநேரத்தில் வானிலும் பறக்கும் வசதி கொண்ட காரை அமெரிக்க நிறுவனமான டெர்ராப்யூஜியா தயாரித்து வருகிறது.
அமெரிக்காவில் கைதான தீவிரவாதி ஹெட்லி பற்றி திடுக்கிடும் தகவல்
புதுடெல்லி, : அமெரிக்காவில் கைதான லஸ்கர்&இ&தொய்பா தீவிரவாதி ஹெட்லி பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மும்பை தாக்குதலுக்கு முன் அவன் டெல்லி ஓட்டல்களில் தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.
1 மணி நேர லெக்சருக்கு ரூ.82,000 10 வயது பொடியன் 2 கம்பெனிக்கு சி.இ.ஓ.
கோலாலம்பூர், : மலேசியாவை சேர்ந்த 10 வயது பொடியன், 2 கம்பெனிகளுக்கு தலைமை செயல் அதிகாரியாக கலக்குகிறான். படிப்பை பாதியில் விட்ட அவனுக்கு, கல்லூரிகளில் 1 மணி நேரம் விரிவுரையாற்ற ரூ.82,000 தரப்படுகிறது.மலேசிய தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவர் செரியனா அலியாஸ்.
நவம்பர் 27 ல் மாவீரர் நாள் உரை நிகழ்த்த வருகிறார் பொட்டு
மாவீரர் நாளுக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், அந்த நாளின் உரையை வாசிக்கப் போவது யார் என்ற பரபரப்பான கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த ஆண்டு பொட்டு அம்மான்தான் இந்த வரலாற்றுப் புகழ்மிக்க உரையை வாசிக்கப் போகிறார் என்று ஆனந்த விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள கட்டுரை தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசைத்தறி உரிமையாளர்கள் 17ம் தேதி ஸ்டிரைக்
சங்கரன்கோவில்: விசைத்தறிக்கான நூல் விலை உயர்வை கண்டித்து சங்கரன்கோவில் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் சார்பில் வரும் 17ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் உண்ணா விரத போராட்டம் நடத்தப்பட உள்ளது.