3 நாள் தங்க ரூ.21 கோடி முதல் விண்வெளி ஓட்டல் 2012ல் திறப்பு
பார்சிலோனா, : உலகின் முதல் விண்வெளி ஓட்டல் Ôகேலாக்டிக் சூட்Õ, 2012ல் திறக்கப்படுகிறது. ரூ.14,100 கோடியில் அமைக்கப்படும் அந்த ஓட்டலில் 3 நாள் தங்க கட்டணம் ரூ.20.7 கோடி. விண்வெளி ஆராய்ச்சியில் முன்னாள் பொறியாளர், சேவியர் கிளாரமன்ட்.
உலக வங்கித் தலைவர் எச்சரிக்கை கிரடிட், டெபிட் கார்டால் வங்கிகளுக்கு சிக்கல்
சிங்கப்பூர், : இந்த ஆண்டில் புதிதாக எந்த பொருளாதாரச் சிக்கலும் ஏற்படாது. ஆனால் 2010ம் ஆண்டில் வங்கிகள் புதிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். பெரும் வேலை இல்லாத் திண்டாட்டம் வங்கிகளை பாதிக்கக்கூடும்.
திறமையான ஆசிரியர்கள் கிடைப்பதில் சிரமம்: பிரதமர் மன்மோகன் வெளிப்படை
புதுடில்லி : “நாட்டில் புதிதாக அமைக்கப் பட்டு வரும் ஐ.ஐ.டி.,க்கள், ஐ.ஐ.எம்., மற்றும் மத்திய பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றிற்கு, திறமை வாய்ந்த ஆசிரியர்களை ஈர்ப்பது பெரும் பிரச்னையாக உள்ளது’ என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
அசர்பைஜானில் கழுதையோடு பேட்டி கண்ட ருசிகர வீடியோ பிளாக்: 2 பேருக்கு சிறை
பாகு: ( அசர்பைஜான்) : அரசுக்கு எதிராக கழுதையுடன் பேட்டி கண்ட வீடியோ தொகுப்பை ஆன்லைன் மூலம் பிளாக்கில் ஒளிபரப்பிய 2 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு கபேயில் தகராறு செய்ததாக வழக்கு பதியப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். உலக அளவில் இந்த உத்தரவுக்கு கண்டனமும் எழுந்துள்ளது. கழுதையோடு பேட்டி கண்டு கேலி செய்த இந்த … Continued
இந்தியாவில் தொழில் துவங்க அழைப்பு – அமைச்சர் அழகிரி
சென்னை: “”இந்தியாவில் தொழில் துவங்க மலேசியா, இந்தோனேசியா தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,” என்று, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அழகிரி கூறினார்.
பருத்தி ஏற்றுமதியை வரைமுறைப்படுத்த வேண்டும் : ஜவுளிக்குழு தலைவர் தகவல்
மதுரை: ”உள்நாட்டுத் தேவைக்காக இந்திய பருத்தி ஏற்றுமதியை மத்திய அரசு வரைமுறைப்படுத்த வேண்டும்” என ஜவுளித்குழு தலைவர் கருமுத்து கண்ணன் தெரிவித்தார்.
பெண் குழந்தைகளை பெற்றவருக்கு நிதி வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: தேனி மாவட்டம் போடியை சேர்ந்த, இரு பெண் குழந்தைகளை பெற்றவருக்கு நிதி வழங்கும்படி சமூக நலத்துறையினருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. போடியை சேர்ந்த பிருந்தா தாக்கல் செய்த ரிட் மனு:
பேச்சாளராகி விட்டார் புஷ்: பீஸ் ரூ. 50 லட்சம் தானுங்க
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், இப்போது “காஸ்ட்லி’யான பேச்சாளர் ஆகிவிட்டார். ஒரு முறை மேடையேற 50 லட்சம் ரூபாய் “பீஸ்’ வாங்குகிறார். அமெரிக்காவின் அரசியல், உலக அரங்கில் வித்தியாசமானதுதான். அதன் அதிபர்கள் பலர், தங்கள் பதவிக் காலத்துக்குப் பின், முன் பார்த்த வேலை அல்லது தனக்குப் பிடித்த வேலைகளைச் செய்யத் தொடங்கி விடுவர். … Continued
‘சூப்பர் பேபி’ பல்கலையில் சேர்ந்தால் சூப்பர் ‘குவா குவா’ தான்
ஆமதாபாத் : “”உங்கள் குழந்தை சூப்பர் பேபியாக, அதாவது கருவிலேயே எல்லா அம்சங்களும் பொருந்தியதாக உருவாகி, “சூப்பர் பேபி’யாக பிறக்க வேண் டுமா? உடனடியாக வந்து சேருங்கள் “சூப்பர் பேபி பல்கலைக் கழகத்தில்” இப்படி விளம்பரம் செய்கிறார் மகரிஷி பிரகலாத படேல்.
300 ஆண்டு கால பழமையான விழா-5 லட்சம் விலங்குகளை பலியிட தயாராகும் நேபாளம்
காத்மாண்டு: நேபாளத்தின் பரியாபூர் மாவட்டத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விலங்குகள் பலியிடும் திருவிழா வருகிற 24ம் தேதி தொடங்குகிறது. இதில் ஐந்து லட்சம் விலங்குகளை மொத்தமாக பலி தரப் போகிறார்கள்.