புலிகளுக்கு உயிர் கொடுக்க சில சக்திகள் முயற்சி – திவயின
யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உயிர் கொடுக்க சில சக்தகிள் முயற்சி மேற்கொண்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. புலிகள் இயக்கம் மீண்டும் இயங்குவதாக வெளிக்காட்டும் வகையில் உள்நாட்டில் இயங்கி வரும் சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
சுவிஸ் வங்கிகளில் காணப்படும் புலிகளின் சொத்துக்களை அரசுடமையக்குவது தொடர்பில் கவனம் : திவயின
சுவிஸ்லாந்து வங்கிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சுமார் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதி காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பில் அரசாங்கம் முயற்சிகைள மேற்கொண்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
செம்மொழி மாநாட்டுக்கு ‘கொடிசியா’ தேர்வு; கோவை மக்கள் ஏமாற்றம்
கோவை : கோவை “கொடிசியா’ தொழிற்காட்சி வளாகத்தை, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு தேர்வு செய்திருப்பதால், கோவை மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வரும் ஜூன் மாதத்தில் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாநாடு எங்கு நடத்தப்படும், இதனால் அந்தப் பகுதிக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும் … Continued
பிஎப் சம்பள உச்சவரம்பு ரூ.10,000 ஆக உயர்கிறது
புதுடெல்லி : பிஎப் பிடித்தம் செய்வதற்கான அடிப்படை சம்பளம், அகவிலைப்படி இணைந்த உச்சவரம்பு, ரூ.6,500ல் இருந்து ரூ.10,000 ஆகிறது. ஒரு நிறுவனத்தில் 20 தொழிலாளர் இருந்தால் பிஎப் கட்டாயம் என்பதும் இனி, 10 பேர் இருந்தாலே கட்டாயமாகிறது.
பயங்கரவாதிகளுடன் ஐ.எஸ்.ஐ., தொடர்பு : முஷாரப் ஒப்புதல்
வாஷிங்டன் : பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு அனைத்து பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உண்டு என, முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் இது குறித்து சி.என்.என்., “டிவி’க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கர்நாடக சிக்கலுக்கு காரணமாக இருந்த பெண் மந்திரி ராஜினாமா : பிரச்னை இனி வராது என முதல்வர் கருத்து
பெங்களூரு : கர்நாடகாவில் மீண்டும் ஒரு திருப்புமுனையாக, ரெட்டி சகோதரர்களால் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்த பெண் அமைச்சர் ஷோபா, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை முதல்வர் எடியூரப்பா உடனடியாக ஏற்று, கவர்னருக்கு அனுப்பி வைத்தார்.
ஒரே பள்ளியில் படிக்கும் 9 இரட்டை குழந்தைகள்
தாமரச்சேரி : ஒரே பள்ளியில், ஒன்பது இரட்டைக் குழந்தைகளும், ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளும் கல்வி பயின்று வருகின்றனர்.
தமிழகத்தில் மழைக்கு 27 பேர் பலி : ஊட்டியில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை : தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழைக்கு, இதுவரை 27 பேர் பலியாகியுள்ளனர். 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் சர்க்கரை, பருப்பு தர முடிவு*விநாயகரையும் வணங்கினார் முதல்வர் சவான்
மும்பை:மகாராஷ்டிராவில் ரேஷன் கடைகள் மூலமாக சர்க்கரை, பருப்பு ஆகிய வற்றை சலுகை விலையில் பொதுமக்களுக்கு வழங்க, மாநில அரசு திட்டமிட் டுள்ளது.மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில், காங்.,- தேசியவாத காங்., கூட் டணி வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஏற் பட்ட கருத்து வேறுபாட் டால், புதிய அரசு பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டது.
புலிகள் சார்பு புதிய அரசு இலங்கை கடும் எச்சரிக்கை
கொழும்பு:”வெளிநாடுகளில் இருந்து செயல்படும் வகையிலான ஒரு அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் புலிகளும், அவர்களது ஆதரவு அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச நாடுகள் இதை அனுமதிக்கக் கூடாது’ என, இலங்கை தெரிவித்துள்ளது.