ராமேஸ்வரத்தில் மீட்ட குழந்தை சின்னாளப்பட்டியை சேர்ந்ததா?: டி.என்.ஏ., சோதனைக்கு உத்தரவு
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் மாயமான 9 நாள் குழந்தை ராமேஸ்வரத்தில் மீட்கப்பட்டதாக இருக்குமா? என கருதி டி.என்.ஏ., சோதனை நடத்த மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
நேபாளத்தில் கடும் நிதி நெருக்கடி : அமைச்சர்களுக்கு சம்பளம் ‘கட்’
காத்மாண்டு : “பார்லிமென்ட்டில் பட்ஜெட்டை நிறைவேற்ற விடாமல் மாவோயிஸ்ட்கள் தடுத்து வருவதால், அமைச்சர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட முடியாத அளவுக்கு, அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது’ என, நேபாள அரசு அறிவித்துள்ளது.
முப்படை இருந்தும் பயனில்லை; மீனவர்களுக்கு தேவை துப்பாக்கி: தா.பாண்டியன் பேட்டி
ராமநாதபுரம்: இந்தியாவில் முப்படை இருந்தும் தமிழர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என இந்திய கம்யூ., மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார். தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்க வலியுறுத்தி ராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறுகையில், “”தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டி வருகின்றனர்.
இனி தமிழகம் முழுவதும் தங்கம், வெள்ளிக்கு ஒரே விலை: மக்கள் ஏமாறுவதை தடுக்க நடவடிக்கை
சென்னை: இனி தமிழகம் முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஒரே விலை நிர்ணயிக்கப் படும் என்று தமிழக நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவந்துள்ள செய்தியில், தமிழகம் முழுவதும் இனி தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஒரே விலை நிர்ணயிக்கப் படுகிறது.
கிங் இன்ஸ்டிடியூட் இடம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதற்கு கோர்ட் தடை
சென்னை: சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு சொந்தமான 400 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தில், தனியாருக்கு பட்டா வழங்க அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித் துள்ளது.
கோல்மேனிடம் விசாரிப்பதற்காக அமெரிக்கா சென்றது இந்திய குழு
வாஷிங்டன்: இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட சதித் திட்டம் தீட்டிய அமெரிக்கர், டேவிட் கோல்மேன் ஹெட்லியிடம் விசாரணை நடத்துவதற்காக “ரா’ மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அமெரிக்கா சென்றுள்ளனர்.
ஆயிரக்கணக்கில் பக்தர்கள் செல்லும் புல்லட் பாபா கோவில்
ஜெய்ப்பூர் : யானைக்குக் கோவில்; எலிக்குக் கோவில்; இதெல்லாம் நாம் கேள்விப்பட்டதுதான். ஆனால் புல்லட் கோவில் பார்த்ததுண்டா? ராஜஸ்தானிலுள்ள “புல்லட் பாபா’ கோவில் சொல்லும் கதைகள் ஏராளம். ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர்-பாலி இடையே 65வது தேசிய நெடுஞ்சாலையில் சோட் டிலா கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்துக்கு அருகில் சாலையோரம் ஒரு மரத்தடியில் “புல் லட் பாபா’ … Continued
திருமணமான 2 நாளில் புதுமணப் பெண் சாவு : புதுச்சேரி அருகே பரபரப்பு
புதுச்சேரி : திருமணம் ஆன இரண்டாம் நாளில் புதுமணப் பெண் இறந்த சம்பவத்தால், காலாப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆப்கன் வந்தார் பான் – கி – மூன் : மீண்டும் கர்சாய் அதிபரானார்
காபூல் : ஆப்கானிஸ்தானில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலை பார்வையிடுவதற்காக, ஐ.நா.,பொது செயலர் பான் -கி -மூன் நேற்று காபூல் வந்தார் . ஆனால், மீண்டும் கர்சாய் அதிபர் என்று திடீர் திருப்பமாக அறிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதிபர் கர்சாயும், அவரை எதிர்த்து முன்னாள் வெளியுறவுத்துறை … Continued
பஸ்களில் விளம்பரம் தமிழக அரசு முடிவு
சென்னை : “பஸ்களில் விளம்பரம் செய்வது குறித்து, தேவைப் பட்டால், மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் கொண்டு வரப்படும்’ என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.