உள்துறையை இரண்டாக பங்குபோட காங்கிரஸ் முடிவு
மகாராஷ்டிர புதிய முதல்வராக அசோக் சவான் நாளை பதவி ஏற்கிறார். உள்துறை யாருக்கு என்ற இழுபறி நீடிப்பதால் அவருடன் துணை முதல்வர் சாகன் புஜ்பால் மட்டும் பதவி ஏற்கிறார். சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உள்துறையை கேட்பதால் அத்துறையை இரண்டாக பிரித்து பங்குபோட்டுக் கொள்ள காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.
அரிசி விலை மேலும் உயரும் அபாயம் : லெவி அமலுக்கு வருவதாக வியாபாரிகள் பேச்சு
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் நெல்லுக்கு, விரைவில், ‘லெவி’ அமல் படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் எதிரொலியாக, அரிசி விலை மேலும்
பள்ளி பாடநூல் அச்சடிக்கும் பணியில் சிக்கல் : சமச்சீர் கல்வித்திட்டமும் பாதிக்கும் அபாயம்
பள்ளி பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கான விலையை நிர்ணயம் செய்வதில், அச்சகதாரர்களுக்கும், பாடநூல் கழகத்திற்கும் இடையே நீடித்து வந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. கடைசி முயற்சியாக, பாடநூல் அச்சிடுவோர் சங்க நிர்வாகிகள், நேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தியதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
ஸ்ஸ்… அப்பாடா! நிம்மதிப் பெருமூச்சில் ஐடி நிறுவனங்கள்!
இந்திய ஐடி நிறுவனங்கள் சற்றே நிம்மதிப்பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளன. காரணம், ‘இப்போ முடியுமா… இன்னும் நாளாகுமா’ என இழுத்துக் கொண்டே இருந்த அமெரிக்க பொருளாதார மந்த நிலை, மெல்ல மெல்ல மீட்சிக்குத் திரும்பிக் கொண்டிருப்பதுதான்.
அரசு பள்ளிகளில் இரு பயிற்று மொழி வசதி ஏற்படுத்துவது கடினம்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
காஞ்சிபுரம்:அரசு பள்ளிகளில் இருவேறு பயிற்று மொழி வசதியை ஏற்படுத்துவது இயலாத காரியம் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.சென்னை மண்டல கல்வித் துறை ஆய்வுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது.
ரூ.30 மானியம் திடீர் ரத்து-தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது
டெல்லி: இந்தியாவின் நெம்பர் 2 மொபைல் சர்வீஸ் நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் இரண்டாவது காலாண்டு லாபம் பாதிக்கும் மேல் குறைந்துள்ளது.
இலங்கைக் கடற்படையுடன் இணைந்து தாக்கும் சீனர்கள்- பாதுகாப்புக்கு பேராபத்து- பலத்த அமைதியில் இந்தியா
ராமநாதபுரம்: இலங்கைக் கடற்படையில் சீனர்களும் இணைந்து தங்களைத் தாக்குவதாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து கவலைபபடுவதாக தெரியவில்லை. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு பேராபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
கோதபயாவுக்கு எதிரான பொன்சேகாவிடம் சாட்சியம் கோரும் யுஎஸ்
வாஷிங்டன்: இலங்கையில் நடந்து முடிந்த ஈழப் போரின் இறுதி நாட்களில் நடந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றில் கோதபயா ராஜபக்சேவுக்கு உள்ள தொடர்புகளுக்கான ஆதாரங்களை வழங்குமாறு இலங்கை கூட்டுப் படைத் தலைவர் சரத் பொன்சேகாவை கேட்டுள்ளது அமெரிக்க அரசு.
இனி தீவிரவாத தாக்குதல் நடந்தால் பாக்.குக்கு பதிலடி கிடைக்கும்- ப.சிதம்பரம்
மதுரை: இனிமேல் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி தரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம்: புகார்கள் மட்டுமே ஊழலுக்கு ஆதாரமல்ல- பிரணாப்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக கூறப்படும் புகார்கள் மட்டுமே ஊழலுக்கு ஆதாரம் ஆகிவிடாது என்று மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி கூறினார்.