சிறையில் காலம்தள்ளும் விசாரணைக் கைதிகளின் கதிக்கு விமோசனம்
புதுடில்லி : அப்பீல் மனு விசாரிக்கப்படாத தண்டனை கைதிகளும், விசாரணைக்கே அழைக்கப்படாத விசாரணை கைதிகளும், தண்டனை காலத்தில் பாதிக்கு மேல் அனுபவித்து வருகின்றனர். இந்த அவல நிலையை உடனே கவனத்தில் கொண்டு விசாரணை நடத்தும்படி சட்ட அமைச்சருக்கு பிரதமர் மன்மோகன் உத்தரவிட்டுள்ளார்.
போலி கிரெடிட் கார்டு கும்பல் கண்டுபிடிப்பு : இலங்கையைச் சேர்ந்த வாலிபர் சிக்கினார்
சென்னை : போலி கிரெடிட் கார்டுகளை தயாரித்து, அவற்றை பயன்படுத்தி பொருட்களை வாங்கி மோசடியில் ஈடுபட்ட இலங்கை வாலிபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோட்டில் உள்ள, டயானா கோல்ட் ஸ்டோர்ஸ் மேலாளர் செந்தில். இவரது கடைக்கு, ஹரிகுமார் என்பவர் கடந்த மாதம் 17ம் தேதி காலை … Continued
ராஜ் ராஜரட்னம் புலிகளுக்கு நிதிவழங்கினார்: கே.பி கூறுகிறார் – இலங்கை பாதுகாப்பு அமைச்சர்
சமீபத்தில் நிதி மோசடி தொடர்பாக அமெரிக்க FBI யால் கைதான தொழிலதிபர் ராஜ் ராஜரட்னம், விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கினார் எனக் கே.பி கூறியுள்ளதாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் புதிய திட்டம் அறிமுகம்
மதுரை: ‘சிம்ப்ளி ரிலையன்ஸ் பிளான்’ என்ற பெயரில் புதிய மொபைல் திட்டத்தை, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அந்நிறுவன தமிழக தலைவர் அஜய் அவஸ்தி, மதுரை பொறுப்பாளர் ஆன்டனி ராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
பிரதமர் ஆகும் தகுதி ராகுலுக்கு உண்டு சொல்கிறார் திக் விஜய்
வாரனாசி:பிரதமராவதற்கான அனைத்து தகுதிகளும் ராகுலுக்கு உள்ளது. அவரை உ.பி., முதல்வர் பதவிக்கு முன்னிலைப் படுத்துவதாக கூறப்படுவது தவறான தகவல்’என., காங்., பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறினார்.காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறியதாவது:மூன்று மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் பா.ஜ., கூட்டணி படு தோல்வி அடைந்துள்ளது.
விமான பயிற்சி பள்ளிகள் முக்கிய நகரங்களில் துவக்கம்
சேலம் : இந்தியாவில், விமானிகளுக்கான (பைலட்) தேவை அதிகரித்து வருவதால், சேலம், தூத்துக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களில், விமான பயிற்சி பள்ளிகள் அமைக்கப்படவுள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய நகரங்களில் விமான நிலையங்கள் உள்ளன. வர்த்தக நோக்கில், விமான பயணங்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை லேசாக உயர்வு
டெல்லி: பெட்ரோல், டீசல் விலை வரும் திங்கள்கிழமை முதல் லேசாக உயர்கிறது.
தொலைத்தொடர்பு அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் திடீர் சோதனை
புதுடில்லி:மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், டில்லியில் உள்ள தொலைத்தொடர்புத் துறை அலுவலகமான சஞ்சார் பவனில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.இதுதொடர்பாக சி.பி.ஐ., தகவல் தொடர்பாளர் கூறியதாவது:
இந்தியன் வங்கி நிகர லாபம் அதிகரிப்பு
மும்பை: இந்தியன் வங்கி நிகர லாபம் அதிகரித்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டு கணக்கெடுப்பினை இந்தியன் வங்கி வெளியிட்டுள்ளது.
ராஜசேகர ரெட்டி கொலை : குடும்ப பத்திரிகை தகவல்
ஐதராபாத்: மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, “விபத்தில் சாகவில்லை; திட்டமிட்டே கொல்லப்பட்டார்’ என அவரது குடும்ப பத்திரிகையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திரா சித்தூருக்கு செப்.,2ம் தேதி அம்மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டரில் சென்றார்.