லண்டனில் நடந்த காற்றுவெளி கிராம நிகழ்வில் தமிழருவி மணியன் ஆற்றிய உரை
லண்டனில் நடந்த காற்றுவெளி கிராம நிகழ்வில் தமிழருவி மணியன் அவர்கள் ஆற்றிய உரை: Requested file could not be found (error code 404). Verify the file URL specified in the shortcode.
செய்தி ஆசிரியர் லெனினை வலுக்கட்டாயமாக கைது செய்தனர் – தினமலர்
சென்னை: செய்தி ஆசிரியர் லெனினை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்ததாக தினமலர் தெரிவித்துள்ளது. நடிகர் சங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் நேற்று மாலை திடீரென கைது செய்யப்பட்டார்.
விமான பணிப்பெண் மரணம்: சி.பி.ஐ., விசாரணை கேட்டு மனு
சென்னை: விமான பணிப்பெண் மரணம் குறித்த வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் அவரது தந்தை மனு தாக்கல் செய்துள்ளார். பீகார் மாநிலம் சாகர்சா மாவட்டத்தைச் சேர்ந்த பிஜய் குமார் பகத் என்பவர் சார்பில், வக்கீல் பழனிமுத்து தாக்கல் செய்த மனு
ஆப்கனில் இந்திய தூதரகம் முன்பு குண்டுவெடிப்பு ; 14 பேர் பலி
காபூல்: ஆப்கனில் உள்ள இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாயினர். பலர் காயமுற்றனர். காலையில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கனில் உள்ள பயங்கரவாதிகள் இது போன்று அலுவலகத்தை குறி வைத்து தாக்குதல் நடத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
ஆந்திராவை உருக்குலைத்த வெள்ளச் சேதம் ரூ.12 ஆயிரம் கோடி
ஐதராபாத் : ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு காரணமாக, 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. முக்கிய அணைகளில் இருந்து கட்டுக்கடங்காத அளவுக்கு தண்ணீர் வெளியேற்றப்படுவதால், விஜயவாடா மற்றும் 400 கிராமங்கள் தொடர்ந்து தண்ணீரில் மிதக்கின்றன.
எஸ்.பீ.ஐ., லைப் நிறுவனத்தை விஞ்சிய ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்சியல்
புதுடில்லி: புதிய பிரிமியம் வருவாய் ஈட்டுவதில் எஸ்.பீ.ஐ., லைப் நிறுவனத்தை ஐ.சி.ஐ.சி.ஐ., விஞ்சி உள்ளது. தனியார்ஆயுள் காப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்சியல் நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தில் ரூ. 1, 725 கோடியை புதிய பிரிமியம் வருவாயாக ஈட்டியுள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரி வரித்திட்டம் : மத்திய அமைச்சர் தகவல்
சென்னை: பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரித் திட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார்.சென்னை நுங்கம்பாக்கத்தில், இன்டர்நெட்டில், வரிகளை செலுத்துவதற்கான இன்டர்நெட் முகவரியை, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம்நேற்று துவக்கிவைத்தார்.
கல்லூரி அதிபர் ராஜா உடல்நிலை: மருத்துவ குழு அமைக்க உத்தரவு
புதுடில்லி: ஆலடி அருணா கொலை வழக்கில் தண்டனை பெற்ற, கல்லூரி அதிபர் எஸ்.ஏ. ராஜாவின் உடல் நிலையை பரிசோதனை செய்வதற்காக, மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழு ஒன்றை அமைக்க , தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் நூலிழையில் விபத்திலிருந்து தப்பியது
ஆந்திராவில் வெள்ள சேதத்தை பார்வையிட முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் உயரமான கட்டிடத்தின் மீது மோதும் அளவுக்கு நெருங்கிச் சென்றது. பைலட் அதிரடியாக செயல்பட்டு சட்டென திருப்பியதால் பயங்கர விபத்து தவிர்க்கப்பட்டது. நாயுடு ஆபத்தின்றி தப்பினார்.
போர்க்களத்தின் கடைசி நாளில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, பொட்டு அம்மான் தற்கொலை: “த நேசன்” பத்திரிகை புதிய தகவல்கள்
ஈழத்தில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப்புலிகளின் உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மான் தனது மனைவியை சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக இலங்கையின் ஆங்கில பத்திரிகையான “த நேசன்” செய்தி வெளியி்ட்டுள்ளது.