இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவை ஒட்டிய பசிபிக் கடலின் அடிப்பகுதியில் புதன்கிழமை மாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையொட்டி இந்தியாவிற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நிறுவன காண்டிராக்டை பெற்றது டிசிஎஸ்
மும்பை: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ் (டிசிஎஸ்) பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிங்கப்பூர் அரசு காண்டிராக்டைப் பெற்றுள்ளது.
பஸ்களில் இனி சாட்டிலைட் மூலம் படம்!
சென்னை: இனிமேல் டிரைவர், கண்டக்டருக்குப் பிடித்த படத்தை (நமக்குப் பிடித்துத் தொலைக்காத) பார்த்தாக வேண்டிய கட்டாயமில்லை. அதற்குப் பதில் சாட்டிலைட் மூலமாக பஸ்களில் திரைப்படங்களை ஒளிபரப்பப் போகிறார்கள்.
சத்யம் மோசடிக்கு உடந்தையாக இருந்த ஆடிட்டர்கள்!
மும்பை: சத்யம் நிறுவனத்தின் நிறுவனர் ராமலிங்க ராஜு செய்த ரூ.7800 கோடி மோசடியில் அந்நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகள் இருவருக்கும் தணிக்கை நிறுவனமான பிரைஸ்வாட்டர் ஹவுஸுக்கும் பெரும் பங்கிருப்பதாக இந்திய தணிக்கை நிறுவனம் (ICAI) அறிவித்துள்ளது.
அணு யுத்தம் வந்தால் பாக். அழியும்; 50 கோடி இந்தியர்களும் பலியாவார்கள் – யு.எஸ். நூல்
நியூயார்க்: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அணு யுத்தம் மூண்டால் பாகிஸ்தான் ஒட்டுமொத்தமாக அழிந்து போகும். அதேசமயம், 50 கோடி இந்தியர்கள் வரை மாளுவார்கள் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் பதவிக்காலத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் கண்டுபிடிக்கப்பட்டதன் எதிரொலி-நிலவில் இடம் வாங்க போட்டா போட்டி
பெங்களூர்: இருக்கிற இடத்தையெல்லாம் வீடுகளாக கட்டிக் குவித்துக் கொண்டிருக்கும் நம்மவர்களுக்கு நிலவில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன், அங்கேயும் கொஞ்சத்தை வாங்கிப் போட்டு விட வேண்டும் என்ற ஆர்வம் பிறந்து விட்டது.
இடம்பெயர் மக்கள் மத்தியில் நூறு பிரபாகரன்களை உருவாக்குகின்றார் ஜனாதிபதி: மங்கள சமரவீர
வவுனியா இடம்பெயர் முகாம்களில் உள்ள மக்களை மிக மோசமாக நடத்தி, அவர்களுக்குள் நூற்றுக்கணக்கான பிரபாகரன்களை ஜனாதிபதி உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்.
வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் தகுதி தேர்வு எழுத சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடில்லி: வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு படித்தவர்கள், நம்நாட்டில் மருத்துவத் தொழிலை செய்ய வேண்டுமானால், இந்திய மருத்துவக் கவுன்சிலின் தகுதி தேர்வை எழுத வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
விஜய்காந்த் இன்று உண்ணாவிரதம் : டில்லியில் விரிவான ஏற்பாடுகள்
இலங்கைக் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, தே.மு.தி.க., தலைவர் விஜய்காந்த், டில்லியில் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்.
சென்னையில் உற்பத்தியாகும் போர்டு நிறுவன பிகோ கார்கள்
சென்னை: இந்தியாவின் சிறிய ரக கார் சந்தையில், அமெரிக்காவின் போர்டு கார் நிறுவனமும் நுழைந்து விட்டது. இந்நிறுவனம், சமீபத்தில் தனது, பிகோ காரை அறிமுகப்படுத்தியது. சென்னை மறைமலையடிகள் நகரில் போர்டு நிறுவனத்துக்கு தொழிற்சாலை உள்ளது. இங்கு தான், புதிய பிகோ கார் உற்பத்தி செய்யப்படுகிறது.