உரிய வாடகை செலுத்தாத விமானங்களை பறிமுதல் செய்ய ஐகோர்ட்டில் வழக்கு
சென்னை: உரிய வாடகை செலுத்தாததால், குத்தகைக்கு விடப்பட்ட இரண்டு விமானங்களை பறிமுதல் செய்வதற்கு அட்வகேட் கமிஷனரை நியமிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வெளிநாட்டு நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது. இரண்டு மாத பாக்கித் தொகையை செலுத்துவதாக உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து, விசாரணை, வரும் 1ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில் உயர் பதவியில் 9 இந்தியர்
வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒன்பது பேர், வெள்ளை மாளிகையில் பணியாற்றுவதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் சிலர் ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் பெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தர்மபுரி மருத்துவ கல்லூரி எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங் –
சென்னை: தர்மபுரி மருத்துவக் கல்லூரிக்கு செப்., 24, 25ம் தேதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்தியாவுக்கு உலக வங்கி 4.345 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி
வாஷிங்டன் : இந்தியாவுக்கு உலக வங்கி 4.345 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. உலக வங்கி நேற்று ஐந்து நாடுகளுக்கு கடன் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
மன்மோகன் இன்று பயணம் : சிக்கன திட்டம் கடைபிடிப்பு
புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங் நான்கு நாள் பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். அதில் சிக்கன திட்டமாக உடன் செல்லும் அதிகாரிகள் இருவர் குறைக்கப்பட்டனர். அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் நாளை மற்றும் நாளை மறுதினம், ஜி-20 உச்சிமாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார். பொருளாதார நிபுணரான பிரதமர் மன்மோகன் … Continued
7 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-14 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று பிஎஸ்எல்வி சி-14 என்ற ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான இறுதி கட்டப் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
லக்னோ சிறுமிக்கு யோகம் : நியூயார்க் மாநாட்டில் பேசுகிறார்
நியூயார்க் : காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு, நியூயார்க்கில் இன்று நடைபெறுகிறது. மாநாட்டில், லக்னோவைச் சேர்ந்த 13 வயது சிறுமி உரை நிகழ்த்துகிறார்.நியூயார்க்கில் உள்ள, ஐ.நா., பொதுச் சபையில் மாநாடு நடக்கிறது. ஐ.நா., சபை பொதுச் செயலர் பான்-கி-மூன் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளின் … Continued
முல்லை பெரியாறு பிரச்னை: மத்திய அரசுக்கு எதிர்ப்பு: முதல்வர் கருணாநிதி உறுதி
சென்னை: “முல்லைப் பெரியாறு அணை குறித்த செய்திகளைக் கண்டு குழப்பிக்கொள்ளத் தேவையில்லை’ என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள, “கேள்வி – பதில்’ அறிக்கை:
இறுதி போரை நேரில் கண்ட சிவரூபன்: மே-17 வரை நந்திக்கடலருகே நின்ற இவர், இலங்கை இராணுவத்தினரின் இன அழிப்பு கொடூரத்தை விபரிக்கிறார்
இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக்கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன். இவ்வாறு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்ட போரில் நந்திக்கடல் அருகில் இடம்பெற்ற இலங்கை இராணுவத்தின் தமிழ் இன அழிப்பை நேரில் கண்ட சாட்சியாக இங்கு … Continued
எந்தவொரு இராணுவ வீரரையும் அமெரிக்க காங்கிரஸின் முன்னால் ஆஜர்படுத்த முடியாது: அரசாங்கம்
எந்தவொரு இராணுவ வீரரையும் அமெரிக்க காங்கிரஸின் முன்னால் ஆஜர்படுத்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.