தமிழக மாவட்டங்களுக்கான ரேங்கிங் – மதுரைக்கு 23வது இடம் – அரசு அதிருப்தி
சென்னை: தமிழக மாவட்டங்களில் உள்ள வாழ்நிலை நிலவரம் மற்றும் வர்த்தகம், தொழில் தொடர்பான சாத்தியக் கூறுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட முதல் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் மதுரைக்கு 23வது இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ராமநாதபுரத்திற்கு 22வது ரேங்க் தந்துள்ளனர். இந்த தர வரிசைப் பட்டியலுக்கு தமிழக அரசு கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.
எல்லையில் சீன ஊடுருவல்: தவறான செய்தி வெளியிட்டதாக 2 நிருபர்கள் மீது வழக்கு
இந்திய எல்லையில் சீன ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக தவறாக செய்தி வெளியிட்ட இரண்டு செய்தியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இவ்விரு செய்தியாளர்களும் முன்னணி செய்தி நிறுவனங்களில் பணிபுரிபவர்களாவர்.
ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு ஐகோர்ட் ‘அபராதம்’: நீதிபதி நாகமுத்து அதிரடி உத்தரவு
சென்னை: “தகுதி மதிப்பெண்ணுக்கு குறைவாக எடுத்தவர்களைச் சேர்த்ததால், ஒவ்வொரு மாணவருக்கும் தலா 5,000 ரூபாய் வீதம், புதுச்சேரி அரசிடம், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் செலுத்த வேண்டும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவர்களை சேர்க்க, பிளஸ் 2 வகுப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என, தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அரசு பள்ளிகளிலும் ஆங்கில வகுப்புகள் துவக்கம்?: சமச்சீர் கல்வியால் வாய்ப்பு
சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வருவதால், தனியார் பள்ளிகளைப் போல் அரசு பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகள் துவக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு ஏற்கனவே நல்ல வரவேற்பு இருப்பதால், ஆரம்பப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்பை துவக்க வேண்டும் என, பெற்றோர் … Continued
பணக்காரர்களுக்கு ஆட்சி: மாயாவதி புகார்
ஜிந்த்(அரியானா):”அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தவில்லை; பணக்காரர்களுக்காக ஆட்சி நடக்கிறது;’ என்று காங்., ஆட்சியை மாயாவதி கடுமையாக தாக்கியுள்ளார்.அரியானா மாநிலத்தில் அக்., 13ல் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி, தனது கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கு பிரசாரம் செய்வதற்காக, மாயாவதி அங்கு சென்றார்.
நாய் விலை 3 கோடி ரூபாய்: வரவேற்க 30 கார்கள்
பீஜிங்:அரிய வகை வேட்டை நாய்க்கு மூன்று கோடி ரூபாய் செலவழித்து, அதை வரவேற்க 30 விலையுயர்ந்த கார்களையும் வாடகைக்கு எடுத்துள்ளார் ஒரு சீனப் பெண்மணி.மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. சீனப் பொருளாதாரத்தின் அபரிமித வளர்ச்சியால் அந்நாட்டில் நிறைய கோடீஸ்வரர்கள் உருவாகி வருகின்றனர்.
பேனசோனிக் நிறுவனத்தின் புதிய ரக ரோபடிக் படுக்கை
டோக்கியோ: எலக்ட்ரானிக்ஸ் துறையில் முன்னனியில் உள்ள பேனசோனிக் நிறுவனம் புதிதாக ரோபடிக் படுக்கை ஒன்றை அறிமுகம் செய்கிறது. இந்த ரோபடிக் படுக்கையை படுக்கை மற்றும் வீல் சேராக உபயோகிக்கலாம்.
அனைத்து போலீஸ் நிலையங்களும் இணைப்பு ரூ.2,000 கோடி செலவழிக்க மத்திய அரசு முடிவு
புதுடில்லி:பயங்கரவாத சவால்களை சமாளிக்க, நாட்டில் உள்ள 16 ஆயிரம் போலீஸ் நிலையங்களையும், ஒரே நெட்வொர்க்கின் கீழ் கொண்டு வரும், இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம், வரும் 2011-12ம் ஆண்டு செயல்பட துவங்கும் என, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
30 லட்சம் லிட்டர் பாலை தரையில் கொட்டி எதிர்ப்பு
பிரசல்ஸ்:பெல்ஜியம் நாட்டில் பாலுக்கு கூடுதல் விலை அளிக்கக்கோரி, பால் உற்பத்தியாளர்கள் 30 லட்சம் லிட்டர் பாலை விளைநிலத்தில் கொட்டி எதிர்ப்பைக் காட்டினர் .பெல்ஜியம் நாட்டில் ஒரு கிலோ பால் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை தங்களுக்கு கட்டுபடியாகவில்லை.
பொக்ரான்-2 அணுகுண்டு சோதனை குறித்து விசாரணை வேண்டும்: விஞ்ஞானி சந்தானம்
கடந்த 1998-ம் ஆண்டு பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனை எந்த அளவுக்கு வெற்றி அடைந்தது என்பது குறித்து நடுநிலைக் குழு மூலம் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆர்டிஓ) முன்னாள் விஞ்ஞானி கே. சந்தானம் விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: