7 சதவீத வட்டியில் விவசாயிகளுக்கு கடன்
புதுடில்லி:விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு 7 சதவீத வட்டியில் குறுகியகால பயிர்க் கடன் வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் கடன் வழங்கும் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
காந்தியுடன் விருந்து சாப்பிடஒபாமா விருப்பம்
வாஷிங்டன்:”என்னை மிகவும் கவர்ந்த தலைவர் காந்தியடிகள். அவருடன் சேர்ந்து விருந்து சாப்பிட எனக்கு விருப்பம். எனக்கு பிடித்த அந்த தலைவரின் படத்தை அலுவலகத்தில் மாட்டி வைத்துள்ளேன்’ என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் ஒபாமா, விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஆர்லிங்டன் நகர பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார்.
ஆப்கனில் தலிபான் பிடியில் இருந்த நியூயார்க் டைம்ஸ் நிருபர் விடுவிப்பு
குண்டஸ்:ஆப்கானிஸ்தானில், தலிபான்களால் கடத்தி செல்லப்பட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை நிருபர் விடுவிக்கப் பட்டார். இவருக்கு மொழி பெயர்ப்பாளராக இருந்தவர் கொல்லப்பட்டார்.ஆப்கானிஸ்தான் அமைதி பணியில் அமெரிக்கா மற்றும் “நேட்டோ’ படைகள் ஈடுபட்டுள்ளன. கடந்த வாரம் நேட்டோ படைகளுக்கு சொந்தமான டீசல் டேங்கர் லாரியை தலிபான்கள் கடத்தி சென்றனர்.
அரசியலில் முகவரி தேடும் சாமி புகாருக்கு விஜயகாந்த் காட்டம்
சென்னை:”விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து பணம் பெறவில்லை’ என, சுப்ரமணியசாமி புகாருக்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பதில் அளித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:”
ரேகை மூலம் வருகை பதிவேடு: ரயில்வேயில் ரூ. 4.4 கோடி திட்டம்
புதுடில்லி: ஊழியர்கள் தங்களின் வருகைப் பதிவை விரல் ரேகை மூலம் பதிவு செய்யும் பயோ மெட்ரிக் முறையை, நாடு முழுவதும் உள்ள ரயில்வே அலுவலகங்களில் அமல்படுத்த, ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி சேதம்
ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியை சோதனை செய்த வல்லுநர்கள் அதன் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பத்தாங்கிளாசு! ‘படிக்காத’ டாக்டர்களை பிடிக்க உத்தரவு: போலீசுக்கு பயந்து நிறைய பேர் ஓட்டம்
கோவை: மனநலம் பாதித்த சிறுவனை குணப்படுத்துவதாக கூறி, 82 ஆயிரம் ரூபாய் கட்டணம் கறந்த ஆயுர்வேத டாக்டர், போலீ சாரின் நடவடிக்கைக்கு பயந்து பணத்தை திரும்ப ஒப்படைத்தார். இவரது மருத்துவமனையை ரகசியமாக கண்காணிக்க, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால், கோவை மாநகரில் முகாமிட்டிருக்கும் போலி டாக்டர்கள், மாந்திரீகர் கள் சிலர் இடத்தை காலி செய்து தலைமறைவாகினர்.
காமன்வெல்த் போட்டிகளில் மூங்கில் ஆதிக்கம்
புதுடில்லி:டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான வகையில், பல பயன்பாடுகளிலும் மூங்கில் பொருட்களை அதிகம் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.டில்லியில் அடுத்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
சேலம் – சென்னை விமான சேவை: அக்., 25ல் கிங்பிஷர் துவக்குகிறது
சேலம்: சேலத்திலிருந்து சென்னைக்கு அக்., 25ம் தேதி முதல், விமான சேவையை கிங்பிஷர் நிறுவனம் துவக்க உள்ளது. சேலம் காமலாபுரத்தில், 1994ம் ஆண்டு, விமான நிலையம் ஏற்படுத்தப்பட்டது.
எச்1பி விசாவை பெற ஆளில்லை 20 ஆயிரம் விசாக்கள் தேக்கம்
வாஷிங்டன்:அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கான எச்1பி விசாவைப் பெற போதுமான ஆட்கள் வராததால், இன்னும் 20 ஆயிரம் விசாக்கள் வினியோகிக் கப்படாமல் இருக்கின் றன.அமெரிக்காவில் பணி புரிவதற்காக டாக்டர் கள், தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள், இன்ஜினியர்கள், பேராசிரியர்கள் போன்றவர்களுக்கு, எச்1பி விசா வழங்கப்படுகிறது.