ரெட்டி ஹெலிகாப்டர் விபத்து – சென்னை ஏடிசியின் அலட்சியமே காரணம்?
சென்னை: ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் தடம் மாறியதைத் தொடர்ந்து, தங்களுக்கு வழி காட்டுமாறு அந்த ஹெலிகாப்டரின் விமானிகள் தொடர்ந்து சென்னை விமானக் கட்டுப்பாட்டு மையத்தைத் (ஏடிசி) தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் சென்னை ஏடிசியிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லையாம்.
இன்னும் 6 மாதத்தில் 1 1/2 கோடி குடும்பங்களுக்கு இலவச கலர் டி.வி: அமைச்சர் ஆற்காடு வீராசாமி தகவல்
சென்னை மாநகராட்சி 77-வது வார்டில் இலவச கலர் டி.வி. வழங்கும் விழா செனாய்நகரில் நடந்தது. அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஏழை குடும்பங்களுக்கு கலர் டி.வி.யை வழங்கி பேசிய பொழுது இன்னும் ஆறு மாதத்தில் ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு இலவச கலர் டிவி வழங்கப்படுமென்றார். கலர் டி.வி.யை வழங்கி பேசியதாவது:-
ஆட்டோமொபைல்: சீனாவை முந்தும் இந்தியா!
ஆட்டோமொபைல் துறையில் உலகில் அமெரிக்காவையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு சீனா முந்திக் கொண்டு செல்ல, இப்போது அந்த சீனாவையே பின்னுக்குத் தள்ளிவிட்டது இந்தியா.
தர்மபுரியில் ரூ.90 லட்சத்தில் உள்விளையாட்டு அரங்கம்
தர்மபுரி: தர்மபுரியில் சர்வதேச இறகுப்பந்து போட்டி நடத்தும் வகையில், மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.90 லட்சத்தில் வீன உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. தர்மபுரி நகரின் மையப்பகுதியில் ஆறு ஏக்கரில் மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளது.
ஐகோர்ட்டில் வக்கீல்கள் மீது தடியடி நடந்தது ஏன்?: போலீஸ் முன்னாள் இணை கமிஷனர் மனு
சென்னை: “கல் வீசிய வக்கீல்கள் பலரின் பெயர்கள் எனக்குத் தெரியும். ஆனால், பெயர்களை வெளியிட விரும்பவில்லை. வக்கீல்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினேன். ஆத்திரமூட்டும் செயல்கள் தொடர்ந்ததால், தடியடி நடத்த வேண்டியதாயிற்று. அப்போது இருந்த பதட்டத்தால், தடியடி நடத்தப்பட்டது’ என, சென்னை மாநகர முன்னாள் இணை கமிஷனர் ராமசுப்ரமணி பதிலளித்துள்ளார்.
ராகுல் காந்தி சென்னை வருகை நகரில் 3,000 போலீஸ் பாதுகாப்பு
‘காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி சென்னை வருவதை முன்னிட்டு 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்’’ என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.
சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 2011 முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து
சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 2011ம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மாநில பாடதிட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது பற்றி மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் நேற்று அறிவித்தார்.
கொல்கத்தா விமான நிலையத்தில் ஆயுதங்களுடன் தரை இறங்கிய ஐக்கிய அரபு நாட்டு விமானம்
ஐக்கிய அரபு நாட்டு விமானம் ஆயுதங்களுடன் கொல்கத்தாவில் தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் ஊழியர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடான அபுதாபியில் இருந்து சீனாவில் உள்ள ஹன்யாங் நகருக்கு ஒரு ராணுவ விமானம் நேற்று இரவு புறப்பட்டு சென்றது.
பெண் கல்வி மேம்பாட்டுக்காக சாக்சார் பாரத் திட்டம்! –
புதுடில்லி: பெண் கல்வியை மேம்படுத்துவதற்கான சாக்சார் பாரத் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் நாட்டுக்கு அர்பணித்தார். சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு டில்லியில் நடைபெற்ற விழாவில் சாக்சார் பாரத் திட்டத்தை அவர் தொடங்கிவைத்தார்.
கணக்கு இனி எளிமை தான் அரசு புது நடவடிக்கை
புதுடில்லி:கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களை மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில், சி.பி.எஸ்.இ., கல்வி முறையில், இந்த இரண்டு பாடத்திற்கும், செயல்முறை கற்றலை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.பெரும்பாலான மாணவர்கள் கணக்கு பாடத்தில் தோல்வியடைவதை தவிர்க்க, பள்ளிகளில் செயல் முறைக் கற்றலை அறிமுகப்படுத்துமாறு, சி.பி.எஸ்.இ., குழு கேட்டுக் கொண்டுள்ளது.