டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம்: நாகர்கோவில் தம்பதியின் புதிய கண்டுபிடிப்பு
தொலைக்காட்சிப்பெட்டி, மின்விசிறி ஆகியவற்றை செல்போனின் மூலம் இயக்கும் முறையை கண்டறிந்த நாகர்கோவில் தம்பதிகளை நோக்கியா நிறுவனம் ஜெர்மனிக்கு அழைத்துள்ளது. நாகர்கோவில் அருகே தளவாய்புரத்தை சேர்ந்தவர் பினு ஜான்சன். இவர் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக உள்ளார்.
அடுத்த கல்வியாண்டு முதல் தமிழகத்தில் சமச்சீர் கல்வி
சென்னை: தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு சமச்சீர் கல்வித் திட்டம் அமலாகிறது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ராமலிங்க ராஜுவின் ரூ.1000 கோடி சொத்துக்கள் ஜப்தி!
டெல்லி: ரூ.7800 கோடி ரூபாய் மோசடி செய்து சிறையில் உள்ள சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு மற்றும் அவரது தம்பி ராம ராஜு ஆகியோரது குடும்பத்தினருக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி சொத்துக்களை அமலாக்கப் பிரவினர் ஜப்தி செய்துவிட்டனர்.
57 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி குறைவு : திருவாரூரில் வேளாண் அமைச்சர் ‘திடுக்’
திருவாரூர் : பருவ மழை பொய்த்தது, மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாதது போன்ற காரணங்களால் திருவாரூர் மாவட்டத்தில் 57 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி குறைந்துள்ளது என்று, வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.
புதிதாக 12 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
சென்னை : “”புதிதாக 12 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைத்து விடும். அதன்பின், ஆசிரியர் நியமன பணிகள் துவங்கும்,” என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
மிரட்டுகிறது பன்றிக்காய்ச்சல் : 90 ஆயிரம் பேர் பலியாகலாம்
வாஷிங்டன் : “இந்தக் குளிர் காலத்தில், பன்றிக்காய்ச்சல் நோய் அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும் பரவி, 20 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படலாம்; 90 ஆயிரம் பேர் பலியாகலாம்’ என, வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பேட்டரி மூலம் இயங்கும் கார் அறிமுகம்
மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பேட்டரி மூலம் இயங்கும் கார் பொதுமக்கள் சேவைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரை வயதானவர்கள், உடல் சவால் கொண்டவர்களின் தேவைக்காக இயக்குவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பத்திரப்பதிவு, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் புழங்கும் லஞ்சம் 500 கோடி : லஞ்ச ஒழிப்பு போலீசின் வேட்டையில் திடுக்கிடும் தகவல்
பத்திரப்பதிவு மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் மட்டும் தமிழகத்தில் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் என்ற அளவுக்கு லஞ்சம் புழங்குகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகள் எடுத்தும், வெவ்வேறு வழிகளில் லஞ்சம் பெறுவது அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது.
500 ரூபாய்க்கு மாணவர்களுக்கு லேப்டாப் – அமைச்சரின் கனவு
ஹைதராபாத்: இந்திய மாணவர்களுக்காக, ரூ. 500க்குள் விலை கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர்களை உருவாக்க இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முயல வேண்டும் என்று மத்திய உயர்கல்வித்துறை இணை அமைச்சர் புரந்தரேஸ்வரி கூறியுள்ளார்.
2 பேர் சுட்டுக் கொலை!: சென்னை அருகே பரபரப்பு சம்பவம்: கொலையாளியிடம் போலீஸ் விசாரணை
சென்னை: சென்னையை அடுத்து, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரில், வீட்டிற்குள் புகுந்த மர்மநபர், அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டார். இதில், இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.