மாணவர்களிடம் மந்திரி கேள்வி: பள்ளிகளில் கபில் சிபல் பார்வை
பஞ்ச்குலா (அரியானா):ஒரு நாள் பயணமாக அரியானா மாநிலம், பஞ்ச்குலா மாவட்டம் சென்ற, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், அங் குள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளைப் பார்வையிட்டார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந் துரையாடினார். பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
பெண்களுக்கு மட்டுமே நர்சிங்: அரசாணை செல்லும் என உத்தரவு
சென்னை: “நர்சிங் பட்டயப் படிப்பில் சேர, பெண்களுக்கு மட்டுமே தகுதியுள்ளது என தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும்’ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், ஆசாத் அலி என்பவர் தாக்கல் செய்த மனு:
விண்வெளிக்கு மெசேஜ் அனுப்ப விருப்பமா?: ஆஸ்திரேலிய வெப்சைட் அதிரடி திட்டம்
கான்பெர்ரா: விண்வெளிக்குத் தகவல் அனுப்ப உங்களுக்கு விருப்பமா? ஆஸ்திரேலிய அறிவியல் பத்திரிக்கை “காஸ்மோஸ்’ சார்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள, “ஹலோ ப்ரம் எர்த்’ என்ற வெப்சைட், இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
புதிதாக விவசாய கடன் தள்ளுபடி இல்லை : பிரணாப்
நாட்டின் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளதால், புதிதாக விவசாயக் கடன் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
அமெரிக்காவில் பிபிஓ பணிகளை துவக்கும் காக்னிஸைன்ட்
நியூயார்க்: காக்னிஸைன்ட் நிறுவனம் அமெரிக்காவின் பீனிக்ஸ் கிளையில் பிபிஓ பணிகளை துவக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 100 அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்தவுள்ளது.
13 ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லாமல் அரசு சம்பளம் பெறும் ஊழியர்
திருச்சி: திருச்சியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், 13 ஆண்டுகளாக பள்ளிக்கு வராமல் ஊழியர் ஒருவர் சம்பளம் வாங்கி மோசடி செய்த விஷயம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் நிலத்தடி நீர் போச்சு: நாசா செயற்கைக்கோள் மூலம் அம்பலம்
புதுடில்லி: பருவமழை பொய்த்து விட்டதைத் தொடர்ந்து, நிலத்தடி நீரும் வட மாநிலங்களில் வெகுவாகக் குறைந்து விட்டது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அமெரிக்க “நாசா’ செயற்கைக்கோள் மூலம் இது தெரியவந்துள்ளது.
தென்னிந்தியாவில் புற்றுநோய் அதிகரிப்பு-டாக்டர்கள் கருத்தரங்கில் தகவல்
கன்னியாகுமரி: தென்னிந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக புற்றுநோயால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3500 பேரை பணியமர்த்தும் பாங்க் ஆஃப் பரோடா!
டெல்லி: இந்த நிதியாண்டிலேயே 3500 பணியிடங்களுக்கான ஆட்களைத் தேர்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளது தேசிய வங்கிகளுள் ஒன்றான பாங்க் ஆப் பரோடா.
மனைவியுடன் தங்க வீரர்களுக்கு அனுமதி: எல்லைப்படையில் எய்ட்ஸ் தடுக்க அதிரடி
புதுடில்லி: எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மத்தியில் எய்ட்ஸ் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதை தடுக்க ஒரு புதுமையான நடவடிக்கையை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.