மருமகளை உதைத்தல், விவாகரத்து செய்வதாக மிரட்டுதல் குற்றமில்லை – சுப்ரீம் கோர்ட்
டெல்லி: மருமகளை எட்டி உதைத்தல், விவாகரத்து செய்து விடுவோம் என்று மிரட்டுதல் போன்றவற்றில் ஈடுபடும் மாமியார், கணவர், அல்லது கணவர் குடும்பத்தாரின் செயல்களை கொடூரமான குற்றமாக கருத முடியாது. இதற்காக அவர்கள் மீது வழக்கு தொடர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி ராஜபக்ச மீது அதிருப்தி: அமெரிக்கா செல்ல சரத் பொன்சேகா முடிவு
இலங்கை தரைப்படையின் முன்னாள் தளபதியும் கூட்டுப்படைத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்கா செல்வதற்கு தீர்மானித்துள்ளார் என நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூடுவாஞ்சேரி அருகே ரயில்வே கிராசிங்கில் பேருந்து சிக்கியதால் பரபரப்பு
சென்னை அருகே தண்டவாளத்தில் மாநகர பஸ் சிக்கிக்கொண்டது. அதிகாரிகளும் ஊழியர்களும் விரைந்து செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 45 நிமிடம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பயங்கரவாதிகளிடம் நவீன தொழில்நுட்பம்: ஏ.கே. அந்தோனி எச்சரிக்கை
பயங்கரவாதிகள் காலத்துக்குத் தகுந்தவாறு புதிய யுத்திகளை வகுத்தும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் தங்களை வலுப்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் செயல்பாடு நாளுக்கு நாள் கடுமையாக உள்ளது என்றார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி.
அம்பானி சகோதரர்களிடையே நடக்கும் சண்டைக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : முரளி தியோரா
புதுடில்லி : இயற்கை எரிவாயுவை பகிர்ந்து கொள்ளும் விஷயத்தில் அம்பானி சகோததர்களிடையே நடந்து வரும் சண்டைக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களுக்கிடையே உள்ள சண்டையில் மத்திய அரசு எதுவும் செய்வதற்கும் இல்லை.
தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் பி.எட்., வகுப்பிற்கு அனுமதி மறுப்பு
கம்பம்: தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் பி.எட்., உள்ளிட்ட படிப்புகளுக்கு தேசிய கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது.
16 வயதில் தொழில் முனைவோராகி சாதனை
கோவை: கோவையைச் சேர்ந்த 16 வயதான கார்னிகா யஷ்வந்த், தனது இளம் வயதிலேயே சாதனை மனிதராக உருவெடுத்துள்ளார்.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ‘மொபைல்’ போன் தடை: ஆசிரியர்களுக்கும் பொருந்தும்
ஆமதாபாத்: பள்ளி வளாகத்தில் மொபைல் போனில் பேச சி.பி.எஸ்.இ., நிர்வாகம் தடை விதித்துள் ளது. மொபைல் போனை விட்டு பிரிய முடியாத சூழ் நிலை மக்களிடையே நாளு க்கு நாள் வளர்ந்து வருகிறது.
விரைவில் மதுரையில் ‘சிப்பெட்’ நிறுவனம் : மத்திய அமைச்சர் அழகிரி அறிவிப்பு
சென்னை : “”நவீன வசதிகளுடன் கூடிய, மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கழகம் (சிப்பெட்) ஒன்று மதுரையில் விரைவில் அமைக்கப்படும்,” என்று மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.
இலங்கையில் பத்திரிகையாளருக்கு 20 ஆண்டு சிறை
கொழும்பு : விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, கட்டுரைகள் வெளியிட்டதற்காக இலங்கையில் பத்திரிகையாளர் ஒருவருக்கு, 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரும், பத்திரிகையாளருமான திசநாயகம், கடந்த 2008 மார்ச்சில் இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினரால் கைது செய்யப்பட்டார்.