18ம் தேதி விமானங்கள் ஸ்டிரைக்!-அரசை மிரட்டும் தனியார் விமான நிறுவனங்கள்
மும்பை: நஷ்டத்தைச் சமாளிக்க தங்களுக்கும் நிதிச் சலுகைகள் வேண்டும் என்றும் இல்லாவிட்டால் வரும் ஆகஸ்ட் 18-ம் தேதியிலிருந்து விமானங்களை இயக்குவதை நிறுத்தப் போவதாகவும் தனியார் விமான நிறுவனங்கள் மிரட்டல் விடுத்துள்ளன.
சென்னையில் நானோ கார் விற்பனை தொடங்கியது
சென்னை: சென்னை நகரிலும் நானோ கார் விற்பனை துவங்கி விட்டது. அடுத்த ஓராண்டுக்குள் 7500 கார்களை முன்பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்படும் என டாடா அறிவித்துள்ளது.
பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்: இலங்கை உளவுப் பிரிவு
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்க உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக இலங்கை உளவுப் பிரிவு தகவலை மேற்கோள் காட்டி ஈழத் தமிழர் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வி.வி.ஐ.பி.,க்களுக்காக 12 ஹெலிகாப்டர்களை வாங்குகிறது மத்திய அரசு
புதுடில்லி: ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.,க்கள் பயணிப்பதற்காக இத்தாலி நிறுவனத்திடமிருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன. லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது கட்சித் தலைவர்கள் பலர், ஹெலிகாப்டரில் பறந்து பறந்து பிரசாரம் செய்தனர். போதிய அளவில் ஹெலிகாப்டர் கிடைக்காமல், வாடகை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
மெட்ரிக் பள்ளிகளுக்கு டிசம்பரில் புது கட்டண விகிதம்
தனியார் பள்ளிகள் கட்டணம் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டப் பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. முதற்கட்டமாக, தனியார் பள்ளிகளில் தற்போது வசூலிக்கப்படும் கட்டண விவரங்களை சேகரிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
20 ஆண்டுகள் பணியாற்றினால் தான் ஓய்வூதியம்
புதுடில்லி:அரசு பணியில் தொ டர்ந்து 20 ஆண்டுகள் பணியாற்றினால் தான் ஓய்வூதியம் பெற முடியும் என, மத்திய நிர்வாகத் தீர்பாயம் தெரிவித்துள்ளது.டில்லி அரசு போக்கு வரத்துக் கழகத்தில் 1982ம் ஆண்டு முதல் 93ம் ஆண்டு வரை கண்டக்டராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் முகேஷ்.
43,000 ச.கி.மீ. இந்திய நிலம் சீனா வசம் உள்ளது: எஸ்.எம்.கிருஷ்ணா தகவல்
இந்தியாவுக்கு சொந்தமான 43 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலம் சீனாவின் வசம் உள்ளது. மாநிலங்களவையில் நேற்று உறுப்பினர்களின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாவது:
கறுப்புப் பணத்தை மீட்க நடவடிக்கை தொடங்கிவிட்டது: மன்மோகன்
வெளிநாடுகளில் நமது நாட்டவர் பதுக்கிவைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்க நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
கின்னஸ் பட்டியலில் இடம் பெற்றது ராமநாதபுரம் சகோதரர்களின் சாதனை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சகோதரர்களின் சாதனை கின்னஸ் பட்டியலில் இடம் பெற்று, அதற்கான சான்றிதழை அந்நிறுவனம் அனுப்பியுள்ளது. ராமநாதபுரம் கற்பக விநாயகம் கோவில் அர்ச்சகர் வெங்கட்ராமன், சரோஜா தம்பதியரின் மகன்கள் சுந்தர், சங்கரநாராயணன்.
தாஜ் ஓட்டல் சலவையாளரின் ஆண்டு சம்பளம் ரூ.1.5 கோடி
மும்பை: மும்பையில் உள்ள தாஜ் ஓட்டல் சலவையாளர் ஓராண்டில் ஒரு கோடியே 53 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.மும்பையில் உள்ள தாஜ் மகால் பேலஸ் ஓட்டலில் 1974ம் ஆண்டு முதல் சலவையாளராக இருப்பவர் பெர்வேஸ் பெஸ் டோன்ஜி சாகர்(60).