திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 9-ல் பெங்களூரில் முழு அடைப்பு
திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆகஸ்ட் 9-ம் தேதி “பெங்களூர் பந்த்” நடத்தப்படும் என்று பல்வேறு கன்னட சங்கங்கள் அறிவித்துள்ளன.
ஐ.நா. அமைதிப்படையில் 8 ஆயிரம் இந்திய வீரர்கள்
இந்தியா 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படைக்கு அனுப்பி உள்ளது என வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா புதன்கிழமை தெரிவித்தார். மக்களவையில் எழுத்து மூலம் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் கூறியதாவது:
தத்துப் பிள்ளைக்கு சகல சலுகையும் பொருந்தும்: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: கிறிஸ்தவ தம்பதியினர் தத்தெடுத்த குழந்தைக்கு, அனைத்து சலுகைகளையும் ஏர்-இந்தியா நிறுவனம் வழங்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறார் பாதுகாப்புச் சட்டப்படி, குழந்தைகளை பெற்றோர் தத்தெடுக்க உரிமையுள்ளது
அணு நீர்மூழ்கி கப்பல்: பாக்., புலம்பல்
இஸ்லாமாபாத் : ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் அணு நீர்மூழ்கிக் கப்பலை இந்திய அரசு தயாரித்துள்ளது, இந்தப் பிராந்தியத்தின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 2 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்
சென்னை: தமிழகத்தில் இரண்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
குடும்ப கௌரவத்துக்காக பெண்களை கொல்வது அவமானகரமானது: ப.சிதம்பரம்
குடும்ப கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பெண்களை கொல்வது உள்பட அவர்களுக்கு எதிராக வன்கொடுமை நிகழ்த்தப்படுவது நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் அவமானமான செயல் என்றார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
அரசுத்துறை பங்குகளை விற்க துடிக்கும் மத்திய அரசு!
டெல்லி: எத்தனை பாடங்கள் கற்றாலும், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் லாபத்தில் இயங்கும் அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதில் முரட்டுப் பிடிவாதம் காட்டி வருகிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு.
பணிநீக்க உத்தரவால் வேதனையில் தவிக்கும் தற்காலிக டைப்பிஸ்டுகள்
மதுரை: அரசுத் துறைகளில் தற்காலிக பணியில் உள்ள டைப்பிஸ்டுகள் அரசின் பணிநீக்க உத்தரவால் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களில் பணியாற்ற மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் இவர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.
நாடு திரும்புவதை தவிர்க்கிறார் முஷாரப் : கைது பயத்தால் லண்டனில் தங்க முடிவு
இஸ்லாமாபாத் : சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக வேண்டியுள்ளதால் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், லண்டனில் இருந்து நாடு திரும்புவதை தவிர்க்க திட்டமிட்டுள்ளார்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க சட்டம்: அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
‘‘பிளாஸ்டிக் பொருட்களின் விளைவுகளை தமிழக அரசு கடுமையாக கருதி, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் (யூஸ் அண்ட் த்ரோ) பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் வகையில் விரைவில் சட்டம் கொண்டுவர வேண்டும்’’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.