எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு டைரக்டர் சீமான் எச்சரிக்கை
சென்னை : “”தமிழ்ப் பெண்களுக்கு மறைமுகமாக கேடு விளைவிக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இலங்கை அரசின், “வடக்கின் வசந்தம்’ திட்டம் தொடர்பாக ஆலோசனை கூற, தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் போகக்கூடாது; மீறினால் அவரது வீடு, அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்,” என்று சினிமா டைரக்டர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிரியராக பணியாற்றுவோர் பி.எட்., படிக்க விண்ணப்பிக்கலாம்
மதுரை : தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் பி.எட்., படிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். இப்பல்கலை மூலம் 2009 – 11ம் கல்வி ஆண்டில், தற்போது பணியில் உள்ள 1000 ஆசிரியர்களுக்கு பி.எட்., கற்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கலப்பு திருமணம் செய்தால் இலவச மின்சாரம்
தேனி : கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு அரசு பல்வேறு உதவித்தொகை, வேலைவாய்ப்பு, தொழில் தொடங்குவதில் முன்னுரிமை போன்ற நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.
ஓட்டுப்பதிவு நேரம் காட்டும் புதிய இயந்திரம் : இடைத்தேர்தலில் பயன்படுத்த கமிஷன் முடிவு
சென்னை : “”ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் புதிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். இவற்றில், எந்த நேரத்தில் எவ்வளவு ஓட்டுகள் பதிவாகின என்பதை தெரிந்து கொள்ளலாம்,” என தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.
ஏழைகளுக்கே வீடே இல்லாதபோது எம்.எல்.ஏக்களுக்கு வீட்டு மனை தேவையா? – சிபிஎம் விமர்சனம்
சென்னை: ஏழை மக்கள் குடியிருக்க ஒரு வீட்டு மனை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது எம்.எல்.ஏக்களுக்கு வீட்டு மனை வழங்கும் திட்டம் தேவையற்ற ஒன்று. அதை காங்கிரஸார் கோரியிருப்பது கண்டித்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
ராட்சத கடல் அலையால் தூங்காமல் தவித்த மும்பை மக்கள்
மும்பை கடலில் இராட்சத கடல் அலை எழுந்தபடி இருந்ததால் மும்பை மக்கள் இரவு முழுவதும் உறங்கவில்லை.
தமிழகத்தில் பிஎஸ்என்எல் வைமேக்ஸ் சேவை!
சென்னை: இந்திய அரசின் தொலைபேசி நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்து வைமேக்ஸ் பிராட்பேண்ட் சேவையில் களமிறங்குகிறது. இந்த சேவை மூலம் கேபிள் இல்லாமலேயே 3 மெகாபைட் வேகத்தில் இணையதள சேவையை வழங்க முடியும்.
கடத்தல் குழந்தைகளை மீட்க உதவிய ஆட்டோ டிரைவருக்கு போலீஸ் பரிசு
திருநெல்வேலி:குழந்தைகள் கடத்தலில் துப்புதுலக்க உதவிய திருச்சி ஆட்டோ டிரைவருக்கு நெல்லை எஸ்.பி., பரிசு வழங்கினார்.திருச்சி, கோவை, உடுமலை பகுதிகளில் கடத்தி நெல்லை மாவட்டம் வள்ளியூர் அன்பு சிறுவர் இல்லத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட 13 குழந்தைகள் மீட்கப்பட்டன. இதில் துப்புதுலக்க திருச்சி அரசு ஆஸ்பத்திரி ஸ்டாண்ட் ஆட்டோ டிரைவர் ஜோசப் உதவினார்.
மு.கருணாநிதி தலைமையில் கலைஞர் காப்பீட்டு திட்டம் நாளை தொடக்கம்
உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டத்தினை மு.கருணாநிதி தலைமையில் குலாம் நபி ஆசாத் நாளை திறந்துவைக்கிறார்.
பெட்ரோல் டீசல் விலை குறையும்: மத்திய மந்திரி முரளிதியோரா
பெட்ரோல் டீசல் விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. விரைவில் அவற்றின் விலையானது குறையுமென்று மத்திய மந்திரி முரளிதியோரா மறைமுகமாக கூறியுள்ளார்.