இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஜூலை மாதத்தில் ரூ.2,880 கோடி நஷ்டமடையும்
புதுடில்லி : பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.4 ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 ம் உயர்த்தியும் கூட இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஜூலை மாதத்தில் ரூ.2,880 கோடி வருமான இழப்பு ஏற்படும் என்று பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா தெரிவித் திருக்கிறார்.
தமிழக எம்.எல்.ஏ.,க்களின் மாத சம்பளம் ரூ.50 ஆயிரம்: சென்னையில் வீடு கட்ட மனை ஒதுக்கீடு
சென்னை: எம்.எல்.ஏ.,க்களுக்கான சம்பளம் 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டதுடன், அவர்களுக்கு சென்னைக்கு அருகே வீட்டு மனை ஒதுக்கவும் அரசு சம்மதித்துள்ளது.
சத்யம்… கைநழுவிய ரூ.100 கோடி ரயில்வே கான்ட்ராக்ட்
பெங்களூர்: இந்திய ரயில்வேயின் ரூ.100 கோடி லோகோமோடிவ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் காண்ட்ராக்ட் சத்யம் நிறுவனத்தின் கை நழுநழுவிப் போய்விட்டது.
விப்ரோ லாபம் 12 சதவீதம் உயர்வு
விப்ரோ நிறுவனத்தின் லாபம் ரூ.1,016 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த காலாண்டை விட 12 சதவீதம் அதிகமாகும். ஆனால், அதன் சாப்ட்வேர் பி்ரிவின் லாபம் 3.3 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
ஆல்கஹால் சோதனை-மாட்டிய 29 பைலட்டுகள்!
டெல்லி: ஆல்கஹால் சோதனையில் 29 விமானிகள் மது அருந்திவிட்டு விமானங்களை இயக்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக சாராய அதிபர் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்தைச் சேர்ந்த பைலட்டுகளே இதில் அதிகமானவர்கள்.
தமிழக அரசின் மொத்த கடன் ரூ.74456 கோடி!
சென்னை: தமிழக அரசின் மொத்த கடன் தொகை ரூ. 74,456 கோடி என்று நிதியமைச்சர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். சட்டசபையில் நிதித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் கூறுகையில்,
நாளை மிக நீண்ட, அரிய சூரியகிரகணம்-கண் மருத்துவர்கள் எச்சரிக்கை
சென்னை: சூரிய கிரகணத்தை கண்ணாடி, பிலிம் கள் உள்பட எதன் மூலமும் பார்க்கக்கூடாது என கண் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்
ஆசிரியர் பயிற்சி 2ம்கட்ட கவுன்சிலிங்: 6,000 இடத்துக்கு விண்ணப்பமே இல்லை
சென்னை: ஆசிரியர் பயிற்சி சேர்க்கைக்கான முதல் கட்ட கவுன்சிலிங்கில் 11 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 10 ஆயிரம் இடங்களில் அறிவியல் பிரிவில் 6,000 இடங்களுக்கு விண்ணப்பங்களே இல்லை. அதனால், 4,000 இடங்களை மட்டும் நிரப்புவதற்கான இரண்டாம்கட்ட கவுன்சிலிங், வரும் 24, 25 தேதிகளில் திருச்சியில் நடக்கிறது.
யு.பி.எஸ்.சி., – எஸ்.எஸ்.சி., தேர்வு எழுத பெண்களுக்கு இனி கட்டணம் கிடையாது
புதுடில்லி: மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் யு.பி.எஸ்.சி., மற்றும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் உள்ளிட்ட தேர்வு எழுத ஒரு குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
அனிமேஷன்’ துறையில் மாணவ, மாணவிகளுக்கு சிறந்த எதிர்காலம்!: சென்னை கருத்தரங்கில் தகவல்
“சென்னை: “”இந்தியாவில் வளர்ந்து வரும் துறை அனிமேஷன். இத்துறையை தேர்ந்தெடுத்து படிப்பவர்களுக்கு, குறிப்பாக மாணவிகளுக்கு வேலை வாய்ப்பும், நல்ல எதிர்காலமும் உள்ளது,” என்று “அனிமேஷன்’ துறையின் எதிர்காலம் என்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட சோனி இமேஜ் ஒர்க் இந்தியா நிறுவனத்தின் “டிஜிட்டல் எபக்ட்ஸ்’ மேற்பார்வையாளர் சோபன்பாபு தெரிவித்தார்.