வங்கிகளில் ரூ.50,000 கோடி கடன் வைத்திருக்கும் கோவை, திருப்பூர் மாவட்ட தொழில் நிறுவனங்கள்
சென்னை : தென் தமிழ்நாட்டின் பெரிய தொழில் மாவட்டங்களான கோவை மற்றும் திருப்பூரில் இருக்கும் தொழில் நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகள், அங்குள்ள பலதரப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ரூ.50,000 கோடி வரை கடன் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஈழத்தமிழர்களுக்கு தமிழக கல்லூரியில் இடம் உறுதி
தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இங்குள்ள கல்லூரிகளில் கல்வி வாய்ப்பு கிடைக்க வழி செய்யப்படும் என்று பேரவையில் நிதியமைச்சர் க.அன்பழகன் தெரிவித்தார்.
பெரியாறு அணை அருகே புதிய அணை: துபாய் நிறுவனத்திடம் கேரளா காண்ட்ராக்ட்
இடுக்கி: தமிழகத்தின் கடும் எதி்ர்பபையும் மீறி முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ள கேரள அரசு, இந்தப் பணியை துபாயைச் சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.
கர்நாடகத்திற்கு தட்டுப்பாடின்றி உரம்: அமைச்சர் மு.க.அழகிரி தகவல்
மதுரை: “”கர்நாடகத்திற்கு காரிப் பருவத்திற்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும்” என மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளின் கட்டண வசூலுக்கு கிடுக்கிப்பிடி: 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும்
சென்னை: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளி கட்டணங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் புதிய சட்டத்தை, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். “தனியார் பள்ளிகளில் கட்டணங்களை நிர்ணயிப்பதற்காக, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் பயன்பாடு: மூன்றாம் இடத்தில் தமிழகம்
சென்னை: மகாராஷ்டிரா மற்றும் டில்லிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் இன்டர் நெட் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கல்லூரிகள் அதிகம் உள்ளன. ஆந்திராவுக்கு அடுத்த படியாக இன்ஜினியரிங் கல்லூரிகள் தமிழகத்தில் அதிகம். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் இந்த மாநிலத்தில் அதிகம் என்பதால் மாணவர்கள் அதிக அளவில் இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர்.
அனில் அம்பானி குழுமம் ஸ்பீல்பெர்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
அனில் அம்பானி குழுமம் (ஏடிஏஜி) ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் டிரீம்வொர்க்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
டாடா நானோ கார் இன்று விற்பனைக்கு வருகிறது
உலகிலேயே மிகவும் விலை குறைந்த டாடா நிறுவனத்தின் “நானோ’ கார் வெள்ளிக்கிழமை விற்பனைக்கு வருகிறது. முதல் காரை தனது வாடிக்கையாளருக்கு நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா வழங்குகிறார்.
மகனுக்கு வாரிசு வேலையை பெற கணவரை கொன்ற பெண் கைது
பீகார் மாநிலம் முன்னாபூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சஞ்சய்ரவுத். ரெயில்வே துறையில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி மஞ்சுதேவி. இவர்களுடைய மகன் விகாஸ்ரவுத். சஞ்சய் ரவுத் கடந்த மாதம் 25-ந்தேதி மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டு கிடந்தார்.
கலை பாடங்களுக்கும் அனுமதி வழங்கலாம்: ஐகோர்ட்டில் அண்ணா பல்கலை விளக்கம்
சென்னை: “கலை, அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும், கல்லூரிகளுக்கும் இணைப்பு வழங்க அண்ணா பல்கலைக் கழகச் சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை’ என, அப்பல்கலைக் கழகம் சார்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.