பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி: தமிழக அரசு அறிவிப்பு
“அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலைக் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்படும்” என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்தார்.
யுஎஸ் பங்கு நிறுவன சர்வர்களை ‘ஹேக்’ செய்த 3 தமிழர்கள்
நியூயார்க்: ஆன்-லைன் பங்கு வர்த்தக நிறுவனங்களின் சர்வர்களை ‘ஹேக்’ செய்து மற்றவர்களது கணக்கில் பங்குகளை வாங்கி தங்கள் கணக்கில் விற்று கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக 3 தமிழர்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் டாடா வசம் ஏர் இந்தியா?!
டெல்லி: அரசுக்கு சொந்தமான விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிர்வாகம் மீண்டும் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தனுஷ்கோடி வழியாக சேதுசமுத்திர திட்டம்: ஆய்வு பணியை துவக்கியது மத்திய அரசு
ராமநாதபுரம்: சேது சமுத்திர திட்டத்தை தனுஷ்கோடி வழியாக நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான ஆய்வுப் பணிகளை துவக்கி உள்ளது. பாக்ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2007ல் 2,400 கோடி ரூபாய் மதிப்பில் சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.
ரூ.800 கோடியில் எண்ணூரில் ஜெனரேட்டர் தொழிற்சாலை
ரூ.800 கோடியில் எண்ணூரில் ஜெனரேட்டர் தயாரிக்கும் தொழிற்சாலை ஜப்பான் நிறுவன உதவியுடன் அமைகிறது. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது.
யாருக்கு வேண்டும் குழந்தை?: பாம்புகளோடு படுத்துறங்கும் தம்பதி
லெபனான் நாட்டைச் சேர்ந்த பியர்ரி – சப்னா ரிஸ்க் தம்பதியினர் 13 பாம்புகளுடன் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்தப் பாம்புகள் தம்பதியினரின் படுக்கை அறை முதல் சகல இடங்களிலும் சுதந்திரமாகச் சுற்றி வருகின்றன. அவர்களுடைய உடலெங்கும் ஊர்ந்து செல்கின்றன. அவர்களும் அதை ரசித்து மகிழ்கின்றனர்.
ரூ. 7300 கோடியில் சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்கம்
சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனத்துக்குச் சொந்தமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (சிபிசிஎல்) ரூ.7300 கோடியில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
நிதிப் பற்றாக்குறை-மத்திய அரசு ஏமாற்றுகிறது
டெல்லி: நாட்டின் நிதிப் பற்றாக்குறை 2.7 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது உண்மையல்ல. நிதிப் பற்றாக்குறையை குறைத்துக் காட்டி மக்களை ஏமாற்றியுள்ளனர் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
ஆசிரியர்கள் கவுன்சிலிங்கை தடுக்க போலி கையெழுத்திட்டு ஐகோர்ட்டில் மனு
சென்னை: பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாற்றல் கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்கக் கோரி, தமிழக பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பொது நலச் சங்கத்தின் மாநில மகளிரணி தலைவர் இந்திரா, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ததாக செய்தி வெளியானது. இதற்கும், தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென இந்திரா கூறியுள்ளார்.
மலேசியாவில் தமிழர்கள் கிராமத்தை அழிக்க முயற்சி!
கோலாலம்பூர்: மலேசியாவில் பரம்பரை பரம்பரையாக வசித்து வந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு 300 தமிழ்க் குடும்பங்களுக்கு அந்த இடத்தின் உரிமையாளர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் மலேசியத் தமிழர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.