பொய் சொன்ன பெண்ணுக்கு ஜீவனாம்சம் நிராகரிப்பு: கணவனுக்கு கைகொடுத்தது தகவல் உரிமை சட்டம்
புதுடில்லி: பொய் சொன்ன பெண்ணின் ஜீவனாம்ச கோரிக்கை, செஷன்ஸ் கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டது; “வேலையில்லாமல் இருப்பதாக மனைவி பொய் சொல்கிறாள்’ என்பதை ஆதாரமாக காட்ட, கணவனுக்கு தகவல் உரிமை சட்டம் கைகொடுத்தது. டில்லியை சேர்ந்த இந்த தம்பதிகள் இடையே கருத்துவேறுபாடு முற்றி, கடந்தாண்டு மணமுறிவு ஏற்பட்டது.
ஆசிரியர்களுக்கு மதிப்பெண் மாணவர்கள் போட ‘டபுள் ஓகே’
பெர்லின்: படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மதிப்பெண் போடலாம்; பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்கள் திறமை பற்றி மாணவர்கள் மதிப்பெண் போடலாமா? “போடலாம்; தவறில்லை’ என்று, பள்ளி மாணவர்களுக்கு ஜெர்மனி கோர்ட் பச்சைக்கொடி காட்டியுள்ளது.ஜெர்மனியில் இன்டர்நெட்டில், பல “ரேட்டிங்’ வெப்சைட்கள் உள்ளன. இதில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் பாடம் சொல்லித் தரும் திறமை பற்றி மாணவர்களை, “மதிப்பெண் … Continued
ஸ்டிரைக்கைத் தொடர்ந்தால் ஒரு சலுகையும் கிடைக்காது – ஊழியர்களுக்கு என்எல்சி நிர்வாகம் மிரட்டல்
நெய்வேலி: ஸ்டிரைக்கை உடனடியாக ஒப்பந்த தொழிலாளர்கள் கைவிட்டு விட்டு பணியில் சேர வேண்டும். இல்லாவிட்டால் ஒரு சலுகையும் கிடைக்காது என்று என்.எல்.சி முதன்மை பொது மேலாளர் எச்சரித்துள்ளார்.
மகா பிராடு’ மேடாஃபுக்கு 150 ஆண்டு ஜெயில்!
நியூயார்க்: உலகமகா மோசடிப் பேர்வழியான பெர்னார்டு மேடாஃப்புக்கு 150 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம். மேலும் அவர் ரூ.170 பில்லியன்கள் வரை பொதுமக்களுக்கு செலுத்த வேண்டும் என்றும், அதை அவருக்கு சொந்தமான சொத்துக்கள், அவற்றிலிருந்து வரும் வருவாய், வட்டிகள் போன்றவை மூலம் ஈடுகட்ட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பகுத்தறிவும் பக்தி தரும்!
என்னது கடவுள் நம்பிக்கையை பகுத்தறிவுதான் தருகிறதா? ஏன் இப்படி தலைப்பிலேயே குழப்பறாங்க என்று நீங்கள் யோசித்தவாறே இந்தக கட்டுரையில் நுழையறீங்களா? வாங்க! உங்களைத்தான் தேடுகிறோம்!.
வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்ப இனி சிரமம் இல்லை : அஞ்சல் துறை புதிய திட்டம்
சென்னை :வெளிநாடுகளுக்கு ஒரே கட்டணத்தில் பார்சல்கள் அனுப்பும் வசதி சென்னை அஞ்சலகங்களில் அடுத்த மாதம் அறிமுகப் படுத்தப்படுகிறது. வெளிநாடுகளுக்கு அஞ்சலகங்கள் மூலம் பார்சல்கள் அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்பப்படும் பார்சல்களுக்கான கட்டணம் ஒவ்வொரு நாட்டைப் பொறுத்தும், எடையைப் பொறுத்தும் வேறுபடும். அயல்நாடுகள் பலவற்றில், குறிப்பிட்ட எடை கொண்ட பார்சல்களை, எந்த நாட்டிற்கு அனுப்பினாலும் ஒரே கட்டணம் வசூலிக்கும் … Continued
வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் தகவல் தொகுப்பு; ஆஸ்திரேலிய வன்முறைகளால் அரசு புதிய திட்டம்
புதுடில்லி: வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் விவரம் குறித்த முழு தகவல் தொகுப்பை சேகரிக்க முதல் தடவையாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீதான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்ட நிலையில், இம் முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்திருப்பதாக, மத்திய அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார். இதன் மூலம் வெளிநாடு செல்லும் இந்திய … Continued
தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் சாலை பாதுகாப்பு வரி
சென்னை: தமிழக போக்குவரத்துத் துறை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சாலைப் பாதுகாப்பு வரியை வசூலிக்கவுள்ளது.
எல்லையில் பாக். துப்பாக்கிச் சூடு-இந்திய வீரர் பலி
ஸ்ரீநகர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
விரைவில் சுனாமி எச்சரிக்கை செயற்கைக்கோள்!
குலசேகரம்: சுனாமி மற்றும் புயல் எச்சரிக்கைகளை துல்லியமாக தெரிவிக்கும் ஓசன்சாட் செயற்கைகோள் இன்னும் இரண்டு வாரத்தில் விண்ணில் செலுத்துப்படும் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.