இலங்கைக்கு போக வேண்டாம்-யு.எஸ். எச்சரிக்கை
வாஷிங்டன்: இலங்கையில் விடுதலைப் புலிகள் மிரட்டல் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. எனவே அங்கு அமெரிக்கர்கள் போவதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே செல்வதாக இருந்தாலும் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு கண்டிப்பாக போக வேண்டாம் என அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கலைக் கல்லூரி மாணவர்களுக்கும் பாலிடெக்னிக் பாடம்!
சென்னை: இந்த ஆண்டு முதல் கலைக் கல்லூரிகளிலும் பாலிடெக்னிக் பாடங்கள் கற்பிக்கப்படும் என்று சட்டசபையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
கிளிநொச்சியை மீட்ட தளபதி பிரதித் தூதராகிறார்
வன்னியில், கிளிநொச்சியை மீட்கும் இராணுவ நடிவடிக்கையில் ஈடுபட்டிருந்த 57 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஜேர்மனியின் பிரதித் தூதராக நிய மிக்கப்பட்டுள்ளார்.
புலிகளின் நிழல் அரசை சர்வதேசம் அங்கீகரிக்காது : விநாயகமூர்த்தி முரளிதரன்
நாடு கடந்த நிலையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் அரசாங்கத்தை சர்வதேச ரீதியில் எந்தவொரு நாடும் அங்கீகரிக்க மாட்டாது என்பதால் அதனை அமைப்பது என்பது முடியாத காரியம்”என தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
ராணுவத்துடன் நடந்த சண்டையில் பிரபாகரன் மகளும் பலி – பத்மநாதன்
லண்டன்: ராணுவத்துடன் நடந்த சண்டையின்போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவும் பலியாகி விட்டதாக புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கூறியுள்ளார்.
உள்நாட்டு பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தான் மிகவும் அதிகம்
மும்பை: உலகிலேயே இந்தியாவில் தான், உள்நாட்டிற்குள் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் அதிகம் உள்ளன. உலகின் பல்வேறு நாடுகளில் ஏராளமான பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. இவற்றில் சர்வதேச அளவிலான அல்-குவைதா போன்ற பயங்கரவாத அமைப்பு களும் அடக்கம்.
பஸ் எங்கே வருகிறது மொபைல் போன் சொல்லும்
புதுடில்லி: உள்ளூர் பஸ் இன்னும் வரலியா… கவலையே வேண்டாம்; மொபைல் போனை எடுங்க; பட்டனை அழுத்துங்க; திரையில் பாருங்க, எந்தெந்த பஸ், எங்கே வந்து கொண்டிருக்கிறது என்பது தெரியும். ஆனால், இந்த வசதி, சென்னையில் அல்ல; டில்லியில்.
தமிழகத்துக்கு ரிலையன்ஸ் எரிவாயு கொண்டு வர மந்திரி அழகிரி திட்டம்
“தமிழக உரத்தொழிற்சாலைகளில் நாப்தா மூலம் உரங்களைத் தயாரிப்பதற்கு பதிலாக, இயற் கை எரிவாயு மூலம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் பேசி, கேஜி பேசினில் கிடைக்கும் எரிவாயுவை தமிழகத்திற்கும் வழங்க வேண்டுமென கேட்க இருக்கிறேன்’ என்று அமைச்சர் அழகிரி தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து : ஆதரவும் – எதிர்ப்பும்
மாணவர்களின் பாடசுமையை குறைக்கும் வகையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபில், தனது அமைச்சக கொள்கை முடிவை வெளியிட்டு, 100 நாட்களில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மாநில கல்வி வாரியங்களுடன், ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. … Continued
டாக்டர்கள் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த அன்புமணி கோரிக்கை
சென்னை: டாக்டர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக தமிழக அரசு டாக்டர்களுக்கும் சலுகைகளை வழங்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.