வங்கி கணக்குகள் முடக்கம்…பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஸ்தம்பித்தது!
சென்னை: பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் சொத்துக்களை மதிப்பிட தற்காலிக மதிப்பீட்டாளரை நீதிமன்றம் நியமித்தது தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மதிவதனிக்கு, திருச்சியில் பாஸ்போர்ட் பெற்றது எப்படி? ‘ரா’ அதிகாரிகள் நேரில் விசாரணை
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதினி விமானம் மூலம் வெளிநாடு செல்ல உதவிய பாஸ்போர்ட் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் வசந்தி, க/பெ.மாரிமுத்து, ஜெகதாப்பட்டினம், ஆவுடையார் கோவில் தாலுகா, புதுக்கோட்டை மாவட்டம் என்ற பெயர் மற்றும் முகவரியில் எடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ‘ரா’ அமைப்பு அதிகாரிகள் திருச்சி மண்டல பாஸ்போர்ட் … Continued
வணங்காமண் கப்பலுக்கு தலை சாய்த்தது இலங்கை
தமிழக முதல்வர் கருணாநிதியின் தொடர் முயற்சியின் விளைவாக, இலங்கைத் தமிழர்களுக்கு உலகத் தமிழர்கள் வணங்காமண் கப்பலில் அனுப்பிய நிவாரணப் பொருட்களை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசு சம்மதித்து உள்ளது. இதற்கான உறுதிமொழியை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம் இலங்கை தூதர்கள் அளித்தனர்.
தமிழ்நாட்டில் கல்வியின் தரம் உயர்ந்துள்ளது. அமைச்சர் பொன்முடி
கல்லூரிகளில் போட்டி அதிகமாகி உள்ளது. இதனால் கல்வியின் தரம் உயர்ந்துள்ளது. கட்டணம் குறைந்துள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி சட்டசபையில் தெரிவித்தார்.
பைக், கார்களுக்கு ஆகஸ்ட் முதல் கூடுதல் வரி: அமைச்சர் நேரு தகவல்
விபத்து நிவாரண உதவியை அதிகரிக்க, இனி வாகனப் பதிவின் போது இரு சக்கர வாகனங்களுக்கு 250 ரூபாய், இலகு ரக வாகனங்களுக்கு 1,500 ரூபாய், இதர வாகனங்களுக்கு 2,000 ரூபாய் கூடுதலாக வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் விரைவில் 3,500 மினி பஸ்களும் ஓடப்போகின்றன. … Continued
சூப்பர் சீரிஸ் சாம்பியன்: சாய்னா நெக்வால் சாதனை
இந்தோனேஷியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நெக்வால் சாம்பியன் பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்தார்.
இந்தியர்களை தாக்குபவர்கள் ஆப்கானிஸ்தானியர்
ஐதராபாத்: ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் உள்ளிட்ட நாட்டவர்கள் தான் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர், என தெலுங்கு தேசத் தலைவர் தெரிவித்துள்ளார்.
அபாயம்!ஐந்து மாநிலங்களில் நக்சல் பெரும் நாசவேலை… மே.வங்கத்தை தொடர்ந்து மத்திய அரசு எச்சரிக்கை
லால்கார் (மேற்கு வங்கம்): லால்காரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு “பந்த்’ நடந்த நக்சலைட்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
போலீஸ் ஸ்டேஷன் அருகில் வீடு புகுந்து 30 சவரன் நகை கொள்ளை
மதுரை: மதுரை தெற்குவாசல் போலீஸ் ஸ்டேஷன் அருகே நேற்று பட்டப்பகலில், நகை ஆசாரி மற்றும் அவரது தாயை கட்டிப்போட்ட மர்ம கும்பல், கத்திமுனையில் 30 சவரன் நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பியது.
போதை ஊசி மருந்து நடமாட்டம் கரூரில் அதிகரிப்பு: அதிகாரிகள் மெத்தனம்
அறுவை சிகிச்சைக்கு பிறகு, வலி தெரியாமல் இருக்க பயன்படுத்தப்படும் ஒரு வகை “இன்ஜெக்ஷன்’ மருந்து, போதைக்காக பயன்படுத்துவது கரூரில் அதிகரித்துள்ளது. மருந்தக ஆய்வாளர், சுகாதாரத்துறைக்கு இத்தகவல் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.