பிரான்ஸ் விமான விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு 12 லட்சம் ரூபாய் இழப்பீடு
லண்டன்:பிரேசில் நாட்டில், அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் விமானத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல் கட்டமாக தலா 12 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட உள்ளது. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரிலிருந்து கடந்த முதல் தேதி, 228 பேருடன் பாரிஸ் புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து நொறுங்கியது.
2 நக்ஸல்கள் சுட்டு கொலை-ஊடுறுவல் அபாயம்: தமிழகம் உஷார்
சென்னை: நக்சலைட்டுகள் ஊடுறுவலாம் என்ற தகவல் வந்ததைத் தொடர்ந்து தமிழக எல்லைப் பகுதிகள் அனைத்தும் தீவிரக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. வட மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
டுவென்டி-20: பாக். கேப்டன் யூனிஸ் கான் ஓய்வு
லண்டன்: டுவென்டி-20 உலக கோப்பை தொடரை வென்ற மகிழ்ச்சியுடன் டுவென்டி்-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.
உறுப்பு தானத்தால் இன்றும் வாழும் ஹிதேந்திரனுக்கு நாளை பிறந்தநாள்
தமிழக மக்களிடையே உடல் உறுப்பு தான விழிப்புணர்ச்சிக்கு காரணமான ஹிதேந்திரனின் பிறந்த நாள் தமிழக மக்களால் நாளை கொண்டாடப்படவுள்ளது.
சத்தீஷ்காரில் மாவோயிஸ்டு போராளிகளின் தாக்குதலில் 11 போலீசார் பலி
சத்தீஷ்காரில் அரசை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிவரும் மாவோயிஸ்ட் கம்யூனிசுடுகளின் தாக்குதலில் 11 போலீசார் பலியாகியுள்ள்னர்.
உத்தரபிரதேசத்தில் 8 வயது சிறுவன் மீது குண்டர் தடுப்பு சட்டம்
உத்தரபிரதேச மாநிலம் கார்டோய் மாவட்டத்தில் உள்ள பஹாலி என்ற கிராமத்தைச்சேர்ந்தவர் ராஜூ. இவரது 8 வயது மகன் ஜகன்நாத் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜூ வீட்டுக்கு அருகே ஒரு காலி நிலம் உள்ளது. அந்த நிலத்தை பங்கீட்டு கொள்வது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
சீன, இந்திய மேலாதிக்கப் போட்டியில் ஈழத்தின் புதல்வர்கள் மடிந்தார்கள் – பத்திரிக்கையாளர் சோலை
சென்னை: சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான மேலாதிக்கப் போட்டியில், ஈழத்தின் புதல்வர்கள் மடிந்து போய் விட்டார்கள் என்று மூத்த பத்திரிக்கையாளர் சோலை கூறியுள்ளார்.
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவிய ரஷ்ய விமானம் தரையிறக்கம்
மும்பை: பாகிஸ்தானுக்குள்ளிருந்து இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி ஊடுறுவிப் பறந்த ரஷ்ய தயாரிப்பு ராணுவ விமானத்தை இந்திய விமானப்படையினர் வலுக்கட்டாயமாக தரையிறக்கினர்.
உலக நாடுகளில் பசிக் கொடுமையால் வேதனைப்படுபவர்களினது தொகை அதிகரித்துள்ளது
உலக நாடுகளில் ஒரு மில்லியாட்டுக்கும் அதிகமான மக்கள் பசிக் கொடுமையில் தவிக்கிறார்கள் என என l’Organisation des Nations unies அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தரமான ரோடுகள்: விரைவில் இந்தியா முதலிடம் : ரோடு காங்.,தலைவர் தேஷ்பாண்டே பேச்சு
கொடைக்கானல்: தரமான ரோடுகள் உள்ள நாடுகளில் இந்தியா விரைவில் முதலிடம் பெறும் என்று இந்திய ரோடுகள் காங்கிரஸ் தலைவர் தேஷ்பாண்டே தெரிவித்தார். இந்தியன் ரோடுகள் காங்கிரஸ் அமைப்பின் 188-வது கவுன்சில் கூட்டம் கொடைக்கானலில் துவங்கியது. இதில் அவர் பேசியதாவது: