பொறியியல் படிப்பிற்கு பெண்களிடம் ஆர்வம் குறைவு
சென்னை: பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் நேற்று “ரேண்டம்’ எண் வழங்கப்பட்டது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர் களை விட அதிக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ள மாணவிகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
பக்ரைன் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இனி பாதுகாப்பு
துபாய்:பக்ரைனில், வீட்டு பணிப்பெண் உட்பட இந்திய பணியாளர்கள் தாங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உள்ள கொடுமைகளில் இருந்து காக்கும் வகையிலான ஒப்பந்தம் இருநாடுகளிடையே கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்தில் மத்திய வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி மற்றும் பக்ரைன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மஜீத் அல் அலாவி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
மே.வங்க நக்சலைட் அட்டகாசத்தை ஒடுக்க வேட்டை : விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேடல்
கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் லால்கார்க் பகுதியில் பதுங்கியுள்ள நக்சலைட் கும்பலை ஒடுக்குவதற்கு, விமானப்படை ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் உள்ளன. நக்சலைட்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையும் நேற்று களத்தில் இறங்கியது.
இன்ஜினியரிங் கல்லூரிகளில் கட்டணம் நிர்ணயம்! : கடந்த ஆண்டு போல 3 வகை நீட்டிப்பு
சென்னை : “”பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணமே இந்த ஆண்டும் தொடரும் என, நீதிபதி பாலசுப்ரமணியன் கமிட்டி நிர்ணயித்துள்ளது,” என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, “ரேண்டம்’ எண் வழங்கும் நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார்.
ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற்றவர் விபத்து ஏற்படுத்தினால் நஷ்டஈடு வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவுஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற்றவர் விபத்து ஏற்படுத்தினால் நஷ்டஈடு வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: “டிரைவிங் லைசென்ஸ் பெறும் முன் ஓட்டுநர் பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.,), பெற்றவர் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் நஷ்டஈடு வழங்க வேண்டும்,’ என மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது.
கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., எச்சரிக்கை
சென்னை: “கல்லூரியிலிருந்து வெளியேறும் மாணவர்களுக்கு கட்டணம் மற்றும் “டிசி’யை திருப்பித் தர மறுக்கும் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்’ என, ஏ.ஐ.சி.டி.இ., எச்சரித்துள்ளது.
வணங்காமண் கப்பலை இலங்கை அனுமதிக்க நடவடிக்கை : எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கருணாநிதி கடிதம்
இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் ஏற்றி வந்த வணங்காமண் கப்பலை இலங்கை அரசு அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
மொபைல் போன் மூலம் விரும்பியவரின் கணக்கிற்கு 5 நிமிடத்தில் பணப்பரிமாற்றம்
சிவகாசி: மொபைல் பாங்க் மூலம் விரும்பியவரின் கணக்கிற்கு 5 நிமிடத்தில் பணம் அனுப்பும் வசதி ஸ்டேட் பாங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிவகாசி டவுன் கிளை ஸ்டேட் பாங்க் சார்பில் வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டம் வங்கி முதன்மை மேலாளர் ஏ. சீனிவாசன் தலைமையில் நடந்தது.
பிரபாகரன் மரணம்: புலிகளின் புலனாய்வுத் துறை உறுதி
எமது இயக்கத்தின் தலைவரும், பிரதம ராணுவத் தளபதியுமான தமிழ் ஈழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரமரணம் அடைந்துவிட்டார் என விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது.
ஸ்டேட் பாங்க்கில் இயக்குனர்களை விட அதிகம் சம்பளம் பெறும் ஆடிட்டர்கள்
புதுடில்லி : இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அதன் இயக்குனர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை விட 100 சதவீத கூடுதல் சம்பளத்தை ஆடிட்டர்களுக்கு கொடுக்கிறது. 2007 – 08 ல் ஸ்டேட் பாங்க்கின் சேர்மன் ஓ.பி.பாத் பெற்ற சம்பளம் மற்றும் ஊக்க தொகை ரூ.16.2 லட்சம். அது 2008 – 09 ல் … Continued