கடலில் விழுந்த ஏர் பிரான்ஸ் விமானம்: கடைசித் தருண புகைப்படங்கள்
அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகிய ஏர் பிரான்ஸ் விமானத்தில், கடைசித் தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என இரு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவை உண்மையானவைத்தானா அல்லது ஏதாவது கிராபிக்ஸ் வித்தையா என்பது தெரியவில்லை.
புலிகள் சர்வதேச நெட்வொர்க்கை தகர்க்க இலங்கை அதிரடி : அமெரிக்கா ஒத்துழைப்பு
கொழும்பு: இலங்கையில், விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்துக்கட்டிய இலங் கை அரசு, சர்வதேச அளவில் புலிகளுக்கு பணம், ஆயுதங்கள் வந்த “நெட்வொர்க்’கை தகர்க்க தீவிர முயற்சி செய்து வருகிறது.
தமிழகத்தில் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமையும் ஐடி சிறப்பு பொருளாதார மண்டலம்
சென்னை: தமிழகத்தில் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பிரமாண்டமான சிறப்பு ஐடி பொருளாதார மண்டலத்தை நிர்மானிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான வீட்டுக் கடன் அளவு ரூ. 15 லட்சமாக உயர்வு
சென்னை: அரசு ஊழியர்களுக்கான வீட்டு வசதிக் கடன் ரூ. 6 லட்சத்திலிருந்து ரூ. 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இரான் அதிபர் தேர்தல் முடிவை கண்டித்து நடைபெற்ற அஞ்சலி தின ஆர்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டக்காரர்கள் பலர் கருப்பு உடை அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தியபடி சென்றார்கள். முன்னைய ஆர்பாட்டங்களில் கலந்துகொண்டு உயிரிழந்தவர் களுக்கு இன்றையதினம் அஞ்சலி தினமாக கருதவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அதிபர் பதவி வேட்பாளர் மிர் ஹொ சைன் முசவி அவர்கள், இன்றைய ஆர்பாட்டக்காரர்கள் மத்தி யில் உரையாற்றியதாக கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறிப்பிட்டார்கள்.
நக்சலைட் போராளிகளை அழிக்க 25000 இராணுவத்தினர் தேவை: மாநில அரசுகள் கோரிக்கை
நக்சலைட் போராளிகளை ஒழிக்கும் பணியில் கூடுதலாக 25 ஆயிரம் துணை ராணுவ படையினரை ஈடுபடுத்த வேண்டும் என்று மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதாவது:
புழல் சிறைக்குள் போதை மாத்திரை கடத்திய கைதி
புழல் சிறைக்குள் போதை மாத்திரைகளை கடத்தி வந்தபோது கைதி சிக்கினார். புழல் சிறையில் பிரபல ரவுடி வெல்டிங் குமார் வெட்டிக் கொல்லப்பட்டார். அதன்பின், சிறையில் பாதுகாப்பு ஏற்பாடு கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
டீசல் விலை ரூ.2 அதிகரிக்கிறது; பெட்ரோல் விலை ரூ.6 உயர்கிறது
கடந்த ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மிகவும் அதிகரித்து வந்தது. ஜூலை மாதம் ஒரு பீப்பாய் எண்ணை 142 அமெரிக்க டாலராக அதிகரித்தது. இதனால் கடந்த ஆண்டு பல முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தப்பட்டது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.5 பில்.அமெரிக்க டொலர் கடனுதவி: மத்திய வங்கி அதிகாரி
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்கவுள்ளதாக மத்திய வங்கி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கணிதத்திற்கும் செய்முறை மதிப்பெண்*பள்ளி கல்வித்துறை அமைச்சர் தகவல்
சென்னை:இயற்பியல், வேதியியல் பாடங்களை போல, கணித பாடத்திற்கும் செய்முறை தேர்வு மதிப்பெண் வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.தமிழகத்தில் முதல்முறையாக சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாநில மாதிரி கணித ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.