மனித உயிர்ச்சிலைகள்: லண்டன் சிற்பியின் கனவு பலிக்கிறது
லண்டனைச் சேர்ந்த சிற்பி ஆண்டனி கார்சம்லெ. அழகான சிற்ப வேலைப்பாடுகள் பலவற்றை செய்த இவருக்கு வித்தியாசமான யோசனை ஒன்று உதித்தது.
இமயமலையின் பனி உருகி வருவதால் தென்ஆசிய நாடுகளுக்கு கடும் பாதிப்பு : ஜான் கெர்ரி
நியுயார்க் : இமயமலையில் இருக்கும் பனி உருகி வருவது தென் ஆசிய நாடுகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றார் அமெரிக்க செனட் சபை உறுப்பினரான ஜான் கெர்ரி. இமய மலையில் இருந்து தொடர்ந்து பனி உருகிக்கொண்டு இருந்தால், அதை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால், அது அந்த பகுதிக்கு பேராபத்தாக முடியும் என்றார் … Continued
பனிலிங்க தரிசனம் துவங்கியது
காஷ்மீர் மாநிலத்தில், கடல் மட்டத்தில் இருந்து 3,952 மீட்டர் உயரத்தில், இயற்கையாக ஒவ்வொரு ஆண்டும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்களில் முதல் குழுவினர் நேற்று தரிசனம் செய்தனர்.
ஏர் இந்தியாவில் கடும் நஷ்டம்: பணியாளர் சம்பளம் இழுத்தடிப்பு
புதுடில்லி: கடுமையான நிதி நெருக்கடி காரணமாக ஏர் இந்தியா விமான நிறுவனத்தில், ஊழியர் களுக்கான ஜூன் மாத சம்பளம், 15 நாள் தாமதமாக வழங்கப்பட உள்ளது.ஏர் இந்தியாவில் 33 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
பன்றிக்காய்ச்சல் பரவுவது ஏன்?: விஞ்ஞானிகள் ஆய்வு
ஹாங்காங் : பன்றிக் காய்ச்சல் வைரஸ் உலகின் தெற்கு பகுதிகளில் எவ்வாறு பரவியது என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். “நேச்சர்’ என்ற பத்திரிகையில், ஜப்பான் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் உலகளவில் ஏற்பட்ட தொற்று நோய்களான, ஸ்பானிஷ் காய்ச்சல் (1918-1919), ஆசியன் காய்ச்சல் (1957) மற்றும் ஹாங்காங் காய்ச்சல் … Continued
ஸ்வைன் ப்ளூ: வெளிநாட்டு பயணம் தவிருங்கள் – ஆசாத்
டெல்லி: அமெரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகளில் ஸ்வைன் ப்ளூ வேகமாக பரவி வருவதால் அந்த நாடுகளுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
மதுரையில் 15 டிபன் பாக்ஸ் குண்டுகள் சிக்கின – தீவிரவாத செயலுக்கு சதி?
மதுரை: மதுரை ரிங் ரோடு அருகே உள்ள கானாத்தான் பாலத்துக்குக் கீழே மர்மமான முறையில் வைக்கப்பட்டிருந்த 15 டிபன் பாக்ஸ் குண்டுகளை போலீஸார் மீட்டுள்ளனர். தீவிரவாத செயலுக்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் போலீஸாருக்கு வந்துள்ளது.
இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு மலேசிய வர்த்தக சம்மேளனம் கோரிக்கை
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என கோரி அழுத்தம் கொடுக்கும் முகமாக மலேசியாவில் உள்ள இந்திய வர்த்தக சம்மேளனம் இலங்கையுடனான வர்த்தகத்தை பகிஸ்கரிக்குமாறு கோரியுள்ளது.
வவுனியா வதைமுகாமில் இருப்பதைவிட வன்னியில் செல்லடிபட்டு செத்திருக்கலாம்: தமிழகத்தில் இருக்கும் உறவுக்கு எழுதிய கண்ணீர் மடல்
வன்னியில் கொட்டும் குண்டு மழையில் இருந்து விட்டு வவுனியா செட்டிக்குளம் அகதிகள் முகாமில் இருப்பதுதான் கடினமாக உள்ளதாக தமது வேதனைகள் நிறைந்த இன்றைய அகதிமுகாம் வாழ்க்கையை பற்றி கண்ணீரும் இரத்தமும் சிந்திய வரிகளாக்கி தமிழகத்தில் இருக்கும் உறவுக்கு எழுதிய கண்ணீர்மடல்.
போரில்தான் கொல்லப்பட்டார் பிரபாகரன்: சித்ரவதை புகாருக்கு இலங்கை அரசு மறுப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை இலங்கை ராணுவம் உயிருடன் பிடித்து சித்ரவதை செய்ததாகவும், அதற்கு பின்னரே அவர் கொல்லப்பட்டதாகவும் வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.