உலகக்கோப்பையை வென்றதற்காக இந்தியாவுக்கு பாக். பிரதமர் கிலானி வாழ்த்து
இஸ்லாமாபாத்: உலகக் கோப்பையை வென்றெடுத்த இந்திய கிரிக்கெட் அணியைப் பாராட்டுவதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 3 கோடி பரிசு-கருணாநிதி
சென்னை: உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 3 கோடி பரிசளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.2,342 கோடி லாபம்
புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் ஊழலில் “யுனிடெக்’ நிறுவனம் 2 ஆயிரத்து 342 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் அடைந்துள்ளதாக சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள குற்றபத்திரிகையில் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.
கோவையில் ஒரே மேடையில் ஜெ.-விஜயகாந்த் பேச்சு?
கோவை: கோவையில், ஒரே மேடையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் இணைந்து பேசும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.
எதிரணிக்கு தோல்வி பயம் வந்து விட்டது :ஸ்டாலின் பேச்சு
பொள்ளாச்சி:””நாம் சாதனையை சொல்லி ஓட்டு கேட்கிறோம். பயன்பெற்ற மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். இதனால் எதிரணிக்கு தோல்வி பயம் வந்து விட்டது,” என துணைமுதல்வர் ஸ்டாலின் கூறினார்.
கிரிக்கெட் வீரர்களுக்கு கோடிகள் குவிகிறது : வெற்றிக்களிப்பில் மிதக்கிறது நாடு
புதுடில்லி: உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசுகள் குவிகிறது. கேப்டன் தோனிக்கு, இதுவரை ரூ. 3 கோடி பரிசு கிடைத்துள்ளது.
செஞ்சுரி அடித்தும் அணியை ஜெயிக்க வைக்க முடியாத முதல் வீரர் ஜெயவர்த்தனே
மும்பை: உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஒன்றில் சதம் கண்டும் கூட அணியை ஜெயிக்க வைக்க முடியாத முதல் வீரர் என்ற பெயர் இலங்கை வீரர் மஹேளா ஜெயவர்த்தனேவுக்குக் கிடைத்துள்ளது. Mahela Jayawardena Getty Images
கல்விக்கடன் பெறுவதற்கான ஆலோசனை
கல்விக் கடன் பெற்று உயர் கல்வியைத் தொடர நினைக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை மேலாளர் விருத்தாசலம் ஆலோசனை வழங்கினார்.
இரண்டாம் அணு உலையை கான்கிரீட் கலவையால் மூடி விட பெரும் முயற்சி
டோக்கியோ : ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சை வெளியிட்டு வரும் இரண்டாம் உலையில் ஏற்பட்டுள்ள பிளவை, கான்கிரீட் கலவை கொண்டு மூடும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்புடன் அஸ்ஸாமில் முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநில சட்டசபையின் 62 தொகுதிகளுக்கு இன்று காலை முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.