கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை பல்கலைக்கழகம்
கிருஷ்ணகிரியில் புதிதாக தோட்டக்கலை பல்கலைக் கழகம் அமைத்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி குழப்பம்-‘மன்னார்குடி வகையறா’ மீது புகார்
சென்னை: கூட்டணிக் கட்சியினரை கொஞ்சம் கூட மதிக்காமல், அவர்களது அரசியல் எதிர்காலம், அந்தக் கட்சிகளின் சென்டிமெண்ட்கள், அவர்களது அரசியல் தியாகங்கள்,அந்தக் கட்சிகளின் தொண்டர்கள் அனைவரையும் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியும் வகையில் தனது வேட்பாளர் பட்டியலை தன்னிச்சையாக வெளியிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
50 கி.மீ தொலைவுக்கு அணுக்கதிர் வீச்சு அபாயம் : அதிகம் பிரச்னை
டோக்கியோ : ஜப்பானின் புக்குஷிமா அணு உலைகளில் வெப்பத்தை தணிக்க, ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றும் பணி தொடர்ந்து நடக்கிறது.
68 தான், முடியாது 70 வேணும்: இழுபறியில் காங்., திரிணாமுல் காங். பேச்சுவார்த்தை
கொல்கத்தா: தொகுதி பங்கீடு தொடர்பாக திருணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுக்கு இடையே நேற்றிரவு நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
பணியாளர் மாற்றம்: ஜப்பானியரை நெகிழ வைத்த விப்ரோ முடிவு
பெங்களூர்: ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணுஉலைகள் வெடிப்பு மற்றும் கதிர்வீச்சு நெருக்கடி காரணமாக அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை திரும்ப அழைத்து வரும் சூழலில், இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோவின் ஒரு உத்தரவு ஜப்பானிய பணியாளர்களை நெகிழ வைத்துள்ளது.
ஜப்பானில் வசித்த வெளிநாட்டவர்கள் சொந்த நாட்டுக்கு ஓட்டம்
டோக்கியோ : ஜப்பானின் புக்குஷிமா அணு உலைகளில் வெப்பத்தை தணிக்க, ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றும் முயற்சி கதிர்வீச்சு அபாயத்தால், தோல்வியில் முடிந்தது.
தேமுதிக தலைமையில் 3வது அணி-சிபிஎம், சிபிஐ, பு.த, மூமுமு முடிவு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம் கட்சிகளின் தலைவர்கள் கூடி அவசர ஆலோசனை நடத்தினர்.
ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்?
சென்னை: மதுரை மாவட்டத்தை ஒட்டி எந்த இடத்தில் போட்டியிட்டாலும் மத்திய அமைச்சர் அழகிரியின் அதிரடியை மீறி ஜெயிப்பது மிகமிகக் கடினம் என்று எச்சரிக்கப்பட்டதையடுத்து தனது பிராமண ஜாதியினர் அதிகம் வசிக்கும் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்குவது ஏற்கத்தக்கதல்ல: கிருஷ்ணா
இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வேண்டுமென்று, அந்நாட்டு அரசிடம் பல முறை கூறிவிட்டோம். தவிர, இந்திய மீனவர்கள் மீது அந்நாட்டு கடற்படை துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்துவது ஏற்கத்தக்கதல்ல.
பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!
நியூயார்க்: பேங்க் ஆப் அமெரிக்காவின் இயக்குநர்களில் ஒருவராக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவிக்கப்பட்டுள்ளார்.