தே.மு.தி.க.,வுக்கு முரசு சின்னம் கிடைக்குமா? : உத்தரவிட முடியாது என்கிறது சுப்ரீம் கோர்
புதுடில்லி : நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு, பொதுச்சின்னம் ஒதுக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட முடியாது என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வு மொழிப் பிரச்சினைக்கு கமிட்டி அமைப்பு
சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வின்போதான மொழி பிரச்சினைக்கு தீர்வுகாண, ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
ராசாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா
சென்னை: 2ஜி ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நிலநடுக்கத்தால் பூமி சுற்றும் வேகம் அதிகரிப்பு
வாஷிங்டன் : “ஜப்பானில் சமீபத்தில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம், பூமி சுற்றும் வேகத்தை அதிகரித்துள்ளது. அதனால், ஒரு நாளின் நேரத்தில் குறைவு ஏற்படும்’ என்று, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் தீவிர ஆலோசனை-மீண்டும் தனித்துப் போட்டி?
சென்னை: தாங்கள் கேட்ட 21 தொகுதிகளை அதிமுக தர மறுத்து விட்டதால் கடும் அதிருப்தி அடைந்துள்ள தேமுதிகவினர் இன்று கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
தேர்தல் பணி-அழகிரி, ஸ்டாலினுடன் மாமல்லபுரத்தில் கருணாநிதி ஆலோசனை
சென்னை: திமுகவேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படவுள்ள நிலையில் தனது மகன்களான துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியுடன் இன்று மாமல்லபுரம் சென்ற முதல்வர் கருணாநிதி அங்கு வைத்து இருவருடனும் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
அமெரிக்காவை கலங்க வைத்துள்ள ஜப்பானின் ‘அணு நெருக்கடி
நியூயார்க்: அமெரிக்க அணுசக்தித் துறை விரிவாக்கத்தில் இப்போது பெரிய தடையாக உருவெடுத்து நிற்கிறது ஜப்பானுக்கு ஏற்பட்டுள்ள ‘அணு நெருக்கடி’!
சிறப்பு அந்தஸ்தை பெறும் இந்தியா
மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்தை(எம்.ஜி.ஐ.இ.பி) அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மருத்துவ படிப்பில் சேர நுழைவுத்தேர்வா? : மருத்துவக் கவுன்சில் உத்தரவுக்கு ஐகோர்ட் தடை
சென்னை : மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நுழைவு மற்றும் தகுதி தேர்வை நடத்த வேண்டும் என, இந்திய மருத்துவ கவுன்சில் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
விமான பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு…கிலோ லிட்டருக்கு ரூ 3377 அதிகரிப்பு
டெல்லி: விமானப் பெட்ரோல் விலை மீண்டும் ஏகத்துக்கும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ லிட்டருக்கு ரூ 3377.09 உயர்த்தப்பட்டுள்ளது.