பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள் : எகிறும் கச்சா எண்ணெய் விலை
சிங்கப்பூர் : எகிப்தில் தொடங்கி அல்ஜீரியா, டுனீசியா, பஹ்ரைன் , லிபியா என அடுத்தடுத்து சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக வெடித்து வரும் புரட்சியின் தாக்கம், கச்சா எண்ணெய் சந்தையிலும், பங்குச்சந்தையிலும் எதிரொலிக்கிறது.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்த திருப்பம்: பரிந்துரை செய்வதே “டிராய்’ பணி
புதுடில்லி : “லைசென்ஸ் பெற்றும், சேவை வழங்க தவறிய நிறுவனங்களின் லைசென்ஸ்களை ரத்து செய்யலாம் என’ அவ்வப்போது, தொலைத் தொடர்புத் துறைக்கு (டி.ஓ.டி.,) பரிந்துரை செய்ததாக, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான “டிராய்’, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்: இந்தியா –
அமெரிக்க பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களை அநீதியாக சுரண்டுவதை தவிர்க்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்ததாக இந்தியா கூறியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மதுரையில் திறப்பு
மதுரை: இந்தியாவிலேயே மிகப்பெரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மதுரை வெள்ளக்கல்லில் திறக்கப்பட்டது. மேயர் தேன்மொழி துவக்கிவைத்த இத்திட்டம், ரூ.72 கோடி மதிப்புடையது.
மத்தியதரைக் கடல் பகுதியில் ஈரான் போர்க்கப்பல்கள்
வாஷிங்டன்: : மத்தியதரைக் கடல் பகுதியில் ஈரானுக்கு சொந்தமான இரு போர்க்கப்பல்கள் வலம் வருகின்றன.
மூன்றில் ஒரு பங்கு தொகுதிகள் தேவை-மமதாவுக்கு காங். கண்டிஷன்
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் தர வேண்டும் என காங்கிரஸ் திட்டவட்டமாக கூறியுள்ளதால், மமதா பானர்ஜி கடுப்பாகியுள்ளார்.
இஸ்ரோ, தேவாஸ் ஒப்பந்தம்: பிரதமர் விளக்கம் அளிக்க பாஜக வலியுறுத்தல்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும் தனியார் நிறுவனமான தேவாஸ்சும் ஒப்பந்தம் செய்து கொண்ட விவரத்தை பிரதமர் விளக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
உலகின் மோசமான 10 நகரங்களில் கொழும்பு, கராச்சி: கருத்துகணிப்பு
லண்டன்: உலகில் வாழ்வதற்கு மோசமான 10 நகரங்களில் இலங்கை தலைநகர் கொழும்புவும் ஒன்று என்று தி எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
விலையை கட்டுப்படுத்த காய்கறிகளை வாங்கி அரசே விற்க முடியாது: பவார்
புதுடில்லி : “வெங்காயம் உள்ளிட்ட, ஒரு சில காய்கறிகளின் விலை, சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு தற்காலிகமானது. இதற்காக, விவசாயிகளிடம் இருந்து, சம்பந்தப்பட்ட காய்கறிகளை, அரசு நேரடியாக கொள்முதல் செய்ய முடியாது’ என, விவசாய அமைச்சர் சரத் பவார் கூறினார்.
மின் பற்றாக்குறையால் விவசாயிகள் புலம்பல்
மின் பற்றாக்குறை காரணமாக விவசாயத்துக்கு வழங்கும் மின்சாரத்தின் அளவு குறைந்ததாலும், எப்போது மின்சாரம் வரும் என தெரியாததாலும், இரவில் வயல் வரப்புகளில் தூங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.