காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் – பாகம் VI

1. இராமனே என் காவலன்

தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளுடன் அவருடைய ஜெர்மானிய நண்பர் திரு. கல்லென்பக் வசித்து வந்தார். காந்தியடிகளின் சோதனைகளில் அவுரம் சரிசம்மாக பங்கெடுத்து வந்தார். அந்நாட்களில், சரியாக புரிந்து கொள்ளத காரணத்தினால் ஒருமுரட்டுப்ட்டாணியர் காந்தியடிகளின் மீது கோபங்கொண்டிருந்தார். ஒருசிலர் வருடைய கோபத்தை மேலும் தூண்டிவிட்டனர். அந்தப் பட்டாணியர் எந்த நேரத்திலும் காந்தியடிகளை தாக்கலாம் என்ற அளவுக்கு நிலைமை மோசமாகியது. கல்லென்பக்கிற்கும் இச்செய்தி தெரியவந்தது. அப்போதிருந்து அவர் எந்நேரமும் காந்தியடிகளுடன் கூடவே இருக்கத் தொடங்கினார். தாம் எங்கு சென்றாலும் கல்லென்பக்கும் தம்முடன் ஏன் தொடர்ந்து வருகிறார் என்பது காந்தியடிகளுக்குத் தெரியாது.

ஒருநாள் அலுவலகத்திலிருந்து வெளியே செல்ல காந்திஜி கோட்டு அணிந்துகொண்டிருந்தார். கல்லென்பக்கின் கோட்டுபை கனமாக இருந்ததை காந்திஜி கவனித்தார். அதில் ஒரு கைத்துப்பாக்கி இருக்கக்கூடும் என்று காந்திஜிக்கு தோன்றியது. அவர் உடனே கோட்டுப்பையை சோதித்தார். உண்மையாகவே அதில் கைத்துப்பாக்கி இருந்தது. அவர் கல்லென்பக்கை அழைத்து வினவினார். “இந்தக்கைத்துப்பாக்கியை எதற்காக உங்கள் பையில் வைத்திருக்கிறீர்கள்?”

கல்லென்பக் அதிர்ந்து போனார். வெட்கத்துடன் “ஒன்றுமில்லை. சும்மாதான்!” என்று பதிலளித்தார்.

காந்திஜி நகைத்தவாறே கேட்டார். “என்ன, ரஸ்கின், தால்ஸ்டா ஆகியோரின் நூல்களில் காரணமில்லாமல் கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம் என்று எங்காவது எழுதப்பட்டிருக்கிறதா?”

இந்தப்பரிகாசத்தினால் கல்லென்பக்கிற்கு வெட்கம் மேலும் அதிகரித்தது. அவர் சொன்னார். “உங்களைக் கொல்ல சில குண்டர்கள் முயலுவதாக எனக்குச் செய்தி கிடைத்திருக்கின்றது”

“ஓஹோ! அப்படியானால் நீங்கள் அவர்களிடமிருந்து என்னைக்காப்பாற்ற விரும்புகிறீர்கள், இல்லையா?”

“ஆம், அதனாலேயே நான் தங்களை நிழல்போல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கறேன்”

கல்லென்பக்கின் இந்த பதிலைக்கேட்டு காந்திஜி வயிறு குலுங்கச் சிரித்துவிட்டுக் கூறினார்: மிகவும் நல்லது, அப்படியானால் இனி நான் நிம்மதியாக இருக்கலாம். என்னை காப்பதற்கு ஆண்டவனுக்கு இருந்த அதிகாரத்தை தாங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள். தாங்கள் ஜீவித்திருக்கும் வரை என்னடைய பாதுகாவலர் தாங்கள்தான் என்று நான் கருதவேண்டும். ஆஹா, நட்பின் காரணமாக என்னைக் காக்கும் பொருட்டு ஆண்டவனின் அதிகாரத்தையே பறித்துக் கொண்ட தங்களின் சாகசத்தை என்னென்பேன்!”

இதைக்கேட்டு கல்லென்பக் ஆச்சரியம் அடைந்தார். அவருக்கு தம் தவறு தெரியவந்தது. காந்திஜி மீண்டும் கூறினார். “என்ன யோசிக்கிறீர்கள்? உங்கள் செயல் ஆண்டனிடம் நமக்குள்ள நம்பிக்கையைக் காட்டவில்லை. என்னைக் காபது பற்றிக் கவலைப்படாதீர்கள். என்னைப்ற்றிக் கவலைப்படவேண்டியவர் சர்வவல்லமை படைத்த ஆண்டவனேயாவார். இக்கைத்துப்பாக்கியால் தாங்கள் என்னைக் காப்பாற்றி விட முடியாது.”

மிகவும் பணிவுடன் கல்லென்பக் கூறினார். என் தவறு புரிந்தது. இனி நான் தங்களைப்பற்றி கவலைப்படமாட்டேன்.”

இதைக்கூறிவிட்டு அவர் அந்தக் கைத்துப்பாக்கியைத் தூக்கி எறிந்துவிட்டார்.

2. மிரட்டுவதுகூட இம்சைதான்

தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னாய் பர்க்கில் காந்திஜி வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். திரு போலக் அவருடன் இருந்து வந்தார். காந்தியடிகளின் கட்சிக்கார்ர் ஒருவர் உரியகாலத்தில் தாம் செலுத்த வேண்டிய வழக்கறிஞர் கட்டணத்தை செலுத்தாமல் இருந்தார். படிப்படியாக கடன் சுமை அதிகரித்துவிட்டது. ஆனால், அடிக்கடி நினைவுப்படுத்தியும் கூட தாம் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்துவதில் கொஞ்சம் அக்கறை காட்டவில்லை.

மிகவும் நம்பிக்கையிழந்த நிலை ஏற்பட்டபோது. போலக் நீதிமன்றத்துக்குச் செல்வது எனத் தீர்மானித்திருந்தார். இதற்குத்தேவையான விண்ணப்பங்களைத் தயாரித்துக்கொண்டு காந்தியடிகளிடம் சென்று, “இவற்றில் கையொப்பமிட்டுக் கொடுங்கள்” என்று போலக் கேட்டுக்கொண்டார்.

அவற்றைப் படித்துப் பார்த்துவிட்டு காந்தியடிகள் போலக்கிடம்கூறினார். “இம்மாதிரி காரியங்களுக்காக நான் நீதிமன்றத்தின் தயவை நாடிச் செல்லமாட்டேன். ன்பது உங்களுக்குத் தெரியாதா? மிரட்டுவதும்கூட இம்சேயாகும். இம்சையின் மூலம் யாரையும் நன்றியுடையவர்களாகச் செய்ய முடியாது. அம்மனிதர் என் பணத்தைக் கொடுத்து கணக்கைத் தீர்க்காவிட்டால், நான் என் முட்டாள்தனத்தின் பலனை அனுபவிக்கத்தான் வேண்டும். அவர் இம்மாதிரி இருக்க நான்தானே விட்டுவைத்தேன்? அவரிடமிருந்து உரிய சமயத்தில் கட்டணத்தை வசூல் செய்து வந்திருந்தேனானால், இந்த நிலைமையே ஏற்பட்டிருக்காது. தவறு என்னிடமும் உள்ளது.”அவர் இதற்காக நீதிமன்றம் செல்லவில்லை.

3. ஆத்மா அழிவற்றது

அப்போது காந்திஜி சிறையிலிருந்தார். அவரின் துணைவியார் கஸ்தூரிபா காந்தி போனிக்ஸ் ஆசிரமத்தில் நோயாகப் படுத்திருந்தார். திடீரென்று அவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாயிற்று. அப்போது அங்கிர்ந்த திரு. வெஸ்ட் காந்திஜிக்கு தந்தி அனுப்பினார். அதற்குப் பதிலாக காந்திஜி அன்னை கஸ்தூரிபாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அச்சமயம் அவருக்கு வயது நாற்பதுதானிருக்கும்.

“உன்னுடைய உடல்நிலை குறித்து திரு. வெஸ்ட் தந்தி அனுப்பியுள்ளார். என் இதயம் மிகவும் வேதனைப்படுகிறது. நான் அழுதுகொண்டிருக்கிறேன். ஆனால் அங்கு வந்து உனக்கு சேவை செய்யும் நிலைமையல் நான் இல்லையே! சத்தியாக்கிரகப் போராட்டத்தில் நான் அனைத்தையும் அர்ப்பணம் செய்துவிட்டேன். என்னால் அங்கு வரக்கூட இயலாது. அபராதம் கொடுத்தால்தான் வரலாம். ஆனால் அபராதம் கொடுத்து வெளிவரமாட்டேன். நீ தைரியத்துடன் இருந்து, நன்றாக சாப்பிட்டு வந்தால் குணமாகிவிடுவாய். இதற்கும்ப몮பால், ஒருவேளை நீ என்னை பிரிந்து சென்றுவிடுவாய் என்பதுதான் என் விதியானால், ‘பிரிவைச் சகித்துக்கொண்டும் நான் உயிருடனிருக்கும்போதே நீ மரித்துவிடுவது தீமையல்ல’ என்று மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன். உன்னிடம் எனக்கு அளவு கடந்த அன்பு இருக்கிறது. எனவே மரணத்திற்குப் பிறகும், என்னைப்பொறுத்தவரை, நீ உயில் வழாந்து கொண்டுதான் இருப்பாய். உன் ஆத்மா அழிவற்றது. நீ என்னைப்பிரியத்தான் நேரிடுமானால், உனக்குப் பிறகு நான் மறுமணம் செய்துகொள்ளமாட்டேன். என்று உறுதி கூறுகிறேன். முன்பே ஒரு சமயம் இதைப்பற்றி நான் உன்னிடம் கூறியிருக்கிறேன். நீ இறைவனிடம் நம்பிக்கை வைத்து உயிரை விடவேண்டும். நீ மரணமடைந்தால், அதுகூட சத்தியாக்கிரகத்திற்கு ஒளி ஊட்டுவதாகும். என் போராட்டம் வெறும் அரசியல் போராட்டமல்ல. அது அறவழிப்பட்டதுமாகும். எனவே மிகுந்த தூய்மையுடையது. இதில் இறந்தால் என்ன, உயிர் வாழ்ந்தால் என்ன? நீயும் இதையே நினைத்து கொஞ்சமும் துயரமடையாமலிருப்பாய் என நம்புகிறேன். இத்தகைய பதிலையே நான் உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.”

மேலே கூறிய நிகழ்ச்சி நடைபெற்று ஐந்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஒருநாள் காந்திஜி போனிக்ஸ் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, ஒரு தந்தி வந்தது. அதை அவர்படித்துவிட்டு, அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்பது போல, தம்மிடம் வைத்துக்கொண்டார். பகல் கழிந்தது. அவருடைய நண்பர்களுக்கும்கூட செய்தி என்ன வென்று தெரியவில்லை. இரவுப் பிரார்த்தனைக்குப் பிறகு மிக முக்கியமான செய்களைப் பற்றி சர்ச்சை நடைபெற இருந்தது. அபுபோது மிகவும் கம்பீரமாக, உள்ளத்தைக் தொடும் முறையில் அவர் சொன்னார் “எனக்கு பெரிய விபத்து ஏற்பட்டு உள்ளது. நேற்று என் தமையனால் காலமாகவிட்டார். கடைசி நேரம் வரை அவருக்கு என்னைப்பற்றியே கவலை இருந்து வந்தது என்பதை நான் அறிவேன். என்னைச் சந்திக்க வேண்டும் என்று பெருத்த ஆவல் கொண்டிருந்தார். நானும் இதற்காகவே எனடைய வேலைகளையெல்லாம் சீக்கிரம் முடித்துவிட்டு இந்தியாவுக்கு புறப்பட விரும்பினேன். அங்கு சென்று அவர் பாதங்களை வணங்கி அவருக்குப் பணிவிடை புரிய வேண்டும் என்று துடித்தேன். ஆனால் நடந்தது என்னவோ முற்றிலும் வேறுவிதமானது”

இந்நிகழ்ச்சிக்குறித்து அவர் தம்முடைய நண்பர் ஒருவருக்கு எழுதினார். “இத்தகைய அதிர்ச்சி தரும் சம்பவங்களிலிருந்து மனிதனுக்கு மரணம் குறித்து அதிக அச்சமின்னை ஏற்படுகிறது. இந்நிகழ்ச்சியினால் என் மனதில் இத்தனை கலவர்ம் ஏன் ஏற்படவேண்டும்? இத்தகைய துனபத்தின் தன்னலம் அடங்கியுள்ளது. நான் சாவதற்குத்தயாராக இருந்தால்- சாவு வரவேற்கப்பட வேண்டியதுதான் என்றல் என் சகோதர்ரின் மரணத்தினால் எந்த ஆபத்துமில்லை. மரணத்தைக் குறித்து நமக்கு அச்சம் இருக்கிறது. அதனால் மற்றவர்கள் மரணத்தைக் கண்டு நாம் அழுகிறோம். உடல் அழியக்கூடியது. ஆத்மா அழிவற்றது. அதுபிரிந்து செல்வதானால் நான் ஏன் கவலைப்பட வேண்டும். ஆனால் இந்த அருமையான ஆறதலளிக்கும் சித்தாந்தத்தினல் உண்மையான நம்பிக்கையிருந்தால் தான் இந்த நிலையை அடையமுடியும்”

4. குற்றம் உங்களுடையதல்ல, என்னுடையது

ஒரு சமயம் தென்னாப்பிரிக்காவில் சில இளைஞர்கள் ஒருமாத்த்திற்கு உப்பில்லாமல் சாப்பிடுவதற்காக விரதம் மேற்கொண்டு போனிக்ஸ் ஆசிரமத்தில் சேர்ந்தார்கள். ஆனால விரைவிலேயே இந்த எளிய உணவினால் அவர்கள் சலிப்படைந்து விட்டார்கள். ஒருநாள் அவரகள் டர்பனிலிருந்து மசாலையுடன் கூடிய ருசியான சில பொருள்களை வரவழைத்து யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டு விட்டார்கள். பிறகு இவர்களுக்குள்ளேயே ஒருவன் காந்தியடிகளுக்குத் தெரியபடுத்திவிட்டான்.

மாலைப் பிரார்த்தனைக்குப் பிறகு காந்திஜி அவர்களை ஒவ்வொருவராக அழைத்து,நீ அந்தப் பண்டங்கை சாப்பிட்டாய?” என்றுக் கேட்டார்.

எல்லோரும் ஒரேயடியாக மறுத்துவிட்டார்கள். அது மட்டுமல்ல, இதைப்பற்றித்தகவல் தந்தவன் பொய்யன் என்றும் சாதித்தார்கள்.

இதன் பிறகு காந்திஜி பலமாகத் தம கன்னங்களில் அறைந்துகொண்டு கூறினார். “என்னிடம் உண்மையை மறைத்த இக்குற்றம் உங்களுடையதல்ல, என்னுடையது; ஏனெனில் சத்தியத்தின் தன்மையை நான் இன்னமும் முழுமையாக அடைந்துவிடவில்லை. சத்தியம் என்னைக் கண்டு தூர ஓடுகிறது.”

அவர் தம்மை கடிந்து கொண்டே போனார். இந்த நிலையை எவ்வளவு நேரம்தான் பொறுத்துக்கொண்டிருக்க முடியும்? இளைஞர் அனைவரும் ஒவ்வொருவராக வந்து அவரிடம் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள்.

5. மாவரைத்தல நல்லதே

காந்திஜி தென்னாப்பிரிக்காவில் ஆசிரம்ம் தொடங்கிய போது தம்முடையது என்றிருந்த அனைத்தையும் அதற்காக்க் கொடுத்துவிட்டார். தாய்நாடு திரும்பிய சமயம் எதுவுமே தம்முடன் கொண்டுவரவில்லை. எல்லாவற்றிற்கும் ‘டிரஸ்ட்’ ஏற்படுத்தி, அவ்றின் மூலம் பொதுநலக்காரியங்கள் நடக்க ஏற்பாடு செய்தார்.

இந்தியா திரும்பிய பிறகு குடும்பச் சொத்துக்கள் பற்றிய பிரச்னை அவர் முன் வந்தது. போர்பந்தரிலும் ராஜ்கோட்டிலும் அவருக்கு வீடுகள் இருந்தன. அவற்றில் காந்தி வம்சத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர் அவர்களை அனைவரைய்மு அழைத்து, காந்திஜி, “குடும்பச் சொத்தில்எனக்குள்ள பாகத்தை நான் உங்களுக்கு விட்டுவிடுகிறேன்” என்று கூறினார்.

கூறியதுடன் மட்டும் நில்லாது, அதற்கான பத்திரம் எழுதி அதில் நான்கு மக்களின் கையொப்பத்தையும் பெற்றத் தந்தார். இவ்விதம் அவை சட்டப்பூர்வமாய்விட்டன.

காந்திஜிக்கு ஒருதமக்கை இருந்தார். அவர் பெயர் ரலியாத்பென்; ஆனால் அனைவரும் அவரை ‘கோகிபென்’ என்றே அழைத்து வந்தனர். அவருடைய குடும்பத்தில் வேறு யாருமில்லை. அவருடைய செலவுக்குஎன்ன செய்வது என்ற பிரச்னை எழுந்தது. தம் சொந்தக்காரியங்களுக்காக காந்திஜி யாரிடமும் எதையும் வாங்கமாட்டார். ஆயினும், அவர் தம்முடைய பழைய நண்பர் டாக்டர் பிராணஜீவன்தாஸ் மேத்தாவிடம் சொல்லி, கோகிபென்னுக்கு மாதம் பத்துரூபாய் அனுப்ப ஏற்பாடு செய்தார்.

விதியின் விளையாட்டை என்னென்பது! சில நாட்களுக்குப் பின் கோகிபென்னுடைய மகளும் கணவனை இழந்து, தன் தாயுடன் வந்து தங்கினார். அச்சமயம் தமக்கையார்காந்திஜிக்கு எழுதினார்; இப்போது என்னுடைய செலவு அதிகரித்துவிட்டது. இதைச் சரிக்கட்டுவதற்காக நாங்கள் அண்டை வீட்டுக்காரர்களுக்கு மாவரைத்துக் கொடுக்க வேண்டியுள்ளது”

காந்தியடிகள் பதில் எழுதினார்: மாவரைத்தல் மிகவும் நல்லது. உங்களிருவரின் உடல் நலமும் சரியாக இருக்கும். நாங்களும் இங்கு ஆசிரமத்தில் மாவரைக்கிறோம். உங்களுக்கு எப்போது விருப்பம் ஏற்படுகிறோ அப்போது நீங்களிருவரும் ஆசிரமத்திற்கு வந்து, உங்களால் இயன்ற அளவு மக்களுக்குத் தொண்டு செய்யய உங்களுக்கு உரிமையுண்டு. நாங்கள் எப்படி இங்கிருந்து எதுவும் அனுப்பவோ, நண்பர்களிடம் சொல்லவோ இயலாது.”

6. இப்போது நீ என் மனைவியல்ல!

தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் அன்னை கஸ்தூரிபா சமயறையில் உணவு தயாரித்துக்கொண்டிருந்தார். காந்தியடிகள் வேறு ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார். திடீரென்று அவர் அன்னையாரிடம் “உனக்கு செய்தித் தெரியுமா? என்று கேட்டார். ‘பா’ உற்சாகத்துடன் ‘என்ன!’ என்று வினவினார. காந்தியடிகள் சிரித்துக்கொண்டே சொன்னார்: “இன்று வரை நீ என்னுடைய ‘விவாகம் செய்து கொள்ளப்பட்ட மனைவியாக இருந்தாய். ஆனால் இனிமேல் இல்லை”. பா வியப்படைந்து அவரைப்பார்த்துக் கேட்டார். இவ்விதம் யார் சொன்னது? நீங்கள் நாள்தோறும் புதிய புதிய செய்தியைத் தேடிக் கண்டுபிடிக்கிறீர்களே!”

காந்தியடிகள் சொன்னார்: “நான் எங்கே தேடிக் கண்டுபிடிக்கிறேன்?” ‘கிறிஸ்தவர்களைப் போல நாம் சர்க்கார் அலுவலகத்திற்குச் சென்று பதிவுத் திருமணம் செய்து கொள்ளாத்தால், சட்டப்படி இத்தகைய திருமணங்கள் செல்லுபடியாகா என்றும், ஆகையால், நீ முறைப்படி விவாகம் செய்துகொள்ளப்பட்ட என் மனைவியல்ல’ என்றும் ஜெனரல் ஸ்மட்ஸ் கூறுகிறார்.

பாவின் முகம் கோபத்தால் சிவந்தது. கூறினார்: “அவனுடைய தலை! அந்த பண்பற்றவனுக்குத்தான் இது போன்ற விஷயங்கள் தோன்றுகின்றன.

காந்தியடிகள் கேட்டார்: “ஆனால் இப்போது பெண்களெல்லாம் என்ன செய்யப் போகின்றீர்கள்?”

“நீங்களே சொல்லுங்கள்! நாங்கள என்ன செய்ய வேண்டும்?” என்றார் அன்னை.

காந்தியடிகள் உடனே கூறினார். ஆண் மக்களாகிய நாங்கள் எவ்விதம் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுகின்றோமோ, அவ்விதமே பெண்களும் போராட வேண்டும். ‘விவாகம் செய்து கொண்ட மனைவியரா’க நீங்கள் ஆக வேண்டுமானால் உங்கள் கௌரவ்ம உங்களுக்கு பிரியமுள்ளதானால், நீங்களும் சத்தியாக்கிரகம் செய்து சிறை செல்ல வேண்டும்.”

பா ஆச்சரியத்துடன், ” நான் சிறை செல்லுவதா? பெண்கள் எப்போதாவது சிறைக்குச் செல்ல முடியுமா? என்று கேட்டார்.

காந்தியடிகள் திடீரென்று மிக்க் கம்பீரமான குரலில் சொன்னார்: “பெண்கள் ஏன் சிறை செல்லக்கூடாது? ஆண்கள் அனுபவிக்கும் சுக துக்கங்களை பெண்கள் ஏன் அனுபவிக்க முடியாது? இராமனுடன் சீதை, ஹரிச்சந்திரனுடன் சந்திரமதி, நளனுடன் தமயந்தி – இவர்கள் எல்லாம் வனத்தில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கவில்லையா?

பா சொன்னார்: அவர்கள் அனைவரும் தேவதைகளைப் போன்றவர்கள். அத்தகைய சக்தி எங்களுக்கு ஏது?”

காந்தியடிகள் பதில் கூறினார்: நாமும் அவர்களைப் போன்று நெறி தவறாது வாழ்ந்தால் தேவதைகள் ஆகலாம். நான ராமனும் நீ சீதையும் ஆகலாம். சீதை ராமனுடன் சேர்ந்து காட்டிற்குச் செல்லாதிருந்தால், சந்திரமதி ஹரிச்சந்திரனுடன் விற்கபடாதிருந்தால், தமயந்தி நளனுடன் அவன் பட்ட கஷ்தங்களையெல்லாம் அனுபவியாதிருந்தால் அவர்களை ‘சதி’ என்று யாரும் சொல்லமாட்டார்கள்.

இதைக்கேட்டு பா சற்று நேரம் மௌனமாக இருந்தார். பிறகு கூறினார்: அப்படியானால் தாங்களை என்னைச் சிறைக்கு அனுப்பத்தான் வேண்டும். நான் சிறைக்குச் செல்கிறேன். ஆனால் சிறை உணவு எனக்கு ஒத்துக்கொள்ளுமா?”

காந்தியடிகள் கூறினார்: “சிறை உணவு ஒத்துக்கொள்ளவில்லையென்றால், பழங்களைச் சாப்பட்டு உயிர் வாழ வேண்டும்.

பா கேட்டார்: “சிறையில் அரசாங்கத்தார்எனக்குப் பழங்கள் கொடுப்பார்களா?”

காந்திஜி கூறினார்: தரவில்லையென்னால் உபவாசம் இருப்பது!”

இதைக்கேட்டு பா சிரித்துவிட்டு கூறினார்: “நலது நான் சாவதற்கு நல்ல வழி சொல்லுகிறீர்கள். நான் சிறைக்கு சென்றால் அங்கேயே மரித்துவிடுவேன் எனத் தோன்றுகிறது.”

காந்திஜி கலகலவென சிரித்துவிட்டு சொன்னார்: “ஆம். நீ சிறைக்குச் சென்று அங்கேயே இறந்துவிடுவாயானால, உலக நாயகியைப் பூஜிப்பது போன்று நான் உன்னை வணங்குவேன்”

பா திடமான குரலில் கூறினாள். “நல்லது, நான சிறை செல்லத் தயாராக இருக்கிறேன்.”

7. நாற்பது, நாற்பதாயிரம் ஆகும்

காந்திஜி போனிக்ஸ் ஆசிரமத்தில் வசித்து வந்த சமயம். தென்னாப்பிரிக்க அரசாங்கத்துடன் இறுதி போராட்டம் தொடங்க இருந்தது. அப்போது ஒருநாள் இரவு பிரார்த்தனைக்குப்பிறகு ருடைய நண்பர் ராவ்ஜி பாய் மணிபாய் படேல்கூறினார்: “பாபுஜி, நான் இன்று டர்பன் நகரில் நன்கு அலைந்தேன். ஆனால் சத்தியாக்கிரகத்தைப் பற்றி எவ்வித உற்சாகமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இதற்கு மாறாக, பெரும்பாலான மக்களிடம் இதைப் பற்றி அசிரத்தையே நிரம்பிக் கிடக்கிறது. பலர், “காந்தி வீணாகப் பிரச்னையைக் கிளப்பிவிட்டு கஷ்டத்தை வரவழைக்கிறார். சித்தாந்தம், மான அவமானம் ஆகியவற்றை விட்டுவிட்டு, நாம் செய்யும் தொழிலைத் தொடர்ந்து செய்ய அனுமதித்தாலே மிகவும் நல்லது. வெள்ளையர்களுடன் நாம் போரிட்டால், அவர்கள் நமக்கு மேலும் துன்பங்களையே கொடுப்பர். இப்போதுள்ள நிலைமையில் அமைதியாக வாழ்வதே நமக்கு நல்லதல்லவா? சற்று மீசையை தளர்த்திவிட்டுக் கொண்டு போய்விடுவோம். இங்கு நாம் பணம் சம்பாதிப்பதற்காக வந்திருக்கிறோம். அழிந்துபோவதற்காக அல்ல. ன்மானத்தைக் காக்க சிறை செல்லவா, நாம் இங்கு வந்தோம்?” என்று என்னிடம் கேட்கின்றனர. பாபுஜ, இப்படி எத்தனையோ பேர் என்னிடம் பேசினர். இதனால் மிகவும் துக்கமடைந்தேன். உண்மையாகப பார்த்தால், அரசாங்கத்தை எதிர்த்துப் போராத நம்மிடம் எவ்வளவு பலம் உள்ளது? நாம் ஒன்று சேர்ந்து போராட போராட நம்மிடம் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று நீங்கள் கணக்கிட்டிருக்கிறீர்கள்?”

காந்திஜி சிரித்துவிட்டு கூறினார். நான் தான் இரவு பகலாக்க்கணக்கு வைத்திருப்பவனாயிற்றே! நீங்கள் விரும்பினால் எண்ணிக்கொள்ளலாம். எல்லோரும் நமக்கு அறிமுகம் ஆனவர்கள் தாமே?”

ராவ்ஜபாய் எண்ணத் தொடங்கினார். எண்ணிக்கை நாற்பதுக்கு மேல் போகவில்லை. அவர் சொன்னார். “பாபுஜி இத்தகையவர்களை நாற்பது பேர் இருக்கிறார்கள்.”

கம்பீரமான குரலில் காந்திஜி கூறினார்: “சரி இந்த நாற்பது வீர்ர்களும் எப்படிப்பட்டர்கள்?”

ராவ்ஜி பாய் படேல் இக்கேள்விக்கு என்ன அர்த்தம் என்பதை அறிந்திருந்தார். அவர் கூறினார்: இந்த நாற்பது பேரும் கடைசிவரை போராடக் கூடியவர்கள். அவர்கள் வாழ்கின்ற போதும் வெற்றி பெறுவார்கள். இறந்தும் வெற்றி தேடுவார்கள்.”

இதைக்கேட்டு காந்திஜி கூறினார்: “போதும், இத்தகைய நாற்பது சத்தியாக்கிரக வீர்ர்களை – உயிரைத் திரணமாக எண்ணி கடைசிவரை போராடக் கூடிய நாற்பது சத்தியாக்கிரக வீர்ர்களை – போதும், நீங்களை வேண்டுமானால் பாருங்கள். இந்த நாற்பது வீர்ர்களே நாற்பதாயிரம் வீர்ர்கள் ஆவார்கள்.”

இவ்விதம் கூறிவிட்டு காந்திஜி மிகவும் உணர்ச்சி வசப்பட்டார். அவர் மெய் சிலிர்த்தது. அதே கம்பீரக் குரலில் அவர் மீண்டும் கூறினார். “இந்த நாற்பது பேர் இல்லாவிட்டாலும் கூட கோகலேவுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க நான் ஒருவனே போதும். எத்தனை வலிமை வாய்ந்த அரசாங்கமாயினும் சரி. கோகலேவுக்கு துரோகம் செய்தவர்களை எதிர்த்து நான் தன்னந்தனியாகவே போராடுஒஏன். கோகலேயிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தைப் பூர்த்தி செய்கின்றவரையில், நான் பைத்தியக்காரனாகி வெள்ளையர்களின் கதவுகளைத் தட்டிக்கொண்டேயிருப்பேன். கோகலேவுக்கு அவமானம் எப்படி ஏற்படக்கூடும்? அதை எப்படி நாம் சகித்துக்கொள்ள முடியும்?”

8. என் வீட்டில் இத்தகைய குழப்பத்தை அனுமதியேன்

காந்திஜி டர்பன் நகரில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அவருடைய குமாஸ்தாக்களும் அநேகமாக அவருடனேயே வசித்து வந்தனர். அவர்களி இந்துக்கள், கிறிஸ்தவர்கள், ஆகிய பல மத்த்தை சேர்ந்தவர்களும், குஜராத்தி, மதராஸி போன்ற பல மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். அவர்களைத் தம்முடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவே கருதி வந்தார்.

அவர் வசித்து வந்த வீடு மேற்கத்திய பழக்கவழக்கங்களையொட்டி அமைந்திருந்தது. அறைகளில் கழிவுநீர்ப் பாதை வைக்கப்பட்டிருந்தது. அவறைறை வேலைக்காரர்கள் எடுப்பதில்லை. இக்காரியத்தை வீட்டுத் தலைவரோ தலைவியோ தான் செய்து வந்தனர். வீட்டில் கலந்து உறவாடி வந்த குமாஸ்தாக்கள் தம் பாத்திரங்களை தான எடுத்தச் சுத்தம் செய்து வந்தனர்.

ஒரு முறை ஒரு கிறஸ்தவ குமாஸ்தாத அவருடைய வீட்டில் தங்குவதற்கு வ்ந்தார். அவருடைய பாத்திரத்தை வீட்டுத் தலைவரோ தலைவியோதான் எடுத்து சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் கஸ்தூரிபா இவருடைய பாத்திரத்தை எடுக்க மறுத்துவிட்டார். அந்த கமாஆதா ஹரிஜனக் குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய பாத்திரத்தை ‘பா’ எப்படி எடுப்பார்? காந்திஜி தாமே அதை எடுக்கலாம்; ஆனால் பா அதையும் விரும்பவில்லை. இது சம்பந்தமகா இருவருக்குமிடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. பா பாத்திரத்தை எடுத்துச் சென்றார். ஆனால் கோபத்தினாலும் வெறுப்பினாலும் அவருடைய கண்கள் சிவந்துவிட்டன. இம்மாதிரி வெறுப்புடன் காரியம் செய்வது காந்திஜிக்கு பிடிக்கவில்லை. பா மகிழ்ச்சியுடன் பாத்திரத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என அவர் விரும்பினார். ஆகவே அவர் உரத்த குரலில் “என் வீட்டில் இத்தகைய குழப்பத்தை நான் அனுமதிக்க முடியாது.” என்று கூறினார்.

இவ்வார்த்தைகள் பாவின் இதயத்தை ஈட்டி போல் துளைத்தன. அவர் அழுதுகொண்டே “அப்படியானால் உங்கள் வீட்டை நீங்கே வைத்துக்கொள்ளுங்கள். நான் போகிறேன்” என்றார்.

காந்திஜியும் மிகவும் கடுமையாகிவிட்டார். கோபம் மிகுந்தவரா அவர் பாவின் கைகளைப் பிடித்து வாயில் வரை இழுத்து சென்றார். அவர் பாவை வெளியே பிடித்துத் தள்ளவிருந்த சமயம் கண்ணீர் தாரைதாரையாகப் பெருக பா கூறினார். உங்களுக் வெட்களம் இல்லையென்றாலும் எனக்கு இருக்கிறது. சற்றே யோசியுங்கள், என்னை வெளியே அனுப்பினால் நான் எங்கே போவேன்? இங்கே என் தாய் தந்தையர் இல்லையே! இருந்தால் அங்கு செல்வேன். நானோ பெண். உங்களுடைய கொடுமைகளையெல்லாம் நான் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். மான அவமானத்தைப்பற்றிக் கொஞ்சம் யோசியுங்கள். கதவை மூடுங்கள். யாராவது பார்த்தால் இருவருக்குமே பெருத்த அவமானம்.”

இதைக்கேட்டு காந்திஜி மனத்திற்குள்ளேயே மிகவும் வெட்கமடைந்தார். அவர் கதவை தாளிட்டுவிட்டு யோசித்தார். “மனைவி என்னைப்பிரிந்து வேறு எங்கும் செல்ல முடியாதென்றால் நான் மட்டும் அவளைப்பிரிந்து எங்கே செல்ல முடியும்?”

9. உமக்கு நானே ஆங்கிலம் கற்பிப்பேன்

ஒருமுறை தென்னாப்பிரிக்காவில் ஒரு முஸ்லீம் சமையற்கார்ர் காந்திஜியிடம் வந்து கூறினார். “காந்தி பாய், எனக்கு மிக்க் குறைந்த வருமானமே கிடைக்கிறது. குழந்தை குட்டிக்காரன். இந்க் குறைந்த வருவாயைக் கொண்டு கொஞ்சம் ஆங்கிலம் தெரியுமானால் அதிக வருமானம் கிடைக்கும்.

காந்திஜி அப்போது பாரிஸ்டர்: அவர் சற்று நேரம் யோசித்து, மனதிற்குள்ளேயேந உறுதிப்படுத்திக் கொண்டு சொன்னார்: “நல்லது, நானே உமக்கு ஆங்கிலம் கற்பிக்கிறேன்”

சமையற்கார்ர் ஆச்சரியத்துடன் நோக்கினார். மேற்கத்திய முறையில் வரும் இந்த பாரிஸ்டரா எனக்கு ஆங்கிலம் கற்பிக்கப் போகிறார்? அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் அவருக்கு ஒரு பிரச்னை குறுக்கிட்டது. அதையும் காந்திஜியிடம் கூறினார்: “தாங்கள் எனக்குக் கற்பிப்பீர்கள், அது சரிதான். ஆனா வேலையை முடித்து விட்டு நான் இங்கே சீக்கிரம் எப்படி வரமுடியும்?”

காந்திஜி உடனே பதில் அளித்தார்: இதைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். நான் உம் வீட்டுக்கே வந்து பாடம் கற்பிக்கிறேன்.”

சமையற்கார்ரின் கண்கள் நன்றியுணர்வினால் பனித்தன.

பாரிஸ்டர் காந்தி ஒவ்வொருநாளும் கால்நடையாகவே நான்கு மைல் நடந்து சென்று அவருக்குப்பாடம் கற்பித்து விட்டுக் கால்நடையாகவே திரும்பி வருவது வழக்கம். இம்மாதிரி ஓரிரு நாட்களல்ல, எட்டு மாதங்கள் இவ்வாறு செய்து வந்தார்.

10. பிரதிக்ஞையை ‘வாபஸ்’ பெற முடியாது

ஒருமுறை கஸ்தூரிபா மிகுந்த நோய்வாய்ப்பட்டிருந்தார். நீர்ச்சிகிச்சையினால் அவருக்கு பலன் ஏற்படவில்லை. வேறு முறைகளும் பின்பற்றப்பட்டன. அவற்றாலும் பலன் கிட்டவில்லை. கடைசியில் காந்திஜி உப்பையும் பருப்பையும் விட்டுவிடுமாறு பாவுக்கு யோசனை கூறினார். ஆனால் பா இதற்குத் தயாராகவில்லை.

காந்திஜி எவ்வளவோ எடுத்துக்கூறினார். நூல்களிலிலுர்நுத பிரமாணங்கள் காட்டினார். ஆனால் யாஉம் வியர்த்தமாயின. பா சொன்னார்: “பருப்பையும் உப்பையும் விட்டுவிடுமாறு உங்களிடம் யாராவது கூறீனால் உங்களால் கூட அவற்றை விடமுடியாது.”

காந்திஜி உடனே மகிழ்ச்சியுடன் கூறினார்: நீ தவறாக் நினைத்துக் கொண்டிருக்கிறாய். எனக்கு ஏதாவது நோய் ஏற்பட்டு வத்தியர் எப்பொருளையாவது விட்டுவிட வேண்டுமென்று கூறினால், நான் உடனே அதை விட்டுவிடுவேன். நீ கூறினால், நான் இப்போதிலிருந்து ஒரு வருடத்திற்குப் பருப்பு உப்பு இரண்டையுமே விட்டுவிடுகிறேன். நீ விட்டாலும் விடாவிட்டாலம் சரி.”

இதைக்கேட்டு பாவுக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. அவர் கூறினார். உங்களுடைய சுபாவம் தெரிந்திருந்தும் என் வாயிலிருந்து இவ்வார்த்தைகள் வந்து விட்டன. இது என் துரதிர்ஷ்டம். நான் இப்போது பருப்பும் உப்பும் சாப்பிட மாட்டேன். தயவு செய்து தாங்கள் தங்கள் பிரதிக்ஞையை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள்.

காந்திஜி கூறினார்: நீ பருப்பையும் உப்பையும் விட்டுவிட்ட மிகவும் நல்லது. அதனால் உனக்கு நற்பயனே உண்டாகும். ஆனால் நான் எடுத்துக் கொண்ட பிரதிக்ஞையைத் திரும்ப பெற முடியாது. காரணம் எதுவாயினும், பிரதிக்ஞையை மேற்கொண்டு பின்பற்றுவதால் எனக்கு நன்மையே. எனவே, என்னைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம்.”

காந்திஜி தம்முடைய பிரதிக்ஞையில் மிகவும் உறுதியாகவே இருந்தார்.

11. தேச சேவையில் முதல் படி

காந்திஜி சபர்மதி ஆசிரம்ம் தொடங்கியிருந்த சமயம், ஒரு இளைஞர், அவரைப் பார்க்க வந்திருந்தார். அவருக்கு ஆங்கிலம் நன்கு தெரியும். நல்ல ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதிவெளியிடுவது சிறந்த தேச சேவை என்று அவர் நினைத்திருந்தார். அவர் காந்திஜியிடம் “என்னுடைய தகுதிக்கு ஏதாவது வேலையிருந்தால், சொல்லுங்கள்” என்று கேட்டார்.

காந்திஜி தம்மை ஆங்கிலத்தில் ஏதாவது கட்டுரைகள் எழுதச் சொல்லுவார் என்று அவர் நினைத்தார். ஆனால் விஷமோ வேறு விதமாக ஆகிவிட்டது. அச்சமயம் காந்திஜி கோதுமை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவர் கூறினார்: நல்லது இந்தக் கோதுமையை சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. தாங்கள் உதவி செய்யுங்களேன்!’

அந்த இளைஞர் வாயடைத்துப் போனார். அவருக்கு இது தகுந்ததாகப்படவில்லை. எனினும் எப்படி மறுப்பது? “அவசியம் செய்கிறேன்” என்று கூறினார்.

அவர் கோதுமையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். வெளியே அமைதியாகத் தோன்றினார். எனினும் உள்ளுக்குள் இங்கே வந்து மாட்டிக்கொண்டேமே என்று நினைத்தார். காந்திஜி எப்படிப்பட்டவர்! இவ்வளவு நன்றாக ஆங்கிலம் படித்தவரைப் போய் கோதுமை சுத்தம் செய்யத் சொல்கிறாரே! எப்படியோ நேரத்தைத் தள்ளினார். பிறகு, ‘அதிக நேரமாகிவிட்டது. இப்போது போக விரும்புகிறேன்’ என்று கூறி மெதுவாகப் புறப்பட்டார்.

காந்திஜி கேட்டார்: இவ்வளவு தானா பயந்துவிட்டீர்களா?”

அவர் சொன்னார்: பயப்படவில்லை. எனக்கு வீட்டில் அவசரமான வேலை இருக்கிறது.”

“என்ன வேலை?” என்று காந்திஜி கேட்டார்.

அந்த இளைஞர், ‘இரவு உணவுக்கு நேரம் ஆகும். ஆகையால் மாலையில் ஏதாவுத சிற்றுண்டி சாப்பிட வேண்டும் அதற்கான நேரமாகிறது” என்றார்.

காந்திஜி நகைத்துவிட்டு கூறினார்” இதற்காக வீட்டிற்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எங்களுடைய உணவும் தயாராகிவிடும். ஒருமுறை உங்களுடம்சேர்ந்து சாப்பிடும் வாய்ப்பை எங்களுக்கு கொடுங்களேன். எங்களுடைய உப்பு ரொட்டி உங்களுக்குப்பிரியமாக இருக்குமில்லையா? நான் வேலையில் ஈடுபட்டிருந்ததால் உங்களிடம் பேச முடியவில்லை. மன்னியுங்கள், சாப்பிடும் சமயம் பேசிக்கொண்டே சாப்பிடலாம்.”

அந்த இளைஞர் என்ன செய்வார்? தங்க வேண்டி இருந்தது சற்று நேரத்தல் சாப்பாடு தயாராயிற்கு உணவு மிகவும் எளிமையாக இருந்தது. எண்ணெய் விடாத ரொட்டி,சோறு, பருப்புத்தண்ணீர்! நெய், ஊறுகாய், மிளகாய், மசாலை எதுவுமிலைல. பாபு இளைஞரைத் தம்மருகே அமர வைத்துக்கொண்டார். மிகுந்த அன்புடன் உபசரித்தார். உணவு பரிமாறியதுமே பேச்சும் தொடங்கிவிட்டது ஆனால், பாவம், அந்த இளைஞருக்குத்தான் நிலைமை தர்மசங்கடமாக இருந்தது. அவர் இனிப்புத் திண்பண்டங்கள் சாப்பிட நினைத்திருந்தார். ஆனால் இங்கோ காய்ந்த ரொட்டிகள் இருந்தன. ஒரு துண்டைப் பிய்த்து வாய்க்குள் போடுவார். ஒரு மடக்கு தண்ணீர் குடிப்பார். அப்படியும் அவரால் ஒரு ரொட்டிக் கூடச் சாப்பிடமுடியவில்லை.

இத்தனைக்குப் பிறகாவது விடுதலை கிடைத்திருந்தால் நன்றாக இருக்கும். அங்கோ, அவரவர் பாத்திரங்களை அவரவரே தேய்த்துக் கழுவ வேண்டுமென்பது நியதி. எப்படியோ அந்த்க் காரியத்தையும் செய்து முடித்தார். அவருக்கு அந்த இடத்தை விட்டு எப்படியாவது ஓடிவிட வேண்டுமெனத் தோன்றியது. புறப்படும் சமயம் காந்திஜி அவரிடம் கூறினார். “தாங்கள் தேச சேவை செய்ய விரும்பிகின்றீர்கள். இது மிகவும் நல்லதே. உங்களுடைய அறிவு அனுபவம் ஆகியவை நன்கு பயன்படும். ஆனால், இதற்கு உடல் நோய் நொடியற்று , பலமாக இருக்கவேண்டும். நீங்கள் இதற்காக இப்போதிருந்தே தயாராகுங்கள். இதுவே உங்களின் தேச சேவையில் முதல் படியாக அமையும்.”.

12. நான் உன்னிடம் பயப்ப்டுகிறேன்

சப