கல்வி வள்ளல் காமராஜர்
1. தலைவராக உயர்ந்த தொண்டர்
சூழ்நிலை வலிமை மிக்கது, பல சமுதாயங்களில், எப்போதோ ஒருமுறை, யாரோ சிலருக்கு மட்டும் வளரத் துணை செய்வது, சூழ்நிலை.
உயர வேண்டிய கோடிக்கணக்கான மனிதர்களை மட்டந்தட்டி, அழுத்தி வைத்து,பாழாக்குவதே பெரும்பாலும் சூழ்நிலையின் திருவிளையாடல்.
கொடுமையான சூழ்நிலையைத் தகர்த்து எறிந்து விட்டு, முன்னேறி, நாலுபேருக்கு உதவும் வளத்தோடு வாழ்வாரே, பாராட்டுக்குரியோர், சூழ்நிலையை வென்று வெற்றி வாகை சூடியவர், தமக்கென்று ஏதும் முயலாமல், பிறர்க்காகவே உழைத்தால், அது போற்றதற்குரியது. நாட்டின் அடிமைத்தளையை அறுக்கவும், அது போற்றுதற்குரியது. நாட்டின் அடிமைத்தளையை அறுக்கவும், நலிவற்ற மக்களெல்லாம் வலிவுற்று வாழவும் அறுபது ஆண்டு காலம் ஒருவர் உழைத்தார் என்றால், அவர் வணக்கத்திற்குரியவராவார்.
குலப் பெருமையோ இல்லை. செல்வப் பெருக்கும் இல்லை. பிறந்து வளர்ந்த ஊரும் பெரு நகரமல்ல.
அன்று அது விருதுப்பட்டி.
சின்னச்சிறு ஊரிலே, சாதாரணக் குடும்பத்திலே பிறந்து, ஆறு வயதில் தந்தையை இழந்து ஆறாண்டுப் படிப்போடு நிறுத்திவிட்டு, கடையில் வேலைக்குச் சேர்ந்த இந்தப் பிள்ளை, எப்படிப் பிழைக்கப்போகிறது என்று ஊர்க்கார்ர்கள் பலரும் பரிதாப்ப்பட்டிருப்பார்கள். தாயைக் காப்பாற்றும் பொறுப்பைச் சிறுவயதிலேயே தாங்கவேண்டிய நிலையில் இருந்த காமராசரோ, அதை மறந்து, தாய் நாட்டைக் காப்பாற்றும் நிலைக்கு உயர்ந்தார்.
காமராசர் வாலிபத்தை அடையாத வயதில், இந்திய விடுதலை இயக்கத்தில் எளிய தொண்டராகச்சேர்ந்தார். பிற தொண்டர்களுக்கு எடுத்துக்காட்டாக வளங்கினார். பம்பரம் போன்று சுழன்று சுழன்று காந்தியத்தைப் பரப்பினார். பகலென்றும் இரவென்றும் பாராமல், காடென்றும் மேடென்றும் கருதாமல், பட்டி தொட்டிக் களுக்கெல்லாம் சென்று, மிரட்டிய அந்நிய ஆட்சியை, இணையிலாத் துணிவோடு எதிர்த்து நின்றார்.
‘பேரன்பு கொண்டாரில் யாவரே பெரும் துயரம் பிழைத்து நின்றார்?’ பாரதத் தாயிடம் பேரன்பு கொண்டு கர்மவீர்ர்காமராசர் இதற்கு விலக்கல்லவே! இந்திய விடுதலை இயக்கத்திற்குத் தம்மை முழுக்க முழுக்க ஒப்படைத்துவிட்ட காமராசர், பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு, இடர்மிகு சிறைப்பட்டார். ஒருமுறையா? இல்லை. இருமறையா? அதற்குமேலும் எத்தனைமுறை? ஒன்பது முறை. சிறைப்றவைகாமராசர், வெஞ்சிறையில் வாடியது எத்தனை நாள்கள்? மூவாயிரம் நாள்கள் சிறையில் வாடினார். ஆயினும், தம்மைப்பற்றிய சிந்தனையே இல்லாது, இன்னா செய்யாமை என்னும் காந்தியத்தில் மெய்ப்பற்றுக் கொண்டவராய் விளங்கிய காமராசரிடம் சிறைக் கொடுமை கசப்பை ஊட்டவில்லை. மாறாக, உறுதியை ஊட்டிற்று. தம்மிலும் வறியவர்களை, தம்மளவுகூடப் படிக்காதவர்களைப் பற்றிச்சிந்தித்துச் சிந்தித்து, புடம் போட்ட ஏழைப்பங்காளராய் உருவானார்.
போராட்டத் தழும்புகள் காமராசரிடம் கசப்பினைச் சுரக்கவைக்கவில்லை. தமக்கென எம் முயற்சியிலும் ஈடுபடாத, தியாகச் செம்மலாம் காமராசர் தம் மழுச்சிந்தனையையும் ‘கடையனும் கடைத்தேற வேண்டும்’ என்பதில் பாய்ச்சி விட்டார்.
அப்பழுக்கில்லாத, சாதிச்சேற்றிலே சிக்கிக்கொள்ளாத பொதுத்தொண்டு, எளிமையான பண்பு ஆகியவை காலப்போக்கில் காமராசரைத் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக்கிற்று. ‘மாநில காங்கிரஸ் தலைவர்களுள்ளே, காமராசருக்கு இணை காராசரே’ என்னும் புகழோடு பல்லாடு பணி புரிந்தார்.
அந்நிலையில் ஒரு நெருக்கடி உருவாயிற்று. அது என்ன?
1952 ஆம் ஆண்டு, இந்தியாவில்பொதுத்தேர்தல் நடந்தது. அப்போதைய சென்னை மாகாணத்தில், காங்கிரசு கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கத் தவறி விட்டது. பொது உடைமைக் கட்சியை உள்ளடக்கி அய்க்கிய முன்னணி பெரும்பான்மை பெற்றது. இருந்தாலும், அரசியலும் சதுரங்கத்தினால் காங்கிரசு அமைச்சரவை அமைக்கப்பட்டது. அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த் சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியாரை அழைத்து, முதல் அமைச்சராக்க தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் காமராசர் துணை நின்றார்.
‘அரசர் மெச்சினால் அரம்பை’ என்பது பழமொழி. முதல் அமைச்சர் நினைத்தது ஆணை என்பது புதுமொழி. இது மக்களாட்சியில் குழந்தை நிலையின் அடையாளம் ஆகும். முதல் அமைச்சர் இராசகோபாலாச் சாரியார், பொதுமக்களிடமிருந்து போட்டி வளர்வதைக்கண்டு கவலைப்படமாட்டார். எல்லோரும் படித்துவிட்டால் எல்லோருக்கும் எப்படி வேலை கொடுப்பது என்று ஏங்கினர். ஞானோதயம் ஆயிற்று.
சிறுவர் சிறுமியர் முழுநேரம் படிப்பதற்குப் பதில், அரைவேளை படித்தல், அரைவேளை குலத்தொழில் கற்றல் என்று செய்துவிட்டால், போடி குறைந்துவிடும் என்று நினைத்தார்.
நகரங்களில் அந்தகையமுறையைக்கொண்டு வந்தால், எதிர்ப்பும் கிளர்ச்சியும் வெடிக்குமென்பது ஆச்சாரியாருக்குத் தெரியும். நாட்டுப்புறங்களில் செயல்படுத்தினால், மக்கள் பொறுத்துக்கொள்வார்கள் என்று அவருக்குத் தோன்றியது. எனவே, குலக்கல்வித் திட்டத்தை நாட்டுப்புறப் பள்ளிகளில் நடைமுறைப்டுத்தும்படி, அப்போதைய பொதுக் கல்வி இயக்குநர் திரு. கோவிந்தராசுலுவிடம் கூறினார்.
‘அவரவர் குலத்தொழிலைக் கற்பதை முன்னிறுத்தி, அரைவேளை படிப்புமுறையைக் கொண்டு வரும்படி முதல் அமைச்சர் அதுவும் ஆச்சாரியார் போன்றவர். சொன்னதை எதிர்த்து சொல்லமுடியுமா?
அப்போது நான் தொடக்கக் கல்விக்குத் துணை இயக்குநன்.
‘குலக்கல்விமுறை தேவையற்றது; தீங்கானது; நகரமக்களுக்கும் நாட்டுப்புற மக்களுக்கும் வேறுபாடு காட்டுவது; ஏற்கனவே குலத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெரியவர்களில் பெரும்பாலோருக்கு, ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கப்பதில்லை; அந்நிலையில் குலத்தொழிலுக்குப் போவோர் எண்ணிக்கை பெருகுவது, உள்ளவர்கள் வயிற்றில் மண் போடுவதாகும். ‘இது நான் இயக்குநருக்குத் தந்த குறிப்பின் சாரம்.
இயக்குநர் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், பல திங்களை ஓட்டினார்.
பின்னர் ஒரு நாள் மாலை,
‘அரைவேளைப்படிப்பு முறையை நடைமுறைப் படுத்த, நீங்கள் தயங்குவதாகத் தெரிகிறது. அப்படியானால், நான்பொது வாழ்க்கைப்பிரமுகர் ஒருவரைத் தனி அலுவலராகப்போட்டு, அப்பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கட்டுமா? உங்கள் நிருவாகத்தில்தலையிடாது, அவர் செயல்படும்படி, ஆணை பிறப்பிக்கட்டுமா?’ என்று இயக்குநர் கோவிந்தராசுலுவிடம் முதல் அமைச்சர் ஆச்சாரியார் நேரில் கேட்டார்.
இயக்குநர், ‘அரசு, அரைவேளைப் படிப்புத்தான் கொடுப்பதென்று முடிவு செய்துவிட்டால், அதை நிறைவேற்றுவது இயக்குநர் கடமை. அப்படியிருக்க, அதற்குத் தனி அலுவலர் தேவையில்லை. தாங்கள் ஆணையிட்டால், நாட்டுப்புறத் தொடக்கப் பள்ளிகளில், அரைவேளையே பாடஞ் சொல்லிக் கொடுக்கும்படி ஆணையிட்டுவிடுகிறேன்’ என்றார்.
‘உடனே சுற்ற்றிக்கை வழியாக அரைவேளை படிப்புத் திட்டத்தை ஆணையிட்டுவிடுங்கள்; அப்புறம் அரசுக்குத் தெரிவியுங்கள்., அரசின் முன் ஒப்புதலுக்கு அனுப்பினால், அக்கோப்பு இங்கும் அங்கும் போய்க் கொண்டிருக்கும்; முடிவு எடுக்க, நாளாகும்’ என்று முதல் அமைச்சர் ஆச்சாரியார் கூறினார்.
இயக்குநர் மாலை அய்ந்தரை மணிக்குமேல் உட்கார்ந்து, புதியகல்வி முறையை ஆணையிடும் சுற்ற்றிக்கையை ஆயத்தம் செய்தார். இரவோடு இராகப் படிகள் எடுத்து, கல்வித்துறை அலுவலர்கள், ஆய்வாளர்கள் ஆகியோருக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். அதற்கு முன்?
ஆச்சாரியார் ஆலோசனைப்படி, நாளிதழ்களின் ஆசியரோடு இயக்குநர் தொடர்பு கொண்டார். கல்வி பற்றிய முக்கியமான சற்ற்றிக்கைக்கு இடம் வைத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார். இரவு பத்து மணிபோல், சுற்ற்றிக்கை நாளிதழ்களுக்கு கிடைத்தது. அடுத்த நாள் காலைச் செய்தித்தாள்களில் புதிய கல்வி முறையைப் பற்றிய செய்தி வெளியானது.
அவ்வேளை, காமராசர், விருதுநகரில் தங்கியிருந்தார். அன்று மாலை, அங்கு அவர் காங்கிரசுப் பொதுக் கூட்டத்தில் இந்தக் குலக்கல்வித் திட்டத்தைப் ‘பைத்தியக் காரத் திட்டம்’ என்று தம் கருத்தை வெளியிட்டார்.
மேலும், ‘அதை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்’ எனச் சூளுரைத்தார்.
சுற்ற்றிக்கை வெளிவந்ததும், காமராசரைப் போலவே, தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் ஒருவரை ஒருவர் கலக்காமல், தனித்தனியாக எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிட்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. கல்வி அறிஞர்கள் எதிர்த்தார்கள்; ஆசிரியர் சமுதாயம் எதிர்த்தது; காமராசரின் கருத்து தெரிந்ததும் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்னின்று, குலக் கல்வித் திட்டத்தை எதிர்க்கும் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கினார்கள். மிகப் பெரும்பான்மையோர் கையெழுத்திட்டார்கள்.
மிகப் பெரும்பான்மை உறுப்பினர்கள் விரும்பாத கல்வித்திட்டத்தை எப்படியும் வெற்றி பெறச் செய்ய முதல் அமைச்சர் ஆச்சாரியார் முயன்றார்.
இந்த புதிய கல்விமுறைத் திட்டம் கல்வி இயக்குநரின் செயலே என்று காமராசர் முதலில் நினைத்திருந்தார்; ஆனால், சென்னைக்குத் திரும்பியதும் இத்திட்டம் இயக்குநருடையது அல்ல, முதல் அமைச்சருடையது என்பது அவருக்குத் தெரியவந்தது.
திராவிடக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், பொது உடைமைக் கட்சியும் எதிர்ப்புக் குரல் எழுப்பிவிட்ட நிலையில், காமராசர் பொறுப்பு சங்கடமானதாயிற்று.
“குலக் கல்வித் திட்டத்தையும் எடுத்துவிட வேண்டும். அதைச் செய்யும்போது ஆச்சாரியாரின் பெருமைக்கும் இழுக்கு வரக்கூடாது’ என்று காமராசர் கருதினார். புதிய வழி ஒன்று அவருக்குத் தோன்றியது.
ஆட்சியின் மேல் நம்பிக்கையில்லை என்று எதிர் கட்சியினர் தீர்மானம் கொண்டு வருவதே நாடாளுமன்ற மரபு. அதற்கு மாறாக, இராசகோபாலாச்சாரியார் அமைச்சரவையின்மேல் நம்பிக்கை இருப்பதாக்க் கூறும் தீர்மானமொன்றைக் கொண்டுவரச்செய்து நிறைவேற்றிவிட்டால், இராசாசியின் பெருமை கெடாது என்று எண்ணினார். அத்தகைய தீர்மானத்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்தார். பெரும்பான்மையில்லாத போதும் அமைச்சரவை எவருடைய உள் உதவியால், நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேறியது.
இதற்கிடையில், தமிழ்நாடு காங்கிரசின் தலைவர் என்ற முறையில், காமராசர், முதல் அமைச்சரைக் கண்டு, பெரும்பான்மையோர் புதிய கல்வித் திட்டத்தை எதிர்ப்பதைத் தெளிவுபடுத்தினார். அவர்கள் சொன்ன கருத்தை மதித்து, ஆண்டின் இறுதியில், அத்திட்டத்தைக் கைவிடும் படி ஆலோசனை கூறினார்.
காங்கிரசுக்கும், முதல் அமைச்சருக்கும் இழுக்கு வராதபடி, தீங்கான திட்டத்தை போக்க முயன்றார், காமராசர்.
புதிய திட்டம் நடைமுறைக்கு வந்து சில திங்கள் கழித்த பின், சென்னை சட்ட மன்றத்தில், அரசு சார்பில்,
‘அரை வேளைப்படிப்பு முறையால், படிப்போர் எண்ணிக்கை பெருகும் என்று எதிர்ப்பார்க்கப்ட்டது. நடைமுறையில் அதற்கு மாறான நிலை உருவாகியுள்ளது. படிப்போர் எண்ணிக்கை குறைந்துவிட்டது’ என்று அறிவிக்கப்பட்டது.
அப்படி அறிவித்த பிறகு, முதல் அமைச்சர் செயல்முறையை மாற்றி விடுவார் என்று சட்ட மன்ற உறுப்பினர்கள் எதிர்பார்த்தார்கள்: நம்பிக்கையோடு இருந்தார்கள்.
தனி மனிதர்களின் தேவையற்ற பிடிவாதம் வரலாற்றைத் திசை திருப்பிவிடுவதுண்டு. அக்காலத்தில், சட்டமன்ற காங்கிரசுக் கட்சி, ஆண்டுக்கொருமுறை தலைவரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். அப்படித் தேர்ந்தெடுக்கப்படுபவரே முதல் அமைச்சராவார்.
1954ஆம் ஆண்டு தேர்வு நெருங்குகையில் காமராசர் இராசாசியை அணுகினார். தொடர்ந்து தலைவராகவும் முதல் அமைச்சராகவும் இருக்க வேண்டினார்.
அரம் போன்ற கூர்ந்த மதியுடைய ஆச்சாரியார் என்ன செய்தார்? ‘நானா நீங்களா?’ என்ற போக்கினைத் தேவையின்றி மேற்கொண்டார்.
‘நான் முதல் அமைச்சராக இருக்க விரும்பினால், அரைவேளைப் படிப்பு மறையை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தார்.
‘குலக்கல்வி முறை’ காங்கிரசின் கொள்கையில் இருந்த முளைத்ததல்ல; அதன் திட்டமல்ல; மேலும் பொதுமக்களால் பெரிதும் வெறுக்கப்பட்டது. நாட்டுப் புற மக்களை இரண்டாந்தர மக்களாக அழுத்தி வைத்திருக்கவே பயன்படுமென்பதும் புலனாயிற்று. இவ்வளவிற்குப் பிறகும் அதைத் தொடர்ந்து நடைமுறைப் படுத்த முயன்றிருந்தால், காங்கிரசு ஆட்சி, தொடரும் வாய்ப்பை அப்போதே இழந்திருக்கும்.
இதை உணர்ந்த சட்டமன்றக் காங்கிரசு கட்சி வேறு தலைவரைத் தேடும் நிலைக்குத் தள்ளப்ட்டது. ஆச்சாரியார், தம் சார்பில், திரு.சி. சுப்பிரமணியத்தைத்தலைவர் பதவிக்கு நிறுத்திவைக்க முடிவு செய்தார்.
குலக்கல்வி எதிர்ப்பாளர்கள், திரு. சி. சுப்பிரமணியத்தை வெல்லக்கூடிய ஒருவரைத் தேட நேர்ந்தது. அப்போது டாக்டர் சுப்பராயனை நினைத்தார்கள். அணுகினார்கள். அவர் போட்டியிட மறுத்துவிட்டார். பிறகு வேறு பெயர்கள் வந்தன. அவரவருக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கும் என்று கணக்குப் போட்டப் பார்த்தார்கள்.
காமராசர் முன்வந்து, முதல் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் மட்டுமே ஆச்சாரியார் ஆதரித்த சி.சுப்பிரமணியத்தை வெல்ல முடியுமென்று தெரிந்தது. அவரை வெல்ல முடியாவிட்டால் குலக்கல்வித் திட்டம் தொடரும் கேடு முன்னின்றது.
மக்களுக்குக் கேடான கல்விமுறை ஒழிய வேண்டுமானால், அதை ஒழிக்க ஒப்பும் முதல் அனைச்சர் தேவை. வேறு வழியின்றிக் காமராசர் சட்டமன்றக் காங்கிரசு கட்சியின் தலைமைப்பதவிக்குப் போட்டியிட்டார்.வென்றார். சென்னை மாநிலத்தின் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அது, தமிழ்நாட்டின் பொற்காலத் தொடக்கம். அதை அவரது ஆட்சி நடவடிக்கைகள் காட்டின.
காமராசரின் பெருந்தன்மைக்கும் நல்ல அரசியல் அணுகுமுறைக்கும் எடுத்துக்காட்டான ஒரு நிகழ்ச்சி அவர் தலைவராய் அறிவிக்கப்பட்டதும் நடந்தது. அது என்ன?
காங்கிரசு சட்டமன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டதும் தம்மை எதிர்த்துப் போட்டியிட சி. சுப்பிரமணியத்தைப் பழையபடி கல்வி அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் தமது அமைச்சரவையில் சேரும்படியும் அரைவேளைப் படிப்பை பழைபடி முழு நாள் படிப்பாக மாற்றிவிடும் படியும் பகிரங்கமாக்க் கேட்டுக் கொண்டார். திரு. சி. சுப்பிரமணியமும் தயக்கமின்றி இசைவு தந்தார்.
‘பொது வாழ்க்கை’ என்பது, அவரவர் விருப்பு வெறுப்புகளை, முனைப்பபுகளை நிறைவேற்றிக் கொள்ள வய்ப்பாக அமைவதல்ல. எனவே, தம்மைப் பின்னே தள்ளிவிட்டுப் பதுன்மையைக்கருதி மக்களின் முடிஉக்குதக் கட்டுப்படுவதே முதிர்ந்த அரிசியல் வாதிக்கு அடையாளம்ந இதற்குச்சிறந்த எட்துக்காட்டாய் ஒளி விட்ட சி.சுப்பிரமணியம் காமராசரின் வலக்கரமாய் இயங்கினார்.
அது மட்டுமா? சி. சுப்பிரமணியத்தை தலைவர் பதவிக்கு முன்மொழிந்த மீ. பக்தவத்சலத்திடமும் காமராசர் பகை கொள்ளாது, அவரையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார்.
‘முதல் அமைச்சர்களுள்ளே ஈடு இணையற்றவர் காமராசர்’ என்னும் புகழை பெற்றார்.
‘உயிரோடு இருப்பவர்களின் சிலையைத் திறந்து வைப்பது சரியல்ல என்பது என் ஆழ்ந்த கருத்து. இருப்பினும், காமராசரைப் போன்ற பெருஞ்சாதனையாளரைப் பொறுத்தமட்டில், விதிவிலக்கே சரியென்று எனக்குத் தோன்றிற்று. எனவே, காமராசரின் சிலையைத் திறந்து வைக்கிறேன்’ என்று பிரதமர் நேரு போற்றுமளவிற்குச் சிறந்த சாதனையாளராய் வளங்கிறார் காமராசர்.
ஒன்பதரை ஆண்டுகள் முதல் அமைச்சராகச்சிறந்து விளங்கிய காமராசர், அப்பதவியைத் தாமரை இலைத் தண்ணீரைப் போல் உதறிவிட்டார். நேரு மன்றைந்தபோது, லால்பகதூர் சாஸ்திரியை எளிதாகப் பிரதமராக்கி அவர் மறைந்தபோது, திருமதி இந்திரா காந்தியையும் எளிதாகப் பிரதமராக்கி, வெற்றி கொண்டார். இந்திய காங்கிரசு தலைவர்களுள்ளே, சிறந்த இராஜதந்திரி காமராசர் என்று பாரதம் முழுவதும் பாராட்டும் புகழ்நிலைக்கு உயர்ந்த முதல் தமிழர் காமராசரே ஆவார்.
தமிழ்நாட்டின் இரட்சகர், கல்வி வள்ளல் என்று தந்தை பெரியாரால் பாராட்டப் பட்ட பெருந்தலைவர் காமராசர், மக்களாட்சியின் மாண்பிற்குச் சிற்ந்த எடுத்துக் காட்டாக விளங்கினார்.
இதை விதியின் கொடை என்று ஒதுக்கிவிட்டால் ஏமாந்து போவோம். வினையின் தூய வினையின், நீண்ட வினையின், காசும் கையில் ஒட்டாத அளவு துறவு மனப்போக்கோடு ஆற்றிய பொதுத் தொண்டின்-நாட்டுத் தொண்டின், நற்கனிகளே, காமராசிரின் உயர்வம் புகழும்.
தலைசிறந்த நிருவாகியாகவும் உண்மையான சமத்துவவாதியாகவும் தொண்டருக்குத் தொண்டராகவும் தலைவர்களுக்குத் தலைவராகவும் ஒளிவிட்ட அப்பெருமகனாரின்கீ பொதுக் கல்வி இயக்குநராக நான் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது என் நற்பேறு. அரிடம் இருந்த நற்குணங்களையும் நற்பண்புகளையும், யான் அறிந்த மட்டில் தெரிவிப்பது இளைய தலைமுறைகளுக்கு வழிகாட்டும், நம்பிக்கையூட்டும், கறைபடாத தொண்டாற்றத் தூண்டும்.
2. முதல் சந்திப்பு
வயதோ, பதினேழு, நிலையோ கட்டிளங்காளை. மங்கையர் மேல் மனம்பாயும் பருவம்.
ஆறுவயதில் தந்தையை இழந்த இளைஞர். எனவே தாயைக்காப்பாற்ற வேண்டிய பொறுப்பு. நெருக்கடியான கட்டம்.
இந்நெருக்கடியில் தாயை மறந்து, கன்னியரைக்கருதாமல், இந்தியாவை ஆங்கில ஆட்சியிலிருந்து விடுவிக்க முனைகிறார் அந்த இளைஞர். காந்திய இயக்கத்தில் குதிக்கிறார். அவ்விளைஞர் யார்? காமராசர்.
காமராசரின் நாட்டுப்பற்றும் ஆற்றல்மிகு தொண்டும் பலருடைய கவனத்தை ஈர்த்தது. போராட்டங்கள் அவரை ஈர்த்தன. கள்ளுக்கடை மறியல், தீண்டானை ஒழிப்பு, கொடிப்போராட்டம், ஒத்துழையாமை இயக்கம் ஆகியவை அவரை முன்னிணியில் நிறுத்தின. சிறைக் கதவுகளும் திறந்தன. முன் கூறியுள்ளதுபோல் மொத்தத்தில் மூவாயிரம் நாட்கள் சிறையில் வாடினார் கர்மவீர்ர்.
காமராசருக்கு எதையும் தாங்கும் இதயம் இயற்கையாகவே அமைந்திருந்தது. எனவே, சிறை வாழ்க்கை வருக்குக் கசப்பை ஊட்டவில்லை. மாறாகப் பொது அறிவை வளர்த்தது. முன்னிலும் அதிக உலக அறிவு பெற்றவராகச் சிறையிலிருந்து வெளிவந்தார். மேலும் சிறந்த அமைப்பாளராக, தொண்டாற்றுபவராகப் பணிபுரிந்தார். அப்பழுக்கில்லாத நாட்டுத்தொண்டு, சூதறியா நல உள்ளம், காமராசரைத் தமிழ்நாட்டு காங்கிரசின் தலைவர் ஆக்கின.
பல்லாண்டு தன்னேரில்லாத தலைவராகப் பவனி வந்தார்; தறுக்கில்லாத தலைவராகப் பவனி வந்தார். அவர் கால் படாத ஊர் இல்லை. அவர் புகழ் பாடாத இடம் இல்லை. அப்படிப்பட்ட பெரியவரோடு அப்போது எனக்கு அறிமுகம் இல்லை.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அய்ம்பத்து நான்காம் ஆண்டின் தொடக்கம். வழக்கம்போல், என் வீட்டிற்கு நாலாவது வீட்டிலிருந்த குதூசி குருசாமியைக்காணச் சென்றேன். வீட்டு வாயிலில் பெரிய கார் நின்றது. முன் தாழ்வாரத்தில் என் மாமனார் திரு. சுப்பிரமணியம் உட்கார்ந்திருந்தார்.
“நீங்கள் மேலே போகலாம். காமராசர் பேசிக்கொண்டிருக்கிறார். இரகசியம் இல்லை. சும்மா போங்க’ என்றார்.
நான் திரும்பிப் போய்விட்டேன். அடுத்தடுத்து நான்கைந்து முறை இப்படி நிகழ்ந்தது. பிழைக்கத் தெரிந்தவனாயிருப்பின், அவ்வாய்ப்புகளை முதலாக்கியிருப்பேன். அதில் தவறிவிட்டேன்.
விடுதலைவீரர், சிறைப்பறவை, ஏழைபங்காளர், கர்மவீர்ர் காங்கிரசு தலைவர், மாண்புமிகு கு. காமராசர், ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அய்ம்பத்து நான்காம் ஆண்டு ஏப்ரல் திங்கள் பதின்மூன்றாம் நாள், சென்னை மாநில முதலமைச்சரானபோது, தமிழக வரலாற்றில் ஒரு பொற்காலம் தொடங்கிற்று.
தலைவர், முதல் அமைச்சராகிச் சில வாரங்களே ஆயின. அப்போது ஒருநாள், அனைறைய பொதுக் கல்வி இயக்குநாராய் இருந்த திரு கோவிந்த ராசுலு நாயுடு, துணை இயக்குநாராக இருந்த என்னை அழைத்தார்.
“முதலமைச்சர் காமராசரோடு அறிமுகம் உண்டா ? ” என்று என்னைக் கேட்டார். அறிமுகமாகும் பேறு கிட்டவில்லை என்றேன்.
“சரி! வண்ணாரப்பேட்டையில் விருதுநகர் நாடார் உறவின் முறையின் சார்பில், உயர்நிலைப் பள்ளியொன்று தொடங்க மனுப் போட்டிருக்கிறார்களாம். அதைப்பற்றி முதல் அமைச்சர் பேச விரும்பினார் அது பற்றிய அஞ்சல்கோப்போடு, நானே நேரில் சென்று பேச நேரம் கேட்டேன்.
‘விஷயம் சிறியது. இயக்குநர் வரத் தேவையில்லை. அதைப் பார்க்கும் துணை இயக்குநரை அனுப்பி வையுங்கள் போதும். என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதைப்பற்றிய உங்கள் கருத்தை அவரிடம் சொல்லியனுப்புங்கள்’ என்று சொல்லுகிறார். ஏன் அப்படிச் சொல்லுகிறார் என்று விளங்கவில்லை. முதலமைச்சரைக் காண நீங்கள் சென்றாக வேண்டும். ஆனால் ஒன்று:
“என்னிடம் பேசுவதுபோல், உள்ளதை உள்ளபடி, பளிச்சென்று பேசிவிடாதீர்கள். முதலமைச்சர் விரும்புகிறபடி, ஆணையிட இயக்குநர் சித்தமாயிருக்கிறார் என்று எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுங்கள். நமக்கென்ன போச்சு. காமராசர் விரும்புவதுபோல் ஆணை இட்டுவிடுவோம்” என்று இயக்குநர் அறிவுரை கூறி அனுப்பியிருந்தார்.
குறித்த வேளையில், கோட்டையில், முதலமைச்சர் மாண்புமிகு காமராசரைக் கண்டேன். முதலமைச்சர் எவரையும் நான் அதற்கு முன் பேட்டி காணும் வாய்ப்புப் பெற்றதில்லை. மிகந்த அச்சத்தோடு நுழைந்தேன். நெஞ்சு படபடத்தது. நொடியில் அனுமதி அருளினார் காமராசர்: சிரித்தப்படியே உட்காரச் சொன்னார் உட்கார்ந்தேன். நான் பேச வாயெடுப்பதற்குமுன் முதல்வர் பேசினார்.
“தனியார் துறையில், உயர்நிலைப்பளியொன்று தொடங்க வேண்டும். என்னென்ன செய்தால், அனுமதி கிடைக்கும்?” இது முதல்வர் கேள்வி.
நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளை வரிசையாக் கூறினேன்.
பொறுமையாக்க கேட்டுவிட்டு, “வண்ணாரப்பேட்டையார்கள் இப்போது எத்தனை நிபந்தனைகளை நிறைவேற்றுவார்கள்?” என்று முதல்வர் கேட்டார்.
“உயர்நிலைப் பள்ளிக்கூடத்திற்குப் பொருத்தமான புதுக் கட்டடம் தேவை; அதைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டார்கள். இப்போதைக்கு பெரிய மாடி வீடொன்றை வாடகைக்குப் பிடித்துள்ளார்கள். அதில் தொடங்கப் போகிறார்களாம். அடுத்த ஆண்டிற்குள் தனியாகக் கட்டடம் கட்டிவிடுவார்கள். அதை நம்பலாம்” என்ற பதில் கூறினேன்.
இப்படிப்பட்ட நிலையில், சாதாரணமாக என்ன செய்வீர்கள்” என்று அவர் வினவினார். “முதல் மூன்று படிவங்களுக்குமட்டுமே அனுமதி கொடுப்போம். ஏற்ற கட்டடம் அமைத்த பிறகு நான்கு, அய்ந்து, ஆறு படிவங்களை, அடுத்தடுத்துக் கொடுப்போம்” என்றேன்.
“சரிதான். பள்ளிக்கூட அனுமதியில்லாவிட்டால், பொதுப்பணத்த எடுத்துக் கட்டடம் கட்ட முடியாது. எடுத்த எடுப்பிலேயே, மேல் வகுப்பையும் கொடுத்துவிட்டால், அப்புறம் எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள்.
“இப்போதைய கல்வித்துறையின் நடைமுறை சரியாகவே இருக்கிறது. இவ்வாண்டு, முதல்மூன்று படிவங்களை மட்டும் அனுமதித்தால் போதுமென்று , இயக்குநரிடம் சொல்லிவிடுங்கள்” என்றார் முதலமைச்சர்.
“தாங்கள் விரும்பினால், நானகு வகுப்புகளையுமே இவ்வாண்டே கொடுப்பதற்கு ஒப்புக்கொள்வதாக இயக்குநர் சொல்லிவரச் சொன்னார். நான்காம்படவமும் கொடுக்க விரும்பினால்..?”
நான் அடக்கமாய்க் கூறிய பதில் முடியவில்லை. தயக்கத்தைப் புரிந்துகொண்ட பெரியவர், “அது சரியில்லை. விதிமுறைகள் சரியாகவே உள்ளன. என்கு வேண்டியவர்களே, சட்டத்திற்குக் கட்டுப்படாமல், சலுகைகள் கேட்டால், மற்றவர்களை எப்படிக் கட்ட்டுப்படுத்த முடியும்? இப்போதைக்கு மூன்று வகுப்புகளோடு நிறுத்திக்கொள்ளுங்கள். சம்பந்தப்பட்டவர்களைக் கூப்பிட்டு, அப்படியே சொல்லிவிடுகிறேன். என்று அழுத்தந்திருதமாக்க் கூறிவிட்டார். மறுத்துப் பேசத் துணிவில்லாமல் வந்துவிட்டேன். இதைக் கேட்ட கல்வி இயக்குநர், நிறைவு கொள்ளவில்லை. உள்ளூரக் கவலைப்பட்டார்.
அன்று மாலை புதிய உயர்நிலைப் பள்ளிக்கு மனுப் போட்டவர்கள் வந்தார்கள். மூன்று படிவங்கள் மட்டும் அனுமதித்தால் போதுமென்ற திருத்திய மனுவைக் கொடுத்தார்கள். அதைக் கண்டு, அவர்களோடு பேசிய பிறகே, இயக்குநருக்கு நிறைவு ஏற்பட்டது. காமராசரைப் பாராட்டினார். தொடர்ந்து மதித்தார்.
3. சிந்தனைத் தெளிவு
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அய்ம்பத்து நான்காம் ஆண்டு ஆகஸ்டு பன்னிரண்டாம் தேதி அப்போதைய தலைமைச் செயலர் திரு. ராமுன்னிமேன்ன் அய்.சி. எஸ். முல் அமைச்சரிடம் சென்றார்.
“ஆந்திரப் பிரதேசத்தில், திருப்பதியில் ஒரு பல்கலைக் கழகம் நிறுவப்போகிறார்கள். அதன் வேந்தர் தலைமை நீதிபதி திரு கே.சுப்பராவிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது.
“சென்னை மாநிலத்தில் பொதுக்கல்வி இயக்குநராய் இருக்கும் திரு. கோவிந்தராசலு நாயுடைவை, துணை வேந்தராக நியமிக்க விரும்புகிறாராம். வரை அனுப்பி வைக்க முடியுமா? என்று கேட்டிருக்கிறார். என்ன பதில் எழுத என்று கேட்டுக் கொண்டுபோக வந்திருக்கிறேன்” என்று தலைமைச் செயலர் கூறினார்.
“கொடுக்காவிட்டால், பிரிந்துபோன மாநிலத்திற்கு உதவியை மறுக்கிறோமென்று நினைப்பார்கள். நாயுடைவை விட்டு இட்டால், நாம் சமாளிக்க முடியுமா என்பதை நீங்களே சொல்ல வேண்டுன்” இது காமராசர் பதில்.
“அதையும் பார்த்தேன். இயக்குநர் பதவிக்கு உரியவர்கள் இரு துணை இயக்குநர்கள் மட்டுமே உள்ளனர். இரண்டு பேரும் இளைஞர்கள் மட்டுமே உள்ளனர். இரண்டு பேரும் இளைஞர்கள்; நாற்பத்து இரண்டு வயது. யாரைப் போட்டாலும் பதின்மூன்று ஆண்டுகளுக்கு இருப்பார்கள். அது நல்லதா என்பதே கேள்வி” என்று புதிர் போட்டார் தலைமைச் செயலர்.
“இரண்டு பேரையும் விட்டுவிட்டு, வேறு யாரை யாவது நியமிக்க வழி இருக்கிறதா?” காமராசரின் கேள்வி.
“அதைப்பற்றிச் சிந்தித்தேன். யாராவது, அய்.சி. எஸ்., அய்.ஏ.எஸ். அதிகாரிகள் யாராவது இருந்தால், சொல்லுங்கள்” என்றார் காமராசர்.
“அப்படியொருவரும் இல்லை. நாம்பார்த்துப் போட்டால், மறுக்கமாட்டார்கள். அதிகாரிகளிடம் அந்த அளவிற்கு ஒழுங்கு இருக்கிறது” இது தலைமைச் செயலருடைய பதில்.
“கட்டுப்பாட்டிற்காகப் போகிறவர், மூன்று ஆண்டு எப்ப முடியும் என்றுபார்த்துக்க கொண்டேயிர்ப்பார். காலம் ஓடுமே ஒழிய, வேலை ஓடாது. இயக்குநர் பதவிக்கு ஆசைப்படுகிற, இந்திய சர்விஸ் அதிகாரிகள் இல்லாவிட்டால், கல்வித்துறையில் உள்ள இருவருள் ஒருவரைப் போட்டுங்க. அவராவது மகிழ்ச்சியாக வேலை செய்வார்.” என்று கோடு காட்டினார் காமராசர்.
“யாரைப் போடலாம்?” என்று வினவினார் தலைமைச் செயலர்.
“அதை நீங்கதானே சொல்லணும். இது சீனியாரிடி பதவியா செலக்ஷன் பதவியா?” இது காமராசரின் கேள்வி.
“செலக் ஷன் பதவியே” இப்படிக் கூறினார், தலைமைச் செயலர்.
“அப்படியானால், இரண்டுபேர் ரிகார்டுகளையும் பாருங்கள். யாருடையது அதிகம் நன்றாக இருக்கிறதோ, அவரை நியமித்துவிடலாம்” என்று காமராசர் ஆணையிட்டார்.
“அதையும் ஒரு மாதிரி பார்த்துக்கொண்டுதான், வந்திருக்கிறேன். நெ.து.சு. வின் ரிகார்டு முதலில் நிற்கிறது.”
“அப்படின்னா, அவரைப் போட்டுடுங்க.”
“இல்லை. எதற்கும் இரண்டு ரிகார்டுகளையும் சர்வீஸ் கமிஷனுக்கு அனுப்பி, அவங்க கருத்தையும் கேட்டுக்கொள்ளலாம்.”
“சட்டம் அப்படிச் சொன்னா, அவங்களையும் கேட்டு முடிவு செய்யுங்கள். இல்லாவிட்டால், நீங்கள் சொல்லும் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்ளுகிறோம். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்புறம் உங்கள் விருப்பம்.” என்று முடிவு செய்தார் முதலமைச்சர்.
“எதற்கும் கமிஷனுடைய கருத்தையும் கேட்டு விடுகிறேன்.” என்று தலைமைச் செயலர் கூறினார். காமராசர் இசைந்தார்.
இரண்டு நாட்களுக்குப் பின், இச்செய்தி என் காதில் வீழ்ந்தது. அன்றுமுதல், முடிவு தெரியும் வரை, ‘பதுங்கிக்கொண்டேன். சென்னையில் போயிருக்க வேண்டிய, அமைச்சர் கலந்துகொண்ட பல நிகழ்ச்சியகளுக்குச் செல்லாமல் நின்றுவிட்டேன்.
என்னை நியமித்ததற்காக்கல்வி அமைச்சருக்கு நன்றி சொன்னபோது,அவர், ‘இரு திங்களாக தலைமறைவாகிவிட்டீர்களே, என்று சிரித்தார்.
4. உரிமைத்தந்தவர்
உண்மை விந்தையாக இருப்பதுண்டு; நம்ப முடியாத்தாகவும் இருப்பதுண்டு. ஆயிணும் உண்மையைச்சொல்லத்தான் வேண்டும். சொல்ல வேண்டிய நேரத்தில் உரைக்கத்தான் வேண்டும். யாருக்கு எரிச்சல் ஊட்டினாலும், இப்போதாவது உணைமையை வெளியிடாமல் இருத்தல், குற்றமாகும்.
எனக்கு ‘சீனியரை’ அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்றவரை, பரிந்துரைகள் பல உடையவரை, தம் சாதிக்கார்ரை ஒதுக்கிவிட்டுத்தமிழ் நாட்டுப்பட்டம் மட்டுமே பெற்ற என்னை, பொதுக்கல்வி இயக்குநராக்கியவர் யார்? சாதிச் சேற்றிலே என்றும் சிக்கிக்கொள்ளாத பெருந்தலைவர், ஏழை பங்காளர், காமராசரே. தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் என்ற முறையிலும் எனக்கு மிகப் பெரிய பதவியைக் கொடுத்தவர் என்ற உரிமையிலும், இதையும் அதையும் செய்யும்படி காமராசர் கட்டளையிட்டிருந்தால் உலகம் பழித்திருக்காது. மாறாக, பரிந்துரை நோய் எங்கும் பரவியுள்ள நம் சமுதாயம் பாராட்டியிருக்கும்.
பெரிய பதவியைக்கொடுத்து, அதற்குமேலாகப் பெரிய உரிமையைக் கொடுத்து, அதற்கு ஆதராவாக, உயர்ந்த மதிப்பையும் கொடுத்த காமராசரோ, என்னிடம் எந்தப் பரிந்துரையும் சொன்னதில்லை. ஒன்பது ஆண்டுகாலம் எனக்க ஆசையிடும் உரிமையைப் பெற்றிருந்த முதல் அமைச்சர் காமராசர் எத்தகைய பரிந்துரையும் செய்யவில்லை. கட்சியை வளர்ப்பதில் ஈடு இசையற்றவர். காமராசர். இருப்பினும் கட்சித் தொண்டர்களுக்குக்கூட எவ்விதப் பரிந்துரையும் சொல்லவில்லை. தாம் சொல்லதது மட்டுமா? தம்முடைய தனிச்செயலர் மூலமும் எதையும் கேட்டிராவர். பல நூறு மேடைகளிலே நான் அவர் உடன் இருந்தபோது, தம்மைச் சார்ந்தவர்களுக்காக எதையும் கேட்காத நெறியாளராக விளங்கினார் காமராசர்.
என்னை ஒருமையில் அழைக்க உரிமையுடைய கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியமும் எப்போதும் யாருக்காகவும் எதற்காகவம் என்னிடம் பரிந்துரை செய்யவில்லை. இது பெருமையா? ஆம். இது நன்மையா? ஆம். ஆம்.
பெரியவர்கள் இருவரும் பரிந்துரைக்காத நோன்பினைப் பல்லாண்டு கடைப்பிடித்ததனால் ஊழியனாகிய நான், என்னைச் சார்ந்தவர்கள், என்னைச் சுற்றிக்கொண்டிருப்பவர்கள் என்பதற்காக, நீதிக்குப்புறம்பானதை, சமூக நீதிக்குப் புறம்பானதை, எந்நிலையிலும் செய்யத் துணியவில்லை. தாழ்த்தப்பட்டோரையும் பின்தங்கிய வகுப்பினரையும் தேடித்தேடி, உதவி புரிந்த நெறியாளனாக, நான் இயங்க முடிந்ததன் இரகசியம், மேலே இருப்பவர்கள் சிறந்த நெறியாளர்களாய் இருந்ததே.
முதல் அமைச்சர் காமராசர