படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை
காமராஜர் வாழ்க்கைக் குறிப்புகள்
1903 | ஜுலை 15 |
குமாரசாமி – சிவகாமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். | |
1907 | தங்கை நாகம்மாள் பிறப்பு. |
1908 | திண்ணைப் பள்ளியிலும், ஏனாதி நாயனார் வித்தியாவிலும் கல்வி பயின்றார். |
1909 | சத்திரிய வித்தியாசாலாவில் சேர்க்கப்பட்டார். |
1914 | ஆறாம் வகுப்பு படித்துக் கொண்ருக்கும்போது பள்ளி செல்வத்தை நிறுத்திக்கொண்டார். |
1919 | ஏப்ரல் மாதம் ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் விடுத்த அழைப்பை |
ஏற்று காங்கிரசின் முழுநேர ஊழியரானார். இதே ஆண்டில் சத்தியமூர்த்தியை | |
சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. | |
1920 | ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார். |
1923 | மதுரையில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். |
1927 | சென்னையில் ‘கர்னல் நீல்’ சிலையை அகற்றும் போராட்டம் நடத்த அண்ணல் |
காந்திஜிடம் அனுமதிபெற்றார். ஆனால் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே | |
நீல் சிலை அகற்றப்பட்டது. | |
1926 | மதுரைக்கு வருகைபுரிந்த சைமன் குழுவை எதிர்த்தார். வேதாரண்யம் உப்பு |
சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டார். 2 ஆண்டு சிறைத் | |
தண்டனை பெற்றார். | |
1936 | காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி தலைவரானார். யுத்த நிதிக்குப் பணம் |
தரவேண்டாம் என்று மக்களிடையே பிரச்சாரம் செய்த்தால் அந்நிய அரசால் கைது செய்யப்பட்டு, | |
வேலூர் சிறைக்கு அனுப்பட்டார். | |
1941 | மே – 31 |
சிறையிலிரிந்த காமராஜர் விருதுநகர் நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். | |
1942-45 | ஆகஸ்டு புரட்சியின் காரணமாக சிறைவாசம் அனுபவித்தார். |
1946 | மே 16 |
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்தலில் வெற்றிப்பெற்றார். | |
1949-1953 | இலங்கைக்குச் சுற்றுப்பயணம் சென்றார். |
1954 | பிப்ரவரி |
மலாய் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலமைச்சர் இராஜாஜி | |
ராஜினாமா செய்தார். நிலைமையை சமாளிக்க சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர் | |
பதவிக்குக் காமராஜர் போட்டியிட்டு வென்றார். | |
1954 | ஏப்ரல் – 13 |
தமிழக முதலமைச்சரானார். இடைத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் போட்டிட்டு | |
வென்றார். 1963 வரை முதலமைச்சராக இருந்தார். | |
1961 | சென்னையில் மாநகராட்சி உருவாக்கிய காமராஜர் சிலையை நேரு திறந்து வைத்தார். |
1963 | அக்டோபர் – 2 |
காமராஜர் திட்டத்தின் படி (K Plan) பதவியை ராஜினாமா செய்தார். | |
1964 – 67 | அனைத்திந்திய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார். |
1964 | மே – 27 |
பிரதமர் நேரு மறைந்தார். சாஸ்திரியை பிரதமராக்கினார் காமராஜர். | |
1966 | பிரதமர் சாஸ்திரி மறைந்தபோது இந்திரா காந்தி பிரதமர் ஆவதற்குத் துணை செய்தார். |
1966 | ஜுலை 22 |
சோவியத் நாட்டில் இருபது நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். | |
1967 | பொதுத் தேர்தலில் காமராஜர் தோல்வியுற்றார். சி.என். அண்ணாதுரை முதல்வரானார். |
1969 | நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். |
1975 | அக்டோபர் – 2 |
காமராஜர் மறைந்தார். | |
1976 | மத்திய அரசு காமராஜர் நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது. ‘பாரத ரத்னா விருது வழங்கியது. |
1977 | தமிழ்நாடு சட்டப்பேரவையில் காமராஜர் படம் குடுயரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியால் |
திறந்துவைக்கப்பட்டது. | |
1978 | சென்னை தியாகராய தகரில் காமராஜர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக்கியது தமிழக அரசு. |
மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டது. | |
1984 | ஜீலை – 15 |
விருதுநகரைத் தலைமை இடமாகக் கொண்டு காமராஜர் மாவட்டம் உருவாகியது. |
உயர்ந்த உள்ளம்
உயர்ந்த உள்ளம் இருப்பவரிடம் மட்டுமே உயர்ந்த செயல்கள் வெளிப்படும். அவர்களால் மட்டுமே உயர்ந்தோரை உருவாக்கவும் முடியும். காமராஜர் ஓர் உயர்ந்த மனிதர். உருவத்தால் மட்டுமன்றி உள்ளத்தாலும் உயர்ந்தவர்.
ஜனநாயகத்தின் மீது அளப்பரிய பற்றுடையவர். அதனால்தான் அவரை ஜனயாயக சோசலிச சிற்பி என்று அகிலமே பாராட்டியது.
ஜனநாயகப் பற்றும், சுதந்திர வேகமும் பொதுவாகவே எல்லா காந்தியவாதிகளிடமும் இயல்பாகவே இருந்தது. ஆனால் பெருந்தலைவர் ஜனநாயகத்தை தமது இலட்சியமாகவே கொண்டு வாழ்ந்தார்.
காந்தியிடம் கற்ற சத்தியம், அஹிம்சை, வாய்மை, ஆகிய மூன்றையும் தமது அரசியல் தர்மத்திலும் கையாண்டார் காமராஜர். எனவேதான் அவரது எண்ணத்தில் தூய்மையும் செயலில் நேர்மையும் இருந்தது.
நாட்டுப் பணிக்குத் தன்னை அர்ப்பணிப்பவர்கற் தங்கள் தன்னலத்தை மறக்க வேண்டும். பொழுதெல்லாம் பொதுநலத்துக்காக உழைக்க வேண்டும்.
இன்று இதன் இலக்கணத்தில் வினாக் குறிகள் விழலாம்.
ஆனால் தன்னலமற்று அவர் அன்று வாழ்ந்ததால்தான் இன்று பலரும் படிக்கின்ற பாடமாகத் திகழ்கின்றனர்.
பொதுவாகவே அன்று காந்தியவாதிகள் சிக்கனத்துடன் அதே வேளை நாட்டுச் சிந்தனையுடன் சேவை செய்து வந்தனர்.
மக்களுக்காகத்தான் தாங்களே தவிர தங்களுக்காக மக்கள் இல்லை என்பதில் மாறாத சிந்தனையுடன் இருந்தனர். அதனால்தான் பொதுப்பணத்தைக் கையாளும்போது கவனமாக இருந்தனர். அதுபோல சிக்கனமாகவும் இருந்தனர்.
முழுக்க முழுக்க காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றியவர்களை காங்கிரஸ்கார்ரகள் என்பதைவிட, காந்தியவாதிகள் என்பதே பொருந்தும்.
ஏனெனில் பெருந்தலைவர் காமராஜர் போல் எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்களை காங்கிரஸ்காரர்களுள் காந்தியவாதிகள் என்பதே சிறப்பாகும்.
காசுமேல் ஆசை வைக்காததால்தான் அவரை கறைபடாத கரம் என்கிறோம். ஒரு பொதுநல ஊழியன் கற்றுக்கொள்ள வேண்டியவை காமராஜரிடமும் காந்தியவாதிகளிடமும் ஏராளம். அப்படி ஒரு பாரம்பரியத்தை உருவாக்கினார்கள்.
திரு. லால்பகதூர் சாஸ்திரி அப்போது காங்கிரஸ் காரியக் கமிட்டியின் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.காங்கிரஸ் கமிட்டியோ வாழ்க்கைக்குப் போதுமான பணத்தை மட்டுமே சம்பளமாக் கொடுத்துவந்தது.
அவரது மாதச் சம்பளம் நாற்பது ரூபாய். ஒரு குடும்ப வாழ்க்கைக்கு அது போதுமா? என்றால் போதாதுதான். ஆனால் எளிய வாழ்க்கை வாழ்பவர்களுக்கு அது போதும்.
பொதுநல ஊழியர்கள் தேவை ஏற்பட்டால் தனது அன்றாட வாழ்க்கைக்குரிய குறைந்த அளவு பணத்தையே சம்பளமாகப் பெற்றுவந்தனர்.
லால் பகதூர் சாஸ்திரியின் மனைவி வருவாய் அறிந்து வாழ்க்கை நடத்தும் பெரும் குணம் உடையவர். அதனால்தான் அந்த பணத்துக்குள் சிக்கணமாக அவர்ளால் குடும்பத்தை நடத்த முடிந்தது.
ஒரு நாள் திடீரென நண்பர் ஒருவர் வந்தார். சாஸ்திரி வரவேற்று அமர வைத்தார். பேச்சுவாக்கில் சாஸ்திரியிடம், ” பணம் இருந்தால் ஐம்பது ரூபாய் கடனாகத் தாருங்கள்” என்றார்.
சாஸ்திரிக்குச் சிரிப்புதான் வந்தது. வந்தவர் ” ஏன் சிரிக்கிறீர்கள்?” என்றார். ” ஒரு பொதுநல ஊழியனிடம் பொன்னும் பொருளும் கொட்டியா கிடக்கும்? நீர் கடன் கேட்டதை நினைத்தேன். சிரிப்பு வந்துவிட்டது” என்றார்.
இந்த உரையாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த அவரது மனைவி உள்ளேயிருந்து வந்தார். சாஸ்திரியிடம், ”இவர் நமக்கு வேண்டியவராயிற்றே… எப்போதும் கேட்டதே இல்லை. ஏதாவது உதவி செய்வோம்” என்றார்.
சாஸ்திரியும் ”நான் வேண்டாம் என்றா கூறுகிறேன். இருந்தால்தானே” என்று கூற, உடனே, அவரது மனைவி ”என்னிடமிருக்கிறது கொடுக்கவா?” என்றார். சாஸ்திரியும் ”ஓ தாராளமாக” என்று கூறிவிட்டார்.
வந்தவர் வாங்கிக்கொண்டு போனதும் சாஸ்திரி மெதுவாகத் தன் மனைவியிடம் கேட்டார். ”நமக்கு கிடைக்கும் மாத வருமானமோ நாற்பது ரூபாய். அதற்குள் குடும்பம் நடத்துவதே சிரமம் எப்படி உனக்கு ஐம்பது ரூபாய் மீதி வந்தது?” துணைவியார் ”சிக்கனமாகச் செலவு செய்து மாதா மாதம் பத்து பத்து ரூபாய் மீதபடுத்தி வைத்திருந்தேன்” என்றார்.
மறுநாள் காலை காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்குப் போனதும் சாஸ்திரி செய்த முதல் வேலை இதுதான்.அலுவலரை அழைத்து எனது வாழ்க்கைச் செலவுக்காக நீங்கள் மாதா மாதாம் நாற்பது ரூபாய் தருகிறீர்கள். என் மனைவி சாமர்த்தியசாலி எனவே மாதச் செலவை முப்பதுக்குள் முடித்துவிடுகிறாள். ஆகவே அடுத்த மாதம் முதல் எனக்கு மாதச் சம்ளம் முப்பது ரூபாய் போதும்” என்றார்.
இப்படி எளிய வாழ்க்கையை நேர்மையுடன் நடத்தியவர்கள் காந்தியவாதிகள். எனவேதான் அவர்கள் நடத்திய அரசியலும் எளிமை இருந்தது. ஆடம்பரம் அறவே இருந்ததில்லை.
இந்தப் பாரம்பரியத்தில் வளர்ந்தவர் என்றால்தான் கர்மவீரர் காமராஜரால் ஒன்பது ஆண்டுகள் ஒரு பைசாவைக்கூட கையில் தொடாமல் ஆட்சி செய்ய முடிந்தது.
கர்ணனது உயிர் கொடையில் இருந்தது போலவே காமராஜரின் உயிர் இலட்சியத்தில் இருந்தது. ஜனநாயக சோசலிசமே காமராஜின் அரசியல் வாழ்வின் அசைக்க முடியாத இலட்சியம்.
எல்லாருக்கும் கல்வி. அதன் மூலம் எல்லோருக்கும் வேலை வாய்ப்பு. அதன் மூலம் எல்லோர்க்கும் உணவு. ரதன் மூலம் எல்லோருக்கும் சமத்துவம் காண வேண்டுமென்பதே காமராஜரின் இலட்சியம்.
இந்த இலட்சியத்துக்காகவே இறுதிவரை வாழ்ந்த உயர்ந்த மனிதர் அவர்.
கர்ணன் கொடுப்பதையே குறியாகக் கொண்டவன். அதுவே அவனது உயிராக இருந்தது. அதனால்தான் அம்புபட்டு தேர்ச் சக்கரத்தில் சாயந்தபோதும் உயிர் போகவில்லை. தர்மதேவதை தடுத்தாள்.
கண்ணன் உண்மை நிலைய உடனே உணர்ந்தான். இந்த சூழலில் கர்ணனின் உயிர் போகாது. அவனது உயிர் போகவேண்டுமானால் அவனிடம் எஞ்சியுள்ள தர்ம பலனையும் பெற்றுவிட வேண்டும்.
எனவே கண்ணன் ஓர் அந்தண வடிவம் கொண்டு உயிருக்கு போராடும் கர்ணனிடம் புண்ணியத்தை யாசகமாகப் பெற்றுக்கொண்டதும் அவன் இறந்தான்.
எனவே, இலட்சியத்தில் உயிரை வைத்திருப்பவர்கள் அந்த இலட்சியத்துக்கு இழுக்கு ஏற்படுமானால் உயிரை இழந்துவிடுவர்.
கர்ணனை போன்றவர்தான் காமராஜரும்.
உயிரும் இலட்சியமும் ஒன்றாக இருப்பவர்கள்தான் உயர்ந்தவர்கள். அவர்களின் உள்ளம்தான் இனைவனின் உறைவிடம்.
காமராஜர் எப்போதுமே ஒரு கடவுள் பக்தராக இருந்ததில்லை. ஆனால் அரசியல் பக்தர்கள் லட்சக்கணக்கில் அவரைஏ வணங்கினார்கள்.
என்ன காரணம்?
தொண்டராக வாழ்வை தொடங்கி அரசியலில் தலைவராக உயர்ந்த போதும் தொண்டராகவே வாழ்ந்து தொண்டராகவே மறைந்ததால் இனறவனே இத் தொண்டர் தம் உள்ளத்தில் ஒடுங்கிவிட்டார்.
ஏழைகளுக்காக இரங்கி, அவர்களின் துயர்நீக்க எல்லோருக்கும் கல்வியை இலவசமாக்கிய ஏழைப்பங்களான். உயர்ந்த உள்ளம் உடையவர் அவர்தான்.
எனவே,
உயர்ந்த உள்ளம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் வாழ்வில் உயரவும் புகழில் உயரவும் முடியும் என்பதை பெருந்தலைவரின் வாழ்க்கை உணர்த்துகிறது.
இது படிக்காத மேதையிடம் படிக்க வேண்டிய முதல் பாடமாகும்.
அரசியல் நாகரிகம்
அரசியல் நாகரிகத்தை அவரிடமிருந்து கற்க வேண்டும்.
திட்டமிடுதலும், செயல்படுத்தலும், செய்து முடித்தலும் அவர் செயல் வீரர் என்று காட்டின. ஆனால் அவர் செய்யும் முன்பும் கூறியதில்லை; செய்து முடித்த பின்பும் பேசியதில்லை.
அரசுப் பணிகள் அரசின் பணியே தவிர அரசியல்வாதியின் பணியல்ல என்பதை நன்கே உணர்திருந்தார். அது போல் அரசுப் பணியாளர்களையும் மதிக்கும் பண்புடையவர்.
அரசுப் பணியாளர்களை முக்கிவிடும் பணியைச் செய்யக் கூடாது. இந்த உயர்ந்த அரசியல் நாகிகத்தை கர்மவீரர் காமராஜரிடமிருந்து கற்க வேண்டும்.
அரசு ஒரு இயந்திரம், அது இயக்குபவர்களைப் பொறுத்து இயங்கும் என்பதை நாம் இன்று உணர்வதற்குக் காரடமாயிருந்தது அவரது அரசியல் நாகரிகம்தான்.
நேர்மையும், தூய்மையும் சேர்ந்துவிட்டால் அரசியல் தெளிவாகவே இருக்கும் என்பதை உலகுக்குக் காட்டியவர் அவர். கடமைஆனது பேச்சில் இருந்து எதற்கு? செயலில் வேண்டும். அப்படி கடமையைச் செய்யும் அதிகாரிகளைக் கண்ணியப்படுத்த வேண்டும்.
பெருந்தலைவர் அரசியல் பிரவேசத்தின் பிற்பகுதியை விட்டு விட்டு, அவர் முதலமைச்சராய இருந்த காலத்தை மீள்பார்வை செய்து பார்ப்போமானால் அரசியல் நடத்தும் அரிச்சுவடி தொடங்கி அத்ததனை அந்தரங்களையும் அவரிடம் கற்கலாம்.
அப்போது-பெருந்தலைவர்தான் முதலமைச்சர் பல்வேறு அலுவல்களை முடித்து விட்டு காலதாமதமாக வந்தாலும் காமராஜர் மறுநாள் பணிளை ஒழுங்கு படுத்திவிட்டுத்தான் தூங்குவார்..
இத்தகைய பணிக்காக ஒரு நாள் தனது தனி அலுவலரை அழைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரைத் தொலைபேசியில் அழைக்கச் சொன்னார். காமராஜரின் தனி அலுவலர் உடனே போன் செய்து அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை அழைத்தார். மறுமுனையில் பேசியதோ ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்ல; அவரது செயலாளர் (P.A).
உடனே, முதலமைசைசரின் தனி அலுவலர் என்ற தோரணையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியை காமராஜரோடு பேசச் சொன்னார். அந்தச் செயலாரோ ஒரே வரியில் முடித்து விட்டார். ஐ.ஏ.எஸ். அதிகாரி தூங்குகிறார் இப்போதைக்கு எழுப்பமுடியாது.
இவருக்கோ கோபம். ”நான் முதலமைச்சரின் தனி அலுவலர் பேசுகிறேன் என்று கடுகடுத்தார்.மறுமுனையில் அவரும் விடவில்லை. ‘நான் ஐ.ஏ.எஸ்ஸின் செயலாளர் பேசுகிறேன்’ என்றார்.
இருவருக்குள்ளும் வாதம் தொடர்ந்ததே தவிர, ஐ.ஏ.எஸ். அதிகாரி முதலமைச்சரிடம் பேச வரவே இல்லை.
”நான் நாலரை கோடி மக்களின் நாயகனுடைய பி.ஏ. பேசுகிறேன். அவர் அழைக்கிறார் ஐ.ஏ.எஸ்ஸை எழுப்புங்கள். மறுமுனையிலிருந்து பதில் இப்படி வந்தது. – நல்லது. நீங்கள் நாலரை கோடி நாயகரின் பி.எ. பேசலாம்… நான் ஐ.ஏ.எஸ்ஸின் பி.ஏ. பேசுகிறேன்…-அவர் எக்காரணம் கொண்டும் தன்னைத் தூக்த்திலிருந்து எஉப்ப லேண்தாம் என்று கூறிவிட்டுத்தான் தூங்கச் சென்றார். எனவே எனது கடமையைத்தான் செய்கிறேன்”.
முதலமைச்சரின் பி.ஏ. கோபத்தோடு பெருந்தலைவரிடம் சென்று, ”தாங்கள் அழைப்பதாக் கூறியும் தொலைப்பேசிக்கருகே காத்திருப்பதாக கூறியும் அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பி.ஏ. அவரை எழுப்ப மறுத்துவிட்டார். அவர் தூங்கப்போகும்போது யார் அழைத்தாலும் எழுப்ப வேண்டாம் என்று கூறினராம்” என்று கூறினார்.
இது போன்றதொரு சம்பவம் இந்தியாவின் எந்த மாநிலத்தில் நடந்தாலும் சரி, என்ன நடக்கும் என்று எண்ணிப்பாருங்கள். மறுநாள் காலையே எங்கோ ஒரு காட்டுக் கிராமத்திற்கு மாற்றப்படுவார். ஐ.ஏ.எஸ். அதிகாகியோ ஏதோ ஒரு சுமாரான ஒரு வாரிஅத்தின் மேலாளராக்கித் தண்டிக்கப்படுவார். ஆனால் மக்கள் தலைவர் காமராஜர் என்ன செய்தார் தெரியுமா? மறு நாள் விடிந்ததும் தானே அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை அழைத்தார். அவரோ காலையில் விஷயத்தை கேள்விப்பட்டு ஆடிக் கொண்டிருந்தார். தனக்கு என்னாகுமோ தனது பி.ஏ.வுக்கு என்னாகுமோ?” என்று வருந்தினார்.
காமராஜரோ, அந்த ஐ.ஏ.எஸ்.ஸிடம் அந்த பி.ஏ.வைப் பற்றிய முழு விபரங்களையும் கேட்டறிந்தார். ஐ.ஏ.எஸ் வருந்தியவாறே என்ன நடக்குமோ என்ற கவலையில் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
பெருந்தலைவர் திடீரென ”உங்க பி.ஏ.வை எனக்குப் பி.ஏ வாக அனுப்பித் தாங்க” என்று கூறி அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டார்.
அப்போதும் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்குப் புரியவில்லை. தலைவர் விபரமாகவே கூறினார். ‘யார் அழைத்தாலும் எழுப்ப மறுத்த கடமை உணர்ச்சிமிக்கவர்தான் பி.ஏ. வாக இருக்கவேண்டும். அதனால்தான் அவரை எனக்குப் பி.ஏ.வாக அனுப்பி வையுங்கள் என்றார்.
ஒரு சாதாரண அரசுப் பணியாளரின் கடமை உணர்வு முதலமைச்சருக்கு எதிராக நடந்த பின்பும் அதே முதலமைச்சர் பாராட்டினார் என்றால் இதுதான் அரசியல் நாகரிகம். இத்தகைய அரசியல் நாகரிகத்தை நாம் அவரிடம் இருந்துதான்படிக்க வேண்டும்.
இப்படி கடமையை பாராட்ட முற்பட்டால் எல்லோருக்குமே கடமை செய்யும் மனநிலை தானாக ஏற்படும் என்பதை நாம் உணரவேண்டும்.
எதிர்கட்சிக்காரர்களை எதிரிகளாக நினையாமல் அரசுப் பணியாளரை அடிமைகளாகக் கருதாமல் கடமையாற்றும் நாகரிக அரசியலை நாம் படிக்காத மேதையிடமிருந்துதான் படிக்கவேண்டும்.
அரசர்களை உருவாக்கிய அரசர்
காலமும் மாறுகிறது; ருத்தும் மாறுகிறது. எது மாறிமாலும் அரசியலின் அடிப்படை மரியாதை மட்டும் மாறவேகூடாது. அரசியல்வாதிக்ள் எல்லாமும் தெரிந்தவராக இருக்கவேண்டுமே தவிர எல்லோருக்கும் தெரிந்தவராக மட்டும் இருக்கக்கூடாது.
வந்ததார்கள், போனார்கள், வருவார்கள் போவார்கள். ஆனாலும் யார் வர வேண்டும்? எது வர வேண்டும்? இதை தீர்மானிக்கும் திறன் நமக்கிருந்தால் யாரும் வந்துவிட முடியாது. அவர்களும் எதையும் செய்துவிட முடியாது.
விழிப்புணர்வற்ற வாக்காளர்கள் நிறைந்தால், அக விழிகளற்ற வேட்பாளர்களே அதிகம் வெற்றி பெறுவார்கள் எனவேதான் கல்விக் கண்ணைத் திறந்து கற்றவர் மலியக் காரணமானார் காமராஜர்.
திட்டமிட்டு ஒரு சமூகத்தைக் கூர்மைபடுத்தியவர் பெருந்தலைவர்.
தலைமை ஏற்பவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பல.
தன்னலமின்மை, பதவி ஆசையின்மை, தியாகம், நேர்மை, நாணயம், நம்பிக்கை, திட்டமிடல், தீர்மானித்தலை, வழி காட்டல், வி நடத்தல் இவை போன்று பல பண்புகள் இருக்கவேண்டும்.
எல்லாம் இருந்தாலும் தியாகம் மட்டுமே மிக முக்கியமான பண்பாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஏனெனில் தியாக உணர்வு இருப்பரிடம்தான் விட்டுக் கொடுத்தல், தோலவியை ஏற்றுக் கொள்ளுதல், பதவியை விட பதவியளித்தவர்களை மதித்தல, பதவியைத் துறக்கும் துணிவு ஆகியவை இருக்கும்.
இந்திய அரசியலைப் பொறுத்தவரை ஏணிகளாக இருந்தவர்கள் இருவர்தான். பலர் பதவிகளை அடையத் தங்களை படிக்கட்டுக்ளாக்கிக் கொண்டவர்களுள் முதலாமவர் பாரதத் தந்தை மகாத்மா காந்தி, இரண்டாமவர் பெருந்தலைவர். காந்தியும், கருப்புக் காந்தியம் தங்களை ஏணிகளாக்கித் தலைவர் பதவியடைய விரும்புவோர் ஏறிச் செல்ல ஏதுவாயிருந்தனர்.
அரசராக இருப்பதற்கு ஆளும் தலைமை என்கின்ற தகுதி போதும். அரசர்களை உருவாக்குவதற்கோ பெருந்தலைமை எனும் தகுதி வேண்டும்.
அத்தகுதி பெற்றதால்தான் காமராஜர், பெருந்தலைவர் என்னும் பெருமை பெற்றார்.
காந்தி மகாத்மாவானார். அதுபோல் தலைவர் பெருந்தலைவர் ஆனார்.
தாமே பெரும் பதவிகளை அடைய வேண்டுமென்று துடிப்பவர்கள்தாமே அதிகம். அதிகார வெறிபிடித்து அலைபர்க்ள்தானே அதிகம். ஏறிய நாற்காலியை விட்டு இறங்க மறுப்பவர்கள்தானே அதிகம். இறங்கினாலும் மறுபடியும் ஏறத் துடிப்பதுதானே இப்போது காணப்படும் இயற்கை.
ஆனால் முதலமைச்சர் பதவியை உதறிவிட்டு இறங்கியதால்தான் பிரதமர் பதவி பின்னால் வந்தது. எந்த எதிர்ப்பும் இன்றித்தானே ஏற்றுக் கொள்ளும் நிலை இருந்தபோதும் அதை ஏக முத்தார், காமராஜர் அதற்குக் காரணங்கள் உண்டு.
‘முதியோர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு பதவி விலக வேண்டும்’ என்று முதல்வர் பதவியையே விட்டுவிட்டவர் பெருந்தலைவர்.
அதேநேரம், பிரதமர் பதவி தயாராக இருந்தபோது தானே ஏறி அமர்ந்து கொண்தால் அது கொள்கைக்கு விரோதமல்லவா? எனவே ஏணியாக மாறினார்.
லால் பகதூர் சாஸ்திரி அவர்களும், உந்திரா காந்தியவரகளும் அரசரகளானார்கள் (பிரதமர்கள்) என்றால் அந்த அரசர்களை உருவாக்கிய அரசர் காமராஜர்தான்.
கம்பன் இராமனை ‘இரு கை வேழத்து இராகவன்’ என்று புகழ்ந்து பேசுவான்.
வேழம் என்றால் யானை. யானையின் கை நீளமானது. பொதுவாகவே ஆள்பவர்ளுக்கு கை நீளம்தான்.
ஆள்பவரின் கைகள் நீளமாயிருக்கலாம். அவை நீளுமானால் ஆட்சிக் காலம் நீளாது.
காமராஜரின் கைகளும் நீளமாயிருக்கலாம். முழங்கால்கள்வரை நீண்டு இருக்கும்.
கம்பன் இராமனை நீண்ட கரங்களை உடையவன் என்று மட்டும் கூறியிருக்கலாம். நமக்கும் புரியும்தான். அதன் பின் ஏன் யானையின் தும்பிக்கை போன்று நீளமான கை என்றான்?
இராமருக்கு பொருந்தியது அப்படியே பெருந்தலைவர் காமராஜருக்குக்கும் பொருந்துவமைக் காணுங்கள்.
யானையின் தும்பிக்கை பாகனை மேலே தூக்கிவிடப் பயன்படும்.
அதுபோல் இராமன் கிஷ்கிந்தையில் வாழ்ந்த சுக்கிரிவனுக்கு முடிசூட்டு மன்ன்னனாக்கி சிம்மாசனத்தின் மேல் அமர வைத்தான். அது மட்டுமன்றி இலங்கை முடியை வீடணனுக்கு சூட்டித் தம்பியைத் தலைவனாக்கினான்.
யானை தன் நீண்ட கரத்தால் பாகனைத் தூக்கித் தன் தலைமேல் அமர்த்துவதைப்போல், இராமனும் இருவருக்கு பலைமைப் தவி பந்து சிறப்பித்தான்.
எனவேதான் கம்பன், இராமனை ‘இருகை வேழத்து இராகவன்’ என்று புகழ்ந்தான்.
ஆகவேதான் இரமனுக்கும் காமராஜருக்கும் பொருத்தமுண்டு என்பது.
இராமனும் பதவியைத் துறந்து வந்தான். காமராஜரும் பதவியைத் துறந்துவந்தார்.
இராமன் காலத்தின் சூழ்நிலையால் சுக்கிரிவனுக்கும், வீடணனுக்கும் முடிசூட்டி மன்னனாக்கினான். காமராஜரோ அரசியல் சூழ்நிலையால், பாரதத்திற்கு லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரைப் பிரதமராக்கி நிலை நிறுத்திக் காட்டினார்.
இவ்வாறு அரசர்களை உருவாக்க வேண்டுமானால் அவரிடம் பேரரசர்க்கு உரிய தகுதி இருக்கிறதென்று அர்த்தம். அதனால்மான் தலைவர்களை உருவாக்கியவரை பெருந்தலைவர் என்றனர்.
எவ்வளவு பொருத்தம்!
பட்டங்கள் பலருக்கும் வந்து சேரும்; நின்று பொருந்தாது. ஆனால் காமராஜரைப் ‘பெருந்தலைவர்’ என்றது என்றென்றும் பொருந்தும்.
அரசியல்வாதிகள் அஸ்திவாரத்தோடு உருவாக வேண்டும் அத்தகையவர்களால்தான் பலரை உருவாக்க முடியும் என்னும் உயர்ந்த பாடத்தை பெருந்தலைவரிடமிருந்துதான் படிக்கவேண்டும்.
தோல்வியை ஏற்கும் துணிவு
வெற்றி என்றால் தமது தோளில் வைத்து ஆடுபவர்கள், தோல்வி என்றால் அடுத்தவர்கள் தோளில் தூக்கி வைப்பது இன்றைய அரசியலின் பழக்கம். தேர்தல் என்றால் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை. ஒருவர் வெற்றியால் பலர் தோல்வியை தழுவிக் கொள்வர். இது இயற்கை.
இதில் தோற்றவர் ஆளுங்கட்சியாக இருந்தால் ‘ நான் தலைருக்கு எதிர் கோஷ்டியில் இருப்பதால் வேண்டுமென்றே தோற்கும் தொகுதியை எனக்குத் தந்தார்’ – என்பதும், ‘எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்கள் இறுதிக் கட்டத்தில் ஜாதிப் பிரிவினையைத் தூண்டிவிட்டார்கள்’ – என்பதும், ‘பல வாக்குச் சாவடிகளில் நடந்த தில்லுமுல்லுகளே எனது தோல்விக்குக் காரணம்’ – என்பதும் சாதாரணமாக நாம் காண்பதுதான்.
இதில் தோற்றவர்கள் எதிர் கட்சியாக இருந்தாலோ, ‘ அரசு நிர்வாகம் முறைகேடாகப் பயன்படுத்தப்ட்டதே என் தோல்விக்குக் காரணம்’ என்பதும், ‘தவறான வாக்காளர் பட்டியலை வைத்து நடந்த தவறான தேர்தல்’ – என்பதும், ‘கள்ள ஓட்டுக்களே எனது தோல்விக்குக் காரணம்’ – என்பதும், தேர்தல் நேரத்தில் போலியான வாக்குறுதிகளால் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். – என்பதும், ‘இந்தத் தேர்தல் செல்லாது, நான் கோர்ட்டுக்கு போவேன்’ – என்பது எல்லா தேர்தல்களிலும் எதர்த்தமாகப் பார்ப்பதுதான்.
எல்லாவற்றையும்விட பேசுபவர்கள் ஒன்றை மட்டும் மறந்துவிடுவார்கள். அதுதான் மக்கள்.
முழுமையான ஜனநாயக நாட்டில் வாழுகின்றோம். மக்கள் வேண்டாம் என்று நினைத்தால் வாக்கை மாற்றிப் பயன்படுத்துகிறார்கள்.
மிசாவும், பின் இ. காங்கிரஸ் அடைந்த மோசமான தோல்வியம், ஜனதா அடைந்த அமோக வெற்றியும், அதன்பின் மாற்றாக ஆளின்றி மறுபடியும் இ. காங்கிரஸ் வெற்றி பெற்றதையும் சிந்தித்துப் பார்த்தால், மக்கள் முடிவுகளை மாற்றிப் பார்க்கத்தான் செய்கிறார்கள்.
எனவே, அரசியலில் தோல்வி என்பது அவ்வப்போது வருவதுதான். ஆனால் அரசியல் ஞானம் உடையவர்கள் மட்டும்தான் தனது தோல்வியை ஏற்றுக்கொள்கின்றனர்.
அந்த வரிசையில் தலைமை தாங்கி நிற்பவர் பெருந்தலைவர்தான். தோல்வியை ஏற்கும் துணிவுடைய தூயவர் அவர்.
1971 அகில இந்திய அளவில் இ. காங்கிரஸ் அமோகமாக வெற்றி பெற்றது. காமராஜின் பழைய காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
நாடெங்கும் வெளியாகும் பேர்தல் முடிவுகள் நேர்மாறாகவே வந்து கொண்டிருக்கின்றன. சிந்திக்கத் துவங்கினார். தனது ஆதரவாளர்கள் தோல்வியைத் தாங்கிக்கொள்ளாமல் இருப்பதை தலைவர் அறிகிறார்.
தொடர்ந்து கட்சியின் உறுப்பினர்கள் பலரும் போய், பெருந்தலைவரைப் பார்த்தனர்.”ஐயா, அவர்களின் வெற்றிக்குக் காரணம் ‘ரஷ்ய மை’ ஏமாற்றிவிட்டார்கள். வாக்குச் சீட்டில் தடவிய ரஷ்ய மைதான் காரணம்” என்றனர்.
தலைவர் நிதனமாக சொன்னார், ”ஜனநாயகத்தில் நம்பிக்கை உடையவர்களின் பேச்சா இது? நாம் தோற்றதற்கு காரணம் ரஷ்ய மை என்கிறீர்களே… அதுவா உண்மை? இல்லை. நம்மை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை”
இவ்வாறு தன்னை அல்லது தனது தலைமையை அல்லது தனது கட்சியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தன்னடக்கத்தோடு ஏற்றுக் கொள்ளும் உயர்ந்த குணம்தான் அவரது உயர்வுக்கு காரணம்.
தோல்வியை சமதானத்தோடு, அமைதியாக நிதானமாக அணுகினால் அதற்குள் அடுத்த வெற்றி அடங்கியிருக்கும்.
ஆம், நிதானமாக தோல்வியை அணுகும்போது தோல்விக்கான உண்மையான காரணங்கள் தெரிந்துவிடும். அப்படியானால் மறுமுறை தோற்பது தவிர்க்கப்படும்.
முழுமையாக ஜனநாயகவாதி என்பதால் தோல்வியை முதலில் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சியுடையவராக இருந்தார் காமராஜர்.
எனவேதான் அவர் வெற்றியில் மகிழ்வதும் இல்லை; தோல்வியில் வருந்துவதும் இல்லை; மனதை எப்போதும் எதார்த்த நிலையிலே வைத்திருந்தார்.
வெற்றியால் துடிக்காமலும், தோல்வியால் துவளாமலும் இருக்கவேண்டும் என்று எண்ணுபர்கள் காமராஜரைப் படிக்கவேண்டும்.
பொது நலத்தில், அதிலும் குறிப்பாக அரசியலில் ஈடுபட்டவர்கள் தோல்வியைச் சந்திக்காமலே இருக்கமாட்டார்கள்.
அவ்வாறு தோல்வியை ஏற்கும் துணிவை படிக்காத மேதையிடம்தான் படிக்க வேண்டும்.
மாற்றார் மீதும் மதிப்புடையவர்
அரசியலில் எதிர்க்கட்சியினர் எதிரணியினர்தானே தவிர எதிரிகள் இல்லை. இந்த உயர்வு இருந்தால் அதைத்தான் ஆரோக்கியமாஉ அரசியல் என்று கூறலாம். அந்த ஆரோக்கியமான அரசியல் நடத்தியவர்தான் காமராஜர்.
கொள்கையினைப் பகைக்கலாமே தவிர அதைக் கொண்டவர்களைப் பகைக்கக்கூடாது எனும் உயர்ந்த சித்தாந்திகளுடன் உறவாடியவர் இவர். ஆதலால், பெருந்தலைவர் ஓர் உயர்ந்த அரசியல் ஞானியாகவே வாழ்ந்தார்.
மாற்றுக் கருத்து மீது மதிப்பில்லாமல் போனபோதும் மாற்றார் மீது மிகவும் மதிப்புடைஅவராக வாழ்ந்தவர், கர்மவீர்ர் காமராஜர்.
ஒவ்வொரு அரசியல்வாதிகளும் அவசியம் படிக்கவேண்டிய பாடமாகத் திகழ்பவர்தான், இந்தப் பாமரர்களின் தலைவர்.
அரசியல்வாதிகள் எப்படி நடக்க வேண்டும் என்பதை அந்த ஏழைப் பங்காளன் வார்த்தையிலிருந்து எவ்வளவோ அறியலாம்.
அரசியலின் வெற்றி, சிந்தனையில் இருக்கலாம். ஆனால் ஓர் அரசியல்வாதியின் வெற்றி அவன் அதை நிறைவேற்ற அனுபவிக்கும் சிரமங்களில் இருக்கிறது.
அரசியல் பற்றிய தார்மீகச் சிந்தனையும், தர்மமும் தடம்புரண்டு வருவதாக உணர்வது உண்மையானால் உடனாக அதைத் திருத்தும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.
அவ்வாறு திருத்த முற்படுபவர்களுக்குக் காமராஜரின் வாழக்க்கையைக் கட்டாயப் பாடமாக்கலாம்.
ஒரு நாட்டுக்கு அரசியல் வேர் போன்றது என்றால் அவர் ஆணிவேர், கோபுரம் என்றால் அவர் அஸ்திவாரம்.
சேவை நோக்கத்தை விட்டுவிட்டு கட்சிகள் வணிக நோக்கத்தை கட்டிக் கொள்வதை நிறுத்த விரும்பினால் படிக்காத மேதையிடமிருந்து பாடம் படிக்க வேண்டும்.
எல்லாக் கட்சியினரும் ஒருவரை ஒருவர் மதிப்புடையவர் என்று உணர வேண்டும். மதிக்க வேண்டும்.
ஒருவரை நேரில் மதிப்பவர்கள் வானளாவப் புகழ்பவர்கள், அவரில்லாத இடத்தில் அவதூறு பேசுவதைக் காண்கிறோம்.
நண்பர்களுக்குள்ளேயே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்.
மேடைகளிலே ஒரு கட்சியினர் தங்கள் எதிர்க் கட்சியினரை அழுகிய வார்த்தைகளால் அபிஷேகம் செய்வதைப் பார்த்திருக்கிறோம்.
எதிர்க்கட்சியினரை தரக்குறைவாகப் பேசுவதையே தாரக மந்திரமாகக் கொண்டவர்களைக் கூட, தரம் தாழ்த்திப் பேசுவதற்குத் தலையசைக்காமல், மேடையிலேயே தடைசெய்யும் தலைவரே பெருந்தலைவர்.
அதனால்தான் மாற்றான்மீதும் மதிப்புடையவராக வாழ்ந்தார்.
அறிஞர் அண்ணா அவர்களின் ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’ என்னும் ஆற்றின் கொள்ளிடமாகத் திகழ்ந்தார் காமராஜர்.
அண்ணாவும், காமராஜரும் எதிரும் புதிருமாய் இருந்த காலம். காமராஜரின் ஒரே அரசியல் எதிரியாய் அண்ணாவின் அரசியல் கொடி பறந்த காலம்.
அப்போது காமராஜர் ஆட்சியில் இல்லை. எம்.பி.யாக இருந்தார் அவ்வளவுதான்.
எம.பி. என்பதால் அப்போது அவர் டில்லியில் இருந்தார். அந்த நேரம்தான் அமெரிக்க அதிபர் நிக்சன் இந்தியாவுக்கு வந்திருந்தார்.
புதுடில்லியில் தங்கியிருந்த நிக்சன் அப்போது பார்க்க விரும்பிய ஒரே தலைவர் காமராஜர்தான்.
இத்தனைக்கும் காமராஜருக்கு தனது சொந்த ஊரிலே தோற்கடிக்கப்பட்டு, நாகர்கோவில் தொகுதியில் நின்று எம்.பி. ஆகி அரசியல் அஞ்ஞாதவாசம் ஆரம்பமான நேரம்.
ஆனாலும் அமெரிக்க அதிபர் நிக்சனுக்கு அவர் மீதிருந்த மதிப்பு மாறவில்லை. அதனால்தான் காமராஜரைப் பார்க்க நேரம் கேட்டு ஆள் அனுப்பினார்.
இந்தியாவின் வலுமிக்க எளிய தூண் காமராஜர் என்பது அமெரிக்க அதிபரின் எண்ணம். அதுவும் இந்தியா வந்தபின் கட்டடங்களைப் பார்த்துவிட்டு காமராஜரைப் பார்க்காமல் மோனால் அது அழகல்ல என அதிபர் நிக்சன் நினைத்தார் போலும்!
அமெரிக்கா போகும் எத்தனையோ பேர் ஆசைப்பட்டும் பார்க்கமறுக்கும் அதிபர், காமராஜரைத் தானே காண விரும்புகிறார் என்றால், அது நம் தலைவரின் தகுதியை தரப்படுத்துகிறது என்றே பொருள்.
காமராஜரிடம் தகவல் சொல்லப்படுகிறது. அதுவும் மகிழ்ச்சியோடு சொல்கிறார்கள். ஐயாவை பார்க்க அமெரிக்க அதிபர் நிக்சன் ஆசைப்படுகிறாராம்….
காமராஜரோ நிதானமாக ”முடியாது என்று கூறு” என்றார். தலைவரின் அந்தரங்கச் செயலர் ‘ஐயா! அமெரிக்க அதிபர் நிக்சன் இப்போது இங்கே டில்லியில் இருக்கிறார். உங்களைப் பார்க்க விரும்புகிறாராம்” என்று காமராஜரிடம், புரியவில்லையே, என எண்ணிப் பேச புரியுதுண்ணேன்! இப்ப பார்க்க முடியாதுண்ணு சொல்லுண்ணேன்” என்று சுறுக்கெனச் சொல்லிவிட்டார