பிரச்னைகளை எழுப்பி அமளி ஏற்படுத்த கட்சிகள் திட்டம்
புதுடில்லி:பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. விலைவாசி உயர்வு உட்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி, அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகளும், ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் முடிவு செய்துள்ளதால், அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது.
சீனாவின் தணிக்கை முறை ஒழிய தலாய் லாமா விருப்பம்
வாஷிங்டன்:திபெத் சுதந்திரம் பெறுவதற்காக நான் செய்து வரும் பிரசாரத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவ வேண்டும் என, புத்த மத தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
சீக்கியர்கள் கொலை இந்தியா கண்டனம்
புதுடில்லி : பாகிஸ்தானில் சீக்கியர்கள் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் அநாகரிகமான செயல் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாணவன் ஓவியத்துக்கு உலகளவில் 2ம் பரிசு!
திருப்பூர்: உலக அமைதியை வலியுறுத்தி, திருப்பூர் செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி மாணவன் வரைந்த ஓவியத்துக்கு, உலகளவில் இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.
பென்னாகரத்தில் மார்ச் 27 இடைத்தேர்தல் : தேதியை அறிவித்தது தேர்தல் கமிஷன்
சென்னை : ஒரு வழியாக பென்னாகரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 27ம் தேதி தேர்தலும், 30ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது.
மின்னணு நூலகத்தைப் பயன்படுத்துவதில் பாரதிதாசன் பல்கலை. முதலிடம்
திருச்சி, பிப்.19: தேசிய அளவில் மின்னணு நூலகத்தைப் பயன்படுத்துவதில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது என்றார் அதன் துணைவேந்தர் மு. பொன்னவைக்கோ.
வங்கி வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட்டில் புதிய சலுகைகள்
புதுடில்லி : வங்கி வாடிக்கையாளர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) முன்வைத்த கோரிக்கைகளை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டுள்ளார்.
பி.எஸ்.என்.எல்., எஸ்.சி.,எஸ்.டி., ஊழியர் சங்க தேர்தலை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு:சேர்மன் பதிலளிக்க நோட்டீஸ்
மதுரை:மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த பி.எஸ்.என்.எல்., எஸ்.சி., எஸ்.டி., பணியாளர் நல சங்க நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்த வழக்கு குறித்து பதிலளிக்கும்படி, அதன் சேர்மன் மற்றும் தேசிய ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மீண்டும் வருது கிழக்கிந்தியக் கம்பெனி! விலை கொடுத்து வாங்கினார் ஒரு இந்தியர்
லண்டன் : இந்தியாவை நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆண்ட “கிழக்கிந்திய கம்பெனி’ யை இப்போது ஒரு இந்தியர் வாங்கியுள்ளார்.
அரசு மருத்துவமனைகளுக்கும் உயிர் காப்பீடு சிகிச்சை செலவை வழங்க உத்தரவு : அமைச்சர் பன்னீர் செல்வம் தகவல்
மதுரை : “”அரசு உயிர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை செலவை தனியார் மருத்துவமனைகளைப் போல, அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது,” என சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.