தெலுங்கானா ராஜினாமா விவகாரம்:மாஜி எம்.பி.,யிடம் கோர்ட் கேள்வி
புதுடில்லி:தெலுங்கானா ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமாக்களை உடனடியாக ஏற்கும்படி, ஆந்திர சட்டசபை சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
ஓகேனக்கல் குடிநீர் திட்டச் செலவு அதிகரிப்புக்கு ஒப்புதல்: 1978 கோடி ரூபாய் என நிர்ணயித்தது தமிழக அரசு
சென்னை : ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான செலவு 1,334 கோடியில் இருந்து 1,928 கோடியாக உயர்த்தப்பட்டு, அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரபாகரன் இறப்பு சான்றிதழ் இலங்கை அரசு அனுப்பியது
புதுடெல்லி : ‘விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இறப்பு சான்றிதழை இலங்கை அரசு அனுப்பியுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
ஐஓபியின் நடமாடும் ஏ.டி.எம்.
சென்னை : தமிழ்நாட்டில் முதல்முறையாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐ.ஓ.பி.) நடமாடும் ஏடிஎம் மையத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அரசியல் பயணம் தொடரும்: சரத் பொன்சேகா
எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் தமது அரசியல் பயணம் தொடரும் என ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
‘தமிழகத்தில் புதிய மின் உற்பத்தி திட்டம் தொடக்கம்
சிதம்பரம், பிப். 1: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டத்தில் 3311 கே.வி. துணைமின் நிலையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துணை மின் நிலையத்தை தொடங்கி வைத்து அவர் பேசியது:
யார் யாரோ அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்தி அரசியல் நடத்துகின்றனர்: மு.கருணாநிதி
“இன்றைக்கு யார் யாரோ அம்பேத்கர் பெயரை பயன்படுத்தி அரசியல் நடத்துகின்றனர்’ என, தமிழக முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முட்டைக்கு மைனஸ் ரேட் வழங்கும் என்.இ.சி.சி., : அதிர்ச்சியில் புரோக்கர்கள், வியாபாரிகள்
நாமக்கல்: முட்டையின் தேவையைப் பொறுத்து, மைனஸ் ரேட் வழங்க என்.இ.சி.சி., முடிவு செய்வதால், முட்டை வியாபாரிகள், புரோக்கர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வு பெற்ற இரு விரிவுரையாளர்கள் பணியில் தொடர ஐகோர்ட் அனுமதி
சென்னை : அரசு சட்டக் கல்லூரியில் பணியாற்றி 62 வயதை கடந்த இரண்டு விரிவுரையாளர்கள், பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க.வுக்கு வலு சேர்க்கும் வகையில் நானும், மு.க.அழகிரியும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுவோம்; துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் எஸ்.ரத்தினவேலு, மத்திய மந்திரி மு.க.அழகிரி குறித்து `அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.