பிலிப்பைன்ஸ் சூப்பர் பெர்ரி கப்பல் மூழ்கியது : 900 பேர் தப்பினர் : 60 பேர் மூழ்கினர்
மணிலா: பிலிப்பைன்ஸ் அருகே சூப்பர் பெர்ரி- 9 என்ற பயணிகள் கப்பல் கடலில் மூழ்கியது . இதில் பயணித்த 968 பேரில் தொள்ளாயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். 60 பேர் மாயமாயினர். 10 பேர் சடலங்கள் மீட்கப்பட்டாலும் பலி எண்ணிக்கை 60 ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை ரத்து செய்ய பி.பி.சி.எப்., கோரிக்கை
தானே: ‘நாட்டில் கள்ள நோட்டு புழக்கம் பெருமளவு அதிகரித்துள்ளதால், 500 மற்றும் 1,000 ரூபாய் முகமதிப்புக் கொண்ட நோட்டுக்களை ரத்து செய்ய வேண்டும்’ என, பாரதிய வங்கி வாடிக்கையாளர்கள் கூட்டமைப்பு (பி.பி.சி.எப்.,) கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய ஆஸி., மறுப்பு
புதுடில்லி : “அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத் தில் கையெழுத்திடாத இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய முடியாது’ என, ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய கல்வித்துறை அமைச்சரும், துணை பிரதமருமான ஜூலியா கிலார்ட், நம்நாட்டில் ஒரு வாரம் பயணம் மேற்கொண்டார். நேற்று தாயகம் திரும்பும் போது, டில்லியில் நிருபர்களை சந்தித்தார்.
பெரம்பலூரில் ‘சேட்டிலைட் நகரம்’ : மத்திய அமைச்சர் ராஜா தகவல்
பெரம்பலூர் : “பெரம்பலூரில் 300 ஏக்கரில், 500 கோடி ரூபாய் மதிப்பில் அனைத்து வித வசதிகளுடன் சேட்டிலைட் நகரம் அமைகிறது’ என, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா கூறினார்.
மரக்காணத்தில் அனல் மின் நிலையம்: ஆய்வுப் பணிகள் மீண்டும் துவங்கின
திண்டிவனம்: மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் பகுதியில், அனல் மின் நிலையம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் மீண்டும் துவக்கப் பட்டுள்ளது.
மும்பையில் ரூ.1.77 கோடி கிரெடிட் கார்டு மோசடி
மும்பை: மும்பையில் பிரபல வங்கியில், ஒரு கோடி 77 லட்ச ரூபாய் கிரெடிட் கார்டு மூலம் மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியில் கடைக்காரர்களுக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஹுக்கும்சிங் பிருத்விசிங் ராவ் என்பவனை மும்பை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிப்பட்டன. மும்பை போன்ற நகரங்களில் வாடிக்கையாளர் வசதிக்காக, வங்கிகள் … Continued
இன்று ஆசிரியர் தினம் முதல்வர் கருணாநிதி வாழ்த்து
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆஸ்திரேலியாவில் போலி கல்வி நிறுவனங்களை நம்பி மாணவர்கள் ஏமாறுவதை தூதரகங்கள் தடுக்க வேண்டும்:சுப்ரீம் கோர்ட் கருத்து
புதுடில்லி: “போலி கல்வி நிறுவனங்களை நம்பி இந்திய மாணவர்கள் ஏமாறுவதை தடுக்க, இந்திய தூதரகமும், ஆஸ்திரேலிய தூதரகமும் உதவ வேண்டும்’ என, சுப்ரீம் கோர்ட் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்ஜினியரிங் கல்லூரிகளில் சி.பி.ஐ., ரெய்டு : ரோடு, கட்டடம், நூலகம், ஆய்வுக்கூடம் வசதியில்லை
சென்னை : அகில இந்திய தொழில்நுட்ப கல்வி மையத்தின் (ஏ.ஐ.சி.டி.இ.,) விதிமுறையை பின்பற்றாமல், அடிப்படை வசதியே இல்லாத, நான்கு இன்ஜினியரிங் கல்லூரிகளில் சி.பி.ஐ., போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரே மாதத்தில் 1100 பேருக்கு ஆபரேஷன்
தமிழக அரசு அறிமுகப்படுத்திய கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரே மாதத்தில் 1100 பேருக்கு உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.