30 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த நாட்டில் சினிமா பார்த்த சவுதி அரேபிய மக்கள்
பொதுநலத்திற்காக வேலைநிறுத்தம் செய்கையில் திரையரங்குகளை மூடினால் கூட, ‘அட, என்னடா நாடு இது… ஜனநாயகமே செத்துபோச்சே’ என்று புலம்புகிறோம். சந்துக்கு சந்து திரையரங்குகள், வீட்டுக்கு வீடு டிவிடி என பொழுதுபோக்குக்கு நமக்கு பஞ்சம் என்பது வந்ததேயில்லை.
1100 மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கினார் முதல்வர்
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் வழியில் எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்ற 1,100 மாணவர்களுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி லேப்-டாப் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மின்சாரம் பாயும் நேரம்!: ஒரு அதிர்ச்சி விடியோ
கடந்த மே 15 ஆம் தேதி நடந்த கோர சம்பவம் இது. உயிர் ஒன்று பிரியும் கணத்தை நூற்றுக்கணக்காணோர் நேரிடையாகப் பார்த்த தருணம் அது.
பிரெஞ்ச் ஓபனை முதல்முறையாக வென்றார் ரோஜர் பெடரர்
சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் முதல்முறையாக பிரெஞ்ச் ஓபன் கோப்பையைக் கைப்பற்றினார். கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் போட்டிகள் கடந்த இருவாரங்களாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வந்தது. போட்டியின் இறுதி நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ரோஜர் பெடரரும் 23ஆம் நிலையவீரரான சுவீடனின் … Continued
விடாது படிப்பு: பள்ளிப் படிப்பை 90 வயதில் முடித்த சூப்பர் பாட்டி
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரைச் சேர்ந்த எலினார் பென்ஸ் என்ற பெண்மணிக்கு 90 வயது. 15 பிள்ளைகள், 54 பேரக் குழந்தைகள், 37 கொள்ளுபேரன், பேத்திகள் கண்டவர். இந்த வயதில், கொள்ளுபேரன், பேத்திகளைப் பார்த்தப் பிறகு தன்னுடைய பழைய கனவு ஒன்றை இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் பென்ஸ்.
பெண்கள், ஏழை, உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கு பி.இ., கட்டணம் ரத்து:தமிழக அரசு முனைப்பு
பெண்கள், ஏழை மாணவர்கள், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு பி.இ. கல்விக் கட்டணத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் தமிழக அரசு முனைப்பாக ஈடுபட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் இச்சலுகை அளிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
மதுரை அருகே டி.புதுப்பட்டியில் புதிய சமுதாய வானொலிக்கு அனுமதி
டெல்லி: மதுரை அருகே டி.புதுப்பட்டி கிராமத்தில் புதிய சமுதாய வானெலி அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான அனுமதியை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது. கிராமப்புற சமுதாயங்களை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சமுதாய வானொலிக்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறது. இந்த சமுதாய வானொலி மூலம் உள்ளூர் சமுதாய மக்கள் … Continued
புதுச்சேரி தமிழறிஞர் முனைவர் இரா. திருமுருகனார் மறைவு
புதுச்சேரி: புதுவையில் வாழ்ந்த தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் 03.06.2009 விடியல் ஒரு மணிக்கு மாரடைப்பால் இயற்கை எய்தினார். இந்தச் செய்தி உடனுக்குடன் தொலைபேசி, மின்னஞ்சல் வழியாக உலகத் தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
தமிழகம் நோக்கி படையெடுக்கும் தொழில் நிறுவனங்கள்!
சென்னை: ஒரு சின்ன சறுக்கலுக்குப் பின் மீண்டும் இந்தியத் தொழில் துறையில் க்ரீன் சிக்னல் தெரியத் துவங்கியுள்ளது.
சபாநாயகரானார் மீரா குமார்: துணை சபாநாயகர் கரியாமுண்டா
புதுடில்லி: லோக்சபாவின் முதல் பெண் சபாநாயகராக மீராகுமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் பெயரை அனைத்து கட்சி உறுப்பினர்களும் முன்மொழிந்து, வழிமொழிந்தனர். பிரதமர் மன்மோகன்சிங்கும் எதிர்கட்சித் தலைவர் அத்வானியும் புதிய சபாநாயகரை அவருடைய இருக்கைக்கு அழைத்துச் சென்று