மாணவர்களுக்கு காமராஜர்

எளிமையால் உயர்வு பெற்ற உத்தமர்

பாரத அரசியலில் தமக்கென ஒருதனிச் சிறப்பைப்பெற்றுத் திகழ்ந்தவர் காமராஜ் அவர்ரகள். விடுதலைப்போராட்ட காலத்தில் மட்டுமின்றி பிற்காலத்தில் சுதந்திர பாரத்த்தில் பெருந்தேசியத் தலைவர்களாக திகழ்ந்தோரில் பெரும்பான்மையினர் பெரிய படிப்பாளிகள்- பட்டம் பெற்றவர்கள்- பெரும்பான்மையினர் புகழ் பெற்ற வழுக்குரைஞர்களாக இருந்து அரசிலில் குதித்தவர்களாக இருந்தார்கள்.

தலைவர் காமராஜ் அவர்களோ மிகச் சாமானிய கல்வியறிவு பெற்ற ஒரு கிராமத்துச் சிறுவராக அரசியலில் அடிமட்டத் தொண்டராகப் பிரவேசித்து பாரதத்தின் பெருந்தலைவர்களில் ஒருவராக உயர்ந்து மக்களுக்கு வழி காட்டியவர்.

தமிழகத்தின் முதலமைச்சராகவும் இருந்து மிகத்திறமையாக – பாரத்த்தின் பிற மாநிலங்களை வியந்து போற்றும் அளவுக்கு நல்லாட்சி நடத்தியவர்.

காமராஜ் அவர்களின் தோற்றமே எளியதோர் உழைப்பாளி போன்று காணப்படும். அவருடைய பேச்சிலே வார்த்தை ஜாலங்களோ, அடுக்குமொழி போன்ற அழகு அம்சங்களோ இருக்காது. ஒரு நாட்டுப்புறத்து விவசாயி போன்று மிகமிக எளிமையாக உரையாடுவது அவருடைய இயல்பாக இருந்தது.

பாரத அரசியலில் இப்படி ஒரு சாமானியர் தேசப் பெருந்தலைவர்களில் ஒருவராகப் பெருஞ்சிறப்பு பெற்ற வகையில் பாரதத்துக்கே இவர் தனி வழி காட்டியவராக இருந்தார் என்றே கூறவேண்டும்.

பிறப்பும் வளர்ப்பும்

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 – ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார்.

காமராஜரின் தந்தை குமாரசாமி நாடார். விருதுப்பட்டியில் ஒரு தேங்காய் வியாபாரியாக இருந்தார். காமராஜின் அன்னையார் பெயர் சிவகாமி.

மிகவும் சிறிய வயதிலேயே தந்தையை இழக்கும் துர்பாக்கிய நிலை காமராஜருக்கு ஏற்பட்டது. அவருக்கு ஆறுவயதாக இருந்த போது தந்தை குமாரசாமி நாடார் மறைவெய்திவிட்டார்.

தாய்க்கு தாயாகவும் தந்தைக்கு தந்தையாகவும் இருந்து மகளை ஆளாக்க வேண்டிய முழுப்பொறுப்பும் பெரும் சுமையாக சிவகாமி அம்மையஆர் மீது விழுந்தது.

காமராஜருக்கு நாகம்மை என்ற ஒரு தங்கை உண்டு.

தந்தையை இழந்த காமராஜ் அன்னை சிவகாமியின் பராமரிப்பில் வளர்ந்தாலும் அவர் மீது அன்பைப்பொழிந்து அவருக்குப் பேராதரவாக இருந்து பாட்டி பார்வதி அம்மாள் ஆகும். தாய் மாமன் கருப்பையா நாடாரும் காமராஜியின் வளர்ச்சியில், வாழ்வில் பெரிதும் அக்கறை காண்பித்தார்.

பள்ளிக்குச் சென்றார்

காமராஜருக்கு வயது ஆறாக இருக்கும்போது காமராஜ் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.

இன்றுபோல் அந்நாளில் மூலைக்கு மூலை பள்ளி ஏது? ஆங்காங்கே காணப்பட்ட ஓரிரு பள்ளிகளும் கிட்டதட்ட திண்ணைப் பள்ளிக்கூட பாணியில் தான் இருந்தன.

பிற்காலத்தில் ஏழை எளிய சிறுவர்களுக்கு கல்விக்கண் கொடுத்து உதவிய காமராஜ் அவர்களுக்கு அரிச்சுவடியைத் தொடங்கி வைக்கம் பேறு வேலாயுதம் என்பவருக்குக் கிடைத்தது.

ஆசிரியர் வேலாயுதத்திற்கு ஒருகால் நொண்டி. அதனால் அவரை ‘நொண்டி வாத்தியார்’ என்று மக்கள் அழைத்தார்கள்.

குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதில் சிறந்த திறமையுள்ளவர் என்று வேலாயுத்த்திற்கு நல்ல பெயர் உண்டு.

ஆனால் அவர் மிகவும் கண்டிப்பானவர். ஒழுங்காகப் பாடம் படிக்காத பிள்ளைகளை ஈவு இரக்கமில்லாமல் அடித்துத்தள்ளி விடுவார்.

வேலாயுத்தின் அடக்குமுறையைப் பாணி கல்வி காமராஜருக்குஒத்து வரவில்லை. அதனால் நொண்டி வாத்தியார் பள்ளிக்குச் செல்ல அவர் விருப்பம் காண்பிக்கவில்லை.

காமராஜின் மனப்போக்ககைப் புரிந்து கொண்ட குடும்பத்தினர் அவரை முருகையா என் வேறொரு ஆசிரியர் நடத்திய பள்ளியில் கொண்டு போய் சேர்த்தனர்.

அடுத்து க்ஷத்திரிய வித்யாசாலை என்ற உயர்நிலைப்பள்ளியில் காமராஐ சேர்க்கப்பட்டார்.

அந்தப் பள்ளிக்குப் பிடியரிசிப் பள்ளிக்கூடம் என்று ஒரு சிறப்புப் பெயர் உண்டு. அந்தப் பள்ளியில் மாணவர்களிடம் தனியாக சம்பளம் வாங்கிக் கொள்வதில்லை. மாணவர்கள் அன்றாடம் பள்ளிக்கு வரும்போது வீட்டிலிருந்து ஆளுக்கு ஒரு கைப்பிடி அளவு அரிசி கொண்டு வந்துவிட வேண்டும் என்பது விதிமுறை. அந்தப் பிடியரிசி வருமானத்தை வைத்துத்தான் பள்ளி நடைபெற்று வந்தது.

பின்னாளில் அந்தப் பள்ளி மிகச் சிறந்த ஒரு பள்ளியாகப்பெரும் புகழ்பெற்றது.

நாடார் சமூகத்தினர்தங்களுக்குள் நிதி பிரித்து அந்தப்பள்ளி நன்றாக நடைபெற உதவினார்கள்.

காமராஜ் ஆறாவது வகுப்புவரை அந்தப்பள்ளியில் படித்தார். அவருக்கும் கல்வியில் அதிக நாட்டமுண்தாகவில்லை. அவருடைய தய்மாமன் கருப்பையா நாடாரும், காமராஜை ஏதாவது ஒரு தொழிலில் பழக்கப்படுத்திவிடும் நோக்கில் அவரைத் தமது ஜவுளிக் கடையில் சேர்த்துக் கொண்டார்.

பிள்ளைப்பருவ அற்புதங்கள்

காமராஜ் பின்னாளில் அரசியலில் மிகவும் புகழும் செல்வாக்கும் பெற்ற காலத்திலும் முண்டியடித்துக்கொண்டு தனக்காகப் பதவிகளைத் தேடியலைந்ததில்லை இந்த இயல்பு சின்ன வயதிலேயே அவரிடம் பொருந்தியிருந்தது. என்பதற்கு பள்ளிப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சியொன்று சான்று பகர்கின்றது.

கமராஜ் கல்வி பயின்ற க்ஷத்திரய வித்தியாசாலையில் ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தியை விமர்சையாக்க் கொண்டாடுவார்கள்.

விநாய சதுர்த்தி விழாவைக் கொண்டாடுவதற்காக ஒவ்வொரு மாணவரிடம்மு ஐந்து காசு வசூலிக்கப்படும்.

பூஜை முடிந்து பிரசாதம் விநியோகிக்கப்படும்போது மாணவர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்று ஒரு தடவைக்கு இரண்டு தடவையாகப் பிரசாதத்தைக் கைநிறையப் பெற்றுக்கொள்வார்கள்.

பிரசாத்த்துக்காக அந்த மாதிரிப் போராட்டம் நடத்துவது காமராஜருக்குப் பிடிக்கவில்லை. அதுமிகவும் கேவலமாகப்பட்டது.

அவசரப்படாமல் ஒரு மூலையில் ஒதுங்கி நின்றார். கடைசியாக மிச்சமிருந்த பிரசாத்த்தில் மிகவும் குறைந்து அளவே அவருக்குக் கிடைத்தது.

மற்ற மாணவர்கள் கை நிறையப் பிரசாதம் வாங்கிக்கொண்டு வந்திருக்கும்போது அவர் மட்டும் மிகவும் குறைவாகப் பிரசாதம் வாங்கி வந்திருப்பது பற்றி வீட்டில் கேட்டார்கள்.

மற்ற மாணவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு சென்று பிரசாதம் வாங்க் எனக்கு விருப்பமில்லை. பள்ளியில் எல்லா மாணவர்களிடம்ம் ஐந்து காசு வசூலித்தவர்கள் ஒரே மாதிரியாகப் பிரசாதம் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது அவர்கள் தவறுதான் என்றார் காமராஜ்.

அரசியலில் சிக்கலான பிரச்சனைகளை எல்லாம் குறுக்கிடும் போது சற்றும் நிதானமிழகாமல் அவசர உணர்வுடன் அவற்றைச் சமாளிக்கும் ஆற்றல் காமராஜிடம் அமைந்திருந்தது.

இந்த மாதிரி ஆற்றல் அவர் உடன்பிறந்தே வளர்ந்து வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இம்மாதிரி நாம் முடிவு கட்டுவதற்கான ஆதாரம் போன்று காமராஜின் சின்ன வயதில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

குளத்தில் நீராடச் செல்வதற்காக கோவில் யானையைக்கொண்டு சென்றார்கள்.

திரும்பி வரும் சமயம் யானைக்கு மதம் பிடித்து விட்டது. அது தறிகெட்டு கண்டபடி அலைய ஆரம்பித்துவிட்டது.

மக்கள் அதுகண்டு வீறிட்டு அலறி திசைக்கு ஒருவராக ஓடி ஒளியத் தொடங்கினர்.

அந்த யானையை வழக்கமாக்க் குளிப்பதற்கு அழைத்துச் செல்லும்போது ஒரு கனத்த சங்கிலியை அதன் துதிக்கையில் கொடுத்து சுமந்து செல்லச் செய்வது வழக்கம். யானைப்பாகன் அன்று மறந்துவிட்ட காரணத்தாலோ என்னவோ யானையின் துதிக்கையில் இரும்புச்சங்கிலியைச் சுமக்கச் செய்யவில்லை.

காமராஜ் அதைக் கவனித்தார் யானையின் வெறியாட்டத்துக்கு அதுவும் காரணமாக இருக்கக்கூடுமோ என்று அவருக்ககுத் தோன்றியது.

உடனே கோவிலுக்கு ஓடினார்.அந்த இரும்புச் சங்கிலியை எடுத்து வந்தார். வெறி கொண்டு அலைந்த யானையின் துதிக்கையில் விழுமாறு சங்கிலியை வீசி எறிந்தார்.

யானை தனது துதிக்கையில் சங்கிலியைத் தாங்கிக்கொண்டது. உடனே அதன் வெறி ஆவேசம் அடங்கிவிட்டது.

அமைதியடைந்த யானையை காமராஜே கோவிலுக்குஅழைத்து சென்றார்.

சுதந்திரப்போரில் ஆர்வம்

காமராஜருக்கு வயது பதினாறு.

தேசமெங்கும் சுதந்திர அறப்போர் தீவிரமடைந்திருந்த நேரம் அது.

தேசமெங்கும் ஜூவாலை விட்டு எரிந்துக்கொண்டிருந்த சுதந்திரப் போராட்டக்கனல் காமராஜின் இளம் இதயத்திலும் பற்றிக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

தம்மைச் சூழ்ந்து நிகழும் தம்மையும் இணைத்துக் கொள்ளத்தொடங்கினார்.

கைக்குக் கிடைக்கும் தமிழ்ப் பத்திரிகைகளைப் படித்தும் நண்பர்களுடன் விவாதித்தும் சுதந்திரப் போராட்ட செய்திகளைத் தெளிவாக விளங்கிக்கொண்டார்.

அவருக்கு உற்றதோழர்களாக வந்து வாய்த்தவர்களும் தேச விடுதலைப் போரில் அக்கறையும் ஆர்வமும் கொண்டவர்களாகவே திகழ்ந்தார்கள்.

அந்த நண்பர்களில் குறிப்பிடத்தக்கவர் முத்துசாமி ஆசாரி என்பவர்.

விருதுப்பட்டியில் அதன் சுற்றுப்புற ஊர்களிலும் காங்கிரஸ் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றால் காமராஜ், முத்துசாமி ஆசாரி மற்றும் நண்பர்கள் புடை சூழ அங்கு சென்று தலைவர்களின் சொற்பொழிவுகளை மிகுந்த உற்சாகத்துடனும் கவனத்துடனும் கேட்பார்கள்.

அக்காலத்தில் தமிழகத் தேசிய அரசியல் வானில் புகழ்பெற்ற தாகைகளாக மின்னிக் கொண்டிருந்த தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்களை டாக்டர் வரதராஜூலு நாயுடு, திரு. வி. கலியாணசுந்தரனார், ஜார்ஜ் ஜோசப் போன்றவர்களாவர்.

அவர்கள் சொற்பொழிவுகள் எங்கு நடைபெற்றாலும் அங்கு நிச்சயமாக காமராஜ் குழுவினரைக் காணலாம்.

அன்றைய தினம் பாரத தேசமெங்கும் ஒரு லட்சிய தேசியத் தலைவராக காந்திஜி திகந்தார்.

அன்றையத் தினமே காமராஜர் காந்தியடிகளின் தலைமைக்குத் தம்மை முழுமையக அர்பணித்துக்கொண்டார். காமராஜ் தமது வாழ்நாள் முழுவதுத் அந்தப் பாதையிலிருந்து சற்றும் விலகவே இல்லை.

அந்தக் காலத்தில் ஒரு காங்கிரஸ் தொண்டனாக செயற்படுவது மிகவும் ஆபத்தான் விஷயம் என்று கருதப்பட்டது.

காங்கிரஸ் தொண்டன் என்று யார் வெளிப்படையக முன் வருகிறானோ அவன் போலிஸ் கண்காணிப்புக்கு இலக்கானவனாகி விடுவான்.

எந்த நேரத்திலும் அவன் கைது செய்யப்படலாம். அவன் குடும்பத்தினர் தொல்லை தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்படலாம்.

தீவிர அரசியலில் காமராஜ் இறங்கியது அவர் குடும்பத்தினருக்குக் குழப்பத்தையும் அச்சத்தையும் தோற்றுவித்தது. அவரை அரசியல் தொடர்பிலிருந்து மீட்டு குடும்பச் சிறைக்குள் பாதுகாப்பாக அடைத்து விட வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.

முதலில் காமராஜ் இருந்த சூழ்நிலையை மாற்ற வேண்டியது அவசியம் என்று வர்களுக்குத் தோன்றியது. காமராஜ் விருதுப்பட்டியில் இருக்கும் வரை அவருடைய அரசியல் தொடர்பு மாறாது என்று நினைத்த குடும்பத்தினர் அவரை வெளியூருக்கு அனுப்பிவிடத் தீர்மானித்தனர்.

திருவனந்தபுரத்தில் காமராஜருடைய மற்றொரு தாய் மாமன் காசி நாராயண நாடார் என்பவர் மர வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அவர் விருப்பத்தின்படி காமராஜ் திருவனந்தபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தேச பக்தியை பொருத்தமட்டில் காமராஜருக்குபாரத்தின் எல்லாப்பகுதியும் ஒன்று தானே! விருதுப்பட்டியாக இருந்தால் என்ன? திருவன்ந்தபுரமாக இருந்தால் என்ன? எல்லாமே பாரத்த் திருநாட்டின் பகுதிதானே!

அதனால் திருவனந்தபுரத்தில் வைக்கம் என்ற பகுதியிலிருந்த ஆலயத்தில் தாழ்தப்பட்டவர்கள் என்று கூறப்பட்ட ஈழவர்கள், தீயர்கள் என்போர் உள் நுழைந்து தரிசனம் செய்ய மற்றவர்கள் அனுமதிக்கவில்லை. அந்த மனப்காங்கினை எதிர்த்து தாழ்த்தப்பட்ட மக்களையும் ஆலயத்தினுள் அனுமதிக்க வேண்டும் என்று தேசியத் தொண்டர்கள் சத்தியாக்கிரகம் நடத்திக் கொண்டிருந்தனர்.

அதுதான் வரலாற்றுப்புகழ் பெற்ற வைக்கம் சத்தியாக்கிரகம்.

இந்தப் போராட்டத்தில் தான் தமிழகத்திலிருந்து பெரியார் ஈ.வெ.ரா. சென்று வைக்கம் சத்தியாக்கிரகத்தில் பங்கு பற்றினார். அப்போது தான் காந்திஜி வரை ‘வைக்கம் வீரர்’ என்று சிறப்புப் பெயரிட்டு அழைத்துச் சிறப்பு செய்தார்.

வைக்கம் ஆலயப் பிரவேச போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டார்கள். காமாராஜரும் கைதாவதாக இருந்தார். அதற்குள் சத்தியாக்கிரகம் வெற்றியடைந்து விட்டது. ஆலயத்தினுள் தாழ்த்தப்பட்டவர்கள் பிரவேசிக்க அனுமதி கிடைத்துவிட்டது.

பெருமாள் பெரிய பெருமாள் ஆன கதையாக திருவனந்தபுரம் சென்றால் காமராஜின் அரசியல் தொடர்பு மாறும் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக் அங்கே அவர் நேரடியாக சத்தியாக்கிரக இயக்கத்தில பங்கு கொண்டது காமராஜின் குடும்பத்துக்குக் குழப்பத்தை உண்டாக்கி விட்டது.

உடனே திரும்பவும் விருது நகருக்கு (விருதுப்பட்டி) அழைத்துவரப்பட்டார்.

இப்போது காமராஜருக்கு குறிப்பான வேலை ஏதும் இல்லை. குடும்பம் மிகவும் கஷ்ட நிலையில் இருந்ததைக்கண்ட காமராஜ் சுய முயற்சியாக ஏதாவது ஒரு பணி புரிய வேண்டும் என்ற நோக்கில் இன்ஸ்யூரன்ஸில் ஏஜன்ஸி எடுத்து வருவாய் சம்பாதிக்க முற்பாட்டார்.

தன்மான உணர்வு கொண்ட அவருடைய சுபாவத்துக்கு அந்தத் தொழில் ஒத்துவரவில்லை. அதனால் அதையும் விட்டுவிட்டார். காமராஜருக்குத் திருமணம் செய்து வைத்து விட்டாலாவது குடும்ப몮பொறுப்பு ஏற்படும் என்று குடும்பத்தினர் நினைத்தார்கள்.

உறவுக் பெண் ஒருவரைத் திருமணம் செய்து வைப்பபதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால்திருமணம் செய்துகொள்ள காமராஜ் மறுத்துவிட்டார்.

தேசம் அடிமைப்பட்டுக்கிடக்கும் நிலையில் திருமணத்தைப்பற்றி தாம் யோசிக்கவே விரும்பவில்லை எனத் திட்டவட்டமாக்க் கூறி விட்டார்.

தேசம் சுதந்திரம் பெறும்வரை திருமணம் செய்துக்கொள்வதில்லை என்ற தீர்மானத்தை ஏதோ உணர்ச்சி வசப்பட்ட நிலையில் விளையாட்டாக கூறவில்லை. அவரும் அவர் நண்பர்களான முத்துசாமி ஆசாரியும், தனுஷ்கோடி நாடாருமாக சேர்ந்து சபதமாக – பிரதிக்ஞையாகவே மேற்கொண்டனர்.

பாரதம் விடுதலை பெற்ற பிறது முத்துச்சாமி ஆசாரியார் திருமணம் செய்து கொண்டார். ஆனால் காமராஜரும், தனுஷ்கோடி நாடாரும் தேசம் சுதந்திரம் பெற்றபிறகும்கூட திருமணம் செய்துக்கொள்ளவில்லை.

தீவிர அரசியல் செயற்பாடு தேசத்தொண்டு

காமராஜ் முழு மூச்சாக தேச சேவையில் இறங்கினார். காந்திஜியின் தலைமையி நடைபெறும் சுதந்திர அறப்போராட்டத்தில் தீவிர மன பங்கு கொண்டார்.

காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தைத் தீவிரமாக நடத்திக் கொண்டிருந்த சமயம் அது. தமிழகத்திலும் மூலைமுடுக்கெல்லாம் ஒத்துழையாமை இயக்கம் முழு வேகத்தில் நடந்துக்கொண்டிருந்தது.

விருது நகர் வட்டாரத்தில் ஒத்துழையாமை இயக்கத்தை காமராஜ் பொறுப்பேற்று மிகவும் சிறப்பாகச் செயற்பட்டார்.

ஒத்துழையாமை இயக்கத்துடன் கதர்ப் பிரச்சாரம் ஆகியவற்றையும் இணைந்து விருது நகர் சுற்றுவட்டார்ம முழுமையிலும் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று செயற்பட்டார்.

விருது நகரைப் பொருத்த மட்டில் ஒரு தரம சங்கட நிலையைக் காமராஜ் சந்திக்க வேண்டியிருந்தது.

பிராமணரலாதாருக்காக என நடத்தப்பட்டு வந்த நீதிக் கட்சி விருதுநகர் வட்டாரத்து நாடார்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தது.

நடார்களை கீழ்த்தரப்பட்ட மக்களாக அந்த வட்டாரத்து மக்கள் பிற இனத்தினர் கருதித் தொல்லைகள் இழைத்து வந்தனர். சமுதாயப் பாகுபாட்டைத் தகர்த்தெறிவது நீதிக் கட்சியின் கொள்கைகளில் ஒன்றாக இருந்ததால் நாடார்கள் உற்சாகமாக நீதிக் கட்சியுடன் தொடர்பு கொண்டார்கள்.

நீதிக்கட்சி சுதந்திரப் போராட்டத்திற்கு எதிரான கருத்து கொண்டதாக இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாக அது செயற்பட்டுக் கொண்டிருந்தது.

விருதுநகர் வட்டாரத்து வசதிபடைத்த பெரும்புள்ளிகள் எல்லாம் நீதிக் கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்தனர. அவர்ளால் காமராஊ பல தொல்லை – தொந்தரவுகளுக்கு இலக்காக வேண்டி வந்தது. அவர்கள் காமராஜின் சுதந்திரப்போராட்ட முயற்சிகளுக்குப் பல வகைகளிலும் முட்டுக்கட்டை இட்டனர்.

நாடார்களுக்குச் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதை காமாராஜ் ஒப்புக்கொண்டார். இந்தமாதிரி அநீதிகளுக்கு நாடு சுதந்திரம் பெறாததே காரணம் என்றார் காமராஜ். தேசம் சுதந்திரம் பெற்றுவிட்டால் இந்த மாதிரியான அநீதிகள் தானாகவே நீங்கிவிடும் என்று அவர் வாதாடினார்.

நீதிக் கட்சித் தொடர்புடையவர்கள் அந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. என்றாலும் அவர்களுடைய ஆதிக்கத்தை அந்த வட்டாரத்தில் உடைத்தெறிவதற்காக தீவிரமான பிரச்சாரம் செய்து காமராஜ் அதில் வெற்றி பெற்றார்.

விரல் விட்டு எண்ணக்கூடிய செல்வந்தர்கள் தவிர நாடார் வகுப்பு இளைஞர்கள் காமராஜின் பிரச்சாரம் காரணமாக தேசிய இயக்கத்தில் உற்சாகமான தொடர்பு கொண்டனர்.

விருதுநகர் வட்டாரத்திலேயே ஒதுக்கித்தள்ள இயலாத ஒரு தேசிய சத்தியாக காமராஜ் உருப்பெற்று விட்டார்.

ஒத்துழையாமை இயக்கம் மிகவும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் சில பல காரணங்களை முன்னிட்டு ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி நிறுத்தி விட்டார்.

காங்கிரா இளைஞர்களுக்கு இது ஏமாற்றத்தை அளிப்பதாக இருந்தாலும், காமராஜ் சற்றும் சோர்வடையவில்லை. ஒத்துழையாமை இயக்கம் தவிர மதுவிலக்குப் பிரச்சாரம் போன்றவற்றில் தொண்டர்களை ஈடுபடுத்தினார். காமராஜ் தலைமையிலுள்ள தொண்டர்கள் கள்ளுக்கடை மறியலில் தொடர்ந்து ஈடுபட்டார்.

நாகபுரி கொடிப் போராட்டம்

1926 – ம் ஆண்டு நாகபுரிக் கொடி ஏந்திச் செல்லக்கூடாது என்று அரசு தடைபோட்டிருந்தது. அந்தத்டையை மீறுமாறு தொண்டர்களுக்கு காமராஜ் உத்தரவிட்டார்.

தேசமெங்குமிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் – அலை அலையாகப் புறப்பட்டு வந்து நாகபுரிக் கொடிப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைப்புகுந்தனர்.

நாகபுரிக் கொடிப் போராட்டத்திற்குத் தொண்டர்களை அனுப்பும் பொறுப்பினைக்காமராஜ் ஏற்றுச் செயற்பட்டார்.

காமராஜ் திருச்சியில் முகாம் ஒனுற் அமைத்துக்கொண்டு நாகபுரிப் போராட்டத்துக்கு தொண்டர்களை அனுப்பி வந்தார்.

கடைசியாக காமராஜரே, கொடிப்போராட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தாமே புறப்பட்டுச் சென்றார்.

அவர் போராட்டக்களத்தைச் சென்றடைவதற்குள் கொடிப்போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது. அரசு தடையைத் திரும்ப몮பெற்றுக்கொண்டுவிட்டது.

பாரத மக்கள் வாள் ஏந்திச் செல்வதைத் தடுக்கும் சட்டம அப்பொழுது நடைமுறையில் இருந்தது.

வாள் ஏந்திச் செல்வது பாரத மக்களின் உரிமை என்றும் அதைத்தடுக்கும் அரசு உத்தரவு பாரத மக்களின் உணர்ச்சிகளைப் புண்படுத்துவதாக்க்கூறி ஜெனரல் அவாரி என்பவர் வாள் போராட்டம் ஒன்றைத் தொடர்ந்தார். பாரதமெங்கும் அந்தப் போராட்டத்தின் பிரதிப்பலிப்பைக் காணமுடிந்தது.

தமிழ்நாட்டில் வாள் போராட்டத்தை காமராஜ் முன்னின்று நடத்தினார்.

வாள் தாங்கிய காங்கிரஸ் தொண்டர்கள் தெருக்களில் வீறுநடை போட்டனர்.

அந்தச் சமயத்தில் சென்னையில் சர்.சி.பி. ராமசாமி அய்யர் சட்ட மந்திரியாக இருந்தார். வாள் போராட்டம் தீவிரமடைவதைத் தடுக்கும் நோக்கத்தில் சர். சி.பி. ராமாசாமி அய்யர் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்.

மலையாளத்தில் மலபார் என்ற பகுதியைத் தவிர தென்னகத்தில் எங்கும் யாரும் வாள்எடுத்துச் செல்ல்லாம் என்று அனுமதி கொடுத்தது புதுச் சட்டம்.

வாள் போராட்டத்தின் துவக்கத்திலேயே காமராஜ் வெற்றியைச் சந்தித்துவிட்டார்.

காந்திஜி ஒத்துழையாமை போராட்டத்தைத் திடீரென நிறுத்திக்கொண்டதற்கு முக்கிய காரணம் ஒத்துழைமைப்போர் என்ற பெயரில் சிலர் வன்முறைச் செயலில் ஈடுபட்டதுதான்.

ஒத்துழையானை இயக்கம் நிறுத்தப்பட்டு விட்ட காரணத்தால் காங்கிரஸ் தொண்டர்கள் வட்டாரத்தில் பெருஞ் சோர்வு தென்பட்டது.

அந்தச் சந்தர்பத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும்ப ஆட்சிப் பொறுப்பினை ஏற்குமாறு பிரிட்டிஷ் ஆடிச் தரப்பில் சொல்லப்பட்டது.

ஆடிச்க்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்திவிட்ட பிறகு ஆட்சியினரின் அழைப்பை ஏற்று அதிகாரப் பொறுப்பை ஏற்கலாமா என்பது குறித்து காங்கிரஸில் வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்தன.

சட்டசபையில் பங்கெற்று சிறுகச் சிறுக அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று மோதிலால் நேரு. சி.ஆர். தாஸ் போன்ற் தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர்.

இந்தக் குழுவினர் தங்களுக்கென ஓர் அமைப்பினை அமைத்துக்கொண்டு அதற்கு ‘சுயராஜ்யக்கட்சி’ என்று பெயர் சூட்டினர்.

‘சுயராஜ்யக்கட்சி’க்கு தமிழகத்தில் சத்திய மூர்த்தியும், சீனிவாச அய்யங்காரும் பொறுப்பேற்றுச் செயற்படுத்தினர்.

சட்ட சபைகளை பகிஷ்கரிக்க வேண்டும் என்று குழுவில் முக்கியமாக ராஜாஜிபோன்ற தலைவர்கள் இருந்தார்கள்.

ராஜாஜி திருச்செங்கோடு ஆசிரமத்திற்குச் சென்று தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, கதர்ப்பிரச்சாரம் போன்ற நிர்மானப்பணிகளில் ஈடுபட்டார்.

தமிழகமெங்கும் சுற்றி வந்தார்

சட்டசபை ஏற்புக்குழுவினரின் தமிழ்நாட்டுத்தலைவரான சத்தியமூர்த்தியுடன் சேர்ந்து காமராஜ் தமிழகமெங்கும் சுற்றிச் சுழன்று பிராயணம் செய்து தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்தச் சந்தர்ப்பம் காமராஜின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும்.

இதுநாள் வரை விருதுநகர் சுற்றவட்டாரத்தில் மட்டுமே தேசப்பணியாற்றி வந்த காமராஜ் பரவலாக தமிழமெங்கும் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று மக்களைச் சந்திக்க முடிந்தது.

இதன் காரணமாக விசாலமான – அனுபவபூர்வமான அரசியல் அறிவினை காமரூ பெறமுடிந்தது.

அந்தச் சுற்றுப்பயணத்தின்போது மக்களின்பிச்சனையை காமராஜ் கண்ணுக்கு மெய்யாகக் கண்டார்.

ஒட்டுமொத்தமான தேசிய விடுதலையைப்பெற்றால் அல்லாதுமகளின் பிரச்சனைக்கு தெளிவாகத்தீர்வு காணுவது சாத்தியமே அல்ல என்ற திடமான முடிவுக்குக்காமராஜ் வந்தார்.

தாம் என்ன பணி புரிந்தாலும் காந்திஜியின் தலைமைக்கு, காங்கிரஸ் கட்சிக்கு எதிரனதாக அது இருக்கக்கூடாது என்பதில் காமராஜ் திட்டவட்டமான கருத்துகொண்டிருந்தார்.

சுயராஜ்யக்கட்சி காந்திஜியின் தலைமைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் முரண்பட்டுச் செயற்படுமோ என்ற ஐயப்பாடு காரணமாக அந்தக் கட்சியுடன் நெருக்கமான தொடர்பு கொள்ள காமராஜர் முதலில் தயக்கம் காண்பித்தார்.

காங்கிரஸ் கட்சி சுயாராஜ்யக் கட்சியினை ஏற்று, அது சட்டசபைகளில் பங்குபற்றலாம் என ஒரு தீர்மானம் மூலம் அனுமதி அளித்த பிறகே தமது முழு ஒத்துழைப்பையும் சத்தியமூர்த்திக்கு அளிக்க காமராஜர் முன் வந்தார்.

காமராஜர் தமிழகத்தில் பல கிளர்ச்சிகளில் ஈடுபட்டு தீவிரமாகத்தேசப் பணியாற்றினார்.

1857 – ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகம் என்ற சுதந்திரப்போரின்போது பாரத மக்களைச் சித்திரவதை செய்த ஜெனரல் நீல் என்பவரின் சிலை தமிழகத்தில் சென்னை மவுண்டு ரோடில் இருந்தது.

மக்களின் தேசிய உணர்ச்சிக்குச் சவாலாகத்திகழும் அந்தச் சிலையை அகற்ற வேண்டும் என்று ஒரு கிளர்ச்சி தமிழகத்தில் நடைப்பெற்றது.

அந்தக்கிளர்ச்சியில் காமராஜரும் முழுப்பங்கேற்றார்.

காந்திஜி சென்னை வந்திருந்த சமயம் நீல் சிலை அகற்றும் போராட்டத்துக்கு காந்திஜியின் ஆதரவைக்கோரிப் பெற்றார்.

ஆனால் அந்தச் சமயத்தில் சைமன் கமிஷன் பகிஷ்கரிப்புப் போர் தீவிர நிலையிலிருந்ததால் நீல் சிலை அகற்றும் கிளர்ச்சி தற்காலிகமாகத் தள்ளிப் போடப்பட்டது. 1927 – ம் ஆண்டில் சென்னையில் கூடிய காங்கிரஸ் மகாநாட்டில் ஜவஹர்லால் நேரு கலந்து கொண்டார்.

அந்த மாநாட்டில் நீல் சிலையைஅகற்றுவதில் காங்கிரஸ் கட்சி ஸ்தாபன ரீதியாக முன்வர வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தையும் கொண்டு வந்து காமராஜர் நிறைவேற்றினார்.

தமிழகத்தில் சைமன கமிஷன் பகிஷ்கரிப்பு இயக்கத்தையும் காமராஜர் பொறுப்பேற்று செயற்படுத்தினார்.

சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வித்தில் மாபெரும் ஹர்த்தாலை காமராஜர் தமது பொறுப்பில் சென்னை, மதுரை, தஞ்சை ஆகிய நகரங்களில் மிகவும் வெற்றிகரமாக நடத்தினார்.

காந்திஜி 1930 – ம் ஆண்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தண்டி உப்பு சத்தியாக்கிரகத்தை நடத்தினார். கடற்கரைக்குச் சென்று சட்டத்தை மீறி உப்புக் காய்ச்சுவது இந்த சத்தியாக்கிரகத்தின் முக்கியமான அம்சமாகும்.

மிகவும் சாமானியமான உணவுப் பொருளான உப்பைக் காய்ச்சிப் பயன்படுத்துவதற்குக் கூட பாரத மக்களுக்கு உரிமையில்லை என்பதைச் சுட்டிக் காண்பித்து சாமானிய பாமரமக்களிடமும் அரசியல் விழிப்புணர்ச்சியைத் தோற்றுவிப்பதே உப்பு சத்தியாக்கிரகத்தின் நோக்கமாக இருந்தது.

தமிழ்நாட்டில் காமராஜர் உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டார்.

இதன் விளைவாக காமராஜர் கைது செய்யப்பட்டு இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.

காமராஜர் சிறைப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்ட உடனே காமராஜின் பாட்டியார் அதிர்ச்சி தாளமாட்டாதவராகி நினைவிழந்து விழுந்துவிட்டார். அவரை உடனடியாக்க் குணப்படுத்த இயலவில்லை.

1931 – ம் ஆண்டு வாக்கில் அருடைய உடல்நிலை அபாய கட்டத்தை அடைந்தது. இறப்பதற்கு முன் காமராஜை ஒரு தடவை கண்ணாரக் காண வேண்டும் என்று விரும்பினார்.

அப்போது காமராஜர் பெல்லாரி சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அவருடைய உறவினர்கள் அனுமதி பெற்று பெல்லாரி சிறைக்குச் சென்று காமராஜை சந்தித்து பாட்டியின் உடல்நிலைப்பற்றி எடுத்துக்கூறி பரோலில் சென்று பாட்டியாரை கண்டு வருமாறு யோசனை கூறினார்கள்.

பாட்டியின் உடல்நிலை அறிந்து காமராஜர் மிகவும் வேதனைப்பட்டா. அவரை உடனடியாகச் சந்தித்து ஆறுதல் கூறவேண்டும் என்று அவருக்கு ஆவலாகத் தான் இருந்தது. ஆனால் பரோலில் செல்ல அவருக்குச் சற்றும் விருப்பம் இல்லை.

பரோலில் விடுதலை பெற்றுச் செல்வதாக இருந்தால் கிட்டதட்ட ஒரு சரணாகதிப் பத்திரம் எழுதிக் கொடுத்தாக வேண்டும். சிறையிலிருக்கும் ஒரு தேசத்தொண்டன் அவனுடைய சுயமரியாதை உணர்வுகளைப் பாதிக்கும வித்த்தில் நன்னடத்தைப்பத்திரம் எழுதிக்கொடுத்துவிட்டு சிறையிலிருந்து ஏகுவது இலட்சியத்துக்கே புறம்பானதாகும் என்று காமராஜர் கருதினார்.

அதனால் பரோலில் வர மறுத்துவிட்டார்.

மக்களின் மாபெரும் வரவேற்பு

காந்தி- இர்வின் ஒப்பந்தம் காரணமாக பாரதமெங்கும் சிறையிலிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் விடுதலையானர்கள். அப்போது காமராஜரும் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையாகி விருது நகர் திரும்பிய காமராஜருக்கு ரயில் நிலையத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டு காமராஜருக்குமலர் மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.

வரவேற்புக்கு நன்றி செலுத்தும் வித்த்தில் காமராஜ் அப்போது சொன்ன சொற்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.

“சாமானியத் தொண்டனான எனக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுப்பீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் எனக்குக் காண்பித்த அன்பாலம் மரியாதையாலும் எனக்கு அகம்பாவம் ஏற்பட்டு விடாமலிருக்குமாறு கடவுளைப்பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்” என்றார் காமராஜ்.

காமராஜ் அவர்களை ஒருதடவை பார்க்க வேண்டும் என்பதற்காகவே பாட்டியார் மரணப்படுக்கையில் கிடந்தார். காமராஜரைப் பார்த்துவிட்ட திருப்தியில் மகிழ்ச்சியில் இரண்டு நாட்களுக்குப்பிறகு அவருடைய உயிர் பிரிந்து விட்டது.

1931- ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்து தேசிய அரசியல் வாழ்வில் காமராஜ் மாபரும் நட்சத்திரமாகப் பிரகாசிக்கத் தொடங்கினார்.

தமிழ்நாடு காங்கிரஸில் பொறுப்பான பதவிகள் அவரைத் தேடி வந்தன. தமிழ்நாடு காங்கிரசின் அதிகார பூர்வமான செய்ற்குழு உறுப்பினராக்க் காமராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை கௌரவித்து நிறைவேற்ற பிரிட்டிஷ் ஆட்சி தவறிவிட்டது.

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்த காந்திஜி மாநாடு தோல்வியில் முடிவுற்ற காரணத்தால் வெறுங்கையுடன் நாடு திரும்ப வேண்டி வந்தது.

இங்கிலாந்திலிருந்து பாரதம் திரும்பிய காந்திஜி பம்பாய் வந்து சேர்ந்த உடனே கைது செய்யப்பட்டார். அப்போது வைசியராயாய்ச் செயல்பட்டவர் லார்டு வெல்லிங்டன். அவர் தேசமெங்கும் கடுமையான அடக்கு முறையை ஏவிவிட்டார்.

தேசமெங்கும் காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு பல வகைகளிலும் கொடுமைப் படுத்தப்பட்டனர்.

காமராஜ் மீது சுமத்துவதற்கு திட்ட வட்டமானு குற்றச்சாட்டு கிடைக்காத்தால் அவர்மீது ஜாமீன் வழக்குத் தொடரப்பட்டது. உடன் அவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சதிக் குற்றச்சாட்டுகள்

வேலூர் சிறையில் மீரத் சதி வழக்குக் குற்றவாளியாக அடைக்கப்பட்டிருந்த பகத்சிங்கின் தோழர்களான ஜெய தேவ் கபூர், கமலநாத் திவாரி ஆகிய இருவரையும் காமராஜ் சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர் அந்த இரண்டு தேசபக்த மாவீர்ர்களும் தூக்கிலிடப்பட்டனர்.

வேலூர் சிறையில் தேசபக்த புரட்சி வீர்ர்களுடன் தொடர்பு கொண்டுது தீவிரச் சதி ஒன்றுக்குத் திட்டமிட்டதாகப் பின்னர் காமராஜ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

வங்காள கவர்னரான ஜான் ஆண்டர்சன் என்பவர் நீலகிரிக்குக வருகை தரும்போது அவரைச் சுட்டுக் கொல்ல காமராஜரும் அவர் நண்பர்களும் திட்டம் தீட்டியதாக அரசு குற்றம் சாட்டியது.

அந்த வழக்கில் காமராஜ் சார்பாக ஆந்திர கேசரி டி. பிரகாசம் ஆஜராகி அரசின் பொய்க்குற்றச்சாட்டுகளைத் தமது வாதத் திறமையால் தகர்த்தெறிந்து காமராஜை விடுவித்தார்.

மற்றொரு வழக்கும் காமராஜ் மீது சுமத்தப்பட்டது.

விருதுநகர் தபால் நிலையத்தின் மீதும் ஸ்ரீ வில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்தின் மீதும் வெடி குண்டு வீசியதாக காமராஜ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

பிரபல தேசபக்த வழக்கறிஞராகத் திகழ்ந்த ஜார்ஜ் ஜோசப் காமராஜ் மீது சாட்டப்பட்டது பொய்க்குற்றச்சாட்டு என்பதை நிரூபித்துக் காண்பித்து காமராஜ் விடுதலை பெற உதவினார்.

காங்கிரஸ் செயலாளரானார்

1932 – ம் ஆண்டு பாரதமெங்கும் சட்டசபைத் தேர்தல்கள் நடத்துவது என்று பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்து அதற்கான ஆயத்தங்களைச் செய்யத்துவங்கியது.

நேருஜி அப்பொழுது அகில இந்தியக்காங்கிரஸ் தலைவராக இருந்தார்.

கா