பெரியார் ஒரு வரலாறா? ஒரு நெருப்பாறா?
கருடனின் மூக்கு
கதிரவனின் பார்வை
சீறும் சிங்கத்தின் பிடரி
பேரறிவுக்குரிய அசைந்தாடும் தாடி
சிந்தனைச்சிறகு விரிக்கும் பரந்த நெற்றி
போர்பிரகடன – வெங்கலக்குரல்
கம்பீரம் பூக்கும் கட்டுடல்
புரட்சி பூரிக்கும் திருமுகம்
– இவர்தான் பெரியார்.
அறிவிற்காக இமயத்தின்
ஆகாயத்தையே தொட்டுப்பார்த்தவன்,
பாஞ்சாலங்குறிச்சியின் வீரத்தைப்பெற்று
பழமைப்பாவிகளுக்கு நடுவில்
பகுத்தறிவைப் பயிர்செய்தவன்.
ஆயகலைகள் அறுபத்திநான்கானாலும்
அதையும் தூயதாவென
ஆய்வு செய்யவேண்டுமென
ஆணை பிறப்பித்தவன்.
எட்டுத்திக்கிலும் கொட்டி முழக்கும்
கருஞ்சட்டைப் படைகளை
எட்டுதிசைகளிலும் நிறுத்திவைத்து
கட்டியங் கூறவைத்தவன்,
மண்ணுக்கு வந்த சண்டை – மாபாரதம்,
பெண்ணுக்கு வந்த சண்டை – இராமாயணம்,
இது மூடத்தனத்தையும்
திராவிட இனத்தையும்
காட்டிக்கொடுத்த கதைகளே – என்று
முச்சந்தியில் நின்று முழங்கியவனும்
அவன் ஒருவனே.
பெண்களுக்கு தாலிகட்டுவதும்
வேலி போடுவதும் ஏன்?
ஆண்களுக்கும் தாலிகட்டி
வேலி போட்டாலென்ன? – என்று
திருமண மண்டபத்திலேயே கர்ணகடூரமாக
கேள்வி கேட்டவனும் அவன் ஒருவனே.
பார்த்திபனுக்கு இரதத்தை ஓட்டி
பகவத்கீதையை கொடுத்தவன் – ஒருவன்;
பகுத்தறிவு இரதத்தை ஓட்டி
தன்மானத்தையே மீட்டுக்கொடுத்தவன் – இன்னொருவன்;
அவரன்றோ தந்தை பெரியார்.
புத்தியும் கத்தியை போன்றதே
இரண்டையும் அடிக்கடி சாணைப்பிடிக்கவேண்டும்.
இல்லையெனில் துருபிடுத்துவுடும்.
நினைவுகளும் கனவுகளும் வானவில்லைபோன்றதே
முன்னது குணமாறும் பின்னது நிறமாறும்!
என்ற தத்துவ வெடியை வீசியவனும் அவனே!
அரசியலும் சட்டமும் அடிக்கடி பிரித்துப்போடும்
பந்தலைப்போன்றது; எதுவும் புனிதமானதல்ல?
கற்பனையா……? !
கவிதையா……..? !
காவியமா………? !
ஓவியமா……….? !
தெய்வீகமா……? !
மொழியா……….? !
கலையா………..? !
எல்லாமே விசாரணைக்குட்படுத்தவேண்டும்
என்றவனும் அவன் ஒருவன்தானே!
இருபத்தியாறு எழுத்துக்களை வைத்துக்கொண்டு
ஆங்கிலேயன் அகிலத்தையே ஆண்டான்.
இருநூற்று பதினாறு போன்ற எண்ணற்ற
எழுத்துக்கள் இருந்தும் என்ன சாதனை?
என்று கடாவியதும் அவனன்றோ ! !
ஜனநாயகம் எனப்படுவது
சகுனிகளின் சூதாட்டம்;
போக்கிரிகளின் பித்தலாட்டம்;
என்று எவரும் செரிக்க முடியாத
கரடுமுரடான கருத்தினை
விதைத்தவனும் அவனே!
அவர் கனவுகள் எல்லாம் காட்சிகள் ஆகின
அக்காட்சிகளை எல்லாம் மாட்சிமைமிக்கதாக ஆக்கினான்
அவரது ஒவ்வொரு அத்தியாயமும் சரித்திரம் ஆனது
அந்த சரித்திரங்கள் எல்லாம் சாகாத
வரம்பெற்ற சகாப்தம் ஆகியது.
அவரின் பேராறாகிய வரலாற்றை காண்போமா…..
பிறந்ததும்; வளர்ந்ததும்
கொங்கு மண்ணின் புகழ்
பொங்கும் நகரம் ஈரோடு – அதற்கு
காவிரியன்னையின்
தாலாட்டுப் பாட்டுமுண்டு!
காளிங்கராயன் அருளால்,
செந்நெல்லும் செவ்வாழையும்
மஞ்சளும் இஞ்சியும் கரும்பும்
பச்சை பட்டாடையாக
நகரைச் சுற்றிலும் மிளிரும்;
நகரின் மார்பிலே ஆரமாக இரயில் நிலையம்.
வரலாறு பேராறாகி,
ஓடுதற்கு காரணகாரியமாகிற
கவிதைக் காவியமாகிற
ஒரு தொடக்க நாள்…..
புரட்சிப் புதுப்பாட்டின்
வெளியீட்டுத் திருநாள்……
1879 – ஆம் ஆண்டு
செப்டம்பர் திங்கள் 17 – ஆம் நாள்…..
சின்னத்தாயம்மாள் என்ற பெண்
அன்னையானாள்,
ஒரு பொன்னார் மேனியனை
பெற்றெடுத்தாள் –
அவர்தான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர்
வெங்கிடசாமி நாயக்கரும்
சின்னத்தாயம்மாளும்
வறுமையின் பிடியிலும்
ஏழ்மையின் கொடுமையிலும்
சிக்கித்தவித்திட
சின்னத்தாயம்மாள் செங்கல் சூளைக்கு
எட்டுகாசு கூலிக்குஒரு நாளுக்கு, சென்றார்.
கடும் வெய்யிலிலே
கல்லுடைக்கும் வேலைக்கு
பொழுதுகூலி எட்டணா துட்டு மட்டும்
வெங்கிடசாமி நாயக்கருக்கு.
குறிப்பு: ஒரு ரூபாய்க்கு நூற்று தொன்னூற்றிரண்டு
காசுகள், ஒரு ரூபாய்க்கு பதினாறு அணா.
விடியலை நோக்கி….
கணவனும் மனைவியும்
அல்லும் பகலும் அயராது
உதிரம் சிந்தி உழைக்க உழைக்க,
சிறுகச்சிறுக பொருள் பெருகியது.
மேலும்,
இல்லத்தில் நெல்லுக்குத்தி
அரிசிக்குருனை விற்பனை
வியாபாரமும் செழித்தது.
சிறுதுளி பெருவெள்ளமானது.
இதனினூடே,
வெங்கிடசாமி நாயக்கர்
மஞ்சள் தரகு மண்டி தொடங்கிட,
மங்கலம் வாசலில்வந்து மலர்ந்தது.
பொன்னும் பொருளும் மண்ணும்வந்து குவிந்தது.
குழந்தைகள் செல்வச்செழிப்பிலே குளித்தன.
வீட்டிலே பாட்டும்
பக்தியும் கூத்தும்
கோலாகலமாக முகிழ்ந்தன.
அன்றாடம்,
சமயச்சொற்பொழிவுகள்
நிகழ, நிகழ
தொழுகையும், வழிபாடும்
மிகுந்தன.
குடும்பத்தில்
வைதீகம் வலம்வந்து
வலுவாக வேரூன்றியது.
புராண – புராதன
செல்வாக்கும் செல்வமும் புடைசூழ
வெங்கிடசாமி நாயக்கர்
சீமானாக ஏற்றம் பெற்று
போற்றுதலுக்குரியவரானார்.
கோவை வரைக்கும்
குடும்பத்தின் பெயர்
கொடிகட்டிப்பறந்தது.
ஈ.வெ. ராமசாமி பால் மணம்
மாறாத பருவத்தில்
சிற்றன்னையின் அரவணைப்பில்
சிறிது காலம் சுழன்றார்.
கெட்டிக்காரனாகவும், படுசுட்டித்தனமாகவும்
முரட்டுத்தனமான போர்க்குணமும்
நிரம்பிய அவனை அவனின்
சிற்றன்னையால் கட்டிக்காக்க முடியவில்லை.
ஈ.வெ. ராமசாமிக்கு ஆறுவயது – அடர்ந்த கருகருமுடி;
சுந்தரவதனம்;
கன்னங்களில் கனிகளின் வெளிச்சம்!
எழில்மிகு தோற்றப்பொலிவு!
அந்நிலையில் அவனது தந்தை
அவனை ஒரு திண்ணைப்பள்ளியில் சேர்த்தார்.
பள்ளியில் பிள்ளைகளுடன் துள்ளித்திரிந்து
தாயின் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து
இஸ்லாமியத் தெருவிலும் வீடுகளிலும் சென்று உண்டும் உறங்கியும்
எல்லையற்ற குறும்புகளை அள்ளித்தெளித்து
சிறுவர்களின் குறுந்தலைவரானான்.
ஆசிரியருக்கே எதிரும் புதிருமானான்.
வடக்கென்றால் தெற்கென்றான்.
கிழக்கென்றால் மேற்கென்றான்.
சிகப்பென்றால் கருப்பென்றான்.
அவனை எவரும் கட்டிமேய்க்க முடியவில்லை.
தாய்க்கோ சொல்லொண்ணா கோபம் – – –
தந்தைக்கோ மகன் பிடிக்கவில்லையே
என்ற தாகம் – – –
எல்லா வட்டங்களிலும் முட்டிமோதி
ராமசாமியின் அட்டீழியங்கள் அதிகரித்து விட்டன.
அவனின் கரங்களிலும், கால்களிலும்
சங்கிலியை பூட்டி எங்கும்
செல்லமுடியாதவாறு ஒரு குண்டையும்
இணைத்து தண்டனை வழங்கப்பட்டது.
அதனையும் தூக்கிக்கொண்டு
நண்பர்களைத்தேடி ஓடிவிடுவான்.
அவனது பள்ளிப்படிப்பு நான்குஆண்டுகளோடு
முடிவுக்கு வந்தது.
பத்தாவது வயதில் மஞ்சள் மண்டியில்
பொறுப்பிலே அமர்த்தப்பட்டான்.
என்னே மாற்றமிகு ஆற்றல்! வணிகத்துறையிலே
அவரின் பேராற்றல் கண்டு
எல்லோரும் வியந்தனர் – வியர்த்தனர்.
பொருளை விற்பதிலும் – வாங்குவதிலும்
வாடிக்கையாளர்களை வேடிக்கையாகபேசி
இலாபத்தை ஈட்டுவதிலும் கணக்கை கட்டுவதிலும்
விற்பனையாளராக நிமிர்ந்து நிற்பதுகண்டு
தந்தை பெருமிதம் கொண்டார்.
நாளும் கோளும் நகர நகர
வாலிப வசந்தவேலி சூழசூழ,
சூகத்தை நாடி மனம் ஓடியது அவனுக்கு,
அவரின் பவள மேனியிலே
பட்டாடை பவனி வந்தது.
விரல்களிலே தகதகவென மின்னும்
தங்கமோதிரமும், சங்கிலியும்
மார்பை வசீகரிக்க வலம் வந்தான்.
வனம் போன்ற வனப்புடன் உடம்பும்
காட்டாறு போன்ற அறிவு
உரையாடலில் எவரும் எதிர்கொள்ளமுடியாத திடம்
படித்தவரும் பண்டிதரும் இதிகாச இலக்கிய
காவிய மேதைகளும் கூட –
அவரின் கேள்விக் கணைகண்டு
முடமாகி நடுங்கினர்.
இது இவ்வாறு இருக்க,
ஈ.வே. ராவுக்கு வயது பதினெட்டு;
கட்டிளங்காளை;
கரும்பென இனிக்கும்
இளமை அரும்பிடும் பருவம்!
கன்னியர் பக்கம் கண்கள் சுழன்றன.
பையப்பைய அவர் மனம்
உல்லாசத்தின் பக்கம் சாய்ந்தது.
வசதியும் வாய்ப்பும் வேறு தூண்டியது.
பணக்காரபையன் பக்கம்
பக்கமேளம் கொட்ட பத்துபேர்;
கன்னியரின் கடைக்கண் வீச்சிலே,
அதன் பேச்சிலே,
இடையிலே, நடையிலே, அவரின்
மனம் மயங்கிடக்கிறங்கிட – – –
பகலிலே வர்த்தகம் – – –
இரவிலே விலைமகளிரோடு
காதல் களியாட்டம்.
திருமணத்தில் கிடைத்த அருங்குணவதி
தாயும் தந்தையும் மகன்
தறுதலையாவதைக் கண்டு
திடுக்கிட்டனர் – திகைத்தனர்.
காரியம் கெட்டுவிட்டதே
என கையை பிசைந்தனர்.
கெட்டுப்போகாமல் தடுக்க
கால்கட்டுப் போட முயன்று
மகனிடம் ஒரு வகையில்
ஒப்புதல் பெற்றனர்.
மகனோ,
ஆனால் ஒரு நிபந்தனை – – –
அந்த நிலையிலும்
தெளிவான சிந்தனையோடு
“தனது தாய் சின்னத்தாயம்மாளின்
சேலம் தாதகாபட்டியைச் சார்ந்த
ஒன்றுவிட்ட அண்ணனின் மகள்
நாகம்மையாரைத்தான் திருமணம்
புரிந்துகொள்வேன்” என
உறுதிபட புகன்றான்.
குறிப்பு: கல்யாணம் ஆகி கொஞ்சவருசம்
ஆனவுடனேயே நாகம்மைக்கு
நாகம்மையார் குடும்பம்
வறுமைக்குரியது.
ஆயினும்
நாகம்மையார் வடிவழகி!
சேலத்து மாங்கனி நிறம்!
இவள், அவர் மனதை
கவர்ந்த ஆரணங்கு.
இருப்பினும்,
பணத்தோடும் பலத்தோடும்
பல்வகை பசையோடும்
இசைந்த தங்களின்
சுற்றுச் சூழல்களுக்கொவ்வ
மணமகள் இல்லத்தார் –
உறவாக இருப்பினும்
சிறப்பாக இல்லையே என
தாய்க்கும் தந்தைக்கும்
வெகுவாக மணக்குறை உண்டு.
இருந்தாலும்
ஈ.வெ.ராவின் பிடிவாதத்திற்கு முன்
தாய் தந்தையரின் தடுப்புச் சுவர்
தவிடு பொடியானது.
குறிப்பு: ஒரு குழந்தை பொறந்து செத்துப்போச்சு
அந்தக் குழந்தையை நான் பார்க்கவுமில்லே
ஈ.வெ.ராவின் கட்டற்ற வாழ்க்கைக்கு
இது ஒரு முற்றுப்புள்ளி –
என்று நவில இயலாது.
ஒரு பற்றுக்கோலாக
நாகம்மாள் என்ற நங்கை
வந்து சேர்ந்தாள்.
ஒற்றை புறா
இரட்டைப் புறாவாகி
வானத்தில் சிறகு விரித்தன.
அதாவது அவர் விருப்பத்திற்குரிய
ஒரு புதிய திருப்பம் – – –
1898 – ஆம்ஆண்டு திருமணம் முடிவுற்றது.
அப்பொழுது
ஈ.வெ.ராவுக்கு வயது பத்தொன்பது
நாகம்மைக்கு வயதோ பதிமூன்று.
திருமணம் ஆகி இரண்டாண்டுகள்
உருண்டோடின.
நாகம்மாள் ஒரு பெண் குழந்தையை
ஈன்றாள்.
குறிப்பு: அஞ்சு மாசம் ஆச்சு, அதுக்கும் எனக்கும் எந்த
தொடர்புமில்லே. எனக்கு இவ்வளவுதான். ஈ.வெ. ரா.
அந்த குழந்தையோ
ஆறாவது மாதத்தில்
இறப்பெய்தியது.
ஈ.வெ.ரா. குழந்தையை
உச்சிமுகர்ந்தாரா?
இல்லை.
கொஞ்சினாரா?
இல்லை.
குறைந்தபட்சம் பார்த்தாரா?
அதுவும் இல்லை.
அதற்கு மாறாக,
குழந்தைப்பேறு என்பது
கொடுமையிலும் கொடுமை
என்ற முடிவுக்கே வந்தார்.
அதன் விளைவு,
ஈ.வெ.ராவின் அந்தரங்க
சிந்தனைச் சுரங்கம்
சுழன்றது, சூடானது,
பிள்ளைகள் அதன் தொல்லைகள் தேவையா?
என்ற கேள்விக்கணைகள்
எழுந்தும், விழுந்தும் ஊஞ்சலாடியது.
குறிப்பு: கொங்கு நாட்டு திருமணம் மரபுக்குறிய ஒன்று,
அருமைக்காரர் திருமணம் ஏற்பதற்குரிய ஒன்று – பெரியார்.
அவ்வளவு ஏன்?
இனிக்குழந்தையே தேவையில்லை
என்ற எல்லைக்கே சென்றுவிட்டார்.
மனைவியையும் சம்மதிக்க வைத்துவிட்டார்.
அப்படி தேவையெனில்
தத்துக்குழந்தை ஒன்றை எடுத்து
தாலாட்ட, பாராட்ட, சீராட்ட
முடியாதா என்ன?
இஃதெப்படி?
அவர் ஒரு
வினோதமான மனிதர்!
விந்தையான மனிதர்!
வியப்பான மனிதர்!
ஏன்?
விபரீதமான மனிதர்கூட!
யாரைப்பற்றி அவருக்கென்ன?
இதனினூடே,
நாகம்மாள் குடும்பப் பொறுப்பினை
செம்மையாக ஏன்? செய்நேர்த்தியாக
செய்து வந்தாள்.
மாமன் மாமியின் மணம் கோணாமல்
அதிகாலையில் எழுந்து நீராடி
புனிதக் கடமைகளை
புன்னகையுடன் ஆற்றிடுவாள்.
கணவனுக்கு வேண்டிய
பணிவிடைகளையும் செய்யவேண்டும்.
ஈ.வெ. ரா. வோ சிக்கனமென்ற
பெயரில் அழுக்கேறிய ஆடைகளையே
வாரக்கணக்கில் மாதக்கணக்கில்
கூட பயன்படுத்துவார்.
அவர் குளிக்கவே விரும்பாத ஒரு
அதிசயமான மனிதரும்கூட,
அவருக்கும் சுத்தத்துக்கும்
சுகாதாரத்துக்கும் வெகுதூரம்.
அவரை கனிவான கட்டளையுடன்
குளியலறைக்கு இழுத்துச்சென்று
குளிக்க வைத்து வெளுத்த துணிகளை
உடுத்த் செய்வாள்.
ஈ.வெ.ரா இறைச்சி, உணவை
விரும்பி உட்கொள்பவர்.
கணவனுக்கு அசைவ உணவை
சமைத்தபிறகு குளித்து,
மாமன் மாமிக்கும் தனக்கும்
ஆகாரத்தை தயார் செய்து
கொள்ளவேண்டும்.
இப்படி இப்படி,
நாகம்மாள் பொறுமையின் கடமையின்
சிகரமானாள்.
பொறுப்பின் இருப்பானாள்
அக்குலத்திற்கே ஒளிவிளக்கானாள்.
அந்த இல்லத்தின் நல்லறமானாள்.
ஈ.வெ.ரா. என்ற காற்றாடி
நாகம்மாள் என்ற நூலிலே
நன்றாகப்பறந்தது.
தந்தையோடு உறவு முறிவும் – துறவும்
வணிகம் பெருகப் பெருக
மிட்டா மிராசுகளும் – ஜமீன், ஜாகீர்களும்
நிலச்சீமான்களும் – பூமான்களும்
ஆளுகைக்குரியவர்களும் – அரசு அலுவலர்களும்
மொட்டு மலர மலர வட்டமிடும்
வண்டுபோல ஈ.வெ.ராவை சுற்றிச் சூழ்ந்தனர்.
அவர்களை வரவேற்றுப் பாராட்டுவதும்
விருந்து வைத்து கண்ணும் கருத்துமாக
கவனிப்பதும்; அவருக்கு அன்றாட
வேலைகளில் ஒன்றாகி விட்டது.
இன்னும் ஒருபடி மேலேறி
செப்ப வேண்டும் எனில்
குப்பி குப்பியாக மதுவை
ஆற்றுநீர் போல் அவர்கட்கு
ஊற்றி ஊற்றி கொடுக்கவும்
பாராட்டும் உபசரிப்பும் செய்யவுமுரிய
ஒரு நெருக்கடிக்கு ஈ.வெ.ரா.
ஆளானார் என்றாலும்,
ஒன்றில் மட்டும் திட்டவட்டமான
உறுதியுடன் ஈ.வெ.ரா. நின்றார்.
குறிப்பு: ஜனநாயகம் போக்கிரிகளின் சூதாட்டம், – ஈ.வெ. ரா.
ஆம்; ஒரு சொட்டு மதுவைக்கூட
அவர் நாவிலே வைத்ததில்லை, சுவைத்ததில்லை.
அவரை பொறுத்த அளவிற்கு
வாழ்நாள் பூராவும் மதுவை
விலக்குகின்ற மாமனிதனாகவே இருந்து வந்துள்ளார்.
இது ஒரு ஆச்சரியகரமானதன்றோ!
ஒன்றுமட்டும் இதில் நன்றாகத் தெரிகிறது.
எந்த ஒரு சுற்றுச்சார்பில்
ஈ.வெ. ரா இருப்பினும் அந்த
எந்தவொரு சார்புக்கும் அவர் இரையானதில்லை.
அதனை இயக்குகின்ற மூலசக்தியாகவே
இயங்கினார் என்பதே நிதர்சனமாகும்.
நிரூபணமும் ஆகும்.
இவை இங்ஙணமிருக்க
ஈ.வெ. ராவின் தந்தையோடு அவருக்கு
முரண்பாடு வேறுபாடும் முற்றிவந்தது.
அவரின் தந்தையோ அவரை கடுமையாக
சினந்து கொண்டார். இருவருக்கும்
இடையிலிருந்த தந்தை தனயன்
என்ற உறவுப்பாலம் உடைந்தது.
ஈ.வெ.ராவின் மனம் பெரிதும்
துயருற்று துன்பத்தால் துவண்டுபோனது.
சுக துக்கங்களின் சூடுதாங்காது
அன்பு என்ற கண்ணாடிப் பாத்திரம்
உடைந்துமனம் விசாரணைக்களமானது.
காற்றோடு கலந்த புகையானது!
உருகும் மெழுகானது!
தீயின் புழுவானது!
பற்றற்ற தன்மையை ஒற்றிப்பற்றி
துறவுக்கோலம் பூண்டது.
விஜயவாடாவுக்கு விஜயம் செய்வதென
ஒரு விரைவான முடிவுக்கு வந்தார். ஈ.வெ.ரா.
விஜயவாடாவைச் சென்றடைந்தார்
விஜயவாடாவுக்குள் நுழைந்தவுடன்
நேராக ஈ.வெ.ராவும் அவரின் இரு
நண்பர்களும் ஐதராபாத் சென்றனர்.
வீதியிலே வீடுவிடாக தெருவினில்
திருவோடு ஏந்தி இச்சையுடன்
பிச்சை எடுக்கலானார்.
தங்கத்தட்டில் உணவுண்டு வெள்ளிக்
கிண்ணத்திலே கனிச்சாறறுந்தி
பன்னீரிலே வாய்க்கொப்பளித்து பஞ்சு –
மெத்தையிலே படுத்துறங்கிய ஈ.வெ.ராவா,
நெற்றியிலே நீரணிந்து
தலைமொட்டையுடன்
கொட்டை கட்டி காவி
உடையணிந்து சன்னியாசிக்
கோலத்துடன் . . .. . . .
இஃதென்ன காலத்தின் கோலம்!
என்னென்போம்
ஏதேன்போம்
விதியென்போம்
மதியென்போம்
ஏனோ இக்கதியென்போம்
அப்படியாவது அவரின் ஆன்மாவிற்கு
அமைதி கிடைத்ததா?!
ஆழ்மனம் இன்புற்றதா? !
பேரின்ப வாசல் திறந்ததா?!
சொர்க்கத்தின் நழலை காணலுற்றாரா? !
இல்லை….. இல்லை…… இல்லை……..
இருந்தும் மனப்போர்களத்தோடு இரு
நண்பர்களுடன் தொடர்ந்து காசிக்குக் சென்றார்.
இறுதியில்
சோற்றுக்காக சத்திரங்களில் மன்றாடினார்
பசி! பசி!
பசி! பசி!
என்றது. வயிறு.
வெளியிலே வீசிஎறிந்த எச்சிற் இலை
பருக்கைகளை பொறுக்கித் தின்று
வயிற்றை கழுவினார்.
அங்கேயாவது,
முற்றும் துறந்த முனிவரைப் பார்த்தாரா?
பக்த சிரோன்மணிகளை கண்டாரா?
காமுகனைக் கண்டார்
கள்ளனைக் கண்டார்
கஞ்சா குடியினைக் கண்டார்
கபட வேடதாரிகளைக் கண்டார்.
பக்தி என்பது பகல்வேசம் என்பதைக்
கண்டார். அதனின்றும் விண்டார்.
சன்யாசி வாழ்க்கைக்கு முற்றாக
முழுக்கு போட்டுவிட்டு
ஹைதராபாத் வந்து சேர்ந்தார்.
எப்படியோ தந்தையாருக்கு
செய்தி தெரிந்தது
ஆவலுடன் மகனை காணலுற்றார்.
மகளைக் கட்டிப்பிடுத்துக் கொண்டு
கண்ணீர் உகுத்து
பந்த பாசத்தை வட்டியும் முதலுமாக
கெட்டி மேளம் கொட்டி வரவு வைத்தார்.
ஈ.வெ.ராவை இட்டுக் கொண்டு
ஈரோடு வருகையுற்றார்.
அப்பொழுது ஈ.வெ.ராவுக்கு
வயது இருப்பத்தி ஐந்து
குடும்பத்தில் குதூகலமும்,
குற்றால அருவியொத்த
மகழிச்சியும் பெருக்கெடுத்தோடியது.
தாய் சின்னத்தாயம்மாளும்
மனைவி நாகம்மாளும்
பேரானந்த தோணியிலே நீந்தினார்.
கடும் வறட்சியில் குடிக்க குளிக்க,
நீர் கிடைத்தது போல்…..
நீண்ட இருளுக்கு பின் ஒளி
வந்ததே போல்….
வறுமையில் வதைந்தவனுக்கு
வாசலுக்கே கரீவூலம் வந்ததைப்போல்….
குடும்பம் உற்சாக இரதமேறி
வலம் வந்தது.
வளம் கொழிக்கும் வசிகமும் – புகழ் செழிக்கும்
பொது வாழ்வும்.
‘ஈ.வெ.ராமசாமி மண்டி’ என பெயர்சூட்டி
புதுப் பொலிவுடனும் பொறுப்புக்களுடனும்
வியாபாரச் சிறகுகள் கொடுத்து
சுதந்திரமாக பறக்க
ஈ.வெ.ராவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
1905-1919 பதினான்கு ஆண்டுகள்;
வரலாறு, வசந்தம், வளர்பிறை
புகழாரம் அவர் காலடியில்
மண்டியிட்டுக் கிடந்தன.
பணம், புகழ், மணம்
தினம்தினம் கூட்டலாகி, பெருக்கலானது.
வணிகத்துறையில் படையுடன்
புடைசூழ சக்ரவர்த்தியாக திகழ,
ஈ.வெ.ரா சுட்டுவிரல் நீட்டிய
தைசையெல்லாம் நித்திலம் கொட்டியது.
அவர் பார்வை பட்ட இடமெல்லாம்
பசுமை கொஞ்சியது.
தொட்ட விடமெல்லாம் பொன்
ஒட்டிக் கொள்ள கெஞ்சியது.
குறிப்பு: தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி
தமிழ் புராண இலக்கியங்கள் காட்டுமிராண்டி இலக்கியங்கள்
தமிழன் சாமி காட்டுமிராண்டி சாமி – ஈ.வெ.ரா.
மேனியெங்கும்,
பளபளக்கும் பட்டாடை
கழுத்திலே பொன் சங்கிலி
கரங்களிலே தங்கக் காப்பு
காதுகளிலே வைரக் கடுக்கண்
வாழிலே சிகரெட் அல்லது
வெள்ளைச் சுருட்டு
வெற்றிலை பாக்கு மென்று
சிவந்த உதடுகள் தோற்றத்துடன் நடமாட:
ஈரோட்டின் நகர மன்றத் தலைமை
அறங்காவல்த்துறைத்துணைத் தலைமை
வணிகச் சங்கம்
நாயுடு சங்கம்
உழவர் சங்கம்
சன்மார்க்க சங்கம்
கௌரவ நீதிபதி பொறுப்பு
சங்கீத சபா
இது போன்ற இன்னபிற இருபத்தியொன்பது (29)
பொறுப்புக்களில் தன்னிகரற்ற
நிர்வாக திறனை நிலைநாட்டினார்.
குறிப்பு: எப்படிப்பட்ட நம்பிக்கையற்ற காரியத்தை நான்
ஏற்றுக்கொண்டாலும் நாணயமாகவும் அதிக
கவலையுமாகவே செய்து வருவேன் -ஈ.வெ.ரா.
நகரும், ஊரும், தெருவும்
நாயகன்
மாநாய்க்கன்
என்று பலப்பலவாறு போற்றின.
அன்றாடம் அன்றாடம் தினசரிகளைப் படிக்கவும்
கருத்துக்களை வடிக்கவும் கற்றுத்தேர்ந்தார்.
வரவர காங்கிரஸ் மாபெரும் இயக்க
விருச்சத்தின் கிளைகளை, இலைகளை
காய்களை கனிகளை அதன்
மீதூர்ந்த பறவைகளை
கணக்கெடுக்கலானார்.
காங்கிரஸ் காற்று
அவர் மீது வீசியது.
ஈர்க்கப்பட்டார்.
அதன் வயப்பட்டார்.
சுவாசித்தார்.
சில்க்கூட்டங்களையும் நடத்தினார்.
சிற்சில கூட்டங்களிலும் பேசினார்
வரதராஜ நாயுடு போன்ற
திக்கெட்டும் புகழ்கொட்டும்.
ஒப்பற்ற தலைவர்களும்
குறிப்பு: எப்படிப்பட்ட தன்னம்பிக்கையற்ற காரியத்தை நான்
ஏற்றுக்கொண்டாலும் நாணயமாகவும் அதிக
கவலையுமாகவே செய்து வருவேன் -ஈ.வெ.ரா.
இராஜரிஷியொத்த இராஜாஜி போன்றோரும்
அவரை கண்டு கேட்டு உண்டு உயிர்த்து
அவர் இல்லத்தை
பொதுமையாக மாற்றினார்.
இந்த நேரத்தில் இதனைச் சொல்லத்தான் வேண்டும் ஆம்
ஈ.வெ.ராவை
படுகஞ்சனென்றும்
கலநெஞ்சனென்றும்
நெருக்கமாணவர்களுக்கு கூட
இரக்கம் காட்டாதவர் என்ற கூற்று
பொய்யானது என்பதற்கு
எடுத்துக்காட்டாக தங்கள் குடும்பத்தின் வரவான
இருபதாயிரம் ஒத்த மொத்தத்தின் வருடத்தொகையின் ஒரு
அறத்துறைகளுக்கு ஒதுக்கியது.
மேற்கூரியவற்றை மறுக்கிறது அல்லவா?
அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி மறுக்க மறுக்க
இதனைச் செய்தாரென்றார் எவ்வளவு
மனிதாபிமானத்தில் மலையேறி நின்றால்
இதனைச் செய்திருக்க முடியும்? !
தந்தையின் மறைவும் – நீதிக்கட்சியின் உறவும்
1911 – ம் ஆண்டு தந்தை
வெகட்ட நாயக்கர் இயற்கையெய்தினார்.
அவரை வைணவ வழக்கப்படி
எரிஙூட்டப்பட வேண்டும்.
ஆனால்,
சன்யாசம் வாங்கப்பெறின்
புதைக்கலாம் என்றவொரு
ஐதீக மாற்றுக்கிணங்க
ரயில்வே நிலையம் கையகப்படுத்தவிருந்த
அவர்கள் நிலத்தில் அவரைப்புதைத்தார் –
ஒரு கல்லிலே
ஒரு மாங்காயும் ஒரு தேங்காயும் அடித்தார்.
இஃதெப்படி
நீதிக்கட்சி:
பிராமணரல்லாதாரின்
நெடிய பயனத்தின் விடிவெள்ளி
ஆரிய அதிகார ஆதிபத்தியத்திற்கெதிரான
ஆயுதச் சாலை! !
திராவிடர்களின் முதல் போர்பாட்டு!
சங்க திகர் சங்கத்தமிழர்களின்
ஊதும் விடுதலைச்சங்கு!
1912-ம் ஆண்டு
டாக்டர் சி.நடேசனாரால்
தோற்றுவிக்கப்பட்டதே –
தென்னிந்திய திராவிடர்களின் சங்கம்.
அதுவே,
பரிணாம வளர்ச்சி பெற்று
தென்னிந்திய நலவுரிமைச்சங்கமாகியது,
அதன் கோட்பாடுகளை பிரகடனப்படுத்த
டாக்டர் டி.எம். நாயரைக் கொண்டு
(Justice) நீதியென்ற
ஆங்கிலப் பத்ரிக்கை தொடங்கப்பட்டது.
பின்னர் அதுவே,
நீதிக்கட்சியானது.
உரிமைக்குரலை உயர்த்தி முழக்கமிட
வெள்ளுடை வேந்தர் சர்.பி.டி.தியாகராயமும்
பக்கபலமாக காலூன்றி நின்றார்
மெல்ல மெல்ல
பிராமணரல்லாதாரின் – கனவான்களின்
கனவுகளின் இலச்சிய ஒளி தென்பட்டது.
இதுதான் வகுப்பு வாரி பிரதிநித்துவம் (Cumunal G.O.)
என்ற வரபிரசாத்தை ஈன்றெடுத்தது.
1919 – ம் ஆண்டு
சென்னை மாநில சங்கத்தின் மாநாடு
ஈரோட்டில் நீதிக்கட்சியின்
கொள்கைகளை பறைசாற்றியது.
வரவேற்புக் குழுத்தலைவராக
பொறுப்பேற்றிருந்த ஈ.வெ.ரா
கெட்டிக்காரத்தனமாகவும்
வெற்றிகரமாகவும் மாநாட்டை
திறம்பட நடத்தி தன்முத்திரையை குத்தினார்.
கொஞ்சம் கொஞ்சமாக அவர்
நீதிக்கட்சியின் கோபுரமானார்.
பொற்கலசமுமார், அரசியல் விற்போர் வீர்ருமானார்.
அச்சமயம் மாநாட்டுக்கு
வந்துய்ற உன்னதமான தலைவர்களான
வரதராஜ நாயுடு, திரு.வி.க. போன்றோர்
அவர் இல்லத்திலே தங்கி
தமிழகத்தின் அரசியலை
எப்படி முன்னெடுத்துச் செல்லுவது
என்று முடிவிற்கு வந்தனர்.
அன்று முதல்,
ஈ.வெ.ரா இரண்டு புரவிகளில் சவாரி செய்தார்.
ஒன்று காங்கிரஸ்!
இன்னொன்று நீதிக்கட்சி!
குறிப்பு: மனிதப்பிறவியானது இலட்சிய மற்றபிறவி.
மனிதவாழ்வு இலட்சிய மற்றது உன்பதே ஓர் கருத்து
– ஈ.வெ.ரா.
ஈ.வெ.ரா காங்கிரஸ் கடலிலே கரைதல்
1919-ம் ஆண்டு ஈ.வெ.ராவை
புரட்சி போர்கணம் பற்றிப் படர்ந்தது.
அவரது சிந்தனை சில நெருப்பு பொறிகளால்
தீண்டப்பட்டது.
முறுக்கேறிய திருப்பு முனையை
சந்திக்க வைத்தது.
ஒரு வரலாற்றின் பக்கம்
அவரை உந்தித் தள்ளியது.
வீறு கொண்டெழுந்த அவர் மனம்
ஒரு விடியலை நாடி ஓடத்தவித்தது.
ஈரோட்டை – தமிழ்நாட்டை
கடந்து விரிந்து இந்திய மண்ணின் மீது
அவர் மனம் சுற்றி சுழலத்தொடங்கியது.
சில துக்ககரமான செயல்கள்
ஆழமான காயங்கள்
கொடூர நிகழ்வுகள்
அடிமை மனிதனையும்
மறுத்து எதிர்த்து நிற்க செய்து விடுகின்றன.
சராசரி மனிதனையும்
வெறிகொண்டு எதிர்கண்டு
நிற்க தூண்டுகோலாகின்றன
கோபத்தை வேகத்தைமூட்டி
மூண்டெரிய செய்கின்றன.
1919 ஏப்ரல் 13ம் நாள்
அந்த ஒரு சிறு நகரம்
ரத்த தடாகத்தில் மிதந்தது.
“ஜாலியன் வாலாபாக்” என்ற் பெயரை
உச்சரித்து உச்சரித்து
கொக்கரித்து கொந்தளித்தது
வெதும்பி வீரம்ததும்பி
நாடே போர்கோலம் பூண்டது.
“ரொஸ்ட் சட்டம்” என்ற் அதிகாரம் பெற்ற
சதிகார ‘டயர்’ என்ற வெறியனை கடைசி
குண்டு உள்ள வரை சுடச்செய்தது.
சுட்டான் சுட்டுக்கொண்டேயிருந்தான்
குருவிகள் போல் பறவைகள் போல்
ஆயிரக்கணக்கில் சுட்டுப்பொசுக்கினான்.
விட்டில் பூச்சிகள் போல் . . . .
அதில் ஈ.வெ.ராவின் மனம், சுடப்பட்டது.
சுடுகாடானது. சூன்யமானது.
அதன்முடிவு . . . ? !
ஈ.வெ.ரா.
கதர்கொடியை கைபற்றினார்
காங்கிரஸ் உறுப்பினரானார்
கைராட்டை சுற்றினார்
கதர்மூட்டைகளை சுமந்தார்
கதராடை அணிந்தார்
காந்தி பக்தரானார்
பதவிகளை துச்சமென
தூக்கி எறிந்தார்.
அவர் உள்ளத்திலும்இல்லத்திலும்
மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது
உச்சிக்குடுமியும், அடர்ந்த மீசையும்
நெற்றியில் சாந்துக்கோடும் பெரியபொட்டும்
உடம்பில் பட்டும் இருந்தது.
இருந்த இடம் தெரியவில்லை.
அவர் 80 வயது தாயையும் மனைவி நாகம்மாளையும்
கதராடை கட்ட வைத்தார்.
படிப்படியாக வணிகத்திற்கு
முற்றுப்புள்ள வைக்கப்பட்டது.
ஈ.வெ.ரா மண்டி மூடுவிழா செய்யப்பட்டது.
அண்ணன் ஈ.வெ. கிருஷ்ணசாமி
இலவச மருத்துவ மனையோடு நின்றுகொண்டார்
வெற்றிலை போடுவதையும்
சிகரெட் பிடிப்பதையும் அடியோடு கைவிட்டார்
அவர் அணிந்திருந்த ஆபரணங்களும்
அகற்றப்பட்டன.
ஈ.வெ.ராவின் சுதந்திர போர் முழக்கம்
1919 – ம் ஆண்டு டிசம்பர் மாதம்
அமிர்தசரஸில் காங்கிரஸ் மகாநாடு நிகழ்ந்தது.
நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகம்
அனைத்தும் இழந்தவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை
ஓய்வில் ஒதுங்கி இருந்தார்.
அவரை மாநாட்டுக்கு வலுகட்டாயமாக
கூடகூட்டிச் சென்றார். அங்கு
தமிழர்களுக்குரிய பிரதிநிதித்துவமான
ஆலோசனைக்குழுவில் பத்துபேர்
இடம் பெறவும் செய்தார்.
1920-ம் ஆண்டு செப்டம்பர் திங்களில்
காங்கிரஸின் சிறப்பு மகாநாடு
கல்கத்தாவில் நடைபெற்றது.
அதிலும் ஈ.வெ.ரா கலந்து கொண்டார்.
ஆங்கில அரசின் விருதுகளையும்
சர் போன்ற கௌரவ பட்டம், பதவிகளையும்
விட்டுவிடுதல், ஆங்கில நீதிமன்றங்களை
வழக்கறிஞர்களும், பொதுமக்களும்
புறக்கணித்தல் போன்ற எண்ணற்ற
ஒத்துழையாமை தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
ஈரோடு வந்துற்ற பின் பட்டிதொட்டியெல்லாம்
கதர்த்துணியை கட்டுமாறு சொற்பொழிவாற்றிட
கதர்துணிகளை மூட்டை மூட்டையாக
முதுகிலே சுமந்து கடைவிரித்து
எழுச்சியுடன் கவர்ச்சிகரமான உரைகொட்டி
விற்பனையில் இறங்கி,
கைராட்டையுடன் காந்திமகான்
வரலாற்றையும் தொண்டாற்றலையும் எடுத்துரைத்தார்
நீதிமன்ற நடவடிக்கை புறக்கணிப்புக்காக
தனக்கே உரித்தான ஐம்பதினாயிரம் பெறுமான
சட்டபூர்வமான அடமான பத்திரங்களையும்
பாண்டுக்குரிய சொத்துக்களையும்
அடியோடு கை கழுவினார்.
என்னே மலைப்பிற்குரிய இழப்பு!
கொண்ட கொள்கைக்காக
செல்வத்தை இழந்தான் – இவன்
துன்பத்திற்கான காரணம் காண
அரசைத்துறந்தான் – அவன்
கட்டிய மனைவியை கதர் கட்டவைத்து
குறிப்பு: நான் எதிலும் தீவிரமாகவும் உண்மையாகவும்
உழைக்கக் கூடியவன் என்ற கருத்து காந்திக்கு
இருந்ததால் கதர் இலக்கத்திற்கு என்னை
பொறுப்பாளராக நியமித்தார்கள் – ஈ.வெ.ரா.
கள்ளுக்கடை மறியலுக்கு
கூட்டிச்சென்றான் – இவன்
கட்டிய மனைவியை நட்டநடு நிசியில்
விட்டுவிட்டு கட்டுச்சென்றான் – அவன்
ஆடம்பர வாழ்வை இழந்தான் – இவன்
அரண்மனை வாழ்வைத் துறந்தான் – அவன்
இவனன்றோ – அவன்!
அவனன்ரோ – இவன்!
காந்தியின் கட்டளையும் கள்ளுக்கடை மறியலும்
1921 – ம் ஆண்டு ஈ.வெ.ரா.
தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியின்
செயலாளராக தேர்வு பெற்றார்.
அரசியலில் ஒரு ஒளி உமிழும்
அக்கினி நட்சத்திரமானார்.
அதனை சுற்றியெ மற்றவைகள் ஒளிபெற்றன.
இதனையொட்டி,
கள்ளுகுடிப்பதும், மனைவியை அடிப்பதும்
வறுமையில் உழல்வதும், குடும்பத்தை சீரழிப்பதும்
பஞ்சமா பாதங்களில் ஒன்று என
காந்திஜி அறையலுன்றார்.
கள்ளூறும் மரங்களையே வெட்டி முறித்திட்டால்
குடிகெடும் குடிப்பழக்கம் கட்டுப்படும்
மதுவிலக்கு வெற்றிபெறும் என்னும்
காந்திஜியின் விளக்கம் தொடர்ந்தது.
இதை கன்னுற்ற ஈ.வெ.ரா
சேலம் தாதகாபட்டியின் குடும்பத்திற்குரித்தான
கள்ளூரும் ஐநூறு தென்னை மரங்களை
வேரோடு வெட்டி வீழ்த்தினார்.
இதோடு விட்டுவிடாது,
ஈரோடு கள்ளுக்கடைகளின் முன்
நூற்றுக்கு மேற்பட்டோருடன் ஈட்டி முனையென
மறியலில் ஈடுப்பட்டார்.
முதன்முதலாக இதில் ஒருமாத
சிறைதண்டனை ஈ.வெ.ராவுக்கு கிடைத்தது.
விடுதலை பெற்றவுடன் மீண்டும் மறியல் களம்புகுந்தார்.
அடுத்தடுத்து மனைவி நாகம்மாளும்
தங்கையும் களத்தில் குதித்தனர்.
ஈ.வெ.ராவின் துடிப்பான இச்செயல்பாட்டால்
ஈரோடு எடுப்பான நகரமானது.
இதனால் ஈ.வெ.ராவின் பெயர்
எட்டுதிசையிலும் கொடிகட்டிப் பறந்தது.
அந்த வைராக்கிய மனிதருக்கு முன்
எதிர் வரும் எதுவும் வைக்கோல் கூழானது
1921 டிசம்பர் 28 ல்
காந்திஜி யங் இந்தியா என்ற
தன் பத்திரிக்கையில் பகிரங்கமாக
பாராட்டி ஈ.வெ.ராவின் அஞ்சாத
நெஞ்சுரத்தை மிகுபடப் போற்றினார்.
இதனால் ஆங்கில அரசின்
அடித்தளமே ஆடியது.
கோடிக்கணக்கான வருமானம்
பறிபோகிறதே என பதறியது.
நீதிக்கட்சியின் முதற்காட்சி
மாண்டேகு ஜேம்ஸ் போர்டு குழுவின்
இரட்டை ஆட்சி முறையை
பிரிட்டன் புகுத்தியது.
இதன்படி,
முக்கிய அதிகாரங்கள் ஆங்கில ஆளுனரிடமே இருக்கும்,
கல்வி வேளாண் நலவாழ்வு போன்ற
துறைகள் மட்டுமே மாநிலகுழுவுக்கு (Council)
ஒதுக்கப்பட்டு இருந்தன.
கல்வி கேள்வியில் வல்லுனர்க்கும்
சொத்துடைமைதாரர்களுக்கு மட்டுமே
வாக்குகள் வழங்கப்பட்டது.
அதிலும்,
ஆண்களுக்கு மட்டும் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன.
இதன் பால்,
1920 – ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 – ம் நாள் நிகழ்ந்த தேர்தலில் 127 இடங்களில் 80 பேர் நீதிக்கட்சியின் ஆதரவாளர்கள் தேர்வு பெற்றனர்.
1921 – ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 – ம் நாள்
சட்டமன்றம் (council) துவக்கப்பட்டது.
(இச்சட்டமன்றம் எனப்படுவது ஆந்திர, கேரள
கர்நாடக, தமிழகமான சென்னை மாநிலமாகும்)
ஆளுனரான வில்லிங்டன் நீதிக்கட்சித்தலைவரான
தியாகராய செட்டியாரை அமைச்சரவை
அமைக்கும்படி அழைக்க அவர் திவான்பகதூர்
எ. சுப்பராயசெட்டியாரை முதல்வராக
பரிந்துரைத்தார்.
முதல்வர் பொறுப்பை ஏற்ற சுப்பராய செட்டியார்
உடல் நலக்குறைவால் சிறிது காலத்திற்குள்ளேயே
பொறுப்பினின்றும் விலகிக் கொண்டார்.
பல்லாற்றானும் சிறப்புகுதிய
பனகல் ராஜா முதல்வரானார்.
இன்னும் இருவர் அடுத்த அமைச்சர்
பொறுப்புக்கு வந்தனர்.
1921 ம் ஆண்டு சரித்திரபுகழ் பொரித்த
ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீதிக்கட்சியின் ஆன்மாவின் குரலான,
“முதல் வகுப்பு வாரி பிரதிநித்துவம்”
என்ற பார்பனரல்லாதோரின் ஜீவாதார மசோதாவாகும்.
(First Communal G. O.)
ஏழு ஆண்டு காலத்திற்குள் பார்பனரல்லாதார்
66 சதவிகிதம் இடம்பெறவேண்டும் என்பதே
அதன் சாரமாகும். அடுத்தபடி.
1921 – ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெண்களும்
வாக்குறிமைகளை பெருகின்ற ஒரு
உன்னதமான சட்டத்தையும் அங்கீகரித்தது,
தொடர்ச்சியின் உற்சாக முயற்சியாக
பல்கலைகழகத்தில் பார்பனரல்லாதார்
உரிய இட