தந்தை பெரியார், தலைவர் கலைஞருடன் கார்ப்பயணங்களில்

அவர் பெரிய ரிஷி….ஈசுவரன் மாதிரி!

தந்தை பெரியாரும் தலைவர் கலைஞரும் நீண்ட தூரம் கார்ப்பயணம் செய்தவர்கள். நிறைய மைல்கள் பயணம் செய்த இந்தியத் தலைவர்கள் வரிசையில் முதல் மூவர் என்ற இடத்தில் இருப்பார்கள்.

காந்தியாரைத் தவிர்த்து வேறெந்த இந்தியத் தலைவரும் இவ்வளவு நீண்ட தூர சாலைப் பயணத்தை மேற்கொண்டிருப்பார்களா என்பது அய்யமே!

பெரியார் இந்தியாவிற்குள் தில்லி வரையிலும் கூடச் சீருந்தில்தான் பயணம் செய்தார்.

தந்தை பெரியார் இப்படி எழுபது ஆண்டுகளும், கலைஞர் அறுபது ஆண்டுகளும் பயணம் செய்துள்ளனர்.

இருவருடனும் பயணம் செய்வது இனிய பெருமைக்குரிய அனுபவம் மட்டுமன்று, அஃது ஒருவகைப் பாடசாலை -பயிற்சி வகுப்பு, இதுவரை இருவரும் மேடையில் சொல்லாத – எழுதாத பல செய்திகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் இடம்.

இருவருமே இரவுப் பயணங்களில் அனேகமாய்த் தூங்க மாட்டார்கள். காரோட்டியை விட வழிதடத்தில் கவனமாய் இருப்பார்கள். இருவருக்கும் தமிழ் நாட்டின் முக்கிய வழித்தடங்கள் அத்துபடி. வண்டியின் வேகம் சற்று அதிகமாய் கூடினாலும் குறைந்தாலும் ஓட்டுநரை முறைப்படுத்திக் கொண்டே வருவார்கள்.

நீண்ட பயணங்களில் கையில் கொண்டு வரும் நொறுக்குத் தீனியை வண்டியில் உள்ளவர்களோடு பகிர்ந்துகொண்டு தாமும் சாப்பிடுவார்கள்.

சாப்பிடும் முன்னும் பின்னும் கை கழுவுவது – பரிமாறுகிறவர்கள், பாத்திரங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதிலெல்லாம் கலைஞர் ரொம்பவும் கவனமாய் இருப்பார். பெரியாருக்குத் தூய்மையெல்லாம் இரண்டாம் பட்சம்தான். வண்டியை வழியில் நிறுத்தி யார் எதைக் கொடுத்தாலும், பெரியார் – தூய்மையாய் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியெல்லாம் செய்யமாட்டார். பெரியார் அடிக்கடி சொல்வார் “என் நாக்கும், மூக்கும், ஏற்றுக் கொள்ளும் எதையும் -எங்கேயும் சாப்பிடுவேன்.” என்பார்.

கலைஞரின் மகிழுந்து புறப்பட்டால் அனாவசிமாய் எங்கும் நிற்காது. பெரியார் அப்படியல்ல; வழியிலுள்ள நெருக்கமான நண்பர்களின கடைகள்-வீடுகள் இருந்தால் நின்று பேசிவிட்டுத்தான் போவார். வ்ண்டியில் மணியம்மை இருந்தால் நிற்குமிடங்களின் எண்ணிக்கை சற்றுக் கூடும். வண்டியில் பாரமும் சற்று அதிகமாகும்! (ஆங்காங்கே தோழர்களின் கடைகளில் பொருள்களை ஆர்வத்துடன் விலை விசாரிப்பார், பொருள்கள் வண்டிக்கு வந்துவிடும். பெரியார் விரும்பாமல், என்னதான் தடுத்தாலும் அது நடக்கும்!)

பெரியாருக்குக் கண் மிகவும் கூர்மை; மூக்கு அதைவிடக் கூர்மை?

தென் மாவட்டச் சுற்றுப் பயணத்தின்போது வண்டி ஒரு சிற்றூரைத் தாண்டிக்கொண்டிருக்கிறது. பெரியார் திடீரென “வண்டியை நிறுத்து…. வண்டியை நிறுத்து இங்கே வடை சுடுகிறான்… நல்ல வாசனை வருது.. ” என்றார்.

இமயவரம்பன் பெரியாரின் காதுக்கு கேட்காமல் ஓட்டுநரிடம் “பேசாம ஓட்டய்யா.. கண்ட எடத்திலே எதையாவது தின்று ஏதாவது கோளாறாயிடும்” என்றார். பெரியார் ஒரு சின்னக் குச்சியால் வண்டி ஓட்டுநரின் தலையில் தட்டினார்.

“நிறுத்து..நிறுத்து” என்றார்.

வடை வாங்கி வரும்படி விரட்டினார். இது போன்ற நேரங்களில் வண்டி சில நிமிடங்கள் நிற்கும். வழியில் வரும் புகை பிடிக்கின்ற தோழர்களுக்கு இஃது ஒரு வாய்ப்பு.

ஒரு புளிய மரத்தினடியில் ஒரு வயதான பெண்மணி வடை சுட்டுக்கொண்டிருந்தார். வடை பெரியாருக்குதான் என்று தெரிந்தவுடன் தானே அப்பெண்மனி வடைகளை எடுத்துக்கொண்டு அருகில் வந்து பெரியாரிடம் தந்தார். பெரியார் ஒரு வடையைச் சுடச்சுடச் சாப்பிட்டுவிட்டுப் பாராட்டினார்.

“ரொம்ப நல்லா இருக்கு.. ரொம்ப…ரொம்ப… ” என்றார். வடைக்காரப் பெண்மணி “அய்யா வெல்ல ஆப்பம் சாப்பிடுறீயளா… காலையிலே சுட்டது..கொஞ்சம் ஆறி இருக்கும்” என்றார்.

“பரவாயில்லை… கொண்டாங்க..கொண்டாங்க….”என்றார்.

கொண்டு வந்தார். நல்ல, தண்ணீர் கலக்காத தேங்காய்ப்பால் ஆப்பத்தைத் தொட்டுச் சாப்பிட பெரியார் ருசித்து இரண்டு மூன்று ஆப்பங்களைச் சாப்பிட்டார். அதையும் பாராட்டினார். அந்தப் பெண்மணியிடமே, “இவங்க எந்தக் கலப்படமும் செய்ய மாட்டாங்க.. பாவம் இவங்களுக்கு அந்த நுட்பமெல்லாம் தெரியாது” என்று சிரித்துக்கொண்டார்.

இமய வரம்பன் முனகிக்கொண்டே இருந்தார். பெரியார் இமயவரம்பனின் முனகலுக்குப் பொதுப்படையாய்ப் பதில் சொன்னார்.

“இவுங்க செய்யுறது ‘ஹோம்லி’ யா இருக்கும் ஆறிப்போனாலும் ரொம்ப சுவையா இருக்கு” என்றார்.

பணத்தை கொடுக்கப் போனோம். அவர் வாங்க மறுத்துவிட்டார். உடன் வந்த நண்பர் சற்று அதட்டலாகச் சத்தம் போட்டார். “இந்தா கிழவி… சும்மா பந்தா பண்ணாம வாங்கிக்க..” என்றார்

ஆப்பக்காரப் பெண்மணி தீர்க்கமாயப் பதில் சொன்னார் “தம்பி…. பேசாமப் போங்க… அவருகிட்டேயெல்லாம் பணம் வாங்கப்படாது…அவரு பெரிய ரிஷி மாதிரி… ஈஷ்வரன் மாதிரி.. உனக்கெல்லாம் அவரப் பத்தி ஒண்ணும் தெரியாது” என்றார்.

நாங்கள் விக்கித்துப்போய்விட்டோம். பெரியாரோடு ‘அணுக்கமாய் ஆண்டுக்கணக்கில் இருக்கும் அன்பர்கள்’ என்ற எங்கள் ‘ஆணவம்?’ அடிப்பட்டு போய்விட்டது.

தோல்வியோடு அய்யாவிடம் போனோம். வாங்க மறுத்ததை மட்டும் சொன்னோம். அய்யா ‘வற்புறுத்திக் கொடுத்துவிட்டு வர வேண்டியது தானே ‘ என்று கடிந்து கொண்டார்.

நடந்ததை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே சொன்னோம்.’ரிஷி..ஈஸ்வரன் .. என்கிறாரா’ பெரியார் சில நிமிடங்கள் வெட்ட வெளியையே பார்த்துக்கொண்டிருந்தார்.

‘உம்..இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ..’ என்றவர் சரி..சரி…புறப்படு’ என்றார்.

பெரியார் முடக்கப்பட முடியாதவர்

பெரியார் – கலைஞர் இருவருக்கும் இடையே சில ஒற்றமை வேற்றுமைகள். பெரியாரின் காலம் சற்று முந்தையது. பெரியார் தமது அறுபது அறுபத்தைந்தாவது வயதுக்குப் பின்னர் தான் சொந்தமாகக் கார் வாங்கி அதில் பயணம் செய்யத் தொடங்கினார். சொந்தமாகக்கார் வைத்துக்கொள்ளக்கூடிய பெரும் பணக்காரர். ஆனாலும், அருடைய பயணங்கள் தொடர்வண்டியில் மூன்றாம் வகுப்பில்தான் . விரை வீக்கத்திற்கான அறுவைச் சிகிச்சையைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்து-ஒரு கட்டத்தில் மருத்துவர்கள் (அறுவைசிகிச்சை முறை இன்று போல் வளர்ச்சி அடையாத நிலையில், “பெரியாரின்” முதுமை கருதி அஞ்சி )தள்ளிப் போட்டுவிட்டார்கள். அதனால் அய்யா சுலபமாக நடக்கின்ற வாய்ப்புக் குறைந்து போய்விட்டது. பின்னர் முதுமைக் காரணமாகவும், விரைவீக்கம் காரணமாக-குடலிறக்கக் (எர்னியா) தொல்லையும் ஏற்பட -நடப்பதை மிகவும் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. எனவே, காரில் பயணம் தவிர்க்க இயலாத்தாகிவிட்டது.

கலைஞர் தமது இருபத்தைந்தாவது வயதிற்குப் பின்னர் சொந்தமாகக் கார் வாங்கி அதில் பயணம் செய்யத் தொடங்கினார். இரவு, பகல் எந்நேரமும் மகிழுந்தில் உட்கார்ந்தபடி- நண்பர்களோடு உரையாடிக் கொண்ட பயணம் செய்வது கலைஞரவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

பெரியாரும் அவருடைய சீருந்தில் அவருடைய சம வயது நண்பர்கள் இல்லையென்றாலும் -என் வயதுடையவர்களுடன் கூடச் சமமாகப் பழகி ஒரு நெருக்கத்தையும், சௌஜன்யத்தையும் உணரச் செய்து உரையாடிக் கொண்டே வருவார்!

பெரியார் முதன் முதலில் வாங்கியதே சீருந்து (வேன்)தான். கலைஞர் மகிழுந்து (கார் ) வைத்திருந்தார். இருவரும் நீண்ட காலம் நெடுந்தூரம், இந்தியா முழுக்கப் பயணம் செய்தவர்கள் என்றாலும் கலைஞரின் கார்ப்பயணங்கள் தென்னாட்டோடு சரி.

பெரியார் வடநாட்டு பயணங்களைக் கூடச்சீருந்திலேயேதான் மேற்கொண்டார். கலைஞர் கார்ப்பயணங்களில் மிகப் பயங்கரமான விபத்துக்களைச் சந்தித்தவர். அவருடைய கண்ணில் கடுமையான அறுவைச் சிகிச்சை மேற்கொள்கிற அளவு சாலை விபத்துகளைச் சந்தித்தவர். நாங்கள் அவருடன் பயணம் செய்த போதே ஓரிரு விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

கலைஞருக்கு ஏற்பட்ட கார் விபத்துக்கள் மிகுந்த சிரமங்களுக்குப் பின்னர் அவரைத் தொல்லைப்படுத்தவில்லை.

பெரியார் கூட்டம் முடிந்தவுடனே ஒரு நிமிடம் கூட அந்த ஊரில் தங்கமாட்டார். மாலையில் தங்கும் விடுதியிலிருந்து வண்டி, கூட்ட மேடைக்குப் புறப்படும் போதே பயணியர் விடுதியிலிருந்து காலி செய்து காவலாளிகளுக்கு அன்பளிப்புக் கொடுத்துவிட்டு புறப்பட்டுவிடுவார்.

பயணம் இரவில் தொடரும். ஆனால், ஒருமுறை கூட உயிருக்கு ஆபத்து-வண்டிக்குச்சேதம் என்னும் அளவு பெரும் விபத்துகளைப் பெரியாரின் பயணங்கள் சந்தித்ததில்லை. கலைஞரின் ஓட்டுநர்கள் எனக்குத் தெரிந்தவரை அண்மைக்காலத்திலுள்ளவர்கள் மட்டுமே சஞ்சீவி,தியாகராசன் யாவரும் மிகுந்த திறமைசாலிகள்.

எனக்குக் (செல்வேந்திரன்)காரோட்டும் பழக்கம் முப்பது ஆண்டுகளாய் உண்டு. இலாவகம் எனக்கு வியப்பாய் இருக்கம். பெரியாரின் ஓட்டுநர்கள் அப்படியல்லர்.

பெரும்பாலோர் ஓட்டப்பழகியவுடன் புது உரிமத்தோடு (லைசன்சோடு) பெரியாரிடம் வந்தவர்கள் பின்னர்ப பெரியாரின் வண்டியில் ஓட்டும் அனுபவம் பெற்ற பின்னர் HEAVY LICENSE வாங்கியவர்கள். காலஞ்சென்ற திருநெல்வேலி தியாகராசன் வேடிக்கையாய்ச்சொல்வார்.

“பெரியார் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியோடு கார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியும் நடத்துகிறார்” என்று.

பெரியாரின் துணைவி மணியம்மை பயணம் செய்தால் அநேகமாக வண்டி அமைதியாய்ப்போய்க் கொண்டிருக்கும். பெரியாரும் தூங்கி விடுவார். கலைஞர் காரில் தூங்குவது ரொம்பவும் அபூர்வம்.

பெரியாரின் சீருந்துகளை இனிப் பயன்படுத்தவோ பழுதுபார்க்கவோ முடியாது என்ற எல்லை வரை அய்யா அதனைப் பயன்படுத்துவார். இப்படி அவருடைய பழைய சீருந்து ஒன்று தொல்லையின் எல்லைக்கே வந்து விட்டது.

பலகாலம் அவருடைய உதவியாளராய்ப் பயணம் செய்த மயிலாடுதுறை (கதிராமங்கலம்) புலவர் இமய வரம்பன் போன்வர்கள். இனி நீண்ட தூரப் பயணம்- பிரச்சாரம் – போன்றவற்றுக்குப் பெரியாருடன் செல்ல இயலாத உடல்நிலை- அல்லது மனநிலைக்கு ஆளாகிவிட்டார்கள்.

இளமைக் காலத்தில் கிறித்துவக் கல்வி நிறவனங்கள் – அனாதை இல்லங்கள் இவற்றோடு நெருக்கமாகப் பழகி அதில் ஈடுபாடு கொண்டிருந்தவர் மணியம்மை. அதனால் அனாதைகளை வளர்ப்பதிலும்- அந்த இல்லங்களைப் பேணுவதிலும்-கல்வி நிலையங்ளை விரிவாக்குவதிலும் அவர் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். தி.மு.க. அப்போது ஆளும் கட்சி பெரியாரின் சுற்றுப்பயணம் தடைப்படும் நிலை உருவாக்கப்பட்டு – அவர் வீட்டிற்குள்ளே முடக்கப்படும் நிலை சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருந்தார்.

நெருக்கடிகளால் முடக்கப்பட்டிருந்தால் அவரை எப்படி உலகம் பெரியாராக இன்றும் ஏற்றுக் கொள்ளும்?

சிறிய இரவல் காரொன்றி பெரியாரின் பயணம் தொடர்ந்தது. அதுவே, அவர் குடலிறக்க நோயால் மரணமடையக் காரணமாயிற்று. பெரியார் உடலால் மறைந்தார். ஆனால் , தாம் எதனாலும் அடக்கப்படவோ, முடக்கப்படவோ முடியாதவர் என்ற சரித்திரமாய் வாழ்கிறார்.

உடம்பு பருத்தாலும் ஒன்றும் ஆகாது

பெரியாரின் ஊர்ப் பயணங்கள்-தொடக்கக் காலங்களில் எல்லாம் தொடர் வண்டியில் (ரெயில்) தான் அதுவும் மூன்றாம் வகுப்பில். ஒருமுறை வசதியாகப் பயணம் செய்யும்படி கோவைத்தொழிலதிபர் G,D. நாயுடு அவர்கள் குடலிறக்க நோயினால் அப்போது அவதிப்பட்டுக்கொண்டிருந்த பெரியாருக்கு முதல் வகுப்புப் பயணச்சீட்டைத் தம் செலவில் வாங்கிக்கொடுத்திருக்கிறார்.

G.D. நாயுடுவை இரயில் புறப்படுமுன் அனுப்பிவிட்டுப் பெரியார் முதல் வகுப்புச்சீட்டுகளைத் திரும்பக் கொடுத்துவிட்டுப் பதிலாக மூன்றாம் வகுப்புச் சீட்டுக்களை வாங்கிக்கொண்டாராம். மீதிப் பணத்தையும் வைத்துக்கொண்டாராம். குடலிறக்கநோய் வயதாக, வயதாகப் பெரியாருக்குத்தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. அந்த முதிர்ந்த வயதில் அறுவைச்சிகிசசை மருத்துவர்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில் பெரியார் நடையைக்குறைக்க ஆலோசனை சொல்லப்பட்டது.

அதன் பின்னர்தான் பெரியார் ஒரு வேன்- அதுவும் பழைய வண்டி ஒன்று வாங்கினார். பெரியாரின் வாழ்நாள் பூராவும் பயன்படுத்திய வண்டிகள் யாவுமே தொண்டர்களின் நன்கொடை மூலம் வாங்கி அன்பளிப்பாய்த் தரப்பட்டவை அவையும் மொத்தம் மூன்று அல்லது நான்கு வண்டிகள்தாம். அதே வண்டியில் அல்லது நான்கு கூட்டங்களில் விற்பதற்கான நிறைய, கழகப் புத்தங்கள், உதவியாளர்கள், உள்ளூர்க் கழக நண்பர்கள் என ஒரு கூட்டமே பயணம் செய்யும். ஒருமுறை செங்கற்களை ஏற்றிக்கொண்டு போனதும் உண்டு.

ஒருமுறை பேருந்து பயணச் செலவைத் தவிர்க்கச்சில வசதியுள்ள தோழர்களே வண்டியில் ஏறிவிட்டார்கள். அடுத்து ஊருக்குக் கடைசிப் பேருந்து புறப்படும் நேரம் எல்லாவற்றையும் விசாரித்துத் தோழர்கள் பேருந்தில் போகும் செலவை மிச்சம் செய்யவே வண்டியில் ஏறினார்கள் என்பதை அவர்கள் வாயாலேயே வரவழைத்துவிட்டார். பின்னர் எல்லோரையும் – “வண்டிக்குரிய கட்டணத்தைத் தாருங்கள். என் வண்டியிலேயே வாருங்கள்”-என்று கேட்டு வசூலித்தும் விட்டார். மொத்தத் தொகையையும் ஒன்றாக்கி எண்ணிப் பாரத்துச் சத்தம்போட்டு மகிழ்ச்சியோடு சிரித்தார். “நான் பணம் வாங்குவது பணம் சேர்க்க அல்ல. எனக்கு அஃது ஒருபொழுத போக்கு” (ஹாபி) என்றார்.

கலைஞர் இடையில் ஒன்றிரண்டு தவிர எல்லாமே புதிய கார்கள்தாம் வைத்திருந்தாராம். முதன் முதலில் வாக்சால் வேலாக்ஸ் என்ற புதிய அமெரிக்கக்கார், பின்னர் பியட் எலிகண்ட், பியட் மில்லிசெண்டோ, முன்னால் அமைச்சர் ப.உ.ச. அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கிய டீசல் பொருத்தப்பட்ட பிளிமத், தஞ்சை வியாபாரி ஒருவரிடமிருந்து காட்டூர் இராமையா (முதலியார்) மூலம் வாங்கிய பெரிய சவர்லட் இம்பாலா, காண்டெசா கிளாசிக் இவற்றுக்கெல்லாம் பின்னர், தொடர்ந்து அம்பாசிடர் கார்களையே கலைஞர் வாங்கிப் பயன்படுத்துகிறார். கலைஞரின் கார் எப்போதும் நிறைந்து (House Full)தான் இருக்கும். அதுவும் வெளியூர்ப் பயணங்களில் சொல்லவே வேண்டாம்.

கலைஞருடன் தொடர்ந்து கார்ப்பயணங்கள், நான் முன்னர் எழுதியபடி ஒரு இனிய அனுபவம். சில நேரங்களில் வண்டியில் நிறைய பேர் உட்கார்ந்த பின் வண்டியில் ஏறமுடியா நிலை ஏற்படுமாம். காரோட்டுகின்றவரை (டிரைவர்) இறக்கிவிட்டுவிட்டு, கலைஞரின் பழைய நண்பர்கள், அவருடன் பயணத்தில் பங்கு கொள்ளும் வாய்ப்பை இழக்காமல் தக்க வைத்துக்கொள்ள அவர்களே காரைத் தொடர்ந்து ஓட்டுவார்களாம்.

அவர்கள் சொந்தத்தில் கார் வைத்திருந்து தாங்களே ஓட்டும்பழக்கமுடையவர்கள். பழைய சட்டமன்ற உறுப்பினர் திருவெறும்பூர் காமாட்சி , கரந்தை சண்முக வடிவேல் போன்றவர்களே அவர்கள்.

நீண்ட பயணங்களில் உணவு ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்களுக்குப் போய்ச் சேருவதில் ஏதேனும் காரணங்களால் தாமதம் ஏற்பட்டுவிட்டால் பெரியார் பசி பொறுக்கமாட்டார். பல நேரங்களில் கோபம் கடுமையாகய் வந்துவிடும். வழியில் பெரியாருடைய வண்டியை அடையாளம் கொண்டுகொண்ட நண்பர்கள் எதையாவது சாப்பிடக் கொடுத்தால் கொஞ்சமும் யோசிக்காமல் பெரியார் சாப்பிட்டுவிடுவார். பசி எடுத்தவுடன் சாப்பாடு என்பதில் பெரியார் சிறு குழந்தைதான்!

பல காரியங்களில் தன்னுடைய தலைவரை ஒத்த மாதிரிதான். கலைஞர். உணில் அளவைவிட தூய்மையைக் கவனிப்பதோடு -சாப்பிடுவதென்பது அவருகு ஒரு கடமைதான். கடுமையான வேலை நேரங்களில் இந்த வயதலும், உடல் நிலையிலும் சாப்பிடும் நேரம் , ஓய்வு இவற்றை அவர் எண்ணுவதில்லை. உடலைக்கூட அவர் தன்னுடைய மனத்தின் கட்டுப்பாட்டில்தான் முழுக்க வைத்திருக்கிறார்.

வசதிகள் அறவே இல்லாத அந்தப்புதிய டெம்போ டிராவலர் என்ற சீருந்து (வேனில்) கலைஞரின் தேர்தல் பிரச்சாரப் பயணம். இந்த முறை, சுற்றுப்பயணத்தில் கலைஞருடைய இளைய மகள் கனிமொழி வந்திருந்தார்.

உயர்த்திய புருவங்களோடு உலகம் ஒரு நாள் இவருடைய எழுத்துக்களைப் படிக்கப்போகிறது! என் மகள் வயத்தான் இவருக்கு! பிரச்சினைகளை மனவியல் கோணத்தில் பார்க்கின்ற இவருடைய அணுகுமுறையை நான் வியந்திருக்கிறேன். (செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களைப் பற்றிக் கலகி வார இதழில் இவருடைய கருத்துகளைப் படித்தேன்) புலிக்குப் பிறந்தது!..

தந்தையாரின் தேவைகளை இவர்தாம் பயணத்தின் போது தாயார் இராஜாத்தி அம்மையாருடன் சேர்ந்து கவனித்துக்கொண்டார். மகளிடம் கலைஞர் தாம் முதலில் தேர்தலில் போட்டியிட்ட குளித்தலைத் தொகுதி வழியாய்ச் செல்லும்போது பழைய அனுபவங்களைச்சொல்லி வந்தார். உடன் வந்த திரைப்பட இயக்குநரும், கலைஞரின் மருமகனுமான அமிர்தம். 1957-இல் குளித்தலையில் அவரும் தேர்தல் பணிகளைக்கவனித்த அனுபவங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார்.

இடையிடையே முறுக்கு போன்ற நொறுக்குத் தீனிகள், காப்பி – கலைஞர் பசியாறிவில்லை. பசியை அடக்கிக் கொண்டிருந்தார். இதல் எண்ணெய் இருக்கும் என்றுமுதலில் நான் சாப்பிட மறுத்துவிட்டேன். ‘உன் உடம்பு பருத்தாலும் ஒன்றும் ஆகாது சாப்பிடு’ என்றார் கலைஞர். ‘எண்ணெய் இருக்காது சாப்பிடுங்கள் என்று சின்னம்மா மறுபடியும் வற்புறுத்த,சாப்பிட்டேன். மக்கள் வெள்ளம் வழியெங்கும். கலைஞர் சலியாமல் வண்டியை நிறுத்திப் பிரச்சாரம் செய்துகொண்டே வந்தார்.

பெருங்கூட்டம் நிற்கின்ற இடங்களில் வண்டியின் மேலே கதவு போன்ற மூடியைத் திறந்த்து வண்டிக்குள்ளிருந்து சிறு மேடையின் படிகளில் சிரம்ப்பட்டு ஏறி நின்று பேசுகின்றபோது நமக்கு மணம் வலிக்கின்றது.! எழுபத்து மூன்று வயதல்லவா? இருந்தாலும் வைராக்கியம்… வைராக்கியம்… வைராக்கியம்.. ஆம்! கலைஞர் கருணாநிதியின் செல்லப் பெயர் அது தான்!

சாய்ந்து வசதியாய் உட்கார முடியாத வண்டி அமைப்பு உடன் தொடர்ந்து வருபவர்கள் பயணக்களைப்பாலும் பசியினாலும் சோர்வடைய ஆரம்பித்து விட்டார்கள். வேட்பாளர்கள் தங்கள் எல்லையுடன் இறங்கி விடை பெற்றுக்கொள்ள, மவாட்டச் செய்லாளர்கள் மாட்ட எல்லையுடன் விடைபெறத் தயாராக்க் கலைஞர் தன்னுடைய நீண்ட கால உதவியாளரை அழைத்துச் ‘சுற்றுப் பயணத்தை வேறு மாதிரி அமைத்திருக்க வேண்டும்’ என்று மென்மையாய்க் கலைஞர் கடிந்து கொள்வதையும் ஒரு பாராட்டாய் எடுத்துக்கொள்ளும் இயல்பு உதவியாளர் சண்முகநாதனுக்கு!) முகம் சுளிக்காமல் அதற்குக்காரணம் சொன்னார். கலைஞர் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு இரவு, திட்டப்படிப் ‘பல்லடம் போய்ச் சேர முடியுமாப்பா?’ என்றார்.

நண்பர்கள் பசி நேரமாகிவிட்டதையும் கரூரில் இவுச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு பயணம் தொடரலாம் என்று நினைவூட்டினார்கள். கலைஞர் மறுபடியும் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு “இரவு பல்லடம் நிகழ்ச்சிக்குப் போய்ச் சேர முடியுமா? எனக்குச் சாப்பாடு வேண்டாம். இறங்கினால் வீணாகி விடும்பா? அதற்குள் கரூர் முடித்து வெள்ளக்கோவில் போய்விடலாமே” என்றார்.

‘சொலல் வல்லன் சோர்விலான்’… வள்ளுவனின் கனவு நாயகன் இவர்தாம்.

‘பெரியார் சொத்து தப்பு நடக்காது, நான் பார்த்துக்குறேன்’ -என்றார் காமராசர்!

பொதுப்பணத்தைப் பயன்படுத்துவதில் பெரியாரில் நாணயம் அப்பழுக்கற்றது. அவருடைய எதிரிகளான பார்ப்பனர்கள்கூட அவருடைய நாணயத்தைக் குறை சொன்னதில்லை. திருச்சி, திருவரங்கத்தின் இராஜ கோபுரத்தைப் பதின்மூன்று அடுக்குகளோடு பெரிதாய்க் கட்டி, வைணவ சம்பிரதாயத்தின் தலைவர் ஜீயாரிடம், நான்திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளராய் இருந்த போது என்னுடைய தெரிந்த கதை இதழின் நேர்காணலுக்காகப்போய் இருந்தேன். பெரியாரின் பார்ப்பன எதிர்ப்புப்போன்ற கருத்துக்களைப் பற்றியெல்லாம் அவருடைய தெளிவான கருத்து எனை ஆச்சரியப்பட வைத்தது!

காஞ்சி மடத்தின் பழைய தலைவர் மறைத சந்திர சேகர சங்கராச்சாரியாரும் என்னிடம் இதே கருத்தை வேறு மாதிராய்ச்சொன்னார். பெரியார், பிராமணனைத் தானே எதிர்க்கின்றார். இப்பது இருக்கின்னவர்கள் (பார்ப்பனர்கள்) பிராமணனாகவே இருக்கவில்லையே! பெரியாரின்பிரச்சாரத்தைப்பற்றி இவர்களுக்கென்ன கவலை? என்றார். (அப்போது சங்கர மடத்தின் பொறுப்பாளராய் இருந்த என் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் குப்புசாமி அய்யர் ஏற்பாட்டின்படிதான் சங்கராச்சாரியாரைச் சந்தித்தோம்.)

திருவரங்கம் ஜீயர் – பெரியார் – இயக்கத்திற்குப் பொருள் சேர்ப்பதைக் குறித்து வேடிக்கையாகச்சொன்னார். “ஸ்வாமிக்கு அருச்சனை செய்யும் குருக்கள் கூடக் குங்கும்ம், விபூதித் தட்டில் விழும் காசைச் சாமிக்குத் தருவதில்லை. உண்டியலில் விழுந்தால் சாமிக்கு; தட்டில் விழுந்தால் தனக்கு என்று எடுத்துக்கொள்கிறார். ஆனால், பெரியார் அப்போதெல்லாம் கையெழுத்துப் போட (ஆட்டுகிராப்) ஒரு தொகை. சிற்றுண்டி எடுத்துக் கொள்ள ஒரு தொகை, விருந்து சாப்பிட ஒரு தொகை என இயக்கத்திற்குத் தண்டல் செய்வார். அதை அவருடைய பிரச்சார நினுவனக் கணக்கில் சேர்த்து விடுவார். ஜீயர் அதனையே அப்படிக் கூறினார்.

அன்று தந்தை பெரியாரின் பயணம் குளித்தலை, கரூர் வழியாக ஈரோட்டுக்கு தமது பெரும் சொத்துக்களுக்கு அய்யா ஆண்டிற்கு ஒரு முறை ஈரோடு போய்த் தானே நகராட்சி வரி செலுத்துவார். பெரியரின் சுற்றப் பயணங்ஙளின் போதெல்லாம் பல சமயங்களில் வழியிலுள்ள திராவிடர்கழக நண்பர்கள் -அய்யாவோடு மிக நெருக்கமாகப் பழகிய பழங்காலக் காங்கரசு நண்பர்கள் (பின்னர் அரசியலைவிட்டே ஒதுங்கி விட்டார்கள்), இவர்கள் வீடுகள், கடைகள் இருதால் முன்கூட்டியே அந்த வழியாய்ச் செல்வதை அஞ்சலட்டை மூலம் அய்யாவுடைய உதவியாளர் தெரிவித்துவிடுவார். சிலர் வீடுகளில் சிற்றுண்டி, தேநீர், சில சமயங்களில் சற்று ஓய்வு என நிதானமாயப் பயணம் தொடரும். மணியம்மை அவர்கள் வீட்டுப் பெண்களோடு ரொம்பவும் நெருங்கிப் பழகுவார். புறப்படும்போது பயறு, எள்ளு, உளுந்து காய்கறிகள் எனச் சிறு மூட்டைகளை அன்படு பெற்றுக்கொண்டு புறப்படுவது அம்மாவுக்குப் பிடித்த “பொதுத்தொண்டு”

ஈரோடு செல்லும் வழியில் கரூர்! பெரியார் தொண்டர்களின் வலிமையான கேந்திரம்! கரூர் நேஷனல் லாட்ஜ் (உணவு விடுதி). கடைசிவரை பெரியாரின் நம்பிக்கைக்குரியவராய் வாழ்ந்து மறைந்த கே.எஸ், இராமசாமியின் கடை. வெறும் சோறு மட்டும் சமைத்துக்கொண்டு மணியம்மை வருவார். வண்டி கடையருகில் நிற்கும். வண்டியைச்சுற்றி நிற்கும் கழக நணபர்களிடம் பெரியார் குசலம் விசாரிப்பார். ‘சாப்பிட்டு விட்டுப் போகலாம்’ என்பார் இராமசாமி. மணியம்மை ‘வேண்டாம்…வேண்டாம்…. சோறு, மோர், ஊறுகாய் இருக்கிறது…. சமாளித்துக் கொள்வோம்’ என்பார். மறைமுகமாய்க் கறி, குழம்பு, மற்றவை இல்லை என்பதை உணரத்த, அடுத்தச்சில விநாடிகளில்…வண்டி முழுக்க பதார்த்தங்களும் பொட்டலுங்களுமாய் K.S.R பாதிக் கடையை ஏற்றிவிடுவார்….

இன்றைக்கும் கரூர் முனை திரும்பும்போதெல்லாம் அய்யாவின் நினைவால் கண்கள் நிறையும் கண்ணீரால்….

வெள்ளக்கோவில் தாண்டி ஒருபெரிய மரத்தடியில் சாப்பாட்டுப் பந்தி நடந்தது. வழக்கப்படிச் சாலையோரம்! பெரியாரின் பிரச்சார நிறுவனம், அதனிடமுள்ள பலகோடி ரூபாய்கள், சொத்துகள் பற்றி 1958 தொடங்கியே ஒரு சர்ச்சை எழுந்தது. திருச்சி வக்கீலய்யா வேதாச்சலம், குத்தூசி குருசாமி, வேலூர் திருநாவுக்கரசு போன்றவர்கள் மணியம்மையும் அவருடைய சகாக்ககளும் கொடுத்த நெருக்கடியில் வெளியேற்றப்பட்டார்கள். வெளியேறியவர்கள் அன்றைய முதல்வரும் பெரியாரிடம் பேரன்பு பூண்டவருமான காமராசரிடன் முறையிட்டார்கள்.

முதல்வர் காமராசரிடம் அவர்கள் முறையிட்டபோது காமராசர் சொன்ன பதிலை அய்யா எல்லோரிடமும் சொன்னார்.

முறையிடச் சென்றவர்களுள் ஓரிருவர் இன்னமும் உயிருடன் உள்ளனர். எல்லாக்குறைகளையும் கேட்டுக்கொண்டு காமராசர், “பெரியார் சேர்த்திருக்கின்ற பசம் வசதிகளைக்குறைத்தத் தன்னைத் துன்புறுத்திக்கொண்டு சேர்த்தப் பணம்…அதற்குப் பாதகம் வருகிற மாதிரி அவர் ஒரு காலமும் விட்டுப்போகமாட்டார்.. பொதுக் கொள்கை விஷயத்தில் அவர் யோக்யன்…யோக்கியன்… நம்புங்க..நான் சொல்கிறேன்….ஒண்ணும் தப்பு நடக்காது… நான் இருக்கேன்… பாத்துக்கிறேன்..” என்று அவருடைய வழக்கப்படித் திரும்ப திரும்பச் சொன்னாராம்.

பெரியார் சிரித்துக்கொண்டே சொன்னார்.. “நம்மை யோக்கியன்..பொதுப் பணத்தைத்தின்னுபோட மாட்டான்னு எதிரிகூடச் சொல்றாங்க… என்றார்.. காமராசர், நமக்கு நண்பர். ஆனால் “காங்கிரசுக்கார்ர் எப்போதும் எதிரிதான்.!’

“பெரியார் சொத்து.. தப்பு நடக்காது.. நான் பாத்துக்கறேன்” என்றார் காமராசர்! காமராசஞர் இப்போது இல்லை! என்ன செய்யலாம்? பார்த்துக்கொள்ள யார் இருக்கிறார்கள்?

தலைவர் கலைஞர் மகிழுந்தில் (கார்,புதுக்கோட்டைத் திருமணமொன்று முடிந்து திரும்பிக் கொண்டிருக்கிறார். பழையவர்களைப் பற்றிப் பேச்சுத் தொடங்கியது. மதுரை முத்து ஒரு காலத்தில் தலைவர் கலைஞரின் தீவிர ஆதராவாளராய் இருந்து அப்புறம் கடும் கருத்து வேறுபாடுடையவராய்க் கழகத்திலேயே இருந்து பின்னர்க கட்சியை விட்டே வெளியேறிவிட்டார். நாவலர் நெடுஞ்செழியனும் அதுபோலவே வெளியேறிவிட்டார். இருவரும் தி.மு.க. அறக்கட்டளை உறுப்பினர்களாக இருந்தவர்கள்.

கடும் கருத்து வேறுபாடுகளோடு கட்சியை விட்டு விலகிய இருவரும் அறக்கட்டளைப் பொறுப்பிலிருந்து விலகாமலே கடும் சண்டித்தனம் செய்து தி.மு.க.வுக்கும் கலைஞருக்கும் சங்கடம் ஏற்படுத்துவார்கள் என்றுசிலர் எண்ணினார்கள். நாவலர் அப்படி ஏதும் சங்கடம் ஏற்படுத்தாமல் விலகிக்கொண்டாராம். மதுரை முத்துவின் விலகல் பெறுவதில் சிரம்ம் ஏற்படுமோ என்று ஒரு எண்ணம் சிலருக்கு இருந்ததாம்.

மதுரையிலிருந்து முக்கிய தோழர்கள் கலைஞர் ஆணைப்படி மதுரை முத்துவிடம் பேசினாராம். கடைசியில் “கலைஞரை எனக்குப்பிடிக்காமல் போய்விட்டது. அது வேறு பொதுப்பண விஷயத்தில் கருணாநிதி யோக்கியவர்.. அந்த விஷயத்தில் நான் ஏத்துக்க மாட்டேன்” என்று தன் வழக்கப்படிக் குரலை உயர்த்தி…மேஜையில் ஓங்கித் தட்டிப் பேசித் தன் விலகல் கடித்ததைக் கொடுத்தனுப்பினாராம்.

ஒரு காலத்தில் பெரிய மருது என்று தன்னால் அழைக்கப்பட்டுப்பாராட்டப்பட்ட ஒரு நண்பனுடன் கருத்து மாறுபாடு ஏற்பட்டதைக்குறித்து வருத்தத்துடன், “என்ன செய்வது, முத்து பிடிவாதக்கார்ர் தன்நிலையிலிருந்து சிறு மாற்றத்தைக் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார். ஜனநாயகத்தில் எல்லோரையும் அனுசரிக்க வேண்டியுள்ளதே” என்றார்.

அறக்கட்டளையிலிருந்து விலகிக்கொள்ள ‘ஏதும்’ எதிர்ப்பார்த்தாரா? என்று கேட்டேன்! கலைஞர் வேகமாய் மறுத்தார்! “இல்லை! ஒன்றும் எதிர்பார்க்கவில்லை சும்மா சொல்வதா?” என்றார்.

வயதில் மூத்தவரானாலும் முத்தான தொண்டரல்லவா முத்து.!

பல்லே விளக்காத தவமணியுடன் ஒரே இலையில்..

தந்தைப் பெரியாருக்கும் தலைவர் கலைஞருக்கும் உள்ள ஒரே மாதிரியான சம்பவங்கள் செய்திகளைத் தொடர்ந்து படித்தீர்கள். மாறுபாடால் சிலவும் உண்டு.

பெரியாருக்குப் பயணத்தின்போது பசி எடுத்துவிட்டால் இடம், சுற்றுப்புறமும் இவற்றைப் பற்றிக் கவலைப்பட மாட்டார். முன்பே பலமுறை எழுதியது போல் பசி பொறுக்க மாட்டார். கலைஞர் அப்படியல்லர். வேலை என்று வந்துவிட்டால் உணவும்பசியும் அவருக்கு இரண்டாம் பட்சம்தான். பயணங்களில் வெறும் மோர், இளநீர், காப்பி, இலேசான நொறுக்குத்தீனி (முறுக்கு, பட்டாணி) இவற்றுடன் பசியைச்சமாளித்து விடுவார். பெரியார் அப்படியல்லர். மாமிசம், தயிர் முதலியவற்றுடன் முழுமையான சாப்பாடு வேண்டும். அவருடைய தொண்ணூற்று ஐந்து வயிதிலும் இருப்பது இளைஞனைவிட நன்றாகச் சுவைத்துச்சாப்பிடுவார். உளுந்து வடை, ஒப்பிட்டு (போளி) போன்ற நொறுக்குத் தீனிகளை இடையிடையே கேட்டு வாங்கி சாப்பிடுவார்.

கலைஞர் பயணம் முடிந்து போய்ச் சேரும் இடத்தில்- தூமையான விடுதி அறை போன்றவை கிடைக்கும் வரை பொறுமை காப்பார். பசியோடிருந்தாலும் காட்டிக்கொள்ள மாட்டார். அய்யா அப்படியல்லர். பசி ஏற்பட்டவுடன் ஏதேனும் மரத்தடியில் சாலை ஓராமானாலும் சீருந்தை (வேன்) நிறுத்தி வண்டியில் உட்கார்ந்தபடியே மடியில் ஒரு துண்டை விரித்துப்போட்டுக்கொண்டு தட்டை வைத்துப்பரிமாறச் சொல்லிச் சாப்பிடத் தொடங்கிவிடுவார்.

கலைஞரவர்களுக்குப் பரிமாறப்படும் உணவின் அளவு கொஞ்சமாகத்தான் இருக்க வேண்டும். சாப்பிடும் அளவும் அப்படியே. பெரியார் அப்படியல்லர். சிறிய பாத்திரங்களில் கொஞ்சமாக்க் கொண்டு வந்திருந்தால் அவருக்கு “ஒருமாதிரி ” ஆகிவிடும்.

கலைஞருக்கு அவரும் சரி, பரிமாறுகின்றவரும் சரி கைகழுவித் தூய்மையாய் இருக்க வேண்டும் பெரியார் அதைப் பற்றிக்கவலைப்படமாட்டார். அவருக்குப் பரிமாறும் மணியம்மையாரும் உணவில், உடலில், உடையில் தூய்மை என்பதை ஒரு முதலாளித் துவ உணர்வு என்றே சொல்வார். பல நேரங்களில் பெரியார் வீட்டில் சாப்பிடும் முன் தண்ணீரில் கை கழுவுவது எனபதே கிடையாது. அவருடைய வீட்டல் உணவு தயாரிக்கப்பெரும்பாலும் காலதாமதமாகிவிடும். “வேறு பல கல்விப் பணிகள்” காரணமாக மணியம்மையாரால் பெரியாருக்கு உணவு தயாரிப்பதில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். பணியாளர்கள் உணவு தயாரிக்கச் சற்றுத் தாமதமாகிவிடும். பரிமாறும் முன்பே பசியால் அவசரப்படும் பெரியார், கை கழுவ நீரும் பாத்திரமும் வரும் முன்னர் மேல்துண்டில் கையை அழுத்தித்துடைத்துக்கொண்டு சாப்பாட்டி கை வைத்து விடுவார்.

தந்தை பெரியாரின் நம்பிக்கைக்குரிய செயலாளரான ஈரோடு சுப்பையாவும், அவருடைய துணைவியார் சுலோச்சனா அம்மையாரும், திருச்சிப் பெரியார் மாளிகையிலிருந்து விடை பெற்றுச் சென்ற பின்னர்ப் பெரியாருக்கு நேரத்திற்கு உணவு , சுவையான உணவு என்று பழக்கமும் விடைபெற்றுச்சென்றுவிட்டது. இஃது என் கருத்தன்று! சலிப்போடு தந்தை பெரியாரே ஒருமுறை சொன்ன செய்தி.

இதிலும் கலைஞரின் அனுபவம் வேறு மாதிரிதான் அய்யாவைவிடக் கலைஞரவர்கள் “கொடுத்து வைத்தவர்!” நேரமறிந்து குறிப்பறிந்து கலைஞரவர்களின் துணைவியாரும், உதவியாளர் சண்முகநாதன், கோபால் , ஓட்டுநர் சஞ்சீவி, சில நேரங்களில் தியாகராஜன் போன்ற்வர்களும் அவர் அருந்த வேண்டியவற்றைக் கொடுத்துதவுவார்கள். வண்டிப் பயணத்தின்போதும் தடங்கலின்றி இது முறையாக நடக்கும்.!

குளிப்பதில் இருவருக்கும் உள்ள வேற்றுமை மலைக்கும் மடுவுக்கும் இடையில் எண்ணியே பார்க்க முடியாத வேற்றுமை!

தினம் குளிப்பது பற்றிப் பெரியார் ஒரு முறை சொன்னார்-தொடக்கக் காலத்தில் பெரியாரின் தொழில்முறை அப்படிய