நீதிபதிகள் கண்ணோட்டத்தில் பெரியார்

1. தாய்மையின் சின்னம் பெரியார்

நீதிபதி ராம்பிரசாத்ராவ்.

“என்றென்றும் நினைவில் இருக்கக்கூடிய இந்த சிறப்பு மிக்க நிகழ்ச்சியான தந்தை பெரியார் படத் திறப்பு விழாவில் என்னை பங்கேற்றிடச் செய்த திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்தப் படம் இந்த மாமன்றத்தின் அரங்கத்திலே காலமெல்லாம் நிலைத்திருக்கப் போகிறது. தந்தை பெரியர் அவர்களின் படத்தின்மூலம், இந்த அரங்கம் தனது அழகுக்கு மேலும் அணிசேர்த்துக் கொள்கிறது.

இந்த அரங்கத்திலே பலருக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பினைப்போல், என்னுடைய இளமைப் பருவத்தில் தந்தை பெரியாரோடு தொடர்பு கொண்டிருந்தேன் என்ற பெருமையும், உரிமையும் எனக்கும் உண்டு. அவர் ஒரு மேதை என்ற உணர்வு தான் என்னுடைய உள்ளத்தில் எப்போதும் இருந்து வந்தது. என்னுடைய அருமை நண்பர் கே.எம். பாலசுப்பிரமணியம் அவர்கள் உணர்ச்சி பூர்வமாக்க் குறிப்பிட்டதை விட என்னால் அழகாகச் சொல்லிவிட முடியாது.

அவர்சொன்னார்:

“அகன்ற நெற்றி, வெள்ளிக்கம்பியொத்த தலைமுடி, மயிரடர்ந்த எடுப்பான புருவங்கள், நீண்டு வளைந்த அகன்ற மூக்கு, கூர்ந்த அறிவும், ஆளுமையும் கொண்ட பார்வை – அவர்தாம் பெரியார்”

ஒரு வழக்கறிஞர் என்ற முறையில், நான் அவரிடம் அவர் வழக்குக்காக்க் கட்டணம் பெற்றிருக்கிறேன். எளிமை வாழ்க்கைதான் அவர் எப்போதும் வாழ்ந்தது. ஆடம்பர வாழ்க்கையை அவர் வெறுத்து ஒதுக்கினார். தன்னுடைய லட்சியத்திற்காக வாழ்ந்தார். அவர் உயர்ந்த குணத்தின் சின்னமாவார்.

கனி தரும் மரம்!

அவரைப் புரிந்துகொள்வது மிக எளிது. ஆனால், அவரைப் பின்பற்றுவது கடினமானது என்பது எனக்குத் தெரியும். அவரைக் காலமெல்லாம் கனிகளைப் பூத்துக் குலுங்கும் மரத்திற்கு ஒப்பிடலாம். அந்தக் கனிகள் ஒரு சாராருக்கு மிகவும் சுவையானதாக இருக்கும்; முழு திருப்தியை அளிக்கும். மற்றொரு பிரிவினருக்கு அதிருப்தியை அளிக்கும். சுவைகள் மாறுபட்டிருப்பதே இதற்குக்காரணம். தன்னுடைய கொள்கைகளுக்ககுத் தானே உதாரணமாக இருந்த வாழ்ந்து காட்டினார். தன்னுடைய கொள்கைகளை அணுப்பிறழாது பின்பற்றிட வேண்டும் என்று தனது சக்திவாய்ந்த தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த அடிப்படையில், பெரியார் ஒரு சுதந்திர உணர்ச்சிக்கார்ராக விளங்கினர். மதபோதனைகள் அவரைத் திருப்திப்படுத்தவில்லை. மூட நம்பிக்கைகளும், பழமைச் சம்பிரதாயக்கோட்பாடுகளும் அவரை ஈர்க்கவில்லை. செயல்பாட்டில் அவர் நம்பிக்கை வைத்தார். காலமெல்லாம் உழைத்தார்.

தன்னுடைய சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை எவ்விதத்தயக்கமும் இல்லாமல் உச்சியின்மீது நின்று பேசுவார் இருந்து கொண்டிருக்கும் சில பழமைகளைத் துணிவோடு எவ்விதச் சுய நலமுமின்றி அவர் எடுத்துச் சொன்னது, பல கருத்து விமர்சனங்களை உருவாக்கியது. ஆனால் இப்படிப்பட்ட விமர்சனம், விவாதங்கள் மூலமாகத்தான், தன்னுடைய கொள்கைகளை, தன்னுடைய மக்கள் சமுதாயம் புரிந்துகொள்ளமுடியும் என்பது அவருக்குத்தெரியும். அவர் அப்பழுக்கற்ற ஒரு பகுத்தறிவுவாதி!

அவர் ஒருமனிதாபிமானி!

ஒரு பகுத்தறிவுவாதியாக இருப்பதால் இந்தக் கருத்துக்கு மாறானவர்களுக்கு அவர் மரியாதை தரமாட்டார் என்று அவசரப்பட்டு நினைத்து விடலாம். அவர் எவ்வளவு பொறுமையாக எதையும்சகித்துக் கொள்வார் என்பது அவரை, நெருக்கமாகத் தெரிந்தவர்களுக்குத்தான் புரியும். எனவேதான், அத்தகைய காலத்தை வென்ற ஒரு தலைவருக்கு நான் நூற்றாண்டு விழா எடுப்பதை அவசியமாக்கிக் கொண்டிருக்கிறோம். அவர் முரட்டுத்தனக்கார்ரைப் போலத் தன்னைத்காட்டிக் கொண்டார். ஆனால் அவர் ஒரு மனிதாபிமானி! எந்தத் தனிப்பட்டவர் மீதும், தனிப்பட்ட முறையில் அவருக்கு வெறுப்புக் கிடையாது. வன்முறையை அவர் ஆதரித்தது இல்லை. மனிதனின் சுய மரியாதையை அவர் ஆதரித்தது இல்லை. மனிதனின் சுய மரியாதையை அவர் வலியுறுத்தினார். எல்லோரும் இந்தக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். தன்னைத் தவறான பார்வையால் எதிர்ப்பவர்களிடம் அவர் விரோதம் பாராட்டியதில்லை. தன்னுடைய செயல், பேச்சு உணர்வோடு, சிந்திக்க செய்வது அவரதுபோக்கு.

இயற்கையில் உற்பத்தியான மனிதன் நேர்மையாகவும் எளிமையாகவும் உண்மையாகவும் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த விஞ்ஞானப் பூர்வமான தத்துவத்தைத்தான், தனதுத முதன்மைச் சீடரான அறிஞர் அண்ணாவிடம் புகுத்தினார். அதையேதான் அண்ணா, கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு என்று தனது தொண்டர்களிடையே வலியுறுத்தினார்.

பெரியார் தொடர்பு கொண்டிருந்த நீதிக்கட்சியும் அதற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இயக்கமும் பழைமைகளையும் மூட சம்பிரதாயங்களையும் எதிர்த்துப் போராடுவதற்கான அடிப்படைகளை உருவாக்கின. பிரபஞ்சத்தில் உருவான ஒவ்வொன்றும் பல்வேறு நிலைகளில் மாறுபட்டத் தன்மை உடையவைகளாக இருந்தாலும் பிரதான சகவாழ்வுக்குச் சாதிகள் ஒழிந்த சமுதாய அமைப்பை அவர் வழியுறுத்தினார். தந்தை பெரியார் அவர்களைப்போல தனித்தன்மை படைத்த தலைவர்கள் சிலருக்கு முரண்பாடுகளாகத் தோன்றலாம்; சிலருக்குக்கோபமாகத் தோன்றலாம்; சிலருக்கு ஏற்றுக்கொள்ள முடியாதவைகளாக இருக்கலாம். ஆனால், இவரது 95 ஆண்டுகால ஒளி பொருந்திய வாழ்க்கை காலத்தால் அழிக்கமுடியாத வரலாறாகும்.

தமிழக வரலாற்றில் ஓர் தனியிடம்!

குறிப்பாக, தமிழகத்தினுடைய பொன்னான வரலாற்று ஏடுகளில், வாழ்க்கைக்கு வேண்டிய புரட்சிகர சிந்தனைகளைத் தந்தை பெரியாரின் வரலாறுகள் வேண்டிய புரட்சிகர சிந்தனைகளைத் தந்தை பெரியாரின் வரலாறுகள் என்றென்றும் மின்னிக் கொண்டிருக்கிற ஏடுகளாக இருந்துகொண்டிருக்கும். பெரியார் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது உண்மையிலேயே நமக்குக் கிடைத்த பெரும் சிறப்பு. அவருடைய கருத்துக்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்துக்காக, அவரைப் புறக்கணிக நினைப்பது மனிதாபிமானமற்ற செயலாகும்.

அவருடைய கருத்துக்களை எங்கெங்கெல்லாம், எப்படி எல்லாம் நம்மால்முடியுமோ, அந்த வகையில் பரப்புவது நமது நோக்கமாக இருக்கவேண்டும்.

ராஜாராம் மோகன்ராய் உயிரோடு வாழ்ந்த காலத்தில் எல்லோரும் தாக்கினார்கள். ஆனால், அவர் புகழ் இன்றைக்கு நிலைத்திருக்கிறது. வீரேசலிங்கத்தை வெறுத்தார்கள். ஆனால் இன்று அவர்மரியாதைக்குரியவராகிறார். அதுபோல்தான் புரட்சி சிந்தனையாளர் பெரியாரும்! அவர் தியாகப் புகழ்பெற்றுவிட்டார். மத மூடநம்பிக்கைகளை எதிர்த்து அவர் நடத்திய கிளர்ச்சியையும், வைக்கத்தில் அவர் நடத்திய போராட்டத்தையும், எதிர்கால தலைமுறை சொல்லிக்கொண்டிருக்கும். எதற்கும் அஞ்சாத துணிவு அவருடைய தனித்தன்மை. அந்தத் துணிவில், சாதி அமைப்பு முறையைத் தகர்த்து எறிவதற்கான நியாயங்கள் இருந்தன. பெரியாரின் மிகப்பெரிய சாதனைகளில், சாதி ஒழிப்பு மிக முக்கியமானது.

சமூகம், சாதி, மதம் காரணமாக சமுதாயத்தின்மீது படிந்திருந்த நோயை ஒழிப்பதில் அவர் மிகச் சிறந்த மருத்துவ நிபுணராகப் பணியாற்றினார்.

அவரது ‘குடி அரசு’ பத்திரிகை சமத்துவத்தை வலியுறுத்தியது. அதேபோல்தான், என்னுடைய மரியாதைக்குரிய இளம் நண்பர் திரு. வீரமணி அவர்கள் இப்போது பொறுப்பேற்று நடத்திவரும் “விடுதலை” பத்திரிகையும் சமத்துவத்தின் அடிப்படையில் உண்மைகளைப் படம் பிடித்துக் காட்டிவருகின்றது.

மனிதனுக்குச் சுயமரியாதை வேண்டும்; சுயமரியாதை பெருவதற்கான அடிப்படை உரிமைகள் வேண்டும்; நாட்டின் வளர்ச்சி இதைப் பொறுத்துத்தான் இருக்கிறது என்பதை, வெள்ளைக் கார்ர்கள் ஆட்சிக்காலத்திலேயே பெரியார் சுட்டிக் காட்டினார். ஊமைகளாகிக்கிடந்த கோடிக்கணக்கான மக்களிடம் சுய மரியாதை இயக்கம் இதைத்தான் எடுத்துக்கூறியது.

சுயமரியாதைத் தத்துவம்!

சுயமரியாதை என்பது சமூகத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டிருக்கும் சிலரின் ஏகபோகங்கள் அல்ல என்றது சுயமரியாதை இயக்கம். “எல்லோரும் நமக்காக; நாம் எல்லோருக்குமாக” என்ற அடிப்டையில் தந்தை பெரியார் தத்துவத்தை உருவாக்கினார்.

தந்தை பெரியாருடைய மிக நெருக்கமான நண்பர் ஜி.டி. நாயுடு. தீர்க்கமான முடிவுகளிலிருந்து வெளிப்படும் துணிவான முடிவுகளில் அவர்கள் இருவருமே நம்பிக்கை வைத்திருந்தனர். தாம் எதைச் சொல்கிறோமோ அதில் உண்மையான நம்பிக்கை கொண்டவர் பெரியார். தன்னுடைய சிந்தனைகள் மூலம் ஏராளமானவர்களை மாற்றிய சீர்திருத்தவாதி!

1967- ஆம் ஆண்டு சென்னைச் சட்டம் 21-வது பிரிவின்படி 1955 – ஆம் ஆண்டு இந்துத் திருமணச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு சுயமரியாதை திருமணத்துக்கு அங்கீகாரம் தரப்பட்டது. தந்தைப் பெரியார் அவர்களின் தொண்டினால் மட்டுமே இந்த நிலை உருவானது! இந்தத் திருமண முறை என்ன கூறுகிறது? திருமணமாகும் தம்பதிகளுக்குத் தெரிந்த எந்த மொழியிலும் உறுதி எடுத்துக்கொள்ளலாம். இன்னாரைக் கணவனாக, மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன் என்று அறிவித்து, மாலையோ, மோதிரமோ திருமணத்தின் அடையாளமாக அணிவித்தால் போதும்; அல்லது தாலி அணிவிக்கலாம்; வேறு எந்தச் சடங்குதேவை இல்லை. இவைகளில் ஏதாவது ஒருமுறையைப்பின்பற்றினாலே திருமணம் சட்டப்படிச் செல்லும். நமது மாநிலச் சட்டமன்றம் இந்தச் சுயமரியாதைத் திருமண்ச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. சம்பிரதாயச் சடங்குகள், வீண் செலவுகள் ஆகியவைகளை இத்திருமண முறை ஒழித்துக்கொட்டுகிறது. இதன் முழுப் பெருமைக்கும் உரியவர் தந்தைப் பெரியார்.

இப்படிப் பல்வேறு தொண்டுகளில் பெரியார் முதலிடம் பெறுகிறார். சுயமரியாதைத் திருமணமானாலும் சரி, தாழ்த்தப்பட்டவர்கள் உரிமைக்குப் போராடியதிலும் சரி, படிப்பறிவின்மையை ஒழிப்பதிலும் சரி, அவர் கடைப்பிடித்த முறைகள் எலாம் அன்பு, அறிவுவழி அடிப்பட்டையிலேதான்! இதன் மூலம், தமிழ்நாட்டு மக்களுக்கு ஈடு இணையற்ற தொண்டர் என்பதை நிரூபித்துவிட்டார்.

எளிய பேச்சில் ஏற்றமிகு கருத்து!

மனித சக்திக்குத்தான் அவர் எல்லாவற்றையும்விட உயர்ந்த இடம் கொடுத்தார். மனித சக்திக்கு அப்பாற்பட்ட, யாருக்கும் தெரியாத சக்திகளுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அவருடைய உரைகளில் வார்த்தை ஜாலங்கள் இருக்காது; எளிமை இருக்கும். மக்களைச் சிந்திக்கத் தூண்டுகிற கடுமை இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பே, குடிசைகள் ஒழிப்பு, மதுவிலக்கு ஒழிப்பு ஆகியவைகளைப் பற்றிச் சிந்தித்தார் ஆங்கிலம் ஆட்சி மொழியாகத் தொடர வேண்டும் என்றார்.

தமிழ்நாட்டுப் பெண்கள் அவருக்கு ‘தந்தை’ என்று கொடுத்த பட்டத்திற்குக் காரணம் என்ன? தன்னைப் பார்க்க வருபவர்கள், பெரியவராக இருந்தாலும், சிறியவராக இருந்தாலும் அவர் காட்டிய தாய்மைப் பரிவுதான்; அவருடைய சிறப்புக்களிலே இது தலையாய சிறப்பு.

அவரது கடவுள் மறுப்பு, மனிதாபிமானத் த்த்துவத்தின் அடிப்படையில் எழுந்ததாகும். கற்பனைகளைவிட, உண்மைகள் உயர்வானவை என்பதைத் தனது செயல்மூலம் நிரூபித்துக் காட்டினார்.

ஒரு சாதாரண தமிழ்நாட்டுக் குடிமகனாக இருந்து, எதிர்காலம் பற்றி அவர்த்த கணிப்புகள், எச்.ஜி வெல்ஸ் தந்த கணிப்புகளோடு ஒப்பிடக் கூடியவைகளாகும். முழுமையான பள்ளிப்படிப்பு இல்லாமை அவருக்குத் தடையாக இருந்ததில்லை. ஒரு ஆதரவாளர் கூறியதுபோல – “தன்னுடைய அறிவார்ந்த த்த்துவப்பாசறைக்கான கருவிகளை அவர் எங்கிருந்து சேகரித்தார் என்பதைக் கண்டு வியக்க வேண்டியிருக்கிறது” என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது”

(18-11-1978) அன்று திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தில், தந்தை பெரியார் படத்தைத் திறந்துத வைத்து ஆற்றிய உரை)

2. மறுமலர்ச்சி வித்தகர் பெரியார்

நீதிபதி சாம்பசிவராவ்

“பெரியாரின் படத்தைத்திறந்து வைக்கும் வாய்ப்புக் கிடைத்தமைக்கு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளவர்கள் என்னை இங்கு அழைத்தபோது, நான் எவ்வித மறுப்புமின்றிக் கலந்து கொள்ளச் சம்மதம் தெரிவித்தேன். பெரியார் செய்துள்ள அரும்பணிக்காக நான் அவரைப்பெரிதும் போற்றுகிறேன். அவரைப் பற்றிய சில வார்த்தைகள் பேசுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆந்திராவின் புகழ்பெற்ற கவிஞர் ராமசாமியைப்பற்றி நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். அவர், தனது சிந்தனையைத்தூண்டும் கவிதைகளால் தெலுங்கு மக்களைத் தட்டியெழுப்பினார். இன்று நாம் தமிழகத்தின் தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவிற்காகக் கூடியிருக்கிறோம்.

நான் சிறுவனாக இருந்தபோதே, ஆந்திராவின் ராமசாமியையும், தமிழ்நாட்டின் ராமசாமியையும் (பெரியார்) குறித்து பெரிதும் அறிந்திருந்தேன். வர்களின் கொள்கைகளின்பால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தேன். அவர்களுடைய சிறந்த கொள்களைகளையும், சிந்தனைகளையும் நான் பின்பற்றி வந்தேன்.

பெரியாருடைய கொள்களைப் படித்த பின்பு இந்தக் கழகத்தில்புதிய கண்ணோட்டத்துடன் நான் வேலை செய்ய ஆரம்பித்தேன்.

இங்குக்கூடியுள்ளோர் பெரும்பான்மையினர் தெலுங்கு பேசும் மக்கள். அதற்காக நான் தெலுங்கில் பேசுகிறேன். தந்தை பெரியார் அவர்கள் ஆங்கிலத்தின் அவசியத்தைப்பெரிதும் உணர்ந்திருந்தார். திரு. சட்டநாதன் அவர்கள்பெரியாரைப் பற்றி எழுதியுள்ள புத்தகத்தில்பெரியாரை ஆங்கிலக் கல்வியின் முக்கியத் துவத்தை உணர்ந்து அதற்காகப் போராடியவர் என்று எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில் பெரியாரைப் பற்றிக் குறிப்பிடும்போது ஆங்கிலக் கல்வியின் நாயகர் என்றும், அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு பகுத்தறிவுவாதியாகவும் கடவுள் மறுப்பு வாதியாகவும் விளங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்.

எந்தச் சடங்கையும், பழக்கத்தையும், இதற்கு முன்னால் உள்ளவர்கள் பண்டையக்காத்திலிருந்தே செய்து வந்திருந்திருக்கிறார்கள் என்பதற்காகக் கடைப்பிடிக்காதே-அவற்றை உன் புத்தியைக்கொண்டு ஆராய்ந்து பார்; உன் பகுத்தறிவைப் பயன்படுத்தி அவற்றை ஆராய்ந்து தெரிந்துகொள் என்றால் படிபறிவற்ற ஒரு மளிகைக் கடைக்காரரின் மகன், கற்றறிந்தவராகுவும்பகுதற்றிவு வாதியாகவும் விளங்கினார் என்பது படித்தவர்களுக்கும், மேலையக் கல்வியாளர்களுக்கும் மிகவும் ஆச்சரியமாகத் தெரியும் என்று எழுதியுள்ளார்.

அவருடைய பொது மேடைகளில் அவர் துணிச்சலுடன் நாத்திகக் கருத்துக்களை எடுத்துரைத்தார் அவருடைய எதிரிகளை எதிர்ப்பதுபோன்று நண்பர்களையும், அவர்களுடைய பழைமைப் பிடிப்புகளுக்காகக் கடுமையாக விமர்சனம் செய்தார்.

பெரியார் தமிழ் மக்களுடைய நலன்களுக்காகப்போராடினார். தமிழ் மக்களின் மறுமலர்ச்சிக்கு வித்தூன்றியவர் பெரியார் அவர்கள். அவருடைய தொண்டின் காரணமாகத்தான் இன்று அதிகம்பேர் தமிழில் பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டனர். மது மாநிலத்திலும் கவிஞர் ராமாசாமி தெலுங்கு மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.

அய்யாவுடன் ஓர் அரிய சந்திப்பு!

நான் சென்னையில் வழக்கறிஞராக இருந்தபோது பெரியாரைச் சந்திக்கும் நல்வாய்ப்பினைப்பெற்றேன். 30 ஆண்டுகளுக்கு முன்பு, நானும், அண்ணாத்துரையும் நெருங்கிய நண்பர்களா இருந்தோம். நான் அவரை அன்பாக, ‘அண்ணா’ என்று அழைப்பேன். அவர்கள் என்னை ‘தம்பி’ என்று அழைப்பார். ஒருமுறை அண்ணா அவர்கள் ‘சண்டே அப்சர்வர்’ என்ற ஆங்கில இதழின் ஆசியராக இருந்த திரு.பி. பாலசுப்பிரமணியம் அவர்களிடம் அழைத்துச் சென்றார்.

அங்கிருந்து நாங்கள் பெரியாரைச் சந்திப்பதற்காகச் சென்றோம். நாங்கள் சென்றபோது பெரியார் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்.

நான் அவருடைய பார்வையால் கவரப்பட்டேன். நாங்கள் எங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டோம்.

எங்களை அவர் மிகவும் மரியாதையுடன் வரவேற்றார். அண்ணா என்னைப் பெரியாருக்கு அறிமுகப்படுத்தினார். அவர் எங்களுக்குக் காபி கொடுத்து உபசரித்தார், அவருடன் சிறிது நேரம் இருதபோது அவர் நான் ‘கப்’ காபி சாப்பிட்டதைப்பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

அதன் பிறகு நான் அவரைப் பல தடவை சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றேன். ஒவ்வொரு முறை அவரைச் சந்தித்த போதும் அவர் என்னை அன்புடன் வரவேற்றார். சில நேரங்களில் எங்களுடைய பேச்சு ஒருமணிக்கும் அதிகமாக நீடித்தது உண்டு.

அவர் பொதுக்கூட்டங்களில் பேசும்போது அனைத்துப் பிரச்சனை களையும் அலசினார். அவருடைய சிந்தனையில் தரத்தையும் அவருடைய வாழ்க்கையையும் புரிந்து கொள்ள எனக்குச் சில காலம் ஆகியது.

காங்கிரசில் இருந்தபோது ராஜாஜியும் பெரியாரும் நெருங்கிய நண்பர்களா இருந்தார்கள். ராஜஸஜி பெரியாரை ‘பெரிய தலைவர்’ எற்உ அழைத்ததுண்டு என்று நான் கேட்டிருக்கிறேன். பிற தலைவர்கள் அரசியல் விடுதலையில் கவனமாக இருந்தபோது பெரியார் மட்டும்தான் சமுதாய முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்காகப் போராடினார். காங்கிரசில் இருந்தபோது நண்பர்களாய் இருந்தவர்கள் பின்னால் பல அரசியல் பிரச்சனைகளில் மாறுபட்டிருந்தனர்.

சுயமரியாதையைப் பாதுகாக்க வேண்டும் என்பது என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். அனைத்துச் சமுதாயக்கொடுமைகளையும் பெரியார் எதிர்த்தார். அனைறைய பிரிட்டிஷ் ஆட்சியால் மக்கள் ஆட்சியாளர்களுக்குப் பயந்து கொண்டிருந்தனர். சமுதாயத்தில் உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்ற வேறுபாடுகளும், தாழ்வு மனப்பான்மையும் இருந்து வந்தது.

ஆட்சியாளருக்குப் பயப்பட்டுக்கொண்டிருந்த மக்கள், மத்ததின் பேரால் நடைபெற்ற வந்த கொடுமைகளுக்கு ஆளானார்கள். அதுமட்டுமின்றி, கடவுள், மதம், குருட்டு நம்பிக்கைகள் ஆகியவற்றைச்சொல்லி மக்களை ஏமாற்றி வந்தனர். அதற்கெதிராகக் கிளர்ந்தெழுவதற்குப் பதிலாகத் தங்களுடைய துன்பங்கள் அமைதியாகத்தாங்கிக் கொண்டிருந்தனர்.

மக்கள் சிந்தனையில் மாற்றம் தந்தவர்!

பெரியார் அவர்கள் பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு மக்கள் சிந்திக்கவும், தைரியமாகப் பேசவும் கற்றனர். அவருடைய சுய மரியாதை இயக்கம், மக்களுக்கு நம்பிக்கையையும் பலத்தையும் கொடுத்து, தீமைகளை எதிர்த்து நிற்க்க்கற்றுக்கொடுத்தது. மனிதன் தன்னைத்தானே உணர்ந்து கொண்டு தன்னிடம் ஒளிந்து நிற்கும் திறமைகளைப் புரிந்து கொள்வதற்கு மக்களுக்கு கற்றுக் கொடுத்தார் பெரியார். மறனிதனைப் பகுத்தறிவுவாதியாக்கியவர் பெரியார். ‘உலகில் உள்ள அனைத்தையும் படைக்கும் சக்தி உள்ளவன் நீ; உன்னை நீயே அறிந்துகொள்’ என்று மக்களைப் பார்த்துக்கூறினார். ‘உன்னிடம் சிந்திப்பதற்கான மூளை இருக்கிறது. நாணயமாக நடந்து கொள்ளுங்கள்’ என்பன போன்ற பகுத்தறிவுக்கருத்துக்களைப் பெரியார் எடுத்துச் சொன்னார். எப்போதும் சுயமரியாதைக் கைவிடாதே என்று மக்களுக்கு அறிவுரை கூறினார்.

அவர் முதலில் நீதிக்கட்சியில் இருந்தார். அப்போது நடைபெற்ற மாநாடுகளில் சுயமரியாதை இயக்கத்தின் வித்துக்களை விதைத்தார்.

ஒருமறை விக்டோரியா ஹாலில் அவர் பேசுவதைக் கேட்டேன். அவர் நீண்டநேரம் பேசினார். அக்கூட்டத்தில், சமுதாயக் கொடுமைகளைச்சாடினார். அந்த நாட்களில் எனக்குத் தமிழ் நன்றாகத் தெரியாது. ஆனால், அவர் பேசியதன் முக்கிய கருத்துக்ளை நான் புரிந்துகொண்டேன். அவர்றறைமிகச் சாதாரண, படிப்பில்லாத ஒருவர் கூடப் புரிந்து கொள்ள முடியும். அதுதான் அவருடைய சொற்பொழிவுத் திறமை.

காந்தியும் பெரியாரும்!

வாழ்க்கையில் அனைத்துத் துறைகளிலும் அன்று நிலவிய பார்ப்பன ஆதிக்கத்தையும், சுரண்டலையும் சுயமரியாதை இயக்கம் எதிர்த்தது.

காந்திஊஇ கூட பிரிட்டிஷ்காரர்களை எதிர்க்காமல் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்தார். ஆனால், பார்ப்பனர்களின் நண்பரா இருந்தார்.

கடவுள் பெயராலும் மத்ததின் பெயராலும் நடைபெற்ற வந்த கொடுமைகளைப் பெரியார் எதிரத்தார். சிலர் பெரியாரைப் பார்ப்பனர்களுக்கு எதிரி என்று சொன்னார்கள். அது தவறு; பார்ப்பனர்களின் பூணூலை அவருடைய தொண்டர்கள் சிலர் அறுத்தெரிந்தோது, அந்த வன்முறையைப் பெரியார் கண்டித்தார்.

அவருடைய இயக்கமும், நடைமுறைகளும், த்த்துவமும் சிறந்தவை. உயர்வானவை. பெரியாரின் சிந்தனைகளையும் அவருடை கருத்துக்கையும் ஆட்சியிலுள்ளோர் நடைமுறைப் படுத்துவதன்மூலம் ஒருமக்கள் நல அரசை ஏற்படுத்தமுடியும்.

பெரியாருடைய கருத்துக்களையும், சீர்திருத்தங்களையும் மறந்தால் நாம் சமுதாயத்துக்குத் தீங்கிழைப்பவர்களாவோம்.

பெரியார் நாறாண்டுகள் வாழ்ந்தவர். தன்னுடைய கடைசி மூச்சுவரை மக்களுக்காகவே வாழ்ந்தார். இன்றைய மக்களுக்குச் சரியான பாதையக்காண்பித்தவர் பெரியார் அவர்கள்.

இன்று சுதந்திரம் கிடைத்து 30 ஆண்டுகளுக்குமேலான பின்புங்கூடச் சமுதாய சீர்திருத்தத்தில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். சமுதாயக் கொடுமைகளுக்கெதிராக நம்மை யெல்லாம் விழிப்புணர்வு பெறச் செய்து அன்றே தட்டியெழுப்பியவர் பெரியார். வருடங்கள் செல்ல செல்ல, அவருக்கு வயது ஏற ஏற, அவர் ஒரு சோசலிச சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற கொள்கை உடையவராக வளர்ச்சி பெற்றார்.

அவருடைய கொள்களைகளையும், சிந்தனைகளையும் ஏற்று, இந்திய மக்களை சமுதாயக் கொடுமைகளிலிருந்தும், பிற்போக்கிலிருந்தும் விடுதலை செய்வது நம்முடைய கடமையாகும்.

அந்தக் கடமையை வலியுறுத்திக் கூறுவதற்காக நான் இங்கு வந்தேன். மாபரும் சீர்திருத்தவாதியான பெரியாரின் உருவப் படத்தைத்திறந்து வைக்கும் வாய்ப்பினை எனக்கு அளித்தமைக்கு நன்றி…

(ஆந்திர மாநிலத் தலைநகரான செகந்திராபாத்தில் 17-12-78) அன்று நடைபெற்ற தந்தை பெரியார் தலைமை நீதிபதி ஆவுல சாம்பிசிவராவ் அவர்கள் ஆற்றிய உரை.)

3. அனைத்துயிரையும் ஒன்றாய் எண்ணும் அன்பாளர் பெரியார்!

நீதிபதி மு.மு. இஸ்மாயில்

“நண்பர் திரு. வீரமணி அவர்களது பேச்சுக்குப்பின்னர் நான் என்னுடைய பேச்சினை ஒரு வழியிலே மாற்றிக் கொள்ள வேண்டியவனாக இருக்கின்றேன். அவர்கள் சில வார்த்தைகள் கூறி இருக்காவிட்டால்நான் வேறுவிதமாக என்னுடைய பேச்சினை அமைத்துக் கொண்டு இருந்திருப்பேன்

ஆனால், அவர்கள் சொன்ன சிலவற்றின் காரணமாகத் தான் ஒரு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. ஒருவிதத்தில் பார்க்கப்போனால் இந்தக் கூட்டத்தில் பங்கு கொள்வதற்கு என்னைப்போல் லாயக்கு இல்லாதவன் வேறு யாருமே இருக்க முடியாது! அதே சமயத்தில் இந்தக் கூட்டத்தில் பங்கு கொள்ள என்னைப் போலத் தகுதி உள்ளவரும் வேறு யாரும் இருக்கமுடியாது! ஏதோ ஒரு புதிர் போடுவதுபோல் இருக்கின்றதே! – இந்தப் புதிரை எப்படி அவிழ்ப்பது? என்பன போன்ற சந்தேகங்கள் உங்களுக்கு ஏற்படுமேயானால் நானே அதனை அவிழ்த்துக் காட்டுகிறேன்.

எனது மாணவர் வீரமணி!

வீரமணி அவர்கள் ஓர் அளவுக்கு என்னைப்புகழ்ந்து பேசியதற்குக்காரணம், வீரமணி அவர்கள் சட்டக்கல்லூரியிலே ஓர் ஆண்டு என்னுடைய மாணவராக இருந்தது தான் காரணம். இதுவும் ஓர் புதிராக – ஆசிரியரைப் புகழ்ந்து பேசுகின்ற மாணவர்களை இன்று காண்பது அபூர்வமாக இருக்கின்றது. ஆசிரியரைப் புகழ்ந்து பேசுகின்ற மாணவர் அழைத்து இருக்கின்றார்; இதை ஆசிரியரும் ஒப்புக்கொள்கின்றார் என்பதுவமு ஒரு புதிரே. ஆனால் உண்மை என்ன? அந்தப் புதிரை எப்படி அவிழ்ப்பேன என்று சொன்னால், உண்மைபேசுவது மூலமாகவே அவிழ்ப்பேன். பெரியார் அவர்களுடைய எந்தப்பேச்சையும் நான் கேட்டவனும் அல்ல; பெரியார் அவர்களுடைய எழுத்தையும் நான் படித்தவன் அல்ல. ஆகவே, இந்த இரண்டையும் வைத்துக் கொண்டால் இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள என்னைப்போலத் தகுதி இல்லாதவன் லாயக்கு அற்றவன் யாருமே இருக்க முடியாது என்று முடிவுக்கு வர முடியும். அதே சமயத்தில், பெரியார் அவர்களுடைய எந்தப் பேசையும் கேட்காத்து காரணமாகவும், பெரியார் அவர்களுடைய எந்த எழுத்தையும்படிக்காத்து காரணமாகவும், விருப்பு வெறுப்பு இல்லாத நிலையிலே இந்த நிகழ்ச்சியிலே என்னைப் போலக் கலந்து கள்ளத் தகுதி உள்ளவர்கள் வேறு யாரும் இல்லை என்று முடிவுக்கும் வரலாம்.

ஒரு மனதரோடு பழகிவிட்டால், ஒரு மனிதர் எழுதியதையோ, பேசியதையோ படித்துவிட்டால், கேட்டுவிட்டால் நம்மை அறியாமலே நம்முடையமனத்திலே அதைப்பற்றிய, அவரைப் பற்றிய எண்ணங்கள் உண்டாகிவிடும். இதன் காரணமாக விருப்பும் உண்டாகலாம்; வெறுப்பும் உண்டாகலாம். அதறகு மாறாக, ஒருவருடைய பேச்சைக்கேட்காமலும் எழுத்துக்களைப் படிக்காமலும் இருந்துவிட்டால் அவரைப்பற்றி எதுவும் தெரியாத நிலையிலே-விருப்போ வெறுப்போ உண்டாகும் வாய்ப்பும் இல்லாமல் போய்விடும். என்னுடைய பழக்கம், எது பற்றியும் முழுமையாக நான் தெரிந்து கொள்ளாதவரையில் அதைப் பற்றி அபிப்பிராயம் சொல்வது இல்லை. ஆகவே, பெரியார் அவர்களுடைய பேச்சைக் கேட்காதது காரணமாகவும், பெரியார் அவர்களுடைய எழுத்துக்களைப் படிக்காதது காரணமாகவும், என்றும் எந்த மேடையிலும் வாய்ப் பேச்சாகவோ எழுத்துக்கள் மூலமாகவோ பெரியாருடைய கருத்துக்கள்பற்றி நான் அப்பிராயம் கூறியதே கிடையாது. அப்படி இருக்கும்போது, எதற்காக நான் இந்த மேடையிலே கலந்துகொள்வது பற்றிச் சிலர் ஆச்சரியப்பட்டார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

பெரியாரை அறிந்தவன் நான்!

ஆனால், நம்முடைய நாட்டில் ஒரு சமுதாயப் பழக்கம் உண்டு. யாராவது ஒருவர் பின்னால் வால்பிடித்துக் கொண்டே இருக்கவேண்டும். அவர்களைப்பற்றி எப்போதும் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். அவர்களை எப்போதும் முகஸ்துதி செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர் கள்தான் அவர்களைப்பற்றி பேசுவதற்குத் தகுதிவாய்த்தவர்கள் என்பது அப்பிப்ராயம். அதற்கு மாறாக, அவர்களை விட்டு ஒதுங்கியும் தூரத்தில் இருந்துகொண்டும் அவர்கள் கருத்துக்களைப் பாராட்டிக் கொண்டு இருந்தால்கூட அவர்களுடைய கருத்தக்களைப் பற்றிப் பேசுவதற்கோ, எழுதுவதற்கோ, அபிப்ராயம் கூறுவதற்கோ தகுதி அற்றவர்கள் என்பது நமது நாட்டுப் பழக்கம். அடிக்கடி ஒருவரைப் பார்க்காவிட்டால், அடிக்கடி ஒருவரை சந்திக்காவிட்டால் அவர்களை விரோதியாகக்கருதும் பழக்கம் நமது நாட்டிலே வந்துவிட்டது. அதற்கு நேர் மாறாக, வேலை இருக்கின்றதோ, வேலை இல்லையோ, காரியம் இருக்கின்றதோ, காரியம் இல்லையோ, உங்களுடைய மனத்திற்கு அவை ஒத்து இருக்கின்றதோ, இல்லையோ அவரைப் போய் அடிக்கடிபார்த்துவிட்டு, அவர் செய்த்தடையும், செய்யாத்தையும் புகழ்ந்துவிட்டு, அவரைப்போல் இந்திரன், சந்திரன் வேறு யாருமே இல்லை என்று புகழக்கூடியவர்கள் உண்டு. அவர்களைவிட உற்ற நண்பர்கள் வேறு யாரும் இல்லை என்கின்ற் ஒரு பொய்யான நிலை நாட்டிலே ஏற்பட்டுவிட்டதின் காரணமாக, பெரியார் அவர்களுடைய எழுத்தையோ, கருத்தையோ, படிக்காமலோ, கேட்காமலோ இருந்து, அதன் காரணமாகவே அபிப்பிராயம் சொல்லாது இருந்த நான் இந்தக் கூட்டத்திலே கலந்து கொள்வது ஒருபுதிராகவே தோன்றுவதில் ஆச்சரியமில்லை. ஆனால், இந்தப் புதிரை இப்போது நான் அவிழ்த்துவிட்டேன் என்று கருதுகிறேன். என்றாலும், வீரமணி அவர்கள் பேச்சில் இருந்து ஒன்று நன்றாகத் தெரிகின்றது. பெரியார் அவர்களுடைய எழுத்தையோ, பேச்சையோ நான் படிக்காமலும் எழுதாமலும் இருந்தது, ஒரு குறை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. காரணம் என்னவென்றால், பழைய “குடி அரசு” பத்திரிகையில் இருது ஒரு சில பகுதிகளை உங்கள் முன் திரு. வீரமணி படித்துக் காண்பித்தார். அவர் படித்துக் காண்பித்ததனையே நான் நீண்டும் ஒரு முறை படித்துக்காட்டுகின்றேன். அதனை இப்போது படித்துக் காண்பிப்பேனேயானால், அவர் அதில் கூறியிருக்கும் கருத்தில் இருந்து மாறுபாடு கொண்டவர்கள் மனிதகுலத்தில் யாருமே இருக்க முடியாது என்று ஆகிவிடும். அந்த நிலை ஏறபடுமானால் பெரியாருடைய எழுத்துக்களை முன்னதாகவே படிக்கத் தவறியது, பேச்சைக் கேட்கத் தவறியது, என்னுடைய குறை என்று நான் சொல்லவேண்டும்

“குடி அரசு” வின் கொள்கை!

படிக்கின்றேன்: “குடி அரசு” வின் கொள்களையின் முதல் மலரில் முதல் தலையங்ககதில் தெரிவித்தபடி அதாவது, மக்களுக்குச் சுயமரியாதயும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர்தல் வேண்டும். உயர்வு- தாழ்வு என்று இருக்கக் கூடிய உணர்ச்சியினை ஒழித்து, அனைத்துயிரும் ஒன்றென்ற உண்மை அறிவு மக்களிடம் பரவ்வேண்டும். சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும். இந்நோக்கங்கள் நிஐவேற உண்மை நெறிபற்றி இவர் எமக்கு இனியவர்; இவர் எனக்கு மாற்றார் என விருப்பு-வெறுப்பு இன்றி, நண்பனேயாயினும் ஆகுக, அவரது சொல்லும் செயலும் கேடு சூழ்வதாயின் அஞ்சாமல் கண்டித்து ஒதுக்கப்படும்” இதில் இருந்துமாறுபட்டு இருக்கமுடியாது. எங்களுடைய சமயத்தின் அடிபடையிலே நான் சார்ந்து உள்ள மத்த்தின் அடிப்படையிலே, பிறப்பின் அடிப்படையிலே உயர்வு-தாழ்வு இல்லாதது மாத்திரம் அல்லாமல், நாகள் வளர்க்கின்ற பண்புகள் எங்களுடைய காரியம் சத்திலே, பழக்கத்திலே இருக்கின்றன.

சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் என்பன எந்த அளவுக்கு முஸ்லீம்களிடையே வேரூன்றி இருக்கின்றது என்றால், யாராவது ஒருவன் முஸ்லீமாக ஆகிவிட்டால், அவன் அந்தக் காரணத்தாலேயே அதற்கு முன்னதாக அவன் எந்தச் சாதிக்காரனாக இருந்தானோ-எந் வகுப்பினைச் சேர்ந்தவனாக இருந்தானோ அது அடியோடு மறைந்துவிடுகிறது. முஸ்லீம் சமுதாயம் என்கின்ற பெருங்கடலில் அவன் சேர்ந்து விடுகின்றான். அந்தக்காரணத்தாலேயே அவனுக்கு சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவலைகள்தாமாகவே வந்துவிடுகின்றன. இன்றும் கூட கிருஸ்தவத்தைப்பார்க்கும்போது, முன்னால் இந்துக் களாக இருந்தவர்கள் கிருத்தவர்களாக ஆகிவிட்டபிறகும்கூட இன்றும் வழக்கதில் ஒன்றைக் காணுகின்றோம். நாடார் கிருத்தவர்கள், பிள்ளைக்கிருத்தவர்கள் என்று அவர்கள் கூறிக்கொள்வதைக்காண்கின்றோம். அவர்களும் கூறிக்கொள்வதைக்காண்கிறோம். அவர்களும் நாடார் மரபு வழியினையும் வேளாளர் மரபு வழியினையும் பின்பற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஆனால் முஸ்லீம்கள் சம்பந்தப்பட்ட வரையிலே அவர் முன்னதாக நாடாராக இருந்தாலும் சரி, அவர் அந்தணராக இருந்தாலும் சரி, அவர் என்று இஸ்லாத்திற்கு வந்துவிட்டாரோ அந்தக கணமே நாடார், பிள்ளை, அந்தணர் என்கின்ற அனைத்தும் மறைந்து போய்விடும்-அழிந்து போய்விடும்.

இஸ்லாத்தில் சேர்ந்தவுடன