தேசப்பிதா மகாத்மா காந்தி
வாணிபம் செய்யும் வணிகர் குலமாக இருந்து, கத்தியவர் சமஸ்தானங்களில் மந்திரிகளாகப் பணியாற்றிய பரம்பரையில் பிறந்த காபா காந்தி போர்பந்தர் மன்னரிடம் திவானாக இருந்தவர்.
காபாகாந்தி, புத்லிபாய் தம்பதிகளுக்கு 1869 அக்டோபர் 2-ம் தேதி போர்பந்தரில் காந்தி பிறந்தார். அவரது முழுபெயர் மோஹனதாஸ் கரம்சந்த் காந்தி. போர்ப்பந்தர் திண்ணைப் பள்ளியில் துவங்கிய காந்திஜியின ஆரம்பக் கல்வி, இராஜ்கோட் சமஸ்தானத்தில் உயர் நிலைக்கல்வியாகப் பரிணமித்தது. அப்போதே கோகல்தாஸ் மகன்ஸி என்பவரது மகள் கஸ்தூரி பாய்க்கும் காந்திக்கம் திருமணம் நடைபெற்றுவிட்டது.
இளமையிலேயே சீர்திருத்த மனப்பான்மை கொண்டிருந்த காந்தி தகாத சினேகிதர்களால் புலால் உண்ணவும், புகை பிடிக்கவும், சொந்த வீட்டில் திருதனவும் கூட நேரிட்டது,
நான் செய்த தவறுகளை உணர்ந்து தந்தைக்கு தெரிவித்து மன்னிப்பைப் பெற்று முழு மனிதரானார். பிதனோறாவது வயதில் தந்தையை இழந்த காந்தி 1887-ம் ஆண்டில் பவநகர் சமஸ்தானக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். வெளிநாட்டில் தம்பியை படிக்க வைக்க அண்ணன் விரும்பினார். அன்னையில் தயக்கம் குறுக்கிட்டது. “முது, மாமிசம், மங்களை மூன்றையும் தீண்டேன்” என்று சத்தியம் செய்த காந்தி 1888, செப்டம்பர் 14 ம் தேதி இங்கிலாந்துக் கல்வி கற்கப் புறப்பட்டார்.
தென்னாப்பிரிக்காவில் நிற வேற்றுமை காரணமாய், இந்தியர் படும் அல்ல்ல் கண்டு காந்தியடிகள் சிந்தித்து 1894ம் ஆண்டு நேட்டாலில் இந்தியக் காங்கிரசை ஏற்படுத்தி இந்தியர் நலனுக்கு அயராது பாடுபட்டார்.
நிறவெறி பிடித்த வெள்ளையரால் தென்னாப்பிரிக்காவில் அண்ணலுக்கு ஏற்பட்ட தொல்லைகள் ஏராளம். அனைத்தையும் அஹிம்சை வழியிலேயே சமாளித்து பெரும் புகழ் கொண்டார்.
போயர் யுத்தம் ஏற்பட்ட காலத்தில், போர்க்களம் சென்று காயம் பட்ட வீரருக்குப் பேருதவி புரிந்தார்.
1899-ல் காந்தியடிகள் தாய்நாடு திரும்பி மீண்டும் தென் ஆப்பிரிக்கா சென்று, போனிக்ஸ் பண்ணை என்ற பெயரில் நவீன முறை பண்ணையைத் துவக்கி இந்தியர் அனைவரையும் உழைப்புடன், தூய வாழ்வு பெறுவதற்குப் பாடுபட்டார்.
1906-ஆம் ஆண்டு ஆசியப் பதிவுச் சட்டம் என்ற இந்தியருக்குத் தீமையளிக்கும் திட்டத்தை நிறைவேற்ற முயன்ற அரசை எதிர்த்து முதல் சத்யாகிரகத்தை காந்தியடிகள் துவக்கினார். அடிகளின் முதல் சத்யாகிரகமே பெரு வெற்றி கண்டது. சட்டத்தில், மாறுதல் செய்யச் சம்மதித்து, கைது செய்திருந்த காந்யோடு தொண்டர்களையும் விடுதலை செய்தது.
சொன்னபடி, சட்டத்தில் மாற்றம் செய்யாத அரசினரை எதிர்த்து அண்ணல் தன் இரண்டாவது போராட்டத்தைத் துவக்கினார். அணி அணியாக்க் கலந்து கொண்டோரின் குடும்ங்கள் ஒருங்கிணைந்து வாழ டால்ஸ்டாய் பண்ணையை ஏற்படுத்திய அண்ணல், கல்வி, தொழில் முதலானவற்றை பண்ணையில் உள்ள அனைவருக்கும் தந்து அரிய சேவை செய்தார்.
சிறைப்பட்டிருந்த காலத்தில் போப்பையர் எழுதிய “பால பாடம்” எனும் புத்தகம் படித்து தமிழ் கற்றார்.
“பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் தவிர மற்றவை செல்லுபடியாகாது” என்று தென்னாப்பிரிக்க ஆட்சியாளர்களின் கொடுமையான சட்டத்தை எதிர்த்து அண்ணல் நடத்திய அறப்போரில் தீவிரமாக ஈடுபட்ட தமிழகத்துப் பெண் 16 வயதே நிரம்பிய தில்லையாடி வள்ளியம்மாள் உயிர் நீத்து அழியாப் புகழ் கொண்டாள்.
1906 மதல் எட்டு ஆண்டுகள் பல போராட்டங்களை நடத்தி, சிறை வாசங்களை அனுபவித்து தென்னாப்பிரிக்கா இந்தியரின் நிலயை உயர்திய பிறகு லண்டன் சென்று கோபால கிருஷ்ணன் கோகலேயைச் சந்தித்து விட்டு இந்தியா திரும்பினார்.
பூனாவில் இருந்த இந்திய ஊழியர் சங்கத்தில் சேரும்படி கோகலே, காந்தியிடம் கூட தான் அதில் சேருதை சிலர் விரும்பவில்லை என்பதை அறிந்த பாபுஜி அதை மறுத்து விட்டார்.
காந்திஜி நிகேதனில் கவியர்சர் தாகூருடன் சந்திப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் பூனாவில் கோகலேயின் மரணம், காந்தி புறபட்டார்.
சத்தியக்கிரஹ ஆசிரமம் துவக்கம்
1915-ஆண்டு மே 25ம் நாள் சத்யாக்கிரஹ ஆசிரம்ம் துவக்கினார். கோனிக்ஸ் பண்ணையிலிருந்து திரும்பிய பெரும்பாலானவ்கள் இதில் சேர்ந்தனர்.
தென்னாப்பிரிக்காவில் 3 பவு தலைவரி விதிப்பைக் கண்டு கொதிப்படைந்த காந்திஜி, இந்தியா முழுவதும் புயலெனச்சுழன்று தீர்மானங்கள் போட்டுதென்னாப்பிரிக்க அரசினர்க்கு அனுப்பினார். 31- 1917க்கு வரி விதிப்பு ஒழிக்கப்பட்டது.
பீகாரில், சம்பரான் பகுதியில் அவுரித் தோட்டம் பயிரிட்ட ஏழை மக்களை கசக்கிப்பிழிந்த “தீன் கட்டியா முறையை” அண்ணல் போராடி ஒழித்தார். அஹமதாபாத் நெசவுத் தொழிலாளர் ஊதியக் குறைவை சங்கக் காரியதரிசி, அனுசூயாபாய் காந்தியிடம் முறையிட, பலத்த கட்டுப்பாட்டுடன் காந்திஜியின் தலைமையில் 21 நாள் வேலை நிறுத்தம் நடந்தது. நாளடைவில் தொழிலாளர் கட்டுப்பாடுகுலைவது கண்ட அண்ணல் உண்ணா விரத்த்தை மேற்ஒண்டார். ஆலை முதலாளிகள் இறங்கி வந்தனர் அண்ணல் வெற்றி கண்டார்.
பம்பாய் மாகாணத்தில் கேடா ஜில்லாவில் 1918-ம் ஆண்டு விளைவிலாத்தால் வரி கொடுக்க முடியாத நிலை. வரிகளை குறைக்குமாறு அண்ணல் போராடி வெற்றி கண்டார்.
உணவு பெரும்பாலோர்கு உதவும்படி காந்திக்கும் அரசினர் வேண்டுகோள் விடுத்தனர். போர் முடிந்ததும் எல்லா நாடுகளுக்கும் விடுதலை வழங்கப்படும் என்று அரசியர் அறிவித்தனர். ஆபத்தில் உதவ அண்ணல் படை திரட்டுவதில் உதவினார்.
போர் முடிந்தது, பிரிட்டிஷ் அரசு கொடுத்த வாங்குறுதிகளை மறந்தது. நாடெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டது. லோகமான்யதிலகரும், காந்தியடிகளும் மக்களின் சுதந்திர உணர்ச்சியைத் தட்டி எழுப்பினர்.
துருக்கிய நாட்டுக்கு பிரிட்டிஷ் அரசு செய்த மோசத்தல் அலி சகோதரர்கள் கிலாபத் இயக்கம் துவங்கினர். புரட்சி தீ பற்றிப் படர்ந்தது.
புரட்சியை அடக்க எண்ணிய அரசு, சந்தேகப்பட்ட எவரையும் கைது செய்து விசாரணையின்றி தண்டிக்க வகை செய்யும் ரௌலட் சட்டத்தை கொண்டு வந்தனர். போரில் உதவியதற்கு பரிசா இது? என்று அண்ணல் மனம் கொதித்து உடல் நலம் குன்றி இருந்து நாடெங்கும் பயணம் சென்று கொடிய சட்டத்தை எதிர்க்கும்படி குரல் கொடுத்தார்.
சென்னையில் கஸ்தூரி ரங்க அய்யங்கார் மாளிகையில் ராஜகோபாலாச்சாரியார், காரியதரிசி மகாதேவ தேசாய் ஆகியோருடன் ரௌலட் சட்டத்தை விவாதித்து, முடிவில் சட்டத்தை எதிர்த்து நாடு முழவதும் ஹர்த்தால் செய்யச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
1919 மார்ச் 31ம் தேதியை ஹர்த்தால் என்று குறிப்பிட்டு பின்னர் அதை ஏப்ரல் 6ம் தேதியாக மாற்றினார். அதை அறியாத டெல்லி மக்கள் மார்ச் 31ம் தேதியே ஹர்தால் செய்து பரிட்டிஷாரின் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காயினர். ஏப்ரல் 6ம் தேதி அகில இந்திய அடிப்படையில் ஹர்த்தால் நடைபெற்றது.
ஹர்த்தால் உணர்ச்சிப் பரவசத்தில் அகமதாபாத் மக்கள் சிலர் பலாத்காரத்தில் இறங்கியதால் 3 நாள் உண்ணா விரதம் இருந்தது. “ஹிமாலயத் தவறு” என்று ஒப்புக்கொண்டார். காந்தியடிகள் ஐர்தாவில் டாக்டர் கிச்லு, டாக்டர் சத்திய பால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதைக் கலைப்பதற்கு வெள்ளை அரசாங்கம் பட்டாளத்தை ஏவியது.
கூலிப் பட்டாளத்தின் வெறித்தாக்குதலில் மக்கள் பலர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து இராணுவச் சட்டத்தை அரசினர் அமுல் படுத்தினார்.
இராணுவச் சட்டத்தை எதிர்த்து ஏப்ரல் 13ல் ‘ஜாலியன் வாலாபாக்’ என்னும் நாற்புறமும் மதில்கள் சூழப்பட்ட இடத்தில் பொது மக்கள் கணக்கற்றுக் கூடினர். அரக்க மனம் கொண்ட ஜெனரல் மைக்கேல் – ஓ – டையர் ஆயிரக்கண்கான பாரத மக்கள் காக்கைக்குருவிகள் போல் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ஊர் பேர் தெரியாத தியாகிகளின் புனித உடல்கள்களின்மேல் வெள்ளை ஆதிக்கம் குதிரை படைகளை ஏவி தீர நடை போட்டது.
படுகொலையை விசாரிக்க, “ஹன்டர் கமிட்டியை நிறுவினர். கமிட்டியின் போலித்தனமான விசாரணையை, காந்தியடிகள், பண்டித மோதிலால் நேரு, சித்திரஞ்சன் தாஸ், அப்பாஸ்தாயப்ஜி, ஐயகர் ஆகியோர் கண்டித்துப் பல திடுக்கிடும் உண்மைகளை விசாரித்து வெளியிட்டனர்.
மக்கள் கொதித்தெழுந்தனர். அந்நியத் துணி, சட்டசபை நியாய சபை, பள்ளிக்கூடம் முதலியவற்றைப் புறக்கணித்து, 1930-ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தைக் காந்தியடிகள் துவக்கினார். பட்டம், பதவிகளைத் துச்சமெனக் கருதித் தூக்கியெறிந்த பல பேர் தேசியக்காவுக்கு எரிபொருளாய் மாறி. சுதந்திர வேள்வியை சுடர் விட்டுப் பிரகாசிக்கச் செய்தனர்.
ஒத்துழையாமை இயக்கம் காலத்தில் வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தார். அநீதியை உணர்த்தும் பொருட்டு காந்தியடிகள் இளவரசர் வரும் நாளில் வேலை நிறுத்தத்துக்குக் கட்டளையிட்டார். அரசின் அடக்கு முறை தலைவிரித்தாடியது. சுபாஷ் சந்திபோஸ், தேசபந்துதாஸ், ஜவஹர்லால் நேரு முதலியோர் சிறைப்பட்டனர்.
சௌரி – சௌரா என்னும் இடத்தில் மக்கள் ஆர்வத்தை போலீஸ் தடுக்க, கைகலப்பு ஏற்பட்டு,போலீசாரின் வெறித்தாக்குதலால் பலர் உயிரிழந்தனர். உணர்ச்சி வசப்பட்டமக்கள் சிலர் தாணா நிலையத்தையும் அதில் இருந்தவர்களையம் தீக்கிரையாக்கினர். அறப்போர் முறை மாறி வந்ததால் சட்ட மறுப்பு இயக்கத்தை காந்தியடிகள் நிறுத்தினார்.
கலவரங்களுக்கு காரணமானவர் என்று பழி சுமத்தி 1922- மார்ச் 10ல் அண்ணலை கைது செய்தனர். 1924-ல் விடுதலை செய்தனர்.
1924-ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்து முஸ்லிம் கலவரத்தின்போது, செப்டம்பர் 14-ம் தேதி முதல் 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அமைதியை நிலை நாட்டினார் காந்தியடிகள்.
1928-ம் ஆண்டு ‘சைமன் கமிஷன்’ வந்தது. சொன்னபடி நடக்காதவர்களை பகிஷ்கரித்தார் காந்தியடிகள். கருப்புக் கொடி கிளர்ச்சியை மக்கள் மேற்கொண்டனர். லண்டனில் கூட்டப்படும் வட்ட மேஜை மாநாட்டில் குடியேற நாட்டுத் தகுதியளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்ற உகிமிஷன் அறிக்கை விடுத்துத் திரும்பியது.
அறிக்கை செயலாக்காதால் மனம் பதைத்த மகாத்மா காங்கிரஸ் செயற்குழுவை சபர்மதி ஆசிரமத்தில் கூட்டினார்.
1930-ம் ஆண்டு 12-ம் தேதி தண்டி யாத்திரையைத் துவக்கி சுமார் 200 மைல்களை கால்கள் தேயு முட்டும் நடந்து கடந்து சென்று ஏப்ரல் 6-ம் தேதி தண்டியில் உலகப்பிரசித்தி பெற்ற உப்புச் சத்தியாக்கிரஹத்தின் மூலம் உப்புச்சட்டத்தை மீறினார்.
நாடு முழுவதும் உப்பு சத்யாகிரஹம் கட்டுப்பாடான முறையில் நடைபெற்றது. ஒன்றுபட்ட பாரத மக்களின் உணர்ச்சிப் புயல், வெள்ளை அரசாங்க மாளிகையைக் கலகலக்கச் செய்தது.
மே மாதம் நள்ளிரவில் உப்பு சத்யாகிரஹம் கட்டுப்பாடான முறையில் நடைபெற்றது. காந்திஜியின் கட்டளைப்படி நாட்டுமக்கள், ஆண்,பெண் இன மத வேறுபாடின்றி ச்ட்ட மறுப்பு, அந்நியத் துணிகள்மறியல், கள்ளுகடை மறியல் ஆகியவை அமைதியான முறையில் நடத்தினர். மக்களின் ஏகோபித உறுதியையும் ஆவேசத்தையும் கண்ட வெள்ளை அரசு அச்சம் கொண்டது.
ஸர் சாப்ரு, ஐயகர் இருவரது வெகு முயற்சியின் பயனால் காந்தி இர்வின் உடன்படிக்கை 1931-ம் ஆண்டு ஏற்பட்டுத். உடன்படிக்கையால், உப்பை எடுக்கவும், பலாத்காரத்தில் ஈடுபடாத அரசில் கைதிகள் விடுதலை பெறவும், காங்கிரஸ் சட்டபூர்வ ஸ்தாபனம் என்ற ஒப்புதலும், கள்ளுக்கடை மறியல் அந்நியத்துணி பகிஷ்காரம் நடத்தும் உரிமைகளும் கிடைத்தன.
ஏமாற்றுவதையே தொழிலாய் கொண்ட வெள்ளையரசு சில உரிமைகளை மறுத்து. காந்தியடிகள் கண்டித்தார். இந்த நேரத்தில் பகவத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய வங்கச்சிங்கங்கள் மேல் வீணான பழிகளைச் சுமத்தி தூக்குத் தண்டனை விதித்து நிறைவேற்றியது. ஆசிய ஜோதியான நேருஜி கதறி அலற, அண்ணல் மகாத்மா கண்ணீர் பெருக வங்கத்துத் தங்க இளைஞர்கள் மூவரது உயிர்களும் எங்கிருந்தோ வந்த கொள்ளைக்கார வெள்ளையரால் பகிரங்கமாகப் பறிக்கப்பட்டன.
1931-ம் ஆண்டு செப்டம்பரில் லண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டிற்கு காந்திஜி தலைமையில் மாளவியர், சரோஜினி மீராபென், ஹிந்து ஆசிரியர் அரங்கசாமி ஐயங்கார் ஆகியோர் சென்று இந்தியாவிற்கு முழு உரிமையுள்ள தன்னாட்சியை வலியுறுத்தினர். பிரித்தாளும் குணம் கொண்ட பிரிட்டினின் சாகஸத்திற்கு காந்திஜி இணங்காத்தால் மாநாடு முடிவொன்றும் காணாமல் முறிந்தது.
இந்தியா திரும்பி ஊருக்கு வரும்வழியான பம்பாயிலே காந்தியடிகள் கைது செய்து சர்தார் பட்டேலுடன் ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார். பிரபல தலைகள் அனைவரையும் சிறைக் கொட்டத்தினுள் பூட்டி விட்டு அரசினர் தனித்தொகுதி முறைக்களை கடைப்பிடித்து இந்து, முஸ்லீம் என்றும் தீண்டாத இனம், ஜாதி இந்துக்கள் என்றும் பிரிவினைப் பேயை வளரச் செய்தது.
கபந்தர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை ஒழிக்க 1932-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி சிறையிலேயே உண்ணாவிரதம் மேற்கொண்டார். டாக்டர் அம்பேத்கார் ஒத்துழைப்புடன் பொதுத் தொகுதியில் ஹரிசனங்களுக்கு இடமளிப்பது என்று ஒப்பந்தம் ஏற்பட்டு கவி இரவீந்திரநாத் தாகூர் பழச்சாறு கொடுக்க அண்ணல் உண்ணாவிரதத்தை முடித்தார்.
காந்தியின் வேண்டுகோளின்படி நாட்டின் வடபகுதியில் பல ஆலய்கள் அரிசனங்களுக்கத் திறந்து விடப்பட்டன. எதிர்த்த சனாதனிகளின் மனம் மாற அண்ணல் காந்தி சிறையில் உண்ணாவிரதம் ஆரம்பித்தார். 21 நாட்கள் நீடித்த உண்ணாவிரத்த்தினால் கவலைக்கிடமான காந்தியை அரசியலார் விடுதலை செய்தனர்.
வெளியே வந்த காந்திஜி ஹரிசன சேவாசங்கத்தையும் ‘ஹரிஜன்’ பத்திரிக்கையையும் துவக்கி ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற நெறிமுறை வளர்த்தார்.
1934-ஆம் ஆண்டு பீகார் குடும்பத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு நாடெங்கும் சென்று இரந்து பொருள் திரட்டி உதவினார் அண்ணல் காந்தியடிகள்.
1934- செப்டம்பர் 4-ம் தேதி காங்கிரசிலிருந்து விலகி வார்த்தா அருகிலுள்ள சேவா கிராமத்தில் தங்கி பயன் தராத கல்வி முறையைநீக்க வார்தா கல்வித்திட்டத்தை வகுத்தார்.
1937-ம் ஆண்டு தேர்தலில் எட்டு மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று பதவிக்கு வந்தது. காந்திஜியின் ஆணையின் பேரில் ஹரிஜன ஆலயப்பிரவேசமும் மதுவிலக்குத் திட்டமும் சட்டமாக்கப்பட்டன.
விடுதலை பெற்ற பின் நாடு உருப்பட இந்து முஸ்லீம் ஒற்றுமை மிக அவசியம் என உணர்ந்த காந்திஜி ஜனாப் ஜின்னாவுடன் பேசி, நல்வழி காண வெகுவாகப் பாடுபட்டார். ஜின்னாவின் பிடிவாதத்தால் பேச்சு வார்த்தைகள் பயன்றறுப்போயின.
1939-ம் ஆண்டு செப்டம்பர் 1இல் இரண்டாம் உலகப்போர் துவங்கியது. போரை நிறுத்தும்படி போர் மூள் காரணமாயிருந்த ஹிட்லருக்கு காந்தியடிகள் கடிதம் எழுத்இனார். அதை பிரிட்டிஷ் அரசாங்கம், அனுப்ப முடியாமல் தடுத்துவிட்டது. போரில் இந்தியா கலந்து கொள்ள விரும்பவில்லை என்று தனிப்பட்டோர் சத்தியாக்கிரஹத்தை ஆரம்பித்தார் காந்தியடிகள். இதன்மூலம் துதலில் சிறை சென்றவர் வினோபாவே ஆவார்.
உலகப் போரில் ஜப்பானின் கை ஓங்கியது. பிரிட்டிஷாரும் அமெரிக்கரும் திகைத்தனர். இந்தியாவில் புரட்சித் தீயின் வேகம்அதிகரித்துள்ளது. வெள்ளை அரசாங்கம் 1942-ல் கிரிப்ஸ் தூதுக்குழுவை இந்தியாவுக்கு அனுப்பியது. குழு பிற்காலத்தில் இந்தியாவுக்கு அரசு ஏதாவது செய்யும் என்று எழுப்பியது .அண்ணல் மறுத்துவிடவே கிரிப்ஸ் திட்டம் தோற்றது.
நெருக்கடி வரும்போது கொடுத்த வாக்குறுதிகளை அடுத்த கட்டத்தில் ஏமாற்றும் குணத்தைக் கொண்ட பச்சோந்திகளின் அலைக்கழிப்பால் மனம் வெதும்பிய அண்ணல் “வெள்ளையரே வெளியேறுங்கள்” என்ற ராம்பாணத்தைப் பிரயோகித்தார். காங்கிரஸ் மகா சபை அண்ணலின் குரலை ஏற்று எதிரொலித்தது. அதன் விளைவு.
அன்னை கஸ்தூரிபாய் காந்திஜியின் காரியதரிசியான மகாதேவ தேசாய், ஜவஹர், ஆஸாத், பட்டேல், ராஜேந்திர பிரசாத போன்றோர் பூட்டப்பட்டனர். காங்கிரஸ் சட்ட விரோதக்குழகம் என அறிவிக்கப்பட்டது.
இமயம் முதல் குமரி வரை தேசமே சீறி எழுந்தது. கனன்று நின்ற சுதந்திர எரிமலை வெடித்துத் தீக்குழம்பைக் க்க்கியது. தந்திக் கம்பிகள் அறுபட்டன. நிலையங்கள் சாம்பலாயின. அரசாங்க காரியாலயங்கள் தூள் தூளாக்கப்பட்டன. நாடெங்கும் வேலை நிறுத்தம் இப்படியாக விடுதலை வேட்கை ஏகாதிபத்திய அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்துவிட்டது.
அடக்கு முறை வெறியாட்டம்
கையாலாகாத அரசாங்கம் அடக்கு முறையை கட்டவிழ்த்தது. ஆயிரமாயிரம் வீரமாமுனிகளின் உயிரைத் துப்பாக்கிக் குண்டுகள் கொண்டு சென்றன. ஊழிப் புயலெனக் கிளம்பிவிட்டன. தேச பக்தியை கேலிக்குரியதாக்கி விடக் கனவு கண்டு ஏகாதிப்தியம் ஏமாற்றமடைந்து அனைத்திற்கும் காந்தியே காரணம் என்று குற்றம் சாட்டியது. அரசின் போக்கைக் கண்டனம் செய்யும் வகையில் 1943-ம் ஆண்டு சிறையில் உண்ணா நோன்பு இருந்தனர்.
ஆகாகன் அரண்மனைச் சிறையில் இந்தியத் தாய் குலத்திலகம் அன்னை கஸ்தூரிபாய் தெய்வமானார். தொடர்ந்து மகாதவே தேசாயும் காலமானார். உயிரான மனைவியும் உடம்பின் ஒரு பகுதியாக விளங்கிய தேசாயும் மறைந்த நிலை அண்ணலைச் சீர்குலைய வைத்தது. வெள்ளை ஏகாதிப்தியம், விபரீதம் நடந்து விடக்கூடாதே என்று பயந்து காந்திஜியை 1944 ஆகஸ்டு 6ம் தேதி விடுதலை செய்தது.
சிறையிலிருந்து வெளி வந்ததும் இந்துமுஸ்லீம் ஒற்றுமைக்காக சிம்லா மாநாட்டைக் கூட்டினார் காந்திஜி. வீரர்களின் பிடிவாதத்தால் மாநாடு தோல்வியுற்றது.
இந்தியாவில் 8 மாகாணங்களில்காங்கிரஸ் ஆளும் தகுதி பெற்றதும் பாரத மக்களின் ஏகோபித்த விடுதலை வேட்கயைமு வங்கம் தந்த மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கி ‘சலோ டில்லி’, ‘ஜெய்ஹிந்த்’ என்றுசெய்த சங்கநாத்த்தின் பேரிடிகள் அனைத்தையும் சிந்தித்தனர். புதிதாக இங்கிலாந்தில் பதவிக்கு வந்த ஆட்சி அரசியலார்.
விடுதலை தருவது ஒன்றே தவிர வேறு வழியில்லாத்தால் 1946-ஆம் ஆண்டு மே மாதம் ஆட்லி அரசியலரின் அமைச்சரைவைத் திட்டம் வெளியாகியது. இந்தியாவுக்கு குடியேற்ற நாட்டுத் தகுதி அளிக்க ஒப்புக்கொண்டு இடைக்கால அரசியலை இந்தியரிடம் ஒப்படைத்தது.
லார்ட் லேவல்; பண்டித ஜவகரை இடைக்கால அமைச்சரவை அமைக்கும்படி கேட்டுக்கொண்டார். காந்திஜியின் ஆணைப்படி ஜவகர் அதை செயலாக்கினார்.
அமைச்சரவைக்கு ஒத்துழைக்க மறுத்ததோடு நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடும்படி முஸ்லீம்களை ஜின்னா தூண்டி வகுப்பு கலவரப்பேய் தலை விரித்தாடியது.
ஆறறிவையும் இழந்த நிலையில் ஒரு தாய் மக்களான இந்திய முஸ்லீம் சகோதரர்கள் ஆயிரக்கணக்கில் தங்களைத் தாங்களே அடித்துக்கொண்டு மடிந்தனர். கற்பு சூறை, பொருட் கொள்ளை, அளவிட முடியாதவை. அராஜகமும், மிருகத்தனமும் கோர தாண்வமாடின. ரத்தக் கண்ணீர் வடித்த அண்ணல் கலவரப்பகுதிகளுக்கு நேரில் சென்று வேண்டினார். கதறினார். அமைதி திரும்ப அரும்பாடுபட்டார்.
சூழ்நிலையினாலும் பிரித்தாளும் கலையினாலேயே உலகத்தின் பெரும்பகுதியை ஒரு குடையின் கீழ் ஆண்டவர்களின் ஆட்சியினாலும் அரசியலில் முஸ்லீம் லீகும் இடம்பெற்றது.
1948-ம் ஆண்டு தருவதாகச் சொன்ன விடுதலையை 1947-லேயே தந்து லார்ட மௌண்ட் பேட்டன் அவர்களை வைசிராயாக நியமித்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர் இங்கிலாந்து மேலிடத்தார்.
வீரர்கள் பிடிவாதத்தால் இந்தியா இரண்டாவதாக உடைக்கப்பட்டது. பலுச்சிஸ்தானம், கிழக்கு வங்காளம், மேற்கு வங்காளம், பஞ்சாப், வட மேற்கு எல்லைப் புறமாகாணம் சிந்து ஆகிய இடங்கள் பாகிஸ்தான் ஆகியது.
கிழக்கு பஞ்சாப் ஐக்கிய மாகாணம் பீஹார், மேற்கு வங்காளம் அஸ்ஸாம் மத்திய மாகாணம், ஒரிஸா, பம்பாய், சென்னை ஆகிய மாகாணங்கள் யார் பக்கமும் சேரலாம் என்ற முடிவுடன் 1947- ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது.
உலக நாடுகளில் சரித்திர ஏடுகளைப் புரட்டினால் மாமிச மலைக்குவியல்களும் ரத்த ஆறுகளும் பெருகி நாடு நகரனைத்தும் துவம்சமாகி பூச்சி புழுக்களாய் மக்கள் நசுக்கப்பட்டு மண்ணோடு மண்ணானதைக் காண முடிந்தது என்பதை அறிய முடிகிறது. ஆனால் முற்றிலும் மாறுபட்ட நிலையில் உப்பும் கைராட்டையும் கதராடையையும் மட்டுமே துணை கொண்டு விடுதலை கண்ட அதிசயச் சாதனை புனிதமான நமது பாரத நாட்டுக்கே உரித்தான தனித்தன்மையாகும். கத்தியின்றி.. ரத்தமின்றி, ஆன்மீக பலத்தாலும் அஹிம்சையாலும் கிடைத்த வீர சுதந்திரத்தின் உயர்வு விலை மதிக்க முடியாததாகும்.
சுதந்திர விழாவில் இந்திய மக்கள் கூடித்திளைத்த நேரத்தில் அண்ணல் காந்திஜி நவ காளியில் வகுப்புக்கலவரப் பேயின் அடிச்சுவடுகளைத் துடைப்பதில் ஈடுபட்டிருந்தார்.
வங்காளத்திலும் வகுப்புக் கலவரம் பொங்கியது. மனம் வெதும்பிய அண்ணல் உண்ணாவிரதம் மேற்கொண்டார். பாஞ்சாலப் பகுதியிலும் பரவியது கலவரத் தீ.
பாஞ்சால நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் டெல்லிக்குப் பாதை கண்டனர் டில்லியிலும் தீ.
நாட்டின் பல பாகத்திலும் அசுர வேகத்தில் பரவிய வகுப்புக் கலவரத்தீயை அணைக்கும்படி இந்தியத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்த பின் காந்திஜி 1948- ஜனவரி 13ம்தேதி உண்ணாவிரத்த்தை மேற்கொண்டார். அண்ணலின் விருப்பம் அனைத்தையும் நிறைவேற்றுவதாய் தலைவர்கள் உறுதியளித்தனர். உண்ணாவிரதத்தை காந்தியடிகள் முடித்துக்கொண்டார்.
பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு இந்திய ஒப்புக்கொண்ட 55 லட்சம் பவுன்களையும் காஷமீர் யுத்தத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்ற உறுதி பெற்ற பின் கொடுக்க வேண்டும் என்பதற்காக கெடுவை ஒத்தி போட்டிருப்பதையும் மாறி அண்ணலைக் காப்பதற்காக உடனே செலுத்தி விட ஒப்புக்கொண்டது இந்திய அரசாங்கம்.
எந்த நோக்கத்திற்காக காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டதோ, அது முடிந்துவிட்டது. புனிதக் கட்சியான காங்கிரஸ் பதவி வேட்டைக்கு இலக்காகிவிடக் கூடாது மனித தெய்வம் திருவாய் மலர்ந்தருளியது. அன்று கூறிய வார்த்தைகள் எத்தனை சக்தி வாய்ந்தவை என்பதை இன்றைய தலைவர்கள் சிந்திக்கட்டும். அவர் கூறியபடி லோக் சேவா சங்கம் தோன்றியிருந்தால் பல்லாயிரக்கணக்கான தியாக, மணித் தொண்டர்கள் கட்டிக் காத்த கட்சி, உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்த உத்தமத் தியாகிகள் சங்கம் வகித்த பத்தரை மாற்றுத் தங்கக்கட்சி. உலகமே வியக்கும் வண்ணம் சத்தியத்தின் துணையை மட்டுமே வைத்து இந்தியத் துணைக்கண்டத்தை அடிமை இருளிலிருந்து காப்பாற்றிய புனித காங்கிரஸ் கட்சி இப்படி இரண்டு பட்டுச் சீரழியுமா? கட்சியின் சொத்துக்கள் பற்றிய வழக்கு கோர்ட் வாயிற்படி ஏறுமா? காளை மாட்டுச் சின்னத்தை தேர்தல்களில் பயன்படுத்த முடியாத கெட்ட வேளைதான் வந்திருக்குமா?
மார்பைத் துளைத்த துபாக்கிக் குண்டு:
நல்லெண்ணத்துடனும் பெருந்தன்மையுடனும் முஸ்லீம் சகோதரர்களிடம் நடந்து கொள்ளுங்கள் என்ற அண்ணலின் மேல் 1934-ஆம் ஆண்டு ஒரு முறை வெடிகுண்டு வீசப்பட்டது. இறைவனின் அருளால் தப்பினார். அஇயாமையில் செய்தவனை மன்னித்து விடுங்கள் என்று மாந்தருள் தெய்வமாக வாழ்ந்த காந்திஜியை 1948-ஜனவரி 30-ம் தேதி பிர்லா மாளிகையில் பிரார்தனை மேடைக்கு அருகில் வரும்போது இந்த நாட்டின் மொத்த பாவங்களின்முழு உருவமாக அறியாமையின் சின்னமாக வந்து நின்ற வினாயக நாதுராம் கோட்ஸே அருகிலிருந்தபடி பலமுறை சுட்டான். துப்பாக்கிக் குண்டுகள் புகுந்து திறந்த மார்பில் இடம் தந்தார் அண்ணல் காந்தியடிகள்.
உலக உத்தமர்களை எல்லாம் வெள்ளிக்கிழமைகளில் அள்ளிச்செல்லும் காலதேவன் அண்ணல் காந்தியடிகளின் ஆவியையும் கவர்ந்து சென்றான்.
“ஹரேராம் ஹரேராம்” என்று உச்சரித்தப்படியே இறையடி நிழலில் இரண்டறக் கலந்து போன அருள் ஞான முனிவன் காந்தியின் நாமம் வாழ்க வளர்க.