இறுதி லட்சியம், பொருளாதார ஏற்றத்தாழ்வற்ற, எல்லார்க்கும் எல்லாமென்கின்ற – பேதமற்ற – சோஷலிஸ – சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவது.
சோஷலிஸ அடிப்படையில், பெருமளவுக்கு நிர்வாகத்திலும் நாட்டின் வளத்திலும் மக்கள் உண்மையிலேயே பங்குபெற்றால்தான் மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் உண்மையான மக்கள் அரசை உருவாக்க முடியும்.
பசியால் – பட்டினியால் துடித்துக்கொண்டிருப்பவனால் மகிழ்ச்சியோடு இருக்க எது வழி என்று யோசிக்கிறான். செல்வத்தை எல்லார்க்கும் சம்மாகப் பங்கிடுவதுதான், மக்கள் மன நிம்மதியோடு இருப்பதற்கு வழி என்று நினைக்கத் தொடங்குகிறான். இது அவனை சமதர்மப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
இந்தியாவின் இல்லாமையை ஏழ்மைத்துயரை, இழிவை, வேலையில்லாத் திண்டாத்தைப்போக்க சோஷலிஸ லட்சியத்தை மேற்கொள்வதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.
வரையறுத்துச் சொல்ல முடியாத , பல்வேறு விதமாகப் பொருள் தரக்கூடிய வார்த்தையாக சோஷலிஸம் இன்று ஆகிவிட்டது. புதிய உலகின் வியத்தகு மாற்றங்களால் – தொழில் முன்னேற்றங்களால், சோஷலிஸ த்த்துவமே மாறுதலுக்கு உள்ளாகிற தென்றாலும்; அதன் அடிப்படை லட்சியம் அப்படியேதான் இருக்கிறது. நம்முடைய தொழிலிலும் விவசாயத்திலும், நவீன யந்திர சாதனங்களை உபயோகித்து நாம் விளைவையும் – பயனையும் பெருக்கி ஆக வேண்டும். அப்படிச் செய்கிற போது, எல்லார்க்கும் சமவாய்ப்பு என்ற அடிப்படை த்ததுவமும் அதற்கு ஆதாரமான சத்திமும்தான் நாம் அடைய விரும்பும் லட்சியங்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
சுதந்திரத்திற்குப் பிறகு நம்முடைய வளர்ச்சி மந்த நிலையில் இருப்பதாகச் சிலர் சொல்லுகின்றனர். இந்த வாதம் சரியென்று தோன்றவில்லை. இந்தியாவையும் – இந்திய மக்களையும் இந்த நாட்டின் – சோஷலிஸ லட்சியங்களில் ஏற்படும் மாற்றத்தின் அவசியத்தையும் வைத்து எண்ணிப்பார்க்கிற போது, நம்முடைய வளர்ச்சி குறிப்பிடத்தக்கது என்றுதான தோன்றுகிறது. எதிர்கலமுன்னேற்றத்திற்கு ஜனநாயக ரீதியிலே அடித்தளம் அமைந்துவிட்டது. எனவே, எதிர்கால வளர்ச்சி இறந்த காலத்தைவிட வேகமாக இருக்கும்.
உழைப்பவன் உழைப்பின் பயனை அனுபவிக்க வேண்டும். முதலாளித்துவ அமைப்பில், உழைப்பின் பலன் பலவந்தமாக ஏழையிடம் இருந்து பறிக்கப்பட்டு விடுகிறது. ஏழை உழைப்பின் பயனை அனுபவிக்கும் இனிய வாய்ப்பு சோஷலிஸ அமைப்பிலேதான் கிட்டுகிறது.
இந்தியாவின் இன்றைய பிரச்சினை அப்படி செல்வத்தைப் பங்கிடுவது என்பதல்ல. இங்கே பங்கிடுவதற்குச் செல்வம் இல்லை; இல்லாமையும் ஏழ்மையுந்தான் இருக்கின்றன. எனவே, நாம் நம்முடைய செல்வ வளத்தைப் பெருக்க வேண்டும். செல்வம் என்றால் பொன்னும் வெள்ளியிமு அல்ல – தொழில் வளம். எனவே, நம்முடைய பொருளாதார திட்டங்கள் உயர்ந்தவைகளாக – சிறந்தவைகளாக இருக்க வேண்டும்.
செல்வமும் அதிகாரமும் ஒரு புறத்தில் பூசலையும் போட்டியையும் வளர்க்கின்றன. இன்னொரு புறத்தில் இல்லமையை, ஏழ்மையை, ஏற்றத்தாழ்வுகளை, ச்ச்சரவுகளை உண்டாக்குகின்றன. இரண்டின் விளைவாக உலகில் அச்சமும் ஆபத்தும் அதிகமாகின்றன. எனவே, நாடுகளுக்கிடையேயும் உள் நாட்டிலும் உள்ள இந்த ஏற்றத்தாழ்வுகள் குறைக்கப்பட்டாக வேண்டும்.
பழங்கால நடைமுறைகள் பெருமளவுக்கு மாறிவிட்டன. எழுச்சி பெற்று வரும் மனித சிந்தனையின் முன்னே அவை நிலைக்க முடியாது போய்விட்டன. சமூக நீதியும் – சம உரிமையுமே இன்று உலகம் அடையத் துடிக்கும் உடனடி லட்சியங்களாக மாறியுள்ளன.
நாம் சோஷலிஸ த்த்துவத்தை நமது இறுதி லட்சியமாக்க் கொண்டிருக்கிறோம். காரணம் அதுதான் சரியானது, மிகவும் பயனுடையது என்பதால் அல்ல; நம்முடைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகான, அதைவிட்டால் வேறு பரிகாரம் இல்லை, – எனவேதான் அதை நமது லட்சியமாக்க் கொண்டிருக்கிறோம்.
சோஷலிஸந்தான், உலகின் பல பிரச்சினைகளுக்கும், இந்தியாவின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணச் சிறந்தது என்பது என் நம்பிக்கை. சோஷலிஸம் வெறும்பொருளாதாரக் கோட்பாடு மட்டுமல்ல. அதற்கு மேலான – உயர்ந்த – வாழ்க்கைத் த்த்துவமும் ஆகும். எனவே, இந்திய மக்களின், ஏழ்மை, இல்லாமை, வேல இல்லாத் திண்டாட்டம் ஆகியவற்றிற்கு விடிவு காண சோஷலிஸத்தை விட்டால் வேறு வழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
சோஷலிஸ – முதலாளிதுவ த்த்துவங்கள் திடீரென்று ஏழையைப் பணக்காரனாக்கி விடும் மந்திர சக்திகள் அல்ல என்பதை நாம் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏழ்மையைப்போக்க உள்ள ஒரே வழி, உற்பத்தியப் பெருக்கக் கடுமையாக உழைப்பதும், உற்பத்தியை எல்லாரக்கும் சம்மாகப் பங்கிட்டுக் கொடுப்பதுமே ஆகும். பின்தங்கிய நாடுகளில் முதலாளித்துவ முறைகள் இதற்கு வாய்ப்பளிப்பதில்லை. எனவே திட்டமிட்ட சோஷலிஸ லட்சியங்கள் மூலமாகத்தான் – நிலையான வளர்ச்சியை நாம் அடைய முடியும்.
இந்தியா முன்னேற வேண்டும் என்று நாம் விரும்பினால், இந்தியா வளமிக்கதாகத் திகழ வேண்டும் என்று நாம் கருதினால், இந்தியாவின் தரத்தை நாம் உயர்த்த வேண்டும் என்று எண்ணினால் இந்தியாவிலேயே சோஷலிஸ சமுதாயம் ஏற்பட்டாக வேண்டும்.
பட்டினியால் தவிப்பவன் மகிழ்ச்சியோடு இருக்க முடியாது. மனமகிழ்ச்சி என்பது செல்வத்தை எல்லோர்க்கும் சம்மாகப் பகிர்ந்தளிப்பதனால் உண்டாகிறது – இதுவே சோஷலிஸ லட்சியத்திற்கு வழிகோலுகிறது.
நாம் அமைக்க விரும்பும் சமுதாய அமைப்பு, சோஷலிஸ சமுதாய லட்சியத்தைக் கொண்டது. ஏற்றத் தாழ்வற்றது – சாதிமத பேதமில்லாதது.