பண்பாடு ஆரவாரமற்றது; அமைதியானது; தன்னை அறிவது; தன்னடக்கம் உள்ளது.
புதிய சந்தனைக்க்உ வழிவிட மறுப்பவர்கள் பண்பாட்டைப் பற்றி ஏதும் அறியாதவர்கள்.
மனிதன் அடைந்திருக்கிற பண்பாடே ஒரு நாட்டின் உயர்ந்த பண்பாடாகிறது.
திராவிடப் பண்பாடும் ஆரியப் பண்பாடும் கலந்து திகழ்வது இந்திய நாட்டின் பண்பாடு ஆகும்.
கலாச்சாரம், பண்பாடு – இவை வாழ்வுக்குத் தேவையான உயர்ந்த தத்துவங்கள். இவற்றைத் தவறாகப் புரிந்துகொண்டு செயல்படுத்தினால், வெறுப்பும் – பகையும் – வீண் குழப்பங்களுந்தான் ஏற்படும்.