பஞ்சசீலம் இந்திய மண்ணுக்குப்புதியதல்ல. இந்தியாவின் பண்பாட்டிலும், சிந்தனையிலும் ஊறிக்கிடப்பது அது.
தன்னலமறுப்பு -சகிப்புத் தன்மை இவை தான் இந்திய மண்ணின் இனிய பண்புகள் – பஞ்சசீலம் வளர்க்கும் பண்ணைகள்.
கூட்டு சேராக்கொள்கை என்பது, பலநாடுகளின், அல்லது தனிப்பட்ட ஒரு நாட்டின் ராணுவக் கூட்டுகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதல்ல. அதற்குமாறாக நெருக்கடி வருகின்ற நேரங்களிலே கூட நிலைமைளைச் சமாளிக்கக் கூடியவரை போரை நினைக்காது, சுதந்திரமாக இருக்கவும் – உலக நாடுகள் எல்லாவற்றுடனும் நட்புறவு கொள்ள முயல்வதும் ஆகும்.
ஐக்கிய நாடுகள் கழகத்தின் நிலைப்பேற்றைப் பொறுத்துதான் உலகின் எதிர்காலம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஐக்கிய நாடுகள் கழகம் இல்லையெனில் எதிர்காலமே இருளடைந்து விடும்.
கூட்டு சேராக்கொள்கை என்பது போர் முயற்சிகள் எந்த வல்லரசுகளுடனும் சேராது விலகி இருப்பதையே குறிக்கும். நாம் அத்தகைய முயற்சிகளில் இருந்து விலிகியே நிற்போம் – நம்முடைய வலிமயனைத்த்தையும், சமாதானத்துக்காகப் பயன்படுத்துவோம் என்பதே அதன் நோக்கம். எனவே போர் நெருக்கடி மூளுமானால், நமது கூட்டுச் சேராக் கொள்கைக்கேற், வரும் போரபயாத்தைத் தடுத்து நிறுத்த நம்மால் முடிந்ததை எல்லாம் செய்ய முன் நிற்க வேண்டும்.
பல்வேறுபட்ட கருத்துக்கள் – மதநம்பிக்கைகள் கொண்ட மக்களிடையே சமாதான – சக வாழ்வை உருவாக்க இந்தியா பன்னெடுங்காலமாகவே பாடுபட்டு வந்திருக்கிறது. இதன் தொடர்பாகத்தான் இன்றும் உலகிலே சமாதான – சகவாழ்வு நில நாம் பாடுபட்டு வருகிறோம். இதற்காக நம்முடைய உரிமைகளை எதையும் நாம் விட்டுக் கொடுக்கிறோம் என்றோ, நம்முடைய கருத்துக்கள் எதையும் பிறர்மீது திணிக்கிறோம் என்றோ பொருள் அல்ல.
வெறுப்பும் வன்முறையும் தீயன – கேடு பயப்பன, வெறுப்பினால் அடைகின்ற பயனும், வெறுக்கத் தக்க தீயதே ஆகும். இன்று உலகின் முன் உள்ள பிரச்சினை கூட்டுறவா அல்லது அழிவா என்பதுதான். இன்று உலகம் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியது, சமதான சகவாழ்வா, இல்லை அடியோடு மாள்கின்ற அழிவா என்ற இரண்டில் ஒன்றைத்தான்.
“கூட்டு சேராக் கொள்கையா? அதெப்படி முடியும்? ஏதாவது ஒருபக்கம் சேர்ந்துதானே ஆக வேண்டும்” – என்ற வாதம் இன்ற செத்து விட்டது. சென்ற பல வருடங்களின் சரித்திர நிகழ்ச்சிகள் கூட்டு சேராக் கொள்கைக்கு ஆதரவளிப்பனவாகவே உள்ளன். ஏன்? ஏனெனில் அது காலத்துக்கேற்றதாக – மக்களின் மனோபாவத்துக்கு உகந்ததகா இருக்கிறது. சம்பந்தப்பட்ட நாடு கூட்டுச் சேர்ந்திருக்கிறதோ இல்லையோ அதன் மக்கள் சமாதானத்தை எண்ணி ஏங்கித் தவிக்கின்றனர். போரை, படைகளை, புதிய ஆயுதங்களை வெறுக்கின்றனர். எனவே அவர்கள் மனம் கூட்டுச்சேராக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் நாடுகள் பக்கமே செல்லுகிறது.